Followers

Wednesday, February 6, 2008

கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்து - தொடரும் வலிக்கு காரணம் சிவப்பணுச் சிதைவே !

நலவாழ்வுத் தகவல்.

நோயாளிகளுக்கு கடுமையான, நீண்டகாலமாக வலி நீடிப்பதற்கு காரணம், பிறை வடிவ செல் நோய் தாக்கம் தான் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

பிறைவடிவ செல் நோய் என்பது மென்மையான இரத்த சிவப்பு செல்களின் மரபணுவைத் தூண்டி, வட்ட வடிவமான இரத்த செல்களை பிறை வடிவத்திற்கு அல்லது சி வடிவத்திற்கு மாற்றுவதுடன், அவற்றைக் கடினத்தன்மை கொண்டதாக மாற்றுகின்றன.

இது இரத்த நாளங்களில் தடை அல்லது அடைப்பை உருவாக்கவல்லது. இவ்வாறு அடைப்பு ஏற்படுவதால் உடலின் அவயங்களுக்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைப்பட்டு கடுமையான வலி, தொற்று நோய் தாக்குதலுக்கு ஏதுவாகிறது.

மேலும் நுரையீரல், சிறுநீரகம், மூளை, மண்ணீரல் ஆகியவற்றின் உறுப்புக்களைச் சிதைக்கிறது. இது தொடர்பான ஆய்வை 232 நோயாளிகளிடம் மேற்கொண்ட வெர்ஜினியா காமன்வெல்த் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மருத்துவர் வாலி ஸ்மித் குழுவினர், நோயாளிகளுக்கு நாள்தோறும் உள்ள வலி நிலையை நாள் குறிப்பெடுக்க அறிவுறுத்தினர்.

இந்த ஆராய்ச்சிக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளில் நோயாளிக்கு உதவி தேவைப்படாத நிலையில் அவருக்கு வலியில்லை என்று கூறப்பட்டது. நோயாளிகளின் நாள்குறிப்பைச் சோதனைச் செய்ததில் பெரும்பாலான நாள்கள் வலிக்கு உள்ளாகியிருப்பதும், ஒவ்வொரு மூன்றாவது நோயாளியும் நாள்தோறும் வலியால் பாதிக்கப்படுவது தெரிய வந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

இந்த ஆய்வின் மிக முக்கியமான முடிவு, பிறை செல் நோய் அன்றாட நிகழ்வுதான் என்பதும், இந்த வலி உள்ளவர்கள் மருத்துவமனைகளுக்கோ, அவசர சிகிச்சை மையங்களுக்கே செல்லாமல் வலியுடன் நாள்களைக் கடத்தி வருவதாக மருத்துவர் ஸ்மித் கூறியுள்ளார்.

இந்த ஆய்வு முடிவுகள் வலி தொடர்பான மக்களின் பார்வையை மாற்றும் என்றும் தெரிவித்துள்ளார். பிறை வடிவ செல் சமூகத்தின் மருத்துவ ஆலோசகரான அலிசன் ஸ்டிரிட்லி இந்த வலி நோய் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே உருவாக்கும் என்று கூறியுள்ளார்.

இந்த நோயின் தன்மையை பெரும்பாலானோர் தவறாக கணிப்பதாகவும், அந்த நோயுடனே தங்கள் வாழ்க்கையை இந்நோய் தாக்கிய மக்கள் வாழ்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வலியில் இருந்து தற்காத்துக் கொள்ளவும், வலியில் இருந்து மீளவும் இன்னும் அதிக புதிய மருந்துகள் தேவை. மேலும் கடுமையான வலியால் அவதிப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தலைச்சிறந்த சிகிச்சை முறைகள் தேவை என்றும் மருத்துவர் ஸ்மித் கூறியுள்ளார்.
http://viduthalai.com/20080205/news08.html
கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் புதிய மருந்து!
கொலஸ்ட்ரால், கொழுப்புத் திரவங்களின் அளவை உடலில் கட்டுப்படுத்த முயற்சி செய்பவர்களுக்கு ஒரு இனிப்பான தகவல். நமது உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவும் புதிய மருந்தை உற்பத்தி செய்ய ஏதுவான ஒரு கண்டுபிடிப்பை விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

இந்த புதிய மருந்து அதிகமான தொப்பையால் உருவாகும் இரண்டாம் வகை சர்க்கரை நோய், இருதய நோய்களுக்கு சிகிச்சை அளிக்க உதவும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பாரம்பரியமிக்க அல்பர்ட்டா அறக்கட்டளை மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் மருத்துவர் ரிச்சர்ட் லெக்னர் தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர் இது தொடர்பான ஆய்வை மேற்கெண்டனர்.

நாம் சாப்பிடும் உணவுப் பொருள்களில் உள்ள கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்புப் பொருள்கள் உடலியக்க நடைமுறை காரணமாக இரத்தத்தில் சேமிக்கப்படுவதைக் குறைப்பதற்கான வழியைக் கண்டறிந்துள்ளனர்.

அளவுக்கு அதிகமான கொழுப்பு, சர்க்கரை உணவுப் பண்டங்களையும், உணவுப் பொருள்களையும் சாப்பிடும் அதேநேரத்தில் மிகக் குறைந்த நேரமே உடற்பயிற்சியில் ஈடுபடுவதால் உடலில் கொழுப்பு அதிகமாகி ஊழைச் சதையும், தொப்பையும் ஏற்படுகிறது.

இது இருதய, சர்க்கரை நோய்கள் ஏற்பட காரணமாகின்றன.இது தொடர்பாக மேற்கொண்ட ஆராய்ச்சியில் எலி, ஹேம்ஸ்டர் ஆகியவற்றின் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலில் லிப்பிட்ஸின் (கொழுப்புக்களின் கலவை) அடர்த்தியைக் குறைப்பதில் வெற்றிக் கண்டுள்ளனர்.

இதற்கு ஒரு குறிப்பிட்ட என்சைமின் மூலக்கூறை மருந்து மூலம் சிறிது மாற்றியமைத்துள்ளனர். இதனடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள ஸ்டேடின்ஸ் என்ற மருந்து நோயாளியின் உடலில் உள்ள எல்.டி.எல். (Low-Density Lipids) அளவைக் குறைக்க உதவும். ஆனால் தொப்பையைக் குறைக்க இது உதவாது.

எல்.டி.எல். , மற்றும் இரத்தத்தில் உள்ள மற்றொரு வகை கொழுப்பான டிரிக்லிசெரைட்ஸ் போன்ற கொழுப்புக் காரணமாக வரும் இருதய, இரண்டாம் வகை சர்க்கரை நோய்களைத் தடுப்பது தொடர்பான கண்டுபிடிப்புதான் இந்த ஆய்வு முடிவின் சிறப்பாகும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இது எவ்வாறு நமது உடலியக்க வழிமுறைகளில் நடைபெறுகிறது என்பதற்கான வழிமுறைகளை உருவாக்கியுள்ளோம் என்று ரிச்சர்ட் லெக்னர் தெரிவித்துள்ளார்.

கொழுப்பு திசுக்களிலிருந்து கொழுப்புத் திரவத்தை ஒரு என்ஸைம் நீக்குவதையும், அதனைத் தொடர்ந்து நுரையீரல் இதனை எவ்வாறு தடை செய்கிறது என்பதையும் தாங்கள் கண்டறிந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

திசுக்களில் உள்ள டிரிக்லிசெரைட்ஸ், கொழுப்புத் திரவங்கள், கொலஸ்ட்ரால் ஆகியவற்றின் உடலியக்க நடைமுறைகளை என்ஸைம்கள் கட்டுப்படுத்தும் விதம் மருந்தியல் உற்பத்தித் துறையில் மிகுந்த ஆர்வத்தை தூண்டுவதாக உள்ளதாகவும் ரிச்சர்ட் லெக்னர் கூறியுள்ளார்.

இந்த ஆய்வு முடிவுகள் மருத்துவத் துறையில் முக்கியமானது என்றும், அதே நேரத்தில் தொடர்ந்து இந்த முடிவு குறித்து சோதனை மேற்கொள்வது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள மருந்து ஒன்றும் மாயக்குண்டு அல்ல என்றும், மக்கள் முறையான உடற்பயிற்சி, உணவை சாப்பிடும் சரியான வாழ்க்கை முறையைத் தேர்வு செய்ய வேண்டும் என்று ரிச்சர்ட் லெக்னர் கூறியுள்ளார். >>>> http://viduthalai.com/20080205/news08.html
---------------------------------------
படித்துவிட்டீர்க‌ளா?
யார் பார்ப்பனன்? யார்? யார்? யார்?

மாட்டு மூத்திரத்தைக் குடிக்கச் சொல்லுவது.....பார்ப்பான் நம்மை சுரண்ட அளக்கும் தர்மா மீட்டர். பசுக் காலடியில் மிதிபடும் கோமாதா விழா!.தன் மலத்தையே.....

தேவடியாள்களை விட்டு நடனம்.....பூஜையால் விளையும் நாசம்! சாமி நமக்கு ஊசிகூட செய்ய சொல்லிக்க கொடுக்கவில்லை.
----------------------------
மற்ற பதிவுகள்

No comments: