Followers

Sunday, February 3, 2008

பார்ப்பனர்களின் வயிற்றெரிச்சலே நமது வெற்றி ! பகைமுகம் காட்டும் பார்ப்பனர்கள்!

பார்ப்பான் கலப்பையைத் தொட்டால் பாவம் என்பது அவனது தர்மம்

தமிழர் திருவிழாவான பொங்கல் குறித்து தந்தை பெரியார் இவ்வாறு கூறுகிறார்:

``இதன் சரியான பொருள் அறுவடைத் திருவிழாவாகும் இது முழக்க முழுக்க தமிழர்களுக்கே உரிய பார்ப்பனர் அல்லாதார் பண்டிகையாகும். எப்படியெனில்

பார்ப்பான் கலப்பையைத் தொட்டால் பாவம் என்பது அவனது தர்மம்.
நமது பார்ப்பனர்களுக்கு எந்தக் காரியம் எப்படியிருந்தாலும், யார் எக்கேடு கெட்டாலும், தாங்கள் மனித சமூகத்தில் உயர்ந்த பிறவி மக்களாகவும், உடலுழைப்பு இல்லாமல் வாழும் சுகஜீவிகளாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக மனித சமுதாயம் முழுவதுமே அறிவைப் பயன்படுத்தாத, ஆராய்ச்சியைப் பற்றியே சிந்திக்காத முட்டாள்களாகவும், காட்டுமிராண்டிகளாகவும் இருக்கச் செய்ய வேண்டும் என்பதே அவர்களுடைய பிறவி புத்தியானதால் அதற்கேற்ப உலக நடப்பைத் திருப்பிப் பாதுகாத்து வருகிறார்கள்.


பார்ப்பனர்களின் இம்மாதிரியான அட்டூழிய அக்கிரம காரியங்களில் இருந்து விடுபட்டு, மனிதர்களாக நாம் வாழ வேண்டுமானால், பொங்கல் பண்டிகை என்பதை முதல் நாள் அன்று மட்டும் நல்ல உயர்வான உணவு, அருந்துவதையும், மனைவி மக்கள் முதியவர்களுடன் இன்பமாகக் காலம் கழிப்பதையும் கொண்டு நம்மால் கூடிய அளவு மற்றவர் களுக்கு உதவி, அவர்களுடன் குலாவுவதான காரியங் களையும் செய்வதன் மூலம் விழாக் கொண்டாடுவது அவசியமாகும்3 (14.1.1972) என்று தந்தை பெரியார் அவர்கள் செறிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.

கலப்பைப் பிடிப்பது பற்றிய பார்ப்பனர்கள் எண்ணத்தை தந்தை பெரியார் படம் படித்திருப்பது விளையாட்டானது அல்ல. அவர்கள் மனுதர்மம் அவ்வாறு தான் கூறுகிறது.

``பயரிடுதலை மேலான தொழிலென்று சிலர் கருதுகின்றனர். ஆயினும் பெரியோர் இதனைப் பாராட்டவில்லை. ஏனெனில் இரும்புக் கொழு நுதியுடைய கலப்பை, மண் வெட்டி இவற்றைக் கொண்டு பூமியையும், பூமியில் வாழும் உயிர்களையும் வெட்ட நேரிடுகிறதன்றோ? (மனுதர்மம் அத்தியாயம் 10 சுலோகம் 84).

பார்ப்பனர்களின் இந்த மனுதர்மத்தனத்தைதான் தந்தை பெரியார் எடுத்துக் காட்டுகின்றார்.
1921-ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் இரு பார்ப்பனர்கள் உழவுத் தொழிலை மேற்கொண்டார்கள். பார்ப்பனர்கள் அவர்களை விலக்கி வைத்தார்கள்.


அந்தச் சமயம் கும்பகோணம் சங்கராச்சாரியார் அந்தப் பகுதிக்கு வந்தார். அந்த இரு பார்ப்பனர்களும் சங்கராச்சாரியாருக்குக் காணிக்கை செலுத்த முன் வந்தார்கள்.
ஆனால் சங்கராச்சாரியாரோ அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. பிழைப்புக்காக உடலால் உழைப்பது என்ற பாவத்தைச் செய்த பிராமணர் களிடமிருந்து தர்ம காணிக்கை எதையும் பெற்றுக் கொள்ள முடியாது என்று கூறிவிட்டார்.

அந்த இரு பார்ப்பனர்களும் காந்தியாருக்குக் கடிதம் எழுதி விளக்கம் கேட்டார்கள்.
``கொடுமையான ஒரு சமூகத்திலிருந்து விலக்கி வைக்கப் பெறுவதே ஒரு சிறப்புதான். அதை வரவேற்க வேண்டும் என்று காந்தியார் பதில் கொடுத்தார். (``தமிழ்நாட்டில் காந்தி பக்கம் 378).


உடலுழைப்பை வெறுக்கக்கூடிய இந்தச் சோம்பேறிப் பார்ப்பனர்கள் அந்தச் சோம்பேறித்தனத்துக்கு ஒரு சாஸ்திர அந்தஸ்தையும் ஏற்பாடு செய்து கொண்டு விட்டார்கள். - அதுதான் அவாளுக்கே உரிய மிகப் பெரிய சாமர்த்தியம்.உழைப்புக்கு மரியாதை கொடுக்கும்

இந்தப் பொங்கல் விழாவுக்கும் மதச் சாயம் பூசி சங்கராந்தி என்று அடிப் படையையே தலைகீழாகப் புரட்டிப் போட்டு விட்டனர்.

``சூரியன் தனு ராசியில் சஞ்சரிக்குங் காலம், இது தேவர்களுக்கு விடியற்காலம். மகாசங்கிராமேசக்தி எனும் சத்தி தஷீணாயன ஆறு மாதத்தில் மனிதனை மூதேவி உருவாயும், பசுக்களைப் புலி உருவாயும் வருத்தி வந்த படியினால், அத்துன்பம் ஈஸ்வரானுக்கிரகத்தால் நீங்கினதால், தை மாதம் முதல் தேதி ஜனங்கள் அக்காலத்து விளைந்த புதுப்பொருள்களால் சூரியனை ஆராதித்தனர்.

அச்சக்தி பசுக்களைப் புலியுருவாய் அதஞ்செய்திருந்த படியால், அப்பசுக்களைக் கொண்டு, அப்புலியுரு கொண்ட சக்தியை ஒட்டின நாள், இதனை மாட்டுப் பொங்கல் என்பர்.

இவ்வாறு அன்றி, இந்திரன் மழை வருஷிப்பவன் ஆதலால், அவன் செய்த நன்மைபொருட்டு தை மாதம் முதலில் அறுத்த,. முதற் பயிரை மழைக் கடவுளாகிய இந்திரனுக்கு ஆராதித்து வந்தனர் எனவும், அது கிருஷ்ணமூர்த்தி அவதரித்தபின்,

அவர் அதை நாராயணனுக்குப் படைக்கக் கட்டளை இட்டனர் எனவும்,
அதனால் இந்திரன் கோபித்துக் பெருமழை பெய்விக்க, குடிகள் நிலைகுலைந்து மாடுகள், கன்றுகளை இழந்து தடுமாற, கண்ணன் கோவர்த்தனம் எடுத்துக் குடி மக்களைக் காத்தனர் எனவும்,

அதனால் இந்திரன் வெட்கி வேண்ட, சங்கிராந்திக்கு முன்னால் அவன் பெயரால் பண்டிகை செய்வித்தனர். அது போகிப் பண்டிகை எனவும், மறுநாள் சங்கிராந்திப் பண் டிகை எனவும், மறுநாள் மழையால் வருந்திய மாடு கன்றுகளைத் தலை அவிழ்த்துவிட்டுக் களித்தமையால் மாட்டுப் பொங்கல் எனவும்,

மறுநாள் மழையால் உண்டாகிய சுகாசு கங்களை ஒருவரையொருவர் விசாரித்ததால் காண்பொங்கல் எனவும் கூறுவர். இதுதான் அவர்கள் கற்பித்த சங்கராந்தியின் மகாத்மியம்!

மழை பொழிவது எப்படி என்கிற அடிப்படை அறிவு கூடப் பார்ப்பனர்களுக்கு இல்லை என்பது இதன்மூலம் வெளிப்படை.

இந்திரன் மழையைப் பெய்விக்கின்றானாம் - அதை மலையைக் குடையாக்கித் தடுக்கின்றனாம். கிருஷ்ணன் ஆரியர்கள் எத்தகைய காட்டு விலங்காண்டிகள் என்பதற்கு இந்த மூடத்தனங்கள் போதாதா?

ஹிந்து மதத்தில் கை வைப்பதுதான் கலைஞரின் வேலை என்று நையாண்டி செய்கிறாரே திருவாளர் சோ -

இந்த இந்துமதக் குப்பைகளை வாரி மலையாகச் சூட்டிக் கொள்ள வேண்டுமா?

`சோவோ பார்ப்பனர்களோ கூறுகிறபடி தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்று முடிவு செய்தது கலைஞரோ திராவிடர் கட்சிகளோ அல்ல.இவற்றிற்கு அப்பாற்பட்ட நிலையில் இருந்த தமிழறிஞர் கள்தான் இந்த முடிவைக் கூறியவர்கள்.
1921 சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கூடி ஆய்வு செய்த தமிழிஞர்கள் மூன்று முக்கிய முடிவுகளை அறிவித்தனர்.தைத் திங்கள் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றத்தக்கது.

திருவள்ளுவர் காலம் கி.மு. 31.முடிவு செய்த அறிஞர்கள் பெருமக்களுள் முக்கியமானவர். தமிழ்க்கடல் மறைமலை அடிகளார், தமிழ்த் தென்றல் திருவிக, எம்.எல். பிள்ளை என்று பெருமையுடன் போற்றப்படும் கா. சுப்பிரமணியபிள்ளை, சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் ஆவார்கள்.

டாக்டர் மு. வரதரானார் அவர்களும் முக்காலத்தில் `தை பிறப்பே ஆண்டு பிறப்பாக இருந்தது என்பதை உறுதிப்படக் கூறினார்.

(1988-ஆம் ஆண்டு கோலாம்பூர் பொங்கல் சிறப்பு மலர்)இவர்கள்மீது எந்த சாயத்தைப் பூச முடியும்?
அறிவார்ந்த பதிலை எதிர்பார்க்கிறோம்.திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரை தைதான் தமிழ்ப் புத்தாண்டு என்று கூறியே வந்திருக்கிறது.சென்னை கலைவாணர் அரங்கில் புரட்சிக் கவிஞர் நூற்றாண்டு விழாவை திராவிடர் கழகப் பகுத்தறிவாளர் கழகம் நடத்தியது (29.4.1990).

அவ்விழாவில் முதல் அமைச்சர் மாண்புமிகு கலைஞர் அவர்கள் பங்கு கொண்டார்கள். அவ்விழாவில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்கள் முதல் அமைச்சரிடம் ஓர் வேண்டுகோளை வைத்தார்.

தமிழ்ப் புத்தாண்டு என்று சித்திரை முதல் நடைமுறையில் இருக்கும் ஆண்டு அமைப்பு மாற்றப்பட்டு, தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று மாற்றம் செய்யப்பட்டு, திருவள்ளுவர் ஆண்டுக் கணக்கை மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஆணை பிறப்பிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முன் வைத்தார்.

அதற்குப் பதில் அளித்த முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் `தளபதி வீரமணியின் சிந்தனையையும் சிந்தையில் தேக்கி, மற்றவர்களையும் கலந்து பேசி அறிவிக்கப்படும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள்.(`விடுதலை 30.4. 1990)

18 ஆண்டு காலத்திற்குப்பின் 2008 தையில் இப்பொழுது வழி பிறந்திருக்கிறது. தமிழ்நாடு முதல் கலைஞர் அவர்கள் அந்த வகையில் புதிய சகாபதத்தின் புகழ் மிக்க மலராக வரலாற்றில் என்றென்றும் மணக்கப் போகிறார் என்பதில் அய்யமில்லை.

பார்ப்பனர்களைப் பொறுத்தவரை தமிழ் - தமிழின மறுமலர்ச்சிக்கு என்றென்றும் முட்டுக் கட்டை போடும் முரடர்கள் என்பது வரலாற்று உண்மைதானே!

`கல்கி இதழ் (27.1.2008) கேள்வி ஒன்றுக்குப் பதில் தருகிறது.
கேள்வி. தமிழர்களின் புத்தாண்டு தை முதல் தேதி என விரைவில் அறிவிப்பதாகச் சொல்கிறாரே முதலமைச்சர்?
`கல்கியின் பதில்:எல்லாம் கிடக்க கிழவியைச் மணையில் அமர்த்திய கதைதான்.

`தினமணி தினமலர்களும் இதே திசையில்தான் தமது எதிர்ப்புகளைத் திணிக்கின்றன.
`துக்ளக்கைப்பற்றி கேட்க வேண்டாம். தன் பங்குக்குத் தன் ஆத்திரத்தைக் கொட்டித் தீர்த்துள்ளது.

கேள்வி: தை மாதத்தை புத்தாண்டின் முதல் மாதமாக அறிவித்திருக்கிறாரே முதல்வர் கலைஞர்! இதனால் ஏற்படக் கூடிய மாற்றங்கள் என்ன?

துக்ளக்கின் பதில்:அவருக்கு ஒரு திருப்தி. மற்றபடி எந்த மாற்றமும் இருக்காது. வழக்கம்போல, ஏப்ரல் மாதத்தில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படும் கலைஞர் அறிவிக்கிற புதிய புத்தாண்டு தினத்தன்று, அவர் மக்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கலாம். அவ்வளவுதான்

வேண்டுமானால் கிடைத்தது சாக்கு என்று மற்றொரு சங்கமம் நிகழ்ச்சி நடத்தலாம் (`துக்ளக் 30.1.2008)
எவ்வளவு வயிற்றெரிச்சல்!

பார்ப்பனர்களைத் தமிழர்கள் என்று பசப்பும் பார்ப்பன அல்லாத `ஜென்மங்கள் இந்த இடத்திலாவது புத்தி கொள்முதல் பெற வேண்டாமா?

இடுக்கோடு இருக்க சென்னை சங்கமத்துக்கும் ஓர் இடி!
அவாள்களின் `சபாக்கள் சீசனை முடக்குகின்ற முயற்சியாக சென்னை சங்கமத்தை அவர்கள் வட்டாரம் பொறுமுவதை அடையாளம் காண வேண்டும்.

தமிழ் - தமிழுணர்வு - முற்போக்குச் சிந்தனைகளின் கூர்மையாக மேலும் சங்கமம் நடைபோடுமானால், மாபெரும் பலனைத் தமிழர்கள் அடைவார்கள் என்பதும் இந்த இடத்தில் சுட்டிக் காட்டபட வேண்டியதாகும். சம்பந்தப்பட்டவர்கள் கவனத்தில் கொள்வார்களாக!

நமது வெற்றி என்பது பார்ப்பனர்களின் வயிற்றெரிச்சலின் டிகிரியைக் கொண்டு கணக்கிடப்பட வேண்டும்.

தமிழக அரசின் அறிவிப்பால் எந்த மாற்றமும் இருக்காதாம் வழக்கம்போல சித்திரை மாதம் தான் ஏப்ரலில் புத்தாண்டாகக் கொண்டாடப்படுமாம் - எழுதுகிறார் திருவாளர் சோ.

தந்தை பெரியார் அவர்களின் எழுத்துச் சீர்திருத்தத்தை அமல்படுத்திட தமிழக அரசு ஆணை பிறப்பித்தபோது கூட இப்படித்தான் புலம்பினார் -

வலுக் கட்டாயமாக பழைய எழுத்து முறைகளையே கையாண்டார் - கடைசி வரை அவரால் அதனைக் கடைபிடிக்க முடிந்ததா?

இப்பொழுது தந்தை பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை அவரே கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டதே ! இதற்கு என்ன பதில்?

தைத் திங்கள் முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்று அரசு ஆணை வந்தபின் தமிழர்கள் அனைவருமே மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டபின் இரண்டரை சதவீதப் பார்ப்பனர்களால் தடுத்துவிட முடியுமா?

தினமலர் வாரமலர் எழுதிய ஒரு பதில்
இதோ: கேள்வி: தமிழ்மொழியை செம்மொழியாக்கச் சட்டம் கொண்டு வந்தால் என்னென்ன பயன்...

தினமலரின் பதில்: காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். ஏழை நெசவாளர் வீட்டுத் தறி நிற்காமல் இயங்கும். ஒரு வேளை கஞ்சிக்கே இல்லாதவருக்கு மூன்று வேளையும் மட்டன் பிரியாணி கிடைக்கும்; தமிழ் மக்கள் அனைவரும் மெட்ரிக்குலேசன் பள்ளிகளை மறந்து தம்பிள்ளைகளை தமிழ்ப் பள்ளிகளில் சேர்ப்பர். சக தமிழர்களுடன் தமிழிலேயே பேசுவர். இவ்வளவும் நடக்கப் போகிறது பாருங்கள்!(தினமலர் - வாரமலர் 13.6.2004)

பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் ஓர் ஆண்டையே சமஸ்கிருத ஆண்டாக அறிவித்து கோடிக்கணக்கான ரூபாய்களைக் கெட்டி அழுதார்களே, அப்பொழுதெல்லாம் இவர்கள் கூறும் இத்தியாதி இத்தியாதி சங்கதிகள் எல்லாம் நடந்தனவா என்று கேள்வி கேட்கும் உணர்ச்சி தமிழர்களிடம் இல்லாமல் போயிற்றே!

அந்தத் திமிரில் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு, தமிழால் வயிறு வளர்க்கும் பார்ப்பனர்கள் இப்படி எழுதுகிறார்கள் இதைவிட தமிழர்களை வேறு எந்த வகையில் சீண்டத்தான் முடியும்?

இந்த வார `துக்ளக்கில் ஆத்திரத்தின் உச்சியில் நின்று குரங்காட்டம் போட்டுள்ளார் திருவாளர் சோ. அட்டைப் படமே இந்தப் பிரச்சினைக்காத்தான்.
சித்திரை - பெரியார்
வைகாசி - அண்ணா
ஆனி - கலைஞர்
ஆடி - மாறன்
ஆவணி - ஸ்டாலின்
புரட்டாசி - அழகிரி
அய்ப்பசி - கனிமொழி
கார்த்திகை -மார்கழி -தைமாசி -பங்குனி -
முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் இவ்வாறு எழுதுவதாக ஒரு கற்பனையில் மூழ்கி, குரங்கு தன் புண்ணைக் கிளரிக் கொள்வதைப்போல சேட்டை செய்ய ஆசைப்பட்டுள்ளார்.

உள்ளே தலையங்கமும் இதே பிரச்சினைக்காகத்தான். ஆக தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்ற முதல்வர் கலைஞரின் அதிகாரப் பூர்வ அறிவிப்பு அக்கிரகார வாசிகளை தூங்க விடவில்லை; மன உளைச்சல் சகதியில் புரண்டு புரண்டு படுக்கின்றனர். போலிருக்கிறது.

``இந்த முதல்வருக்கும் அரசுக்கும் வேண்டியது என்ன? ஹிந்து மத நம்பிக்கைகளுடன் ஒன்றிய விஷயங்களை எள்ளி நகையாட வேண்டும். ஹிந்து மத நம்பிக்கையுடன் ஒன்றிவிட்ட பழக்க வழக்கங்களை மதிக்காமல் நடந்து கொள்ள வேண்டும். இந்த ஒரு வகையான `ஸ்டிசம் தவிர இந்தப் புதுவருட மாற்றத்திற்கு எந்தக் காரணமும் கிடையாது என்று ஒரு முடிவுக்கு வந்து எழுதித் தள்ளி விட்டார்.ஒரு உண்மையை அவர் அறியாமல் இந்த இடத்தில் ஒப்புக் கொண்டு விட்டார்.
ஏற்கெனவே இருந்து வந்த தமிழ் வருடம் சமாச்சாரமானது. ஹிந்து மத சம்பந்தப்பட்டதாகும் என்பதை ஒப்புக் கொண்டு விட்டார்.


பழைய ஏற்பாடு ஒழிக்கப்பட்டே தீர வேண்டும் என்பதற்கு இந்த ஒரே ஒரு காரணம் போதாதா?

ஹிந்து என்று ஒப்புக் கொண்டால் நாங்கள் சூத்திரங்கள்தானே பார்ப்பனர்களுக்கு வைப்பாட்டி மக்கள்தானே!

அதனை ஏற்றுத் தான் தீர வேண்டும் என்று இந்த 2008-லும் பார்ப்பனர்கள் திமிருடன் எழுதுவார்களேயானால் அந்தத் திமிரை அடக்குவதைத்தவிர வேறு வழியில்லை.

சூத்திரர்களாகிய நீங்கள் அனைவரும் வைப்பாட்டி மக்களாகத்தான் இருந்து தீர வேண்டும்; அதிலிருந்து வெளியேறக் கூடவே கூடாது என்பது `சேடிஸம் அல்லவாம்.

இந்த இழிவிலிருந்து வெளியேறியே தீருவது என்று தன்மான முடிசறைவதுதான் (ஸடிசமாம்!) பார்ப்பனர்களின் மானவுணர்வுக்கு இலக்கணம் எப்படி இருக்கிறது?

உடம்பு முழுவதும் நெய்யைத் தடவிக் கொண்டு எந்த ஆணுடனும் புணர்ந்து பிள்ளை பெற்றுக் கொள்ளலாம் என்பதைத் தர்மமாகக் கொண்ட கூட்டம் அல்லவா -

அய்வருக்கும் தேவி அழியாத பத்தினி என்று பாரதம் படிக்கும் பைத்தியக்காரர்கள் தமிழர்களின் உணர்வோடு பண்பாட்டோடு உரசிடப் பார்க்கிறார்கள்.

இது என்ன ராமன் காலமா சம்புகனை வதம் செய்ய? இது என்ன துரோணாச்சாரியார்களின் காலமா - ஏகலைவன் கட்டை விரல்களைச் சாவு வாங்க?

இது பெரியார் சகாப்தம் என்பதை மறந்து விட்டுத் துள்ளுகிறார்கள் - எதற்கும் ஓர் அளவு வேண்டும் என்று எச்சரிக்கிறோம்.

ஹிந்துமத சம்பந்தப்பட்டது - மத நம்பிக்கைகளுடன் ஒன்றியது என்றெல்லாம் சுற்றி வளைக்கிறாரே - அந்த இந்து மத சம்பந்தப்பட்ட சமாச்சாரத்தை எடுத்துவிட வேண்டியதுதானே!

சித்திரை முதல் தொடங்கு தமிழ் வருடம் இருக்கிறதே - பிரபவ தொடங்கி அட்சய என்பதில் முடிகிறதே - இந்த அறுபது வருடங்களும் என்ன தெரியுமா?

சாதாரணமாக நினைத்த விடாதீர்கள். அது தெய்வாம்சம் பொருந்தியது - அர்த்தமுள்ள ஹிந்துமதக் கடவுளர்களின் காம விஹாரச் சமாச்சாரம்! புல்லர்களே அதை அல்பம் என்று எண்ணி விடாதீர்கள்!

கிருஷ்ணன் என்ற ஆண் கடவுளுக்கும் நாரதன் என்ற ஆண் கடவுளுக்கும் பிறந்த 60 பிள்ளைகள்தான் அந்த அறுபது வருடங்கள் -இதற்குமேல் என்ன வேண்டும்?

`கப்-சிப் என்று எழுதிய `சோ அய்யர்வாளுக்கு என்ன தயக்கம்?

அர்த்தமுள்ள எங்கள் ஹிந்து மதத்தில் இப்படிப்பட்ட சமாச்சாரங்கள் எல்லாம் இருக்கின்றன என்று வெளியில் சொல்ல வெட்கமா?

ஹிந்து மத சம்பந்தப்பட்டவற்றில் தலையிடலாமா என்று கொக்கரிக்கும் இந்தக் குல்லூர்க்ஷகப்பட்டர் கூட்டம் - இந்தக் கேவலச் சமாச்சாரங்களை தங்களுக்கு மட்டுமே உண்மையான முழு குத்தகையான பிதிரார்ஜித சொத்து என்று அறிவித்துக் கொள்ளட்டும் - நமக்கு ஒன்றும் அட்டியில்லை!

அதனைத் தமிழர்கள் மீது திணிக்க இவர்கள் யார் என்பதுதான் தன்மான தமிழர்களின் கேள்வி - தந்தை பெரியார் சகாப்தத்தின் கேள்வி - எச்சரிக்கை! > -கவிஞர் கலி.பூங்குன்றன் >>
http://viduthalai.com/20080202/snews01.html

பகைமுகம் காட்டும் பார்ப்பனர்கள்!
தைத்திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிப்பு வந்தாலும் வந்தது - அதுபற்றிய சர்ச்சைகள் வழக்கம்போல தமிழ்நாட்டில் கிளம்பிவிட்டன.

இதில் ஒன்றைக் குறிப்பாகக் கவனிக்கவேண்டும். அனேகமாக எல்லாப் பார்ப்பனர்களும், அவர்களின் ஊடகங்களும் இதனை எதிர்த்துக் குரல் கொடுக்கின்றன - எழுதுகின்றன.பெரும்பாலும் தமிழர்கள் (ஒரு சில வீடணர்களைத் தவிர) இதற்கு ஆதரவு கொடுத்து மகிழ்கின்றனர்.

ஆரியராவது, திராவிடராவது என்று பெரிய மேதாவிகள் போல பேசும் சில அதிகப் பிரசங்கிகள் நாட்டில் உண்டு. இதுபோன்ற தமிழ், தமிழர், தமிழ்நாடு சார்ந்த பண்பாட்டுத் தளங்களில் ஏற்படும் தேவையான வரவேற்கத்தக்க மாற்றங்களின் போதெல்லாம் பார்ப்பனர்கள் ஓரணியாகவும், தமிழர்கள் இன்னொரு அணியாகவும் உத்தி பிரிந்து நிற்கும் நிலையைக் கண்ட பிறகாவது, இதுபோன்று கீறல் விழுந்த இசைத்தட்டுபோலப் பேசுவதை நிறுத்தவேண்டும் என்பதே நம் வேண்டுகோள்.

எந்த ஒரு கிறுக்குப் பிடித்த பார்ப்பான்கூட சமஸ்கிருதத்தை விட்டுக் கொடுத்துப் பேச மாட்டான். தமிழ்நாட்டின் கோயில்களில் தமிழில் வழிபாடு நடக்கவேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்தால், அதனை எதிர்த்து நீதிமன்றம் செல்வது பார்ப்பனராகத்தான் இருப்பதைக் காண்கிறோம். அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற தி.மு.க. ஆட்சியின் சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்ற 13 பேர்களும் பார்ப்பனர்களே!

தமிழ் செம்மொழி என்று அறிவிப்பு வெளிவந்த நிலையில், தினமலர் தினவெடுத்து எழுதுகிறது; இதனால் அனைவருக்கும் பிரியாணி பிளேட் கிடைக்குமா? என்று.1921 இல் தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத் தாண்டு தொடக்கம் என்று அறிவிக்கக் கோரிய பெருமக்கள் அனைவரும் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்களல்லர்; தமிழறிஞர்கள் - பக்திமான்கள்தாம்.

திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், பார்ப்பனீயத்தை எதிர்க்கக் கூடியவர்கள் - இது மாதிரி முடிவுகளை எடுத்தி ருந்தால்கூட, பார்ப்பனர்கள் வேறு நோக்கம் கற்பிக்க வாய்ப்பு உண்டு.

மறைமலை அடிகள், திரு.வி.க., கா.சு. பிள்ளை, நாவலர் சோமசுந்தரபாரதியார் (இவர் பழுத்த காங்கிரஸ்காரர்), நா.மு. வேங்கடசாமி நாட்டார் போன்றவர்கள் முடிவு செய்து அறிவிக்கிறார்கள் என்றால், அதைப்பற்றி பொறுப்புணர்ச்சி யுடன் சிந்தித்துப் பார்க்கவேண்டாமா?

சூத்திரர் ஆட்சிதான் என்று கலைஞர் சொன்னார் என்பதற்காக - (அது உண்மைதானே!) அந்தக் கண்ணோட்டத் திலேயே அவரைப் பார்த்து கணை தொடுக்கிறார்கள் என்றால், அவர்களைச் சூத்திரத் தமிழர்கள் அடையாளம் காணவேண்டாமா?

அறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள், தமிழர் வரலாறு எனும் நூலில் குறிப்பிடும் அளவுகோல் மிகவும் முக்கியமானது.

தமிழ்நாட்டில் பார்ப்பனர் பிறந்த நாள் முதல் தமிழையே வழங்குகிறார்கள். ஆயினும் அவர்கள் தாம் தமிழர் அல்ல என்றும், தமக்குத் தாய்மொழி ஆரியம் என்றும் உணர்கிறார்கள்.

ஆகவே, அவர்களிடத்தில், தமிழனிடத்தில் எழுவது போன்ற தமிழ் மொழிப் பற்றை நாம் காணுதல் முடியாது. இவ்வுணர்ச்சி குன்றிய கூட்டத்தினரே இந்திப் பிரச்சார சபைகளையும், வடமொழியைத் தமிழோடு கலந்து எழுதும் உரை நடைகளையும் தோற்றுவிக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல, விதிவிலக்காக ஒருவர் இருவரைத் தவிர, அநேகமாக அனைத்துப் பார்ப்பனர்கள் வீட்டிலும், குழந்தைகளுக்குப் பெயர் வடமொழியிலேயே இருக்கக் கூடியதையும் நடைமுறையிலே பார்த்துதான் வருகிறோம்.

பார்ப்பனர்கள் தமிழர் அல்ல என்பதையும், தமிழ் - தமிழர் - தமிழர் பண்பாடு - தமிழ்நாடு வளர்ச்சி இவைகளில் எப்பொழுதுமே பார்ப்பனர்கள் பகை உணர்வைக் காட்டுவதன் இரகசியம் இதுதான் என்பதைத் தமிழர்கள் உணர்வார்களாக!
http://viduthalai.com/20080202/news03.html

எப்போதும் வேண்டும் பெரியார்! -கவிஞர் எஸ். முனுசாமி, சேலம்

ஊஞ்சலில் சாமி சுருட்டுக்கோர் சாமியடா
காஞ்சியின் சாமிகளே காற்றில் பறக்கின்றான்
காலிப் பயல்கள் சமுதாயக் கேடர்கள்
ஆழியில் வீசி அமுக்கு
பேராசைக் காரக்கொடியன் புதையலுக்காய்
ஊரான் வளர்த்த பெண்ணை கொலை செய்தான்
மந்திர வாதியைக் காணுங்கால்
ஊர்சேர்ந்து கந்தல் செருப்பால் அடியும்.
நள்ளிரவில் பூசையாம் நாணமற்ற பெண்கள்தாம்
பிள்ளை வரம்கேட்டுப் போகின்றார்
மாமனோ வாசலில் நிற்கின்றான்
மானமற்ற முண்டங்கள்
ரோசம் வருமோ
இவர்க்கு.பக்தியின் போர்வையில்
காவிகளின் லீலைகள்
சிக்கித் தவிக்கின்ற சீரழியும் பெண்ணினம்
எப்போது புத்திவரும் யாரிவரை மீட்பார்கள்
எப்போதும் வேண்டும் பெரியார்.
http://viduthalai.com/20080202/snews05.html
--------------------------------------------
படித்துவிட்டீர்க‌ளா?
சிவனுக்குச் காமவெறி உச்சத்தை அடைய.. கூடு முன்பே வழிந்த இந்திரியத்தை கையிலே பிடிக்க.. ஐய்யோ அப்பா!! ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்த பிள்ளை.!!

சூத்ரனோ, பஞ்சமனோ (தமிழர்கள் ) கோயில்களுக்குள் ஒரு அடியெடுத்து வைத்தால்கூட பகவான் வெறுங்கல்லாகி ‘பட்’டென ஓடிப் போய்விடுவார். அதனால்... அவர்களை .... கோயிலுக்குள் விடாதே... என்கிறது ஆஹமம்
வைகுண்ட லோகத்தில் இங்கு போல் அங்கும் காம ஸூகத்தை அனுபவிக்கிறார்களா?... ?...
------------------------------------
மற்ற பதிவுகள்

2 comments:

TBCD said...

பட்டாசு..பட்டாசு..!!

தொடரட்டும் உங்கள் சிறப்பான பணி

சிந்திக்க உண்மைகள். said...

க‌ண்ணியமிக்க தோழர் TBCD அவர்களுக்கு நன்றிகள் பல்லாயிரம்