Followers

Tuesday, February 12, 2008

சக்தி இல்லையேல் சிவம் இல்லை - என்கிற இந்து மதத்தில் சக்திகள் படும் அவலம்!

கொல்கத்தாவில் இருந்து ஆண்டுக்கு 500 பெண்களை நடனமாட கடத்தி விற்ற கும்பல்

கொல்கத்தா, பிப். 12- பிகார் நடன நிகழ்ச்சியில் ஆட கொல்கத் தாவில் இருந்து இளம் பெண்களைக் கடத்தி விற்ற செய்தி வெளியாகியுள்ளது.

பிகார் மாநிலத்தில் இசை நிகழ்ச்சி நடத்தும் ஆர்கெஸ்டிரா குழுக்களில் இளம் பெண்கள் ஏராளமானோர் ஆடிப் பாடுவார்கள். ஆனால் அவர்களுக்கு சரியான அளவு ஊதியம் அளிக்கப்படமாட்டாது.

இக்குழுக்களுக்காக மேற்கு வங்காளத்தில் இருந்து இளம் பெண்களைக் கடத்தி சப்ளை செய்திருப்பது அம்பலமாகியுள்ளது. கொல்கத்தாவிலி ருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள காக்டிவிப் கிராமம்.

பிகாரில் இருந்து மேற்கு வங்காளம் வரும் சிலர் தரகர் களை அணுகி தங்களுக்கு இளம் பெண்கள் வேண்டும் என்று கேட்கிறார்கள். தரகர்களும் இளம் பெண்கள் மற்றும் பெற்றோரை அணுகி அதிக அளவில் பணம் மற்றும் சில நாட்கள் வேலை என கவர்ச்சிகரமான வார்த்தை களைக் கூறி அழைத்துச் செல்கிறார்கள்.

அவ்வாறு அழைத்துச் செல்லப்படும் இளம் பெண்கள் பசி, பட்டினியோடு பல நாள்கள் இன்னலுக்கு ஆளாவார்கள். பின்னர் அவர்களுக்கு திருமணம் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் நடனம் ஆடவும் பாட்டு பாடவும் பயிற்சி அளிக்கப்படும். சில ஆண்டுகள் இவ்வாறு மேடைகளில் ஆடிப்பாட வேண்டும். ஆனால் அவர்கள் வீடு திரும்புவது இல்லை. அவர்கள் கொலை செய்யப்பட்டு அவர்களது உறுப்புகள் விற்கப்பட்டனவா? அல்லது கொலை செய்யப்பட்டார்களா என்பது தெரியவில்லை.

இந்த மோசடி கடத்தல் விவகாரம் குறித்து மேற்கு வங்காளத்தில் பெரிய அளவில் எழுந்துள்ளதால், மனித உரிமை அமைப்புகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், காவல்துறையினரும் முழு வீச்சில் கடத்தல்காரர்களைப் பிடிக்கவும், தண்டனை வழங்கவும் களத்தில் இறங்கியுள்ளனர்.

பிகார் சென்ற காவல்துறையினர் அங்கு பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த ஏராளமான மேற்கு வங்காளப் பெண்களை மீட்டு சொந்த ஊருக்குக் கொண்டு வந்துள்ளனர். தொடர்ந்து பெண்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. http://viduthalai.com/20080212/news04.html
---------------------------------------
மற்ற பதிவுகள்

No comments: