Followers

Tuesday, February 12, 2008

பெண்கள் சாமியார்களை நாடிச் செல்வதேன் ?சுருட்டும் சாமியார்கள் !!!

பெண்கள் சாமியார்களை நாடிச் செல்வதேன்? டாக்டர் ஷாலினி (மனநல மருத்துவர்)

பெண்களுக்கு நிறைய பிரச்சினைகள் இருக்கு. வீட்ல ஒரு குடும்பப் பெண்ணுக்கு பிரச்சினைகள் எக்கச்சக்கமா இருக்கு.

கணவன், மனைவி பிரச்சினை, மாமியார், மருமகள் பிரச்சினை, நாத்தனார் பிரச்சினை, குழந்தைகள வளர்க்கறதுல பிரச்சினை, பக்கத்துல வீட்ல பிரச்சினை.

இதனால் அவர்களுக்குள்ள ஒரு தாழ்வு மனப்பான்மை வந்துடுது. நாம படிச்சிருந்தா, இப்படி ஆயிருக்காதே, இப்படி உட்கார்ந்திருக்க வேண்டியிருக்காதேன்னு அவங்களுக்குள்ள எக்கச்சக்கமான மன வருத்தங்கள், மன ஏமாற்றங்கள் இருக்கத்தான் செய்யுது.

இத பக்கத்து வீட்ல சொன்னா, யார் கிட்டயாவது சொல்லி மாட்டி விட்ருவாங்க. இல்ல, நம்மள பார்த்து சிரிப்பாங்க.

நம்மளப்பத்தி தாழ்வா நினைப்பாங்கன்னு எண்ணம் இருக்கலாம். இல்ல, வெளி ஆளுங்ககிட்ட சொன்னா அவங்க, அதை சொந்தக்காரங்ககிட்ட சொல்லிட்டா, நாளைக்கு அவங்க முகத்தில முழிக்கணுமே என்ற பயம் இருக்கலாம்.

அதனால, சாமியார்கிட்ட போறாங்க. அவங்க எதிர்பார்க்கிறது, தன்னை எந்தக் குறையும் சொல்லாம, இல்லம்மா கவலைப்படாதே; எல்லாம் சரியாய் போயிடுமுங்கிற ஆறுதலைத்தான். இந்த ஆறுதலை சாமியார் சரியா சொல்றதுனாலதான் அவங்ககிட்ட போறாங்க.

நம்ம இதிகாசங்கள்ல பாத்தீங்கன்னா குழந்தை எப்படி பொறக்கணும்னு வெட்ட வெளிச்சமா சொல்றதில் இராமாயணத்துல உதாரணம் எடுத்துக்கிட்டோம்னா, பாயாசம் கொடுத்தாங்க, அந்த பாயாசத்தை உட்கொண்டதுனால குழந்தை பொறந்ததுன்னு சொல்றாங்க. அவங்க பாயாசம்னு சொல்றது எதைங்கறத அறிவியல் தெரிஞ்சவங்களால புரிஞ்சிக்க முடியும்.

ஏன்? லட்டுன்னு சொல்லலே. ஏன்? பாயாசம்னு சொன்னாங்க. பாயாசம்ங்கிறது இன்னொரு விதமான மாற்று உபயோகமுள்ள வார்த்தைங்கிறது நமக்கு புரியுது. ஆனா, சாதாரண மனிதர்கள் என்ன நினைப்பாங்க.

உண்மையிலேயே சாமியார் பாயாசம் கொடுத்ததுனாலதான் குழந்தை பொறந்திச்சுன்னு நினைப்பாங்க.

இந்த மாதிரி நம்ம கலாச்சாரத்துல நிறைய மூடநம்பிக்கைகள் இருக்கறதுனால, இது அதிகமாக பெருகிகிட்டு இருக்கு.
அதுமட்டுமல்ல, குழந்தை இல்லாத பெண்ணை இந்த சமுதாயம் பார்க்கிற விதமும் அவங்கள டெஸ்பரோட்டாக்கி, எப்படியாவது குழந்தை பொறந்தா போதுங்கிற சூழ்நிலைக்கு தூண்டப்பட்டு, சரி, சாமியார் தவறாக நடந்து கொண்டாலும் பரவாயில்ல - இப்படியாவது குழந்தை பொறந்தா போதுமுங்கிற எண்ணமும் பெண்களுக்கு வர்றதுக்கு வாய்ப்பு இருக்கு.

குழந்தை இல்லாத பெண்களும் சாதாரண மனிதர்கள்தான் அவங்களுக்கும் வாழறதுக்கு எல்லா உரிமைகளும் இருக்கு.

எந்த தகுதியும் குறைஞ்சு போயிடலேங்கிற பரந்த மனப்பான்மை நமக்குள்ள இருந்ததுன்னா, குழந்தை இல்லாத பெண்களை நல்ல விதமா இன்னும் மரியாதையோட நாம நடத்துனும்னா இந்த மாதிரி ஒரு அவசர கதியில போயி எப்படியாவது குழந்தை பெத்துக்கணும்ங்கிற எண்ணம் இல்லாம போயிடும்.(டாக்டர் ஷாலினியின் முழுப்பேட்டியை webvision.periyar.org.in இணையதளத்தில் காணலாம்.)
http://www.unmaionline.com/20080101/pa-05.html

சுருட்டும் சாமியார்கள்!!!

டாக்டருக்குப் படிச்ச பெண்களெல்லாம் இப்படி போலிச் சாமியாரை நம்பி ஏமாறுவதைத்தான் புரிஞ்சுக்க முடியலை . . . இந்த மாதிரி பெண்களைக் குறி வைக்கும் சாமியார்களை விசாரணை இன்றி ஜெயிலில் தள்ளணும்.

எவ்வளவுதான் நம்ம நாடு முன்னேறிப் போனாலும் இந்த சாமியார் விஷயத்தில் மட்டும் ரொம்பவும் பின் தங்கியிருக்கோம். மனநிம்மதி வேணும்னா தியானம் பண்ணுங்க.

இப்படி போலிச் சாமியார்களை நம்பி ஏமாந்து மோசம் போகக்கூடாது. அதுவும் மூணு பெண்களைக் கட்டி அவங்க வாழ்க்கையை வீணடிச்ச சுருட்டு சாமியாரை சும்மா விடக்கூடாது.

- இந்த இரு கருத்துகளையும் கூறியவர்கள் ஆனந்த் ப்ரியதர்ஷினி, ராஜி சீனிவாசன் என்ற இரண்டு பெண்கள் (குமுதம் 2-.1-.08)

அண்மையில் சென்னையில் கைது செய்யப்பட்ட சுருட்டு மற்றும் பீர் சாமியார் பழனிச்சாமியைப் பற்றித்தான் இப்படிக் கூறியிருக்கிறார்கள். இந்த அளவுக்கு சாமியார்கள் மீது கோபம் வரக் காரணம் என்ன?

பழனிச்சாமியின் வண்டவாளங்களை வண்டி வண்டியாக நாளிதழ்களும், வார இதழ்களும் எழுதியதால் இப்படி கோபம் கொள்கிறார்கள்; அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கிறார்கள். பத்திரிகை-களும் வேறு செய்திகள் இல்லாத போது சில சாமியார்களைப் பற்றி செய்தி போடுகின்றனவே அல்லாமல், சமூகத்துக்கு எதிரான சாமியார்களைத் தொடர்ந்து கண்காணித்து எழுதுவதில்லை.

சாமியார்களைப் பற்றி எழுதும் பத்திரிகைகள் இவர்களின் மோசடிகளுக்கு மூலதனமாக விளங்கும் சாமிகளைப் பற்றியோ, அந்த சாமிகளை உற்பத்தி செய்து, கற்பித்து வைத்திருக்கும் இந்து மதத்தைப் பற்றியோ எழுதுவதில்லை.
டாக்டருக்குப் படிச்ச பெண்கயெல்லாம் இப்படிப் போலிச் சாமியாரை நம்பி ஏமாறுவதைத்தான் புரிஞ்சுக்க முடியலை என்று ஒரு பெண் கருத்து கூறுகிறார்.


டாக்டர் படிப்பு மருத்துவமும் மருந்தும் பற்றியதே தவிர பகுத்தறிவு பற்றியதல்ல என்பது யாருக்கும் இன்னும் புரியவில்லை.
பல டாக்டர்கள் தங்கள் கிளினிக்குகளை ஒரு பூசையறைபோல வைத்திருப்பதைப் பார்க்க முடிகிறது. படிப்பு சொல்லித் தருவதை விட பகுத்தறிவு சொல்லித் தரவேண்டியது சமூகத்துக்கு எவ்வளவு தேவையானது என்பதையே இவரது கருத்து நமக்கு உணர்த்துகிறது.


யார் இந்த பழனிச்சாமி?திருச்சியை அடுத்த விராலிமலைப் பகுதியில் உள்ள அயன்பொருவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. ஏழாம் வகுப்பு வரை படித்துவிட்டு, பன்னிரண்டு வயதில் வீட்டை விட்டு வெளியேறி கேரளாவுக்குச் சென்றவர்.
அங்கு கேரளச் சாமியார்களின் மாந்திரீக மாயா-ஜால வேலைகளை கற்றுக் கொண்டு சென்னை திரும்பியபோது வயது பதினெட்டு.சென்னையில் ஓய்வு பெற்ற போலீஸ் அய்.ஜி. மகாதேவனின் வீட்டில் சமையல் வேலை செய்து வந்த பழனிச்சாமியை விட இருபத்து நான்கு வயது மூத்த. சந்திராவுடன் திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் சிறிய உணவகம் நடத்தியுள்ளார். வியாபாரம் போனியாகவில்லை. இருக்கவே இருக்கிறது கடவுள் வியாபாரம் என்று மதுரை வீரன் சாமி தன் மீது வந்துள்ளதாகக் கூறி அருள் வந்து ஆடத் தொடங்கி விட்டார்.
கொஞ்சம் கொஞ்சமாக மூட நம்பிக்கையாளர்கள் குவியத் தொடங்கியுள்ளனர். குறி சொல்வதன் மூலம் வருமானம் வரத் தொடங்கவே முதல் மனைவியின் அனுமதியுடன் மணிமேகலை என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார்.


வேளச்சேரிக்கும் புழுதிவாக்கத்திற்கும் இடையே ராம்நகர்ப் பகுதியில் காலிமனை ஒன்றை வளைத்து அதில் சூலம் நட்டு மதுரை வீரன் கோயிலாக்கி அமர்ந்துவிட்டார்.

மதுரை வீரன் சாமியை விட அம்மன் சாமிக்குத்தான் பெண்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது என்பதை அறிந்த பழனிச்சாமி அதை அம்மன் கோயிலாக மாற்றியுள்ளார்.

இதன் பின் பெண்கள் கூட்டம் பெருமளவு குவியத் தொடங்கி உள்ளது. பழனிச்சாமி பற்றி அப்பகுதியினர் சொல்லும் செய்திகள்:-பழனிச்சாமியின் பக்தர்களில் பெரும்பாலும் பெண்கள்தான். திருமணமாகாத பெண்கள், திருமணமாகி குழந்தை இல்லாதவர்கள், கணவருடன் பிரச்சினையில் இருக்கும் பெண்கள் என பலதரப் பட்ட பெண்கள் பழனிச்சாமியைத் தேடி வரத் தொடங்கினார்கள்.

பழனிச்சாமி தன்னையே மதுரை வீரன் சாமி என்று சொல்லி வந்ததால் அவரிடம் குறி கேட்க வரும் மக்கள் மதுரை வீரனுக்குப் பிடித்த மது வகைகளையும் விலையுயர்ந்த சுருட்டுகளையும் வாங்கி வரத் தொடங்கினார்கள்.

சாமி வரும்போது பழனிச்சாமி சுருட்டும் கையுமாகவே சுற்றி வந்ததால், அந்தப் பகுதி மக்கள் அவரை சுருட்டு சாமியார் என்றே அழைக்கத் தொடங்கினார்கள்.

ஒரு ரவுண்டு மது அபிஷேகம் செய்து கொண்டு சுருட்டைப் பற்ற வைத்துக் கொண்டு எதிரில் அமர்ந்துள்ள பக்தர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு கண்களை மூடிக்கொள்வார்.

சிறிது நேரத்தில் இரண்டு பக்தைகளை பெயரைச் சொல்லி அழைப்பார்.உடனே அந்த பக்தைகள் வந்து ஊஞ்சலில் அமர்ந்துள்ள பழனிச்சாமியின் இரண்டு தொடைகளிலும் அமர்ந்து கொண்டு அவரின் கைகளைப் பிடித்து விடுவாகள்.
பூஜையின் உச்சகட்டமாக இரண்டு மூங்கில்களுக்கிடையில் கத்தி போன்ற இரும்புப் பட்டைகள் பொருத்தப்பட்டு ஏணி போல அமைக்கப்பட்டிருக்கும் அந்த கத்தி ஏணியில் பழனிச்சாமி ஏறி நின்று நடனமாடியபடி கீழே இறங்குவார்.


யாராவது ஒரு கன்னிப் பெண்ணையோ அல்லது தலைச்சன் பிள்ளையையோ சாமிக்கு பலி கொடுத்தால் தனக்கு பெரிய சக்தி கிடைத்துவிடும் என்று பேசத் தொடங்கினார்.

இதனால் பயந்து போன பழனிச்சாமியின் முதல் மனைவி சந்திரா அவரை விட்டு வெளியேறி இயேசு சாமி கோயிலுக்குச் சென்று ஞானஸ்-நானம் பெற்று கிறிஸ்துவ மதத்தில் சேர்ந்து விட்டார்.

தான் இப்போது பழனிச்சாமி மீது புகார் கொடுத்திருப்பதால் தங்கள் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் என்று அஞ்சி வீட்டைப் பூட்டிக் கொண்டு வெளியில் சுற்றித் திரிவதாக சந்திரா கூறுகிறார்.

ஆசிரமத்தில் பழனிச்சாமிக்குப் பணிவிடை செய்து வந்த ராகுலை, பழனிச்சாமிதான் கொலை செய்து விட்டார் என்று ஊர் மக்கள் அனைவரும் பேசினார்கள். அந்தப் பையனின் அம்மா அம்பிகா, தன்னையும் தனது கணவரையும் காப்பாற்ற வேண்டிய அச்சத்தில் வெளியில் எதுவும் சொல்லாமல் இருந்து விட்டார் என்று கூறுகிறார்கள்.

மர்மமாக இறந்துவிட்டதாகக் கூறப்படும் ராகுலின் அம்மா அம்பிகா பத்திரிகையாளர்களிடம். அந்த ஆசிரமம் உருவானபோது என் அம்மாதான் அந்தக் கோயிலைச் சுத்தம் செய்து வருபவர்களுக்கு பிரசாதம் செய்து தருவார்கள். அதன் பிறகு நானும் அந்த வேலைகளைச் செய்யத் தொடங்கினேன். அதன் பின்னர் என் மகன் ராகுலும் கோயிலுக்குள் சென்று பழனிச்சாமிக்கு உதவிகள் செய்து வந்தான்.

பத்தாம் வகுப்பு பாஸ் செய்துவிட்டு, பாலிடெக்னிக்கில் படித்து வந்த ராகுலுக்கு அப்போது பதினெட்டு வயது. எங்களின் ஒரே மகன் அவன். இன்ஸ்டிடியூட்டுக்குப் போய் வந்ததும் ஆசிரமத்துக்குச் சென்று விடுவான். நாங்களும் கடவுள் பக்தியில் வளர்வது நல்லதுதான் என்பதால் அவனைக் கண்டிக்கவில்லை.

2003 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி திடீரென விஷத்தைச் சாப்பிட்டது போல் வாயில் நுரை கக்கி அவன் இறந்துவிட்டான். எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவன் உடலை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றோம்.

போஸ்ட்மார்ட்டம் செய்யாமல் எடுத்து வந்து விடும்படி சாமியார் கூறினார். நாங்களும் அப்படியே எடுத்து வந்துவிட்டோம். அதே போல் அவன் உடலை எரித்து விடும்படி சாமியார் கூற நாங்களும் எரித்து விட்டோம்.
அதன் பிறகுதான் சாமியாருக்கும் என் மகனின் மரணத்துக்கும் தொடர்பு இருக்கும் என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டது.


அவன் பழனிச்சாமியின் ஆசிரமத்திலேயே இருந்ததால், அவரின் செக்ஸ் விஷயங்களை அவன் பல முறை நேரில் பார்த்திருக்கக்கூடும். அதை மறைக்கவோ அல்லது அவன் தலைச்சன் பிள்ளை என்பதால் கூட அவனின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என்பது எங்களின் எண்ணம்.

எப்படி இருந்தாலும் எங்கள் மகனின் மரணத்தில் எங்களுக்கு ஆழமான சந்தேகம் இருக்கிறது. என் உயிரையும், என் கணவர் உயிரையும் காப்பாற்றிக் கொள்ளவே இதுவரை நாங்கள் அமைதியாக இருந்தோம்.

இப்போது பழனிச்சாமியை போலீசார் கைது செய்துள்ளனர். அவனிடம் போலீசார் விசாரித்தால் என் மகனின் மரணத்தில் புதைந்துள்ள உண்மைகள் வெளிவரும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று கூறிகிறார் அம்பிகா.
கடைசியாக தன்னைவிட 24 வயது குறைந்த திவ்யா என்ற பெண்ணைத் திருமணம் செய்துள்ளார் பழனிச்சாமி. இந்தப் பெண்ணின் பெற்றோர் காவல் துறையில் புகார் கொடுக்க இப்போது பழனிச்சாமி கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.


நான் விரும்பித் தான் சாமியாரோடு இருக்கிறேன் என்றும் சாமியார் மிக நல்லவர் என்றும் அவர் செக்ஸ் வெறியர் இல்லை ஆன்மீகவாதி என்றும் திவ்யா கூறினாலும், போலீஸ் விசாரணையில் தன்மீதான பல குற்றச்சாட்டுகளை பழனிச்சாமி ஒப்புக் கொண்டுள்ளாராம்.

தன் தாய்தந்தையார் அடிக்கடி சண்டை போடுவாலும் தந்தையின் குடிப்பழக்கத்தாலும் மன நிம்மதி இழந்து அமைதியான இடம் கிடைத்தால் போதும் எனக் கருதி வந்த திவ்யாவை மடக்கியுள்ளார் பழனிச்சாமி.

இப்படி மக்களின் உளநிலை, மனநிலையை நன்கு புரிந்து கொண்டுதான் சாமியார்கள் தங்களது தொழிலை திறம்படச் செய்கிறார்கள்.குடும்ப உறவுகளுக்குள் மனம் விட்டு பேசிக் கொள்வது, எதையும் நன்கு விவாதிப்பது, தவறுகளைத் திருத்திக் கொள்வது என வாழ்வியலை அமைத்துக் கொண்டால் வழி தவற வேண்டிய அவசியம் ஏற்படாது.

பாட நூல்களை மட்டும் படித்து விட்டால் போதாது; உலகத்தையும், சுற்றுச் சூழலையும் படிக்க வேண்டும். அதனிலும் முதன்மையானதாக பகுத்தறிவைக் கற்க வேண்டும். இல்லையேல் இன்னும் பல பழனிச்சாமிகள் உருவாகிக் கொண்டுதான் இருப்பார்கள்; சுருட்டு(ம்) சாமியார்கள் சுருட்டிக் கொண்டுதானிருப்பார்கள்.
http://www.unmaionline.com/20080101/pa-04.html
---------------------------
படித்துவிட்டீர்க‌ளா?

பார்ப்பனர்களின் பிலாக்கண அலறல்? விரலாக இருக்கும் ஆதிக்க ஜாதிப் பார்ப்பனர்கள் உரல் போல வளர அரசியலிலும் இடஒதுக்கீடு தனித்தொகுதி, தனிக்குளம், பள்ளிக்கூடம

கிறிஸ்துவ அருட்சகோதரர் . (‘பிரதர்’ ) செய்த காரியத்தால் ‘பிரதர் , பிரதர்’ என்றே அழைத்து கொண்டிருக்கிற மாணவி தாயாகப் போகும் நிலை.

பெற்ற மகளையே தனது தாரமாக்கிக் கொண்ட...!! தமிழர்கள் மீது வெறுப்பைக்கக்கும் புராண இதிகாசங்கள்.
-----------------------
மற்ற பதிவுகள்

No comments: