Followers

Tuesday, February 5, 2008

வள்ளுவர் குறளில் ‘ கோயில்' என்று எங்கும் குறிக்கப்படவேயில்லை ஜோசியம் பற்றி எங்காவது கூறியிருக்கிறாரா?

ஜாதியைப் பாதுக்காக்கும் அசிங்கமே, உன் பெயர் தான் ஜோஸ்சியமா?

மானக்கேடான மூடநம்பிக்கைகளில் முதன்மை யானது ஜோசியம். இந்த சொல்லே - ஜோசியம் - தமிழ்ச் சொல் அல்ல; தமிழர்களுக்கு ஆதியில் இருந்த பழக்கமும் அல்ல.

2500 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டு, இன்றும் உலக மனித குலத்திற்கே நீதி நெறி முறை கூறிய திருவள்ளுவரின் திருக்குறளில் ஜோசியம் என்று எங்காவது உண்டா?
ஆட்சி, அமைச்சு எப்படி இருக்க வேண்டும் என்று எழுதிய வள்ளுவர் ஜோசியம் பற்றி எங்காவது கூறியிருக்கிறாரா?

தமிழறிஞர்கள் இதை எண்ணுவதுடன், தத்தம் வாழ்வில் கடைப்பிடித்து, அறியாமையால் பலியாகும் ஜோசியம் பற்றி மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டாமா?

அறிவியலின் குழந்தையான தொலைக் காட்சிகளில் வரும் தொடர்களின் மூலம் இந்த மூடநம்பிக்கையைப் பரப்பும் பணி மகளிர் மத்தியில் எவ்வளவு வேகமாகப் பரப் பப்பட்டு வருகிறது?

‘வீடு’ என்ற மோட்சத்திற்கு எப்படி வள்ளுவர் திருக் குறளில் இடம் கொடுக்காமல், அறம், பொருள், இன்பம் என்பவைகளோடு வாழ்க்கை முற்றுப் பெறுகிறது என்பதைக் காட்டினார்.
ஆரியப் பண்பாடோ ஜோஸ்யத்துக்கு தரும, அர்த்த, காம, மோக்ஷ ரூபமான நான்கு நிலைகளைக் கூறுகிறது.

திராவிடர் தமிழர் பண்பாட்டில் இது கிடையாது. சங்க கால நூல்களில் உள்ளன என்றால் அது பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்புக்குப் பின்னர். இது ஒரு நீண்ட ஆராய்ச்சிக் குரியது.

அதுபோலவே குறளில் ‘கோயில்’ என்று எங்கும் குறிக்கப்படவேயில்லை; காரணம் அப்போது அப்படி ஒரு ‘வசூல் ராஜா வாணிபம்’ இல்லவே இல்லை.

‘ஜோஸ்சியம்’ மூடநம்பிக்கைகளை - நாம் ‘சோதிடம்’ என்ற சொல்லாட்சி தவிர்த்து ஜோஸ்சியம் என்றே கூற விரும்புகிறோம். (அப்போது தான் அது அந்நியச் சரக்கு. இறக்குமதி சரக்கு என்பது எளிதில் புரியும்).
இந்த ஜோஸ்சியத்தின் கேடுகளில் ஒரு முக்கியக் கேடு, மனிதர்களிடையே ஜாதி பார்ப்பது போதாது என்று கோள்களையும் வர்ணப் பாகுபாடு செய்கிறது அது!

- வியாழன், வெள்ளி இரண்டும்
பிராமணர்களாம்!
- ஞாயிறும், செவ்வாயும் க்ஷத்திரியர்களாம்!
- சந்திரனும் புதனும் வைசியர்களாம்!
- சனி, ராகு, கேது ஆகியவைகள் சூத்திரர்களாம்!
(பஞ்சமரை விட்டதற்கு மிக்க நன்றி!)

இது நால்வர்ணக் கொள்கைத் திணிப்பு அல்லாமல் வேறு என்ன?

அதுசரி, மேற்சொன்ன கோள்கள் உலகம் முழுவதிலும் உள்ள மக்களுக்கும் தானே?

அந்தந்த நாடுகளில் நால்வர்ணம் இல்லையே - அதற்கு ஸ்ரீமான் ஜோஸ்சியர்வாள் என்ன விளக்கம் கூறுவார்?


இதை பாடமாக்கி, பல்கலைக்கழகங்க ளில் படிக்கச் சொன்ன சங்பரிவார பதர்களை விரட்டியது எவ்வளவு நியாயம்?

இதைவிட இந்த ஜோஸ்சிய மூடநம்பிக் கையை படுக்கை அறை வரைக்கும் கொண்டு வந்து அசிங்கப்படுத்தி விட்டனரே!

அசல் காட்டுமிராண்டிகள் காலச் சிந்தனை கூட இவ்வளவு மோசமாக இருக்காதே! மணமக்கள் ஜாதகத்தைப் பார்க்கையில், “யோனிப் பொருத்தம்” முக்கியமாம்!

ஜாதகத்தை வைத்து ஆண்குறி, பெண்குறியின் அளவுகள் கணிக்கப்பட்டு இரண்டும் பொருந்துமா?
இதன்மூலம் மகப்பேறு உண்டா? என்று சொல்லுகிறாராம் ஜோசியர்!
இதைவிட மானக்கேடு, கேலிக்கூத்து வேறு உண்டா?

ஆண்குறி, பெண்குறியின் நீள அகல அளவுகளுக்கும் கர்ப்பம் உருவாவதற்கும் ஏதாவது சம்பந்தமுண்டா? எந்த மகப்பேறு மருத்துவராவது (Gynecologist) இப்படிக் கூறுவாரா?

இந்த அசிங்கம் இதோடு மட்டுமா வாத்சல்யாயனர் என்ற வடமொழி பண்டிதரின் “காமசூத்திர” நூலில், விபச்சாரம் செய்யும்போது கூட ஜாதி கெடாமல் அந்தந்த ஜாதிப்பெண்களா என்று பார்த்து தான் காம இச்சைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று எழுதி வைக்கப்பட்டிருக்கிறது

- ஒரு இடத்தில் அல்ல; பல இடங்களில் ஆய்வுக்காக இதைச் சுட்டிக்காட்டுகிறோம்.

ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண் வைப்பார்கள் என்பதில் எங்கும், எதிலும் ஜாதி பாதுகாப்பு என்று சொல்லும், இந்த ஆரியப் பண்பாட்டை அறிவுள்ள தமிழர்கள், மானமுள்ள தமிழர்கள் ஏற்பார்களா?


தந்தை பெரியார் அவர்கள் கேட்ட ஒவ் வொரு கேள்வியும் நம்மை புது மனிதனாக்க, புது உலகத்திற்குக் கொண்டு செல்ல! மறவாதீர்!

ஜாதியைப் பாதுகாக்கும், அசிங்கத்தை அலங்காரப் பொருளாக்கும் அவலமாம் ஜோஸ்சிய வைத்தியத்திலிருந்து நம் மக்கள் தெளிவு பெறவேண்டாமா?

செவ்வாய்க் கோளில் மனிதன் இறங்கும் காலத்தில் ‘செவ்வாய் தோஷம்’ பேசி பல பெண்கள் வாழ்க்கையைப் பாலைவனமாக்கும் பாதகச் செயலுக்கு முற்றுப் புள்ளி வைப்போம்!
- கி.வீரமணி, ஆசிரியர் >> http://unmaionline.com/2004102u1.html

படித்துவிட்டீர்க‌ளா?

" பூணூல் " வந்த கதை வேடிக்கையானது

எது ஹிந்து மதம்...? இந்து மதம் என்றால் என்ன? எப்போது உருவானது?

செருப்புகள் காணிக்கையாக தருகிறார்களாம் ஒரு கடவுளுக்கு ! பாராட்டா? இழிவைச் சுட்டிக் காட்டலா?

மற்ற பதிவுகள்

No comments: