Followers

Wednesday, February 27, 2008

போட்டிகளில் பெண்களை சுலபமாக வெல்லும் வழி இதோ!!!.தில்லைக் காளியின் கதை தெரியுமல்லவா?

ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு. ஆண் நடனக்காரன் என்ற மமதையில் பெண்ணாகிய சக்தி (காளியை) த் தன்னோடு நாட்டியப் போட்டிக்கு அழைத்ததாம் நடராசன் எனும் கடவுள்.

இருவரும் சமமாகவே சிறப்பாக ஆடிக் கொண்டிருந்தார்களாம்.

நடராசன் மனதில் கெட்ட எண்ணம், சக்தியைத் தோற்கடிக்க வேண்டும் என்று!

உடனே, ஒரு காலில் நின்றவாறு மறுகாலை உயரே தூக்கிய நடனத்தைச் சிவன் ஆடிய தாம். புலித்தோலை மட்டுமே இடுப்பில் அணிந்த சிவன்

காலைப் பரக்கத் தூக்கி ஆடியதால், உள்ளுறுப்புகள் வெளித் தெரியக் கூச்சமும், அருவெறுப்பும் கொண்ட சக்தி இமைப் பொழுது தடுமாறிக் காலைத் தூக்கி ஆடினால், பெண்மை பங்கப்படுமே என்பதால் அந்த ஆட்டத்தை ஆடவில்லை.

சக்தி தோற்றுவிட்டதாக அறிவித்து தில்லையின் எல்லையை விட்டு வெளியேற வேண்டும் என்று சிவன் கூறியதாம்.
சிதம்பரம் நகரின் எல்லைக்கப்பால் தில்லைக் காளியம்மன் கோயில் உண்டு இன்றளவும்!
அந்தத் தில்லைக் காளிக்கு சிதம்பரத்தின் லால்புரம் பகுதியில் 48 அடி உயரத்தில் பொம்மை அமைக்கப்பட்டு வருகிறது. எவ்வளவு உயரத்தில் பொம்மை இருந்தாலும், சிறுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண் கடவுள் தானே, காளி! அந்த அவமானத்தைப் பொம்மையின் உயரம் துடைக்க முடியுமா?
http://viduthalai.com/20070520/news16.htm
---------------------------------------
மேலே சொல்ல‌ப்பட்டதை பிராமணர் தாத்தாச்சாரியார் இந்து மதம் எங்கே போகிறது ? என்ற த‌ன்னுடைய ‌ நூலில் கூறுவதை
இங்கே அழுத்தி இதுதான் சிதம்பர ரகசியமோ என்னவோ? படியுங்கள்.
-----------------------------------------------
மற்ற பதிவுகளுக்கு:- சிந்திக்க உண்மைகள்

Tuesday, February 26, 2008

கடவுளும் பாபம் செய்தவையா? நதிகள் எப்படிப் பாவம் செய்யும்? மீண்டும் பாவம் செய்வதற்கே!

மாசி மாதத்தில் முழு நிலவு நாளில் `மகம் திருவிழா கொண்டாடப்படுகிறது. மாசி மகத்தில் கும்பகோணம் மகாமகத்தின் போது (மூத்திர) குளத்தில் குளிப்பது என்பது பெரிய விழா. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இது நடைபெறுகிறது.

அன்றைய நாளில் கங்கை, யமுனை, சரசுவதி (?) நர்மதை, கோதா வரி, காவேரி, சரயூ, துங்க பத்திரா, கிருஷ்ணா ஆகிய ஒன்பது நதிகளும் மகாமக குளத்தில் குளித்துத் தம் பாவங்களை போக்கிக் கொள்கின்றனவாம்.

நதிகள் எப்படிப் பாவம் செய்யும்?

பாவம் செய்த மனிதர்கள் நதிகளில் குளித்துத் தம் பாவங்களைப் போக்கிக் கொண்டார்கள் அல்லவா? அப்படிக் கழுவிவிட்ட பாவங்கள் நதியின் பாவங்களாம். நதியின் பாவங்களை குளத்தில் போக்கிக் கொள்ளலாமாம்!

அது எப்படியோ இருக்கட்டும். `மாமகந்தான் ஆடுதற்கு வந்து வழிபடும் கோயில் என்று கும்பகோணத்தைப் பாடுகிறார்கள். மயிலையர் மாசிக் கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான் என்று மயிலாப்பூரைப் பாடுகின்றனர். மாசி மக விழா நடக்கும் கோயில்கள் இருக்கும் ஊரெல்லாம் இப்படிப் பாடுகிறார்கள். `

மாசிக் கடலாடி வீற்றிருக்க மண்டபமும் தில்லை நடராசன் கோயிலில் கட்டுவித்தான் ஒருவன் எனச் சிதம்பரம் கோயில் கல்வெட்டு கூறுகிறது.

எனவே சாமி கடலில் குளிக்கிறது மாசி மகநாளில்.``பாவத்தைக் களைந்து புண்ணியத்தைப் போர்த்துக் கொள்வதாகிய ராஜ கிரகத்துக்கு ஒரு சடங்கு வேண்டாவோ?

அவ்விதச் சடங்கே மஹாமகம் முதலிய புண்ய தீர்த்த யாத்திரையென்க என முத்தாய்ப்பு வைத்தார் முண்டாசு கட்டியப் பார்ப்பனக் கவிஞர்.

இவரைத்தான் புது மைக்கவி என்று புரட்சிக்காரர்கள் பூரித்துப் புகழ்ந்து புல்லரித்துப் போகிறார்கள்.

மனிதர் பாவம் கழுவக் குளத்திலோ, ஆற்றிலோ, கடலிலோ, குளிப்பது சரி. அந்த நாளில் கடவுள் ஏன் குளிக்கிறது?

கடவுள் பொம்மைகளை ஏன் தூக்கிக் கொண்டு கடற்கரைக்கு ஓடுகிறார்கள்?
கடவுளும் பாபம் செய்தவையா?
பாரதி விளக்குவதற்கு வழியில்லை. பக்தர்கள் விளக்க வேண்டும்? செய்வார்களா?

அன்றைய நாளில் அப்படி ஒரு கடவுளைத் தூக்கிக் கொண்டு சிதம்பரம் வட்டத்தில் உள்ள நஞ்சை முகத்து வாழ்க்கை எனும் ஊரின் கடல்கரைக்கு வருகிறார்கள். கடவுள் பெயர் தரைப் பன்றிச் சாமி (பூவராகசாமி என்பதைத் தமிழ்ப்படுத்தினேன் அவ்வளவே) இருக்கின்ற ஊர் பெயர் சிறீமுஷ்ணம் (கடலூர் மாவட்டம்)சீர்வரிசையோடு இந்தச் சாமியை ஊர் எல்லையில் வரவேற்பது இசுலாமியர்கள். பட்டுப் புடவை தந்து வரவேற்கிறார்கள்.

சாமி கடலில் தீர்த்தவாரி செய்கிறது. நாம் செய்தால் குளியல். அவாள் செய்தால் ஸ்நானம். அது செய்தால் தீர்த்தவாரி. யானை மண்ணைவாரி போட்டுக் கொள்வதுபோல சாமி நீரை வாரிப் போட்டுக் கொள்கிறதோ?

தீர்த்தவாரி முடிந்து இசுலாமியர் தந்த பட்டு உடுத்தி ஜாம் ஜாமென்று சிறீ முஷ்ணம் திரும்பும் பூவராகனுக்குக் கோயிலின் கதவுகள் நான்கையும் திறக்காமல் (துடைப்பர்) கட்டையடித் திருவிழா நடத்துகிறார்களே, ஏன்?

இரவு முழுவதும் பன்றிச் சாமி தெருவில் கிடந்து, (பூர்வீக உணவை உண்கிறதோ?) விடிந்ததும் கோயிலுக்குள்ளே போகிறதே, ஏன்?

நஞ்சை முகத்து வாழ்க்கையில் `துலுக்க நாச்சியார் தந்த துணியைக் கட்டிக் கொண்டு வந்தது என்பதற்கான தண்டனையா?

சீரங்கம் ரங்கனை உறையூர் துலுக்க நாச்சியார் கோயிலுக்குத் தூக்கிப் போய் இரவுச் சல்லாபம் முடிந்ததும் மறுநாள் சிறீரங்கம் தூக்கி வருகிறார்களே, அதுபோல சிறீமுஷ்ணம் சாமியும் செய்துவிட்டதால் தாயார் தரும் தண்டனையாம். (விஷ்ணுவின் பார்யாள் பக்தர்களுக்கு தாயார்)

இதே காரணத்திற்காகத் திருப்பதியில் இருந்த அலர்மேலு மங்கைத் தாயார் திருப்பதியை (கணவன் இருப்பிடத்தை) விட்டு வெளியேறி திருச்சானூரில் தனிக் குடித்தனம் செய்கிறது.

ஊருக்கு ஒரு விதமான தண்டனை! நிற்க, பாவம் போக்க தீர்த்தவாரி என்றால், வைப்பாட்டி வீட்டுக்குப் போய் பாவத்தைக் கொள்முதல் செய்கிறதுகளே, கடவுள்கள்! இதுகளைத் திருத்தவே முடியாதா?

இந்தப் பாவத்தைக் கழுவுவது எப்போது? ஓகோ, அதற்காகத்தான் அடுத்த ஆண்டு மாசி மகம் வருகிறதோ?


``கீழே விழுவது மீண்டும் எழுவதற்கே என்றார் நரேந்திரன் என்கிற விவேகானந்தன்.

இங்கே, மாசி மக ஸ்நானம் மீண்டும் பாவம் செய்வதற்கே!
விந்தை மதம்தான் இந்து மதம்!

எந்தக் கடவுள் பெரியது?
இந்து மதத்தில் மும்மூர்த்தி கள் என்கிறார்கள். பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பணி என்கிறார்கள். பிரம்மா படைக்கிறதாம். விஷ்ணு காக்கிறதாம். சிவன் அழிக்கிறதாம். அடுத்தது அதனதன் பாதையில் அதனதன் பணியைப் பார்ப்பதுதான் நல்லது. அதை விடுத்து ஒன்றின் பணியில் மற்றது குறுக்கிடுவது சரியல்லவே!

இச்சாதாரண முறை ஏன் கடவுள்களுக்குத் தெரியவில்லை?
இந்தப் பிரபஞ்சம் எல்லாவற்றையும் தாமே படைத்ததாக பிரம்மா நினைத்துக் கொண்டு தன்னை மிக உயர்வாக நினைத்துக் கொண்ட தாம். சிவனுக்கும் அய்ந்து தலைகள்; தனக்கும் அய்ந்து தலைகள். ஆகவே சிவன் ஒன்றும் பெரிதல்ல; தன்னைப் போலவே அது என்று இறுமாந்ததாம். இந்த நினைப்பு கெட்ட காரியத்திற்கும் தூண்டியதாம்.

சிவனின் மனைவியை ``ஒரு மாதிரியாகப் பார்த்ததாம் பிரம்மா!

அந்தப் பெண்மணிக்குக்கூட வேறுபாடு தெரியாதா, என்ன? அதுவும் பிரம்மா மேல் ``ஒரு மாதிரியாகப் பார்த்ததாம். பரமசிவன் அதைப் பார்த்து விட்டதாம். என் பெண் ஒரு மாதிரி, உன் பையனை அடக்கி வை எனக் கூறினானாம் ஒரு தந்தை!

அதைப் போலவே முறை தவறும் தன் மனைவியை ஒன்றும் செய்யாமல் பிரம்மாவின் தலையைக் கிள்ளி எடுத்து விட்டதாம் சிவன்.

அய்ந்து முகப் பிரம்மா நான்கு முகம் கொண்டதாகி விட்டதாம்.
தவறு செய்தான், தண்டனை கிடைத்தது என்று விட்டுவிடவில்லை. பிரம்மா பார்ப்பனன் ஆனதால் `பிரம்மஹத்தி (பார்ப்பனக் கொலை) தோஷம் சிவனைப் பிடித்துக் கொண்டதாம்.

இருந்தாலும் அதற்கு `பிரம்ம சிரகண்டீகர் எனப் பெயராம்.
மாவலிச் சக்ரவர்த்தியைத் தெரியுமல்லவா? மூன்றடி மண் வேண்டும் எனக் கேட்டு அவனைக் கொன்றது வாமன அவதாரம் எடுத்த விஷ்ணு. அதனால் கோபம் வந்து விட்டதாம் சிவனுக்கு. ஏன் தெரியுமா?

ஒரு முறை, சிவன் கோயிலில் எரிந்து கொண்டிருந்த அகல் விளக்குத் திரியைத் தூண்டிவிட்டு எரியச் செய்தவனாம் மாவலி. அதிலும் எலியுருவில் கோயிலில் நுழைந்து செய்தானாம். அதனால் சிவனால் வரங்கள் அளிக்கப்பட்டவனாம் மாவலி.

அப்பேர்ப்பட்ட சிவனின் பரமபக்தனை வதம் செய்ததால் விஷ்ணுவின் காலில் புற்றுநோய் உண்டாகும்படிச் சாபம் இட்டு விட்டதாம் சிவன்.

இந்தப் புற்று நோயால் அவதிப்பட்ட விஷ்ணு புலம்பிக் கொண்டே இருந்ததாம். காலில் வரும் புற்று நோய் கொடிய மெலனோமா அபூர்வமாக வருவது. ஆனாலும் ஆபத்தானது. கரும்பழுப்பு அல்லது கறுப்பு நிற மரு போலத் தோன்றும். கவனிக்காமல் விட்டால் பெரிதாகும் புண்ணாகும். இரத்தம் வடியும். பெரும்பாலும் பாதத்தில் வரும். தொடக்க கட்டத்திலேயே மருத்துவம் பார்த்தால் குணமாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

விஷ்ணு கயிலாயம் போய் சிவனைச் சந்தித்துச் சாப விமோசனம் கேட்டதாம். திருவெற்றியூர் வந்து (நிம்ப வனம்) குளத்தில் குளித்துத் தன்னைக் கும்பிட்டால் குணமாகும் என்று கூறியதாம் சிவன். விஷ்ணுவும் போனதாம். வாசுகி குளத்தில் குளித்துக் கும்பிட்டதாம். கால் புற்று நோய் குணமாகி விட்டதாம்.

மதுரையிலிருந்து திருவாடானை போய், 12 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள திருவெற்றியூரை அடையலாம். கால் புற்றுநோய் கொண்டவர்கள் குளத்தில் குளித்தால் குணமாகி விடும் என நம்பிப் போய்விட வேண்டாம்.

எவன் தலையில் கை வைத்தாலும் அவன் தலைவெடித்துச் செத்துப் போவான் என்று பத்மா சூரனுக்கு வரம் கொடுத்து விட்டதாம் சிவன். வரம் பலிக்கிறதா எனப் பரிசோதனை செய்து பார்க்கலாம் என்று சிவன் தலையிலேயே கை வைத்துப் பார்க்க முயன்றானாம். பத்மாசூரன். பயந்து போன சிவன் ஓட, சூரன் துரத்த, விஷ்ணு பெண் வேடம் போட்டு வந்து சூரனை மயக்கிக் கொன்றதாகவும் ஒரு கதை.

முன் கதையை வைத்து சிவன் பெரியதா? பின் கதையை வைத்து விஷ்ணு பெரியதா?

பாரத மாதா கோயில்!
தருமபுரி மாவட்டம் பாப்பாரப் பட்டியில் பாரத மாதா கோயில் கட்ட வேண்டும் என்று சுப்ரமணிய சிவா என்பவருக்கு எண்ணம் இருந்தது. அவர் அந்த ஊர்க் காரர். கப்பலோட்டிய தமிழ னின் நண்பர். கண்ணனூர். கோவைச் சிறைகளின் கொடுமையை அனுபவித்து விட்டு வெளியே வந்த அவரை வரவேற்க வந்த உற்ற நண்பர் சிவா. அவருடைய தியாகம் உயர்ந்தது. பாரத மாதா கோயில் கட்டும் நோக்கம்கூட அன்றைய நிலையில் நியாயமாக இருந்திருக்கலாம்.இன்றைக்கு அதற்காக நடக்கிறார்களே! ஒரு அய்யம்,

கோயில் அன்றைய பாரத மாதாவுக்கா? இன்றைய மாதாவுக்கா? பாரத மாதா என்று இன்று அழைக்கலாமா? மணி முடி இருந்த கேசவர்த்தினி தடவாமலே வளர்ந்த தலைமயிர் (ஆப்கானிஸ்தான்) இன்றைக்கு இல்லை. முகத்தில் ஒரு பக்கம் தான் இருக்கிறது (காஷ்மீர்) மறுபக்கம் பாகிஸ்தானுக்குப் பறிபோய் விட்டது.

இருக்கும் பக்கம்கூட இழிபறியாக இருக்கிறது. வலது தோளும் கையும் காணோம். பாகிஸ்தானாகி விட்டது. இடதுகையும் சேலையின் முன்தானையும் (பர்மா) மியான்மா நாடாகி விட்டது. கால் பாதங்கள் இலங்கையாகி விட்டன.

இடதுபக்க இடுப்புப் பகுதி பறிபோய் பங்களா தேஷ் என்றாகி விட்டது.
மிச்சம் இருப்பது உருவமில்லா உருவமாக இருக்கிறதே! இதற்கா கோயில்?

கோட்சே குடும்பம் இன்றைக்கும் வைத்துக் கொண்டிருக்கும் பாரத மாதாவுக்கும் இன்றைய பாரத மாதாவுக்கும் ஏகப்பட்ட சேதங்கள், இழப்புகள் இருக்கையில் எந்தப் பாரதமாதாவுக்குக் கோயில்? நடப்பதற்கு முன்னால் யோசிக்கவில்லை. நடந்த பின்னாலாவது யோசிக்கலாமே!
நாட்டுக்குச் செய்யவும் மக்களுக்கு ஆற்றவும் எவ்வளவோ இருக்கின்றன. அவற்றை விடுத்து... http://viduthalai.com/20080223/snews05.html
--------------------------------------
படித்துவிட்டீர்க‌ளா?
பைபிளின் வகைகள்-- பைபிளில் அக்கிரமஙகள் ஆபாச, காம அபத்தஙகள் ஒழுக்க எதிர்மறைகள், பெண் இழிவு

பைபிளின் 20,000 to 50,000பிழைகள். சில பகுதிகள் உண்மையல்ல ஆதலால் பைபிளின் மீது ஆணையாக சத்தியம் கூடாது.> கத்தோலிக்க திருச்சபை.

ஏசு கடவுள் அல்ல - பைபிள் புரட்டுகள். கிறித்தவ மதத்தில் A to Z வரை பிரிவுகள்:
---------------------------
மற்ற பதிவுகளுக்கு:- சிந்திக்க உண்மைகள்

Monday, February 25, 2008

`ருத்ராட்சக் கொட்டையை அணிந்து கொண்டால், கெட்ட ஆவிகளின் தொந்தரவு இருக்காது ??

மூடத்தனம் பரப்பும் தொலைக்காட்சி விளம்பரம் தடை செய்யப்பட்டது!

லண்டன்: பிரிட்டனில் ஒளிபரப்பாகும் எம்.ஏ. தொலைக் காட்சியில் வரும் விளம்பரம் ஒன்று மூடத்தனத்தை வளர்க்கிறது என்பதால் அதற்குத் தடை விதித்து விட்டது பிரிட்டன் அரசு.

கணேஷ் ருத்ராட்சப் பதக்கம் எனும் வியாபாரப் பொருள் பற்றிய விளம்பரம்தான் தடை செய்யப்பட்டது.

இரண்டு பெண்களும் ஒரு ஆணும் பேசிக் கொள்வது போன்ற விளம்பரத்தில் ருத்ராட்சக் கொட்டைகளை அணிந்து கொண்டால் கெட்ட ஆவிகள் தொல்லை இருக்காது என்று பேசிக் கொள்வார்களாம்.

இதற்கு அறிவியல் பூர்வ ஆதாரம் உள்ளது என்றும் கூறிப் பேசுவார்களாம்

இது மாயாஜாலச் செயல்களை ஊக்குவிக்கும் மூடவிளம்பரம் என்று அரசாங்க அமைப்பான `அட்வர் டைசிங் ஸ்டாண்டர்டு ஏஜன்சி குறிப்பிட்டுத் தடை செய்துள்ளது.

`ருத்ராட்சக் கொட்டையை அணிந்து கொண்டால், கெட்ட ஆவிகளின் தொந்தரவு இருக்காது என்பதை நிரூபிக்க ஆதாரம் ஏதும் கிடையாது; இது வெறும் மூடநம்பிக்கை. எனவே இந்த விளம்பரம் வெளியிடத் தடை விதிக்கப்படுகிறது என்று ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிறித்துவர்கள் சிலுவை அணிவதைப் போல, இந்துக்கள் ருத்ராட்சம் அணிவது பழக்கம் என்றெல்லாம் விளக்கம் கூறப்பட்டதை அரசு நிறுவனம் ஏற்கவில்லை! இந்த மாதிரி நிலை இந்தியாவில் என்றைக்க ஏற்படும்?
http://viduthalai.com/20080224/news01.html

பொட்டு வைப்பவர்களுக்கு எச்சரிக்கை!

குங்குமம், பிந்தி, கஜல் ஆகியவற்றில் நச்சுப் பொருள்கள்!

சென்னை, பிப். 24: நெற்றியில் குங்குமப் பொட்டு வைத்துக் கொண்டாலோ, பிந்தி எனும் சிறிய வட்டத்தை ஒட்டிக் கொண்டாலோ முகத்திற்கு அழகு சேர்கிறது என மட்டும் நினைக்கிறவர்களுக்கு எச்சரிக்கை தரும் வகையில் உண்மைகள் வெளிவந்துள்ளன.

குங்குமம், பிந்தி, கஜல் ஆகியவற்றில் காரீயம், ஆர்சனிக் போன்ற நச்சுத் தன்மை உள்ள பொருள்கள் கலந்துள்ளன.

அவற்றால் சொறி, சிரங்கு போன்ற தோல் வியாதிகள் ஏற்படுவதுடன் பிற குறைகளும் உண்டாகின்றன.தோல் புண், மற்றும் வீக்கம் ஆகியவை பிந்தி வட்டம், மற்றும் குங்குமம் பயன்படுத்துவோருக்கு உண்டாவதை, ஒவ்வொரு மாதமும் தான் சிலரிடம் காண்பதாக, தோல் நோய் சிகிச்சை மருத்துவர், எஸ்.சோனா கூறினார்.

காரீயம் கலந்த பொருள்களைத் தொடர்ந்து பயன்படுத்தினால், நாளாவட்டத்தில் அதனால் பெருங்கேடு விளையும், என்றார்.காரீயம் மூளை நோய்களையும் குழந்தைகளிடம் ஏற்படுத்தும். எலும்பு நோய், நடந்து கொள்ளும் முறையில் சிக்கல், காது கேளாமை, மூட்டு வலி, கரு உருவாவதில் குறைபாடு முதலியவை வளர்ந்தவர்களுக்கு ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.

பிந்தி வட்டத்தின் பின் பகுதியில் பசையிருக்கிறது. அதனால் சொறி, சிரங்கும், மற்ற தோல் வியாதிகளும் ஏற்படும்.

அரவிந்து ஆய்வுக் கூடங்களின் மேலாண்மைக் கூட்டாளியான, ஆ.இராஜகோபால் என்பவரை விசாரித்த போது, குங்குமம், கஜல், பிந்தி முதலியவற்றை உற்பத்தி செய்கிறவர்கள், எந்த அளவுக்குக் காரீயம், ஆர்சனிக் ஆகியவை அனுமதிக்கப்படுகின்றனவோ, அந்த அளவைவிட அதிகமாக அவற்றைச் சேர்ப்பதாகத் தெரிவித்தார்.

காரீயம், ஆர்சனிக் மற்றும் பிற கனமான உலோகங்கள், வண்ணப் பொருள் களில் நிறைய உள்ளன. அவற் றின் அளவைக் குறைக்க, அவற்றைச் சுத்தம் செய்ய வேண்டும். ஆனால் அதற்கு அதிகச் செலவாகும். அதற்குப் பல உற்பத்தியாளர்கள் தயாராக இல்லை. ஒரு கிலோ சுத்தம் செய்ய ரூ.200 செலவு கூடுதலாக ஆகிறது, என்றார் ராஜகோபால்.

பயன்படுத்தப் படும் வண்ணப்பொருள், பசை ஆகியவன குறித்த எச்சரிக்கையைக் குங்குமம், பிந்தி முதலிய பொருள்களுடன் தரவேண்டும் என்று சட்டம் உள்ளது. ஆனால் அதை எவரும் பின்பற்றுவது இல்லை.வாங்குவோரும் அவற்றைப் பற்றிக் கவலைப்படாமல் வாங்கிப் பயன்படுத்துகிறார்கள்; பின்பு கஷ்டப்படுகிறார்கள்.
http://viduthalai.com/20080224/news03.html

Sunday, February 24, 2008

சுகமான சுமைகள் நடிகர் பார்த்திபன் வசமாக மாட்டிக்கொண்டு ஏமாந்த கதை

``சார், சென்னைப் புறநகர்ல தெரிஞ்ச ஒரு சாமியார் இருக்கார். நீங்க ஒரு தடவை போய்ப் பார்த்தீங்கன்னா எல்லாப் பிரச்சினையும் தீர்ந்துடும். நிறைய மினிஸ்ட்டருங்க அவரைப் பார்த்துட்டுப் போறாங்க. ரொம்ப பவர்ஃபுல்.’’

``ஏற்கெனவே பவர்ல இருக் கிற மினிஸ்ட்டருங்க எதுக்கு அவரைப் போய் பார்க்கணும்?’’நான் கிண்டலடிக்க,
``இப்படியெல்லாம் கேட்டீங்கன்னா எனக்குப் பதில் சொல்லத் தெரியாது. ஒரே ஒரு தடவை நீங்களும், அண்ணியும் வந்து பாருங்களேன்.’’

சம்மதிப்பதற்கான சமாதானங்கள் தொலைக்காட்சி சீரியலாக நீள, அந்தப் புறநகர் சாமியார் இடத்தில் `ஸாரி’ மடத்தில் நாங்கள் பணிவாய்க் காத்திருந்தோம். வரும் முன் பார்ப்போம் என அந்த அறையை என் கண்கள் வட்டமிட்டதில், ஒரு சாமிப் படமும் அங்கு இல்லை. எல்லாம் அந்த சாமியார் படங்களாகவே இருந்ததில் என் புருவங்கள் இரண்டும் கேள்விக்குறியாக வளைந்தன.

ஒரு திரைப்படப் புகைப் படக் கலைஞரின் அதி அழகியல் நுட்பத்துடன் ஒவ்வொரு ஃப்ரேமும் இருந்தது.

அவரது கண்கள் மட்டும், ஒரு `8’ போல் விரல்கள் பிணைந்திருக்கும் இரு கைகள் மட்டும், காவி வேட்டிக்குள் இருந்து எட்டிப் பார்க்கும், இரண்டு கால்கள் மட்டும், புறமுதுகிட்டு அவர் அமர்ந்திருப்பது மட்டும், கடைசியாக அவரது முழு உருவம்.

எல்லாப் படங்களிலும் மலை மலையாக உதிரிப் பூக்கள் ஒட்டப்பட்டிருந்தன. தன்னைத்தானே சாமியாக வணங்கும் ஒரு சாமியாரைப் பார்ப்பது வியப்பாக மட்டும் இல்லாமல் ஏதோ ஒரு நம்பிக்கையையும் ஏற்படுத்தியது.
ஒரு தெலுங்குப் பட வில்லனின் வாசனை அந்த அறைக்குள் முதலில் நுழைந்தது. பிறகு அவர் வந்தார். ஆஜானுபாகுவாக இருந்த அவர், மைசூர் பாகுவாக இனிமையாகப் பேசினார். கேசரிப் பவுடர் போட்டுக் கிண்டியதைப் போல கண்கள் இளம் சிவப்பில் மிதந்தன.அதை மூடி வைத்து ஒரு வேக்காட்டுக்குப் பின் திறந்த படி, ``சொல்லுங்க’’ என்றார்.

`சொல்’வதற்குள் எல்லாம் எனக்குத் தெரியும். உங்களுக்கு யாரோ செய்வினை பண்ணியிருக்காங்க.’’

அதிர்ச்சி எங்களை ஆட்கொண்டது.``உங்க வீட்லயிருந்து ஒரு பிடி மண்ணை எடுத்துட்டு வாங்க. யார் செஞ்சதுன்னு சரியா சொல்லித்தரேன்.’’
அவர் பேச்சில் ஏதோ பிடிப்பு ஏற்பட, பிடி மண்ணுடன் மீண்டும் ஆஜரானோம். அந்த மண்ணைத் தன் உள்ளங்கையில் வைத்து, கண்ணை மூடிப் பார்த்தவர், சில நொடிகளுக்குள் `ஷாக்’ அடித்தவர் போல கை உதற, மண் சிதறியது. எங்கள் இருவரையும் மாறி, மாறிப் பார்த்தவர், ஒரு மாதிரியாகவும் சிரித்தார்.
``நெறைய வெச்சிருக்காங்க. தொழில் நாசமாக கெட்ட காரியம் பண்ணியிருக்காங்க.’’

நாங்கள் இருவரும் புதிருக்குள் விழுந்தோம்.
``யார் செஞ்சிருப்பாங்க...? ஏன் செஞ்சிருப்பாங்க...?’’
``எடுக்கலாம். ஆனா, பொதுவா நான் யார் வீட்டுக்கும் போகாது’’ என்று கூறியபடி கோழியாகி அந்த மண்ணையே கிளறிக் கொண் டிருந்தார்.
நாங்கள் கிட்டத்தட்ட கெஞ்சிய பிறகு, ஒப்புக்கொண்டார், எங்கள் வீட்டின் விஜயத்துக்கு.

அப்படி அவர் வருவதானால், நாங்கள் என்னவெல்லாம் வாங்கி வைக்கவேண்டும் என்று அவரே ஒரு `லிஸ்ட்’ எழுதிக் கொடுத்தார்.
அந்த அனுமார் வாலைச் சுருட்டி, பாக்கெட்டில் வைத்துக்கொண்டு, வேகமாக வெளியேறினோம். ஆனால், எங்கள் மனக்கடல் உள்வாங்கியது வருத்தத்தில்.

அவர் எங்கள் வீட்டுக்கு வரும் வரை எங்கள் கண்களும் கேசரி பவுடரைப் போட்டுக் கிண்டியதைப்போல சிவந்தே இருந்தது உறக்கமின்மையால்.
வந்தார். ``எல்லாம் ரெடியா?’’ என்றார். வழக்கமான பூஜை பொருள்களுடன் மூன்று நிறங்களில் மூன்று சாத உருண்டைகளை உருட்டி வைத்திருந்ததைக் காட்டினோம். அந்தக் குறிப்பிட்ட பூஜைக்காக குறிப்பிட்ட கறை போட்ட வேட்டியையும் வாங்கி வைத்திருந்தோம்.

காட்டிய வேட்டியைக் கட்டிக்கொண்டு பூஜை அறைக்குள் நுழைந்தார். நுழையும் முன், ``அந்த கார்டன்ல மூணு அடிக்கு ஒரு குழியத் தோண்டி வைங்க. வேலைக்காரங்க வேணாம். நீங்களே தோண்டுங்க’’ என்று சொல்லிவிட்டு அந்த மூன்று சாத உருண்டைகள் உள்ள தட்டை எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தார். முப்பது நிமிடம் கழித்து வெளியே வந்தார்.

எனக்கு நானே குழியைப் பறித்துவிட்டு, (அதாவது தனியனாக) நின்று கொண்டிருந்த என்னிடம் அந்தச் சாத உருண்டைத் தட்டை நீட்டி குழியில் போடச் சொன்னார். அதில் தீர்த்தம் ஊற்றி மண்ணை மூடி, சூடம் காட்டி, ``சூ.... மந்திரக்காளி’’ சொல்லி சற்று கழித்து என்னிடம் அந்தக் குழிக்குள் கையை விட்டுத் தேடிப் பார்க்கச் சொன்னார். சற்று நேரம் தேடிய பின், அந்த புதைபொருள் ஆராய்ச்சியில் புதைந்திருக்கும் பொருள் தெரியாமல், அண்ணாந்து அவரைப்பார்த்தேன்.

`இன்னும்’ என அவர் இமை சுருங்கி விரிந்தது. இன்னும், இன்னும் தேட விரல் இடுக்கில் ஏதோ தகடுபோல் தட்டுப்பட்டது. வெளியில் எடுத்து அவரிடம் நீட்டினேன். அவரும் பழிக்குப் பழியாகத் தண்ணீர் இருந்த ஒரு பாத்திரத்தை என்னிடம் நீட்டினார்.

அதில் போட்டு விட்டு, இன்னும் தேடி, இன்னும் இன்னும் போட்டேன். பாத்திரம் நிறைய செம்புத் தகடுகள் புழுவாய் நெளிந்தன.
ஒட்டியிருந்த மண்ணை எல்லாம் துடைத்து விட்டு என்னை அதைப் படித்துப் பார்க்கச் சொன்னார்.

`உன் சினிமா தொழில் சின்னாபின்னமாக’, `நீ நாசமாகப் போக’, `உன் புள்ளைங்க உருப்படாமல் போக’, நீ ஜன்னி வந்து சாக’, உன் பொண்டாட்டி புள்ளைங்க அழிஞ்சு போக...’

இப்போது இதை எழுதும் போதே என் கைகள் நடுங்குகிறது என்றால், அதை வாசித்த போது என் மனம் என்னவாய் வெடித்திருக்கும்!
துடித்தபடி நானும் என் மனைவியும் கேட்டோம். ``யாருங்க...? யாருங்க..? யாருங்க எங்களுக்கு இப்படி செஞ்சிருப்பாங்க?’’

அமைதியாக எழுந்தவர், எங்கள் தலைமீது அவரின் கையை வைத்து (ஏற்கெனவே நாங்கள் தலையில் கை வைத்த படிதான் அமர்ந்திருந்தோம்.
``எல்லா செய்வினையையும் நான்தான் எடுத்திட்டேன்ல.... அப்புறம் ஏன் கவலைப்படு றீங்க? இனிமே நீங்க நல்லா இருப்பீங்க!’’ எனக் கூறிவிட்டு ஒரு வேப்பிலை மரமாய் வெளியேறினார்.

என் மனைவியின் அழுகையின் பின்னணியில் நான் மீண்டும் மீண்டும் அந்தத் தகடுகளைப் படித்தபடி, படிக்காமல் வெறித்தபடி இருந்தேன்.

யாராக இருக்கும்? இவ்வளவு வன்முறையான வார்த்தைகள் வர எது ஏதுவாக இருந்திருக்கும் என்று என் மண்டைக்குள் ஜல்லடை போட்டேன். முதலில் இந்தக் கையெழுத்து யாருடையது?

எங்கோ பார்த்த மாதிரி ஞாபகம்... அதுவும் சமீபமாக...
சலித்த பிறகு ஜல்லடையில், ஒரே மாதிரியான சுழித்தல் உள்ள நான்கைந்து எழுத்துகள் ஒட்டிக் கொண்டிருந்தன.

திடீரெனத் தலையில் தேங்காய் அடித்து உடைத்தது போல் ஒரு அனுமார் வால் பேப்பர்.

சாமியார் எழுதிக் கொடுத்த, அந்த `லிஸ்ட்’ பேப்பரை எடுத்துப் பார்த்தேன். என் கண்கள் மின்னின. அந்தத் தகடுகளையும், பேப்பரையும் ஒப்பிட்டேன். என் மனைவியைக் கூப்பிட்டேன்.

``ஆமா! ரெண்டு கையெழுத்தும் ஒரே மாதிரிதான் இருக்கு!’’
வலமிருந்து இடமாக பூமிப் பந்து சுழல்வதை எங்கள் தலைச் சுற்றலால் கவனிக்க முடியவில்லை.

பணம் சம்பாதிக்கும் ஆசையில் அதிபுத்திசாலித்தனம், செம்புத் தகடுகளாய் மாறி, சாத உருண்டைக்குள் நுழைந்து பூமிக்குள் புதைந்து மீண்டும் எங்கள் கைகளில். இதை நான் கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால், அந்தச் சாமியாரின் மந்திர சக்தியால் இனி எங்கள் குடும்பம் சுபிட்சமாக இருக்கும் என்ற அளவில் நாங்கள் சந்தோஷமாக இருந்திருப்போம்.

அதிபுத்திசாலித்தனம், ஆபத்துகளை விளைவிக்க ஆயத்தமாக, ஆயுதமாக ஆகிவிடுமோ...?

சாமியார் சென்ற திசையைப் பார்த்தோம். தி.நகர் சென்று விட்ட அவருடைய கார் கிளப்பிய புழுதியில் புழுக்கமும், வேதனையும் பரவி, விரவி வியாபித்திருந்தது. நன்றி: `கல்கி’, 10.6.2007
http://viduthalai.com/20070605/news11.htm

Saturday, February 23, 2008

பார்ப்பனர்களின் முகத்திரையைக் கிழிக்கிறார்.

பார்ப்பன உருவாக்கக் கடவுளர்களில் ஒன்றான ஈசுவரனுக்கு (சிவன்) 52 பெயர்கள் தரப்பட்டுள்ளன. ஈசுவரன், மகேசுவரன், மகாதேவன், மகாநாதன், ஹரன், ருத்ரன், திரிலோசனன், திரிபுராந்தகன், கிராதுத்வமாசன் உள்ளிட்ட பல பெயர்கள் `அமரகோசம் என்ற வேத புராணப் புளுகு நூலில் காணப்படுகின்றன.

கடவுள்களுக்கெல்லாம் கடவுளான இந்த பரமேசுவரனின் யோக்கியதையைக் காணுவோம்.

1) இறப்பே இல்லாதவனாகப் பார்ப்பனர்களால் வருணிக்கப்படும் இந்த(து)க் கடவுள் பஸ்மாசாரனைக் கண்டு ஏன் தலைதெறிக்க ஓட வேண்டும்? தான் அளித்த வரத்தையே ரத்து செய்ய முடியாத கையால் ஆகாதவனா இந்த சிவன்?

பஸ்மாசுரன் தலையில் கை வைத்தால் செத்து விடுவோமென்று பயந்து நடுங்கி அலறி ஓடும் கோழையால். சாவு வரம் எப்படிக் கொடுக்க முடியும்?

இது (இந்தக் கற்பனை) சிறு பிள்ளைத்தனமாக இல்லையா? (அய்யா தந்தை பெரியார் மொழியில் பிள்ளைகளின் மரப்பாச்சி விளையாட்டு)

2) கடவுளர்களுக்கே கடவுளான சிவன், சாதாரண மனிதனைக் கண்டு ஓடுவதா? அப்படியானால், கடவுளர் களுக்கெல்லாம் கடவுள் என்பது முழுக்க முழக்க புருடா தானே!

3. ஆலகால விஷத்தை விழுங்கித் தொண்டையிலேயே நிறுத்திக் கொண்ட திருநீலகண்டன், சாவுக்கு பயந்து (பஸ்மாசுரன் துரத்த ) ஒட்டமெடுப்பதா?

4). அழித்தல் வேலை பார்ப் பதாகக் கூறப்படும் மும்மூர்த்திகளில் ஒருவனான சிவன், பஸ்மாசுரன்மீதும் அழித்தல் அஸ்திரத்தைப் பயன்படுத்தியிருக்க முடியாதா

5) முக்கண்ணனான சிவன், மூன்றாவது கண்ணைத் திறந்தால், எல்லாம் சாம்பலாகி (பஸ்பம்) விடுமாமே?

பஸ்மா சுரன் துரத்தும் போது, நெற்றிக் கண்ணைத் திறந்து, பஸ்மாசுரனைப் பஸ்பம் ஆக்கியிருக்கலாமே? ஏன் செய்யவில்லை? நெற்றிக்கண் பார்ப்பன புருடாதானே! (முரண், முரண், முரண்)

6) தட்சனின் யாகத்தைத் தடுத்து நிறுத்த முடிந்த சிவனுக்கு; முன்னவனின் தலையைக் கொய்து, பின்னர் ஆட்டுத் தலையை வைத்து, தட்சணை ஆட்டுக்கடா தலையனாக்கிய தலை வெட்டித் தம்பிரானுக்கு, வீரபத்ரன் என்பவனை உருவாக்கி - தலைவெட்டிப் பழி தீர்த்துக் கொண்டவனுக்கு, பஸ் மாசுரனை ஒழிப்பதற்கும் ஒரு வீரபத்ரனை உருவாக்குவதில் என்ன சங்கடமிருக்க முடியும்? சிவ(னின்) சக்தி யோக்கியதை இங்கேயும் சிரிப்பாய் சிரிக்கிறதே!

7) குளிக்கும் பார்வதியை (அம்மணமாக)ப் பார்ப்பதற்குத் தடையாக இருந்த அழுக்குருண்டைப் பொம்மையின் தலையை வெட்டி யெறிந்த தீரனுக்கு மாற்றாகப் பொருத்த வேறு மனிதத் தலையைத் தருவித்துப் பொருத்துவதில் என்ன சங்கடம் இருக்க முடியும்?

யானைத் தலை மனிதக் கழுத்தில் பொருந்துமா?
பொம்மை உருவாக்கி உயிரும் கொடுத்த பார்வதிக்கு தலை பறிபோன வனுக்கு மீண்டும் வேறொரு தலையை வைப்பதுதானா கடினம்?

சிவன் - பார்வதி இருவருக்குமே தெய்வீக அற்புத சக்தி இருக்கிறதென்பதும் பார்ப்பன புருடாக்களின் உச்ச கட்டம்தானே?

அதனால் தானே, பஸ்மாசுரன் துரத்த, சிவன் ஓட்டமெடுத்து, மாரத்தான் போட்டிபோல், விஷ்ணு விடம் தஞ்சமடைந்தான்?8. ஊழித் தாண்டவம் (ருத்ர) ஆடும் சிவனின் இயல்பு - தோற்றம் ஆகியவை சாதாரண மனிதனை ஒத்துதானே இருக்கிறது?

பழங்குடியினரின் மிகப் பழைய சடங்காச்சாரங்களை இன்றளவும் பின்பற்றுபவனாகத் தானே சிவன் (நடராசன்) சித்தரிக்கப் பட்டுள்ளான்?

புலித்தோல் அணிந்து; கழுத்தில் பாம்பு நெளிய; திங்கள் - கங்கை முடியில் சூடி; நெற்றியில் நீறு பூசி; கையில் சின்ன உடுக்கை ஆகியவற்றுடன் கற்கால மனிதன் போல் தோற்றமளிக்கும் சிவன் எங்ஙனம் ஊழித் தாண்டவம் ஆடியிருக்க முடியும்?

ஆடித்தீர்த்தது உண்மையானால், பஸ்மாசுரனையும், இதேபோல் ஆடி, பயமுறுத்தி இருக்கலாமே? பல்லி - பாச்சைக்குப் பயப்படுவது போல, ஓட்டம் பிடித்தது ஏன்? கோழைதானே சிவன்?

9. தாருகாவனத்து ரிஷிபத்னிகள் அனைவரையும் கெடுக்கப் போனதால், அரவிலாசன் என்று பார்ப்பனர்களால் பகழப்படும் சிவன், ரிஷிகளை அச்சுறுத்துவதற்காக, தன் ஆண் குறியை வானம் முட்ட நீட்டி, ரிஷிகள் அனைவரையும் தனது லிங்கத்தை தலை வணங்கிக் கும்பிடச் செய்தானாம்.

படைப்புக் கடவுள் பிரம்மன் உள்ளிட்ட அனைத்து தேவாதி தேவர்களும் சிவ பெருமானது பிறப்புறுப்பை புகழோ புகழ் என்று ஏத்தித் தள்ளினார்களாம். இது போன்ற கேடு கெட்ட செயல்கள்தான் சிவனின் மகிமைகளாம். இப்பேர்க் கொந்த பெருமை படைத்த சிவன், பஸ்மாசுரனைக் கண்டு பயந்து ஓட்டமெடுத்தான் என்று யார் காதில் பூ சுற்றப் பார்க்கிறார்கள் பார்ப்பனர்கள்?

10. மார்க்கண்டேயனுக்குச் சாகாவரம் தந்தவன் என்கிறார்கள்; அனுமன் சிரஞ்சீவி என்கிறார்கள். சாகாவரம் பெற்ற மார்க்கண்டேயனும் சிரஞ்சீவி அனுமனும் இப்போது காணவில்லையே ஏன்?

மரணத்தையே விரட்டியடித்த சிவன் பஸ்மாசுரன் கொலை வெறித் துரத்தலுக்கு அஞ்சி நடுங்கினான் என்று கதையளப்பது பொருத்தமாகவா இருக்கிறது?

11. கால பைரவனை உருவாக்கி, பிரம்மனின் 5-ஆம் தலையைக் கிள்ளியெறிந்த சிவன், கால பைரவன் போல், இன்னொரு அடியாளை உருவாக்கி, பஸ்மாசுரனைப் பதம் பார்க்க முடியாதா? கால் பைரவன் கதையும் `உடான்ஸ் என்று இதன் மூலம் தெரிந்து விட்டதே?

12. அர்ச்சுனனுக்குப் பாசு பதாஸ்திரத்தை அருளிச்(?) செய்த ருத்ரன் (சிவன்), சராசரி மனிதனுக்கு இருக்க வேண்டிய பகுத்தறிவுகூட இல்லாமல்தானே அர்ச்சுனனுடன் கிராதகன் என்ற கரடி வடிவில் போரிட்டிருக்கிறான்?

பாசு பதாஸ்திரம் பெற வேண்டியவனிடத்தில் இந்தப்படியே சண்டை போட்டிருக்கலாமே? ஏன் செய்யவில்லை? பயந்தோடி விஷ்ணுவிடம் சரணடைவது பகுத்தறிவுக்கு முரணாக இல்லையா?(நூல் பக்கம் 28-

30).ஆணும் பெண்ணும் சமம்பிறப்புறுப்பு என்ற ஒற்றை வேறுபாட்டை நீக்கிவிட்டால், ஆணுக்கும் பெண்ணுக்கு மிடையே எந்தவித வேறு பாடும் கிடையாது.பெண்ணின் துணையில்லாமல், ஆண் தனித்து வாழ முடியாது. சம பங்கு இல்லாமல், ஆண் இந்த உலகில் உயிர்த்திருக்கவும் இயலாது.

உடல் ரீதியாக ஆணும் பெண்ணும் இணைந்து வாழ வேண்டுமென்பது இயற்கை நியதி. இருபாலருக்கும் உடலார்ந்த தேவைகள் சமமானவையே. மனித இனப் பெருக்கத்தில் ஆண் - பெண் இருவருக்கும் சம பொறுப்பு உண்டு.

இதயம், நுரையீரல், சிறு நீரகம், குடல், நரம்பு மண்டலம், குருதியோட்டம், தசை, விலா என அனைத்தும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமாகவே இருக்கின்றன. பெண்ணைவிட, ஆணுக்கு ஒரு விலா எலும்பு குறைவாக இருக்கிறது என பைபிள் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. (2:21-23)

அறிவியல் ரீதியாக இது (இது ஒன்று மட்டுமல்ல; பல விசயங்கள்) நிற்காது - எடுபடாது.கண், காது, மூக்கு, நாக்கு, தோல் ஆகிய உணர்ச்சி உறுப்புகளும் இருபாலருக்கும் சமமானவையே.

தூக்கம், உணவு, கூடல், இன்பம், வலி, பிறப்பு, இறப்பு ஆகியவையும் சம ஏற்புடையவையே.பெண் என்ற சமபங்காளி இல்லாமல் ஆண், இந்த உலகில் எதையும் சாதித்து விட முடியாது. வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் ஆணின்றிப் பெண்ணும் பெண்ணின்றி ஆணும் இணைந்தே கடமையாற்ற வேண்டியுள்ளது.

அறிவியல் ரீதியாக பெண் எந்தவிதத்திலும் பின் தங்கிய வரல்லர். கல்வி, நிர்வாகம், அரசியல், தொழில், விளையாட்டு என அனைத்துத் துறைகளிலும் பெண் ஆணையும் விஞ்சி சாதனை படைக்கிறார்.

இதனை பல சமயங்களில் கண்டு, கேட்டு, உய்த்து வருகிறோம்.மேலே தரப்பட்டுள்ள தகவல்களை வைத்துக் கொண்டு பார்க்கும்போது, பெண்கள் ஆண்களுக்கு எந்த விதத்திலும் இளைத்த சளைத்தவர்களல்ல என்பது புலப்படும். மனித இனத்தின் முதல் ஆட்சியாளரே பெண்தான். ஆதியில் பெண் வழிச் சமுதாயமே. வீழ்ச்சியையடுத்து, ஆண் வழிச் சமுதாயம் நிரந்தப்பட்டுவிட்டது. வரலாற்று தய காலத்திலிருந்து அதாவது, கி.மு. 5500 தொடக்கம் இதே அவல நிலை நீடித்து வருகிறது. (பக்கம் 38-

39).பெண்ணடிமை போற்றும் மத (கிரந்த)ங்கள் மத கிரந்தங்கள் அனைத்தும் பெண்களை போகப் பொருளாகவும் - கொத்தடிமைகளாகவுமே நடத்துகின்றன! சித்தரிக்கின்றன. உணர்ச்சியே இல்லாதவர்களாக அடக்க வேண்டியவர்களாக பெண்கள் கட்டுப்படுத்தி அழுத்தி வைக்கப்பட்டிருப்பது கொடுமையிலும் கொடுமை.

பாலினம் என்ற ஒன்றைத் தவிர ஆணுக்கும் பெண்ணுக்கும் என்ன வேறு பாடு உள்ளது பகுத்தறிவுள்ள எந்த மனிதராவது பெண்களை இழிவுபடுத்துவார்களா?

பெண் ஏன் அடிமைப்படுத்தப் பட்டு, ஆணின் சொத்தாக! போகப் பொருளாகக் கருதப்பட வேண்டும்? சில உடற்கூறுகள் காரணமாக மேலாதிக்கம் செலுத்தி வரும் ஆண்கள், மத கிரந்தங்களை தங்களது மேலாதிக்கத்துக்கு ஆதரவாக எழுதி, சொந்த நலன்களைப் பாதுகாத்துக் கொண்டுள்ளனர்.

அனைத்து மத கிரந்தங் களையும் எழுதியவர்கள் முழுக்க முழுக்க ஆண்களே. புனித நூல்களைப் பெண்கள் மட்டும் எழுதியிருந்தார்களானால், ஆதாம்தான் முதலில் பழத்தைத் தின்று, பின்னரே ஏவாளைத் தின்ன வைத்தான் என்பதாக எழுதியிருப்பார்கள். (பக்கம்8)

திராவிடர்களின் வைரி இந்திரன் இந்திரனின் (தேவர்களான பார்ப்பனர்களின் பாட்டுடைத் தலைவன்) வயிறு பெண்ணாம் பெரிசு. ஒரே நேரத்தில் 300 எருதுகளின் இறைச்சியை விழுங்கக் கூடியவன்.

பசு, மாடு, கன்று என மாட்டிறைச்சி, சோம பானம்தான் அவனுடைய தினசரி உணவு.ரிக்வேதம்: 5-29-7, 8-1-23, 8-17-8, 10-24-23, 10-27-2.நமுசி என்பவனின் இரண்டு மனைவியரையும், சுஷ்னா என்பவனின் மனைவியையும் இந்திரன் லவட்டிச் சென் றான்.ரிக்வேதம்: 5-30-9, 5-31-7.3.

விருத்ரா, சம்பாரா போன்ற பல திராவிடர் அரசர்களை கொன்று குவித்தவன். ரிஷிகளின் தூண்டுதலிலும் சோமபான குடிபோதையி லும் இத்தகைய படுபாதகங்களைச் செய்தவன். (பக்கம் 25).
(ஆந்திர மாநிலம், அனந்தபூர் பகுத்தறிவாளர் சு.ஜெய்ராம் (ரெட்டி) எழுதிய “A Critical Analysis of Religions” ஆங்கிலப் புத்தகத்திலிருந்து.. தமிழில்: தெலுங்குப் பலகணி) http://viduthalai.com/20080223/snews02.html

Thursday, February 21, 2008

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 91 - 2. to 100- 3.

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 91 - 2. to 100- 3.

சுட்டியை சொடுக்கி படிக்கவும்.

--> இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 91-2 to 96. எது இந்து மதம்? நம்தேசத்தில் இருந்த 450 மதங்களில்.? சர்டிபிகேட்களில் ‘ஹிந்து’ என்று எழுதுகிறார்களே ஏன்? வேதங்களில் ஹிந்து என்றோ இந்து என்றோ ஒரு இடத்தில் கூட இல்லவே இல்லை. கிடையவே கிடையாது. ‘ஹிந்து’ என்ற பெயர் நமக்கு அந்நியன் சூட்டிய பெயர். அதைத்தான் நாம் இன்று சூட்டிக் கொண்டிருக்கிறோம்.

--> இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 97.
“பெண்களுக்கு எட்டு வயதுக்குள் திருமணம் செய்து விடு” - வேதம். இல்லை யென்றால் அதாவது ருதுவானபின் கல்யாணம் செய்தால் அவளுடைய மாதவில‌க்கில் வெளிப்படுவதை அவளுடைய அப்பனே சாப்பிட வேண்டும்.குழந்தைகளுக்குக் கல்யாணம் செய்து வைக்கக்கூடாது “உத்தரவிட்ட‌ இந்தியாவின் ஆங்கிலேய அரசாங்கம்”.
*********************
இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 100 -2.

பக்தையை சூறையாடிய விஷ்ணு. பார்வதியை கட்டிப்பிடித்த பக்தன்.கடவுளை கற்சிலையாக்கிய பக்தை.இதனை விஸ்தாரமாக விவரிக்கும் ஒரு புராணக் காட்சியைப் பார்க்கலாமா?
----------

அதாவது தர்மம் எல்லார்க்கும் ஒன்றுதான். யார் தவறு செய்தாலும் அவர்களுக்கு தண்டனை உண்டு.இதனை விஸ்தாரமாக விவரிக்கும் ஒரு புராணக் காட்சியைப் பார்க்கலாமா?

இந்த காட்சி நிகழும் இடம் இன்றைய பஞ்சாப் மாநிலத்தில் ஓர் இடம். கதையைப் படிக்கும்போதே அந்த ஊரின் பெயர்க்காரணம் உங்களுக்கு விளங்கும். அந்த ஊரில் ஜலந்தர்-பிருந்தா என்ற தம்பதி வாழ்ந்து வந்தனர். நல்ல கணவன் மனைவியாக வாழ்ந்து வந்த இவர்களுடையே ஒரேயொரு விஷயத்தில் மட்டும் கருத்து வேறுபாடு என்ன விஷயத்தில் என்றால் கடவுள் விஷயத்தில்.

அப்படி என்ன கருத்து வேறுபாடு? பிருந்தா விஷ்ணுவை தவிர வேறு கடவுளே இல்லை என்னும் அளவுக்கு விஷ்ணு பக்தை. அவளது ஆம்படையான் ஜலந்தருக்கோ சிவன் மீது அபார நாட்டம்.

இந்த விசித்திரமான விஷயத்தை கேள்விப்பட்ட நாரதர், அந்த குடும்பத்தில் சிறிது விளையாடிப் பார்க்க நினைத்தார்.ஒருநாள் ஜலந்தர் தனியாக இருக்கும்போது அவனை சந்தித்தார்.என்ன ஜலந்தர்?... நீயோ சிவனை வழிபாடு செய்கிறாய். உன் மனைவியோ விஷ்ணுவை வழிபடுகிறாள். நீ பின்பற்றும் சிவபக்தியால் சிவனுடைய மனைவி பார்வதி தேவியையே நீ அடையலாமே... எதற்கு இந்த பிருந்தாவுடன் போராடிக் கொண்டிருக்கிறாய். இந்த பிருந்தாவை விட அந்த பார்வதி எவ்வளவு அழகு தெரியுமோ?... என ஜலந்தரின் மனதில் பற்றவைத்து விடுகிறார் நாரதர்.

உடனே ஜலந்தரும்... ‘நான் பார்வதி தேவியை அடையமுடியுமா?’...எப்படி? என கேட்கிறான்.அதற்கு நாரதரே யோசனையும் கொடுக்கிறார். “சிவனுக்கு சாமவேதம் என்றால் உயிர். எங்கே சாமவேதம் ஒலித்தாலும் மயங்கி அந்தப் பக்கம் போய்விடுவார். நீ என்ன பண்ணு... சாமவேதம் பாராயணம் செய்பவர்களை பிடித்து நல்ல சத்தமாக சாமவேதம் ஒலிக்கச் செய்.

அதனைக் கேட்டு சிவபெருமான் மயங்கியிருக்கும் வேளையில் கைலாயத்துக்கு சென்று காரியத்தை முடித்துவிடு” சிந்திக்கத் தெரியாத ஜடமாகிவிட்ட ஜலந்தரும் நாரதரின் கலகயோசனையை காதுகொடுத்து கேட்டபின்,அப்படியே... சாமகானம் பாட ஏற்பாடு பண்ணினான்.

இதைக் கேட்டு சிவன் லயித்திருக்க... அவர் இல்லாத நேரமாய்ப் பார்த்து கைலாயத்துக்குள் காலடி எடுத்து வைத்தான். அங்கே பார்வதி தேவி தனிமை அழகில் தத்தளித்துக் கொண்டிருக்க, நாரதர் கொடுத்த யோசனைப்படி பார்வதியை போய் கட்டிப்பிடித்து விட்டான் ஜலந்தர், பார்வதி... தன் மேல் சிவன் அல்லாத ஒருவன் சில்மிஷம் செய்கிறான் என்பதை அறிந்து ‘ஸ்வாமீ’ என ஏழுகடல் கொந்தளிக்க கத்துகிறாள்.

கைலாயத்தில் இப்படி...ஜலந்தரின் வீட்டுத்தோட்டத்தில்?... கணவனைக் காணாது மனைவி பிருந்தா தனித்துத் தவித்திருக்கிறாள். தனது பரம தெய்வமான விஷ்ணுவிடம் தன் கணவன் எங்கே என வேண்டுகிறாள்.

இதைப் பார்த்த விஷ்ணு... ‘நமது பக்தைக்கு நாம் ஏன் சந்தோஷம் தரக்கூடாது? தன் கணவனை காணோமே என பாவம் தேடிக்கொண்டிருக்கிறாள். நாமே ஜலந்தராக உருவெடுத்து அவனை மகிழ்ச்சிப்படுத்துவோம் என முடிவெடுத்து... கணவன் ஜலந்தர் போலவே உருவம் எடுத்து பிருந்தாவை நெருங்கினார் விஷ்ணு.

‘ஆஹா... என் கணவர் வந்துவிட்டார்’ என சந்தோஷம் பொங்கிய பிருந்தா... தன் கணவர் ரூபத்தில் வந்திருந்த விஷ்ணுவை கட்டிப்பிடித்துக் கொண்டாடினாள் இருவரும் தோட்டத்தில் ரொம்ப இஷ்டமாக இழைந்து கொண்டிருக்கும் நேரத்தில்...‘நெருக்கமாக இருக்கும் அவர்களுக்கு நெருக்கமாக வந்து பொத்’தென வந்து விழுந்தது ஒரு தலை. ரத்தம் கொட்ட கழுத்திலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட அந்தத்தலை, ஜலந்தரின் தலை.

ஆமாம்... சாமவேதத்தில் சிவனை மயக்கிய ஜலந்தர்... பார்வதியை கட்டிப் பிடிக்க இதனால் பார்வதி ஏழுகடல் அதிர சத்தம் போட்டாள் இல்லையா?

வேதத்தின் மயக்கத்தை... பார்வதியின் கூக்குரல் கலைக்க, ஓடிப்போய் பார்த்தார் சிவன். தன் மனைவியை இன்னொருவன் பலாத்காரப்படுத்துவதா?... என ஜலந்தரின் தலையை சீவியெறிந்தார். அந்த ஜலந்தரின் தலைதான்... பிருந்தாவும் ஜலந்தர் போல் ரூபம் எடுத்து வந்த விஷ்ணுவும் இழைந்து கொண்டிருந்தபோது இடையில் வந்து விழுந்தது.

பார்த்தாள் பிருந்தா... உடலோடு விழுந்தவன் கணவனா? இல்லை தலைமட்டும் விழுந்தவன் கணவனா? சந்தேகம் அதிகரிக்க...அப்போது திடுக்கென உடலோடு கூடிய ஜலந்தர் மறைந்து விஷ்ணுவாகிறார். ‘நான்தான் பக்தையே...’ என அறிமுகம் கொடுக்கிறார்.

இதைக்கேட்டு பொங்கியெழுந்த பிருந்தா...’அடப்பாவி... பக்தையை இப்படி பண்ணிவிட்டாயே? என் கணவன் ரூபத்தில் வர நீ யார்? தவறு செய்துவிட்டாய். பகவானாக இருந்தாலும் தவறு தவறுதான். உனக்கு சாபமிடுகிறேன். கடவுளாக இருந்தாலும் நீ கல்லாய் போவாயாக’ பிருந்தாவின் சாபம்தான் பகவானை சாலக்ராமம் என்ற சிலையாக்கிவிட்டது என்பது புராணம்.


அதாவது கடவுளே தர்மத்தை மீறி தவறு செய்திருந்தாலும் தண்டனை உண்டு என்பதுதான் இக்கதை சொல்லும் நீதி.

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 100 - 3.

மதம் என்ற பெயரில் அனுமதித்து தன்னைத்தானே பாழ்படுத்திக் கொண்டிருக்கிற மூளையிடம் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். பிராமணத்துவத்தை (இந்துதுவம்) பின்பற்றினால் அதில் சூத்திரர் , பஞ்சமர் என இனபிரிப்புகளை அடக்கியுள்ளது. ஆகையால் தேசிய அமைப்பு சட்டத்தின் பிரகாரம் பிராமணத்துவம் தேசிய அமைப்பு சட்டத்திற்கு முரணாணது.
-----------------------


இப்போது நம் தேசத்தில் சட்ட பூர்வமாக தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது.ஆனால் ஆகமரீதியாக இன்னமும் இது உயிர் வாழ்ந்து வருகிறது.

ப்ராமண்யத்தின்படி பிராமணன்தான் தெய்வம். இது இப்போதைய நமது தேச தர்மத்துக்கு முரணானது.

If you follow Bhraminism, there is Sutra and Punchamas. So, according to constituion Bhraminism is antilaw. (பிராமணத்துவத்தை (இந்து மதத்தை) பின்பற்றினால் அதில் சூத்திரர் , பஞ்சமர் என இனபிரிப்புகளை அடக்கியுள்ளது. ஆகையால் தேசிய அமைப்பு சட்டத்தின் பிரகாரம் பிராமணத்துவம் தேசிய அமைப்பு சட்டத்திற்கு முரணாணது.)

அதனால்... மநுதர்மத்தை பின் தொடர்ந்து செல்லும் பிராமணீயம் (நன்றாக புரிந்து கொள்ளவேண்டும்.

நான் சொல்வது கொள்கை தத்துவத்தை மட்டும்) என்பது நமது அரசியல் தர்மத்துக்கு அப்பாற்பட்டது.அதனால் All are equal என்ற தர்மம்தான் இப்போது நம் மதத்தை காப்பாற்ற ஒரே வழி.

விவேகானந்தர் சிகாகோ மாநாட்டில் ஹிந்து தர்மத்தைப் பற்றி பேசிப் புகழ் சேர்த்துவிட்டு... சென்னை வந்தபோது அவர் ஆற்றிய உரையில் சிலவற்றை உங்களுக்குத் தருகிறேன்.

“இளைஞர்களே... இதை நினைவில் கொள்ளுமாறு தனிப்பட்ட முறையில் உங்களை கேட்டுக் கொள்கிறேன். இந்திய ஆன்மிகச் சிந்தனைகளால் உலகத்தை நாம் வெல்லவேண்டும்.

ஆன்மிகச் சிந்தனைகள் என்று நான் கூறியது... உயிருணர்வு அளிக்கக்கூடிய கோட்பாடுகளையே தவிர... நாம் நெஞ்சோடு நெஞ்சாக இறுகப்பிடித்துக் கொண்டிருக்கிற மூட நம்பிக்கைகளை அல்ல.

கண்ட கண்ட மூடநம்பிக்கைகளை எல்லாம் மதம் என்ற பெயரில் அனுமதித்து தன்னைத்தானே பாழ்படுத்திக் கொண்டிருக்கிற மூளையிடம் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

இந்த மூடநம்பிக்கைகளின் பின்னால் ஓடாதீர்கள். அதைவிட நீங்கள் உறுதியான நாஸ்திகர்கள் ஆகிவிடுங்கள் இது உங்களுக்கும் நல்லது. உங்கள் இனத்துக்கும் நல்லது...’ என்று மதராஸ் ராஜதானியில் பேசினார் விவேகானந்தர்.


இது ‘இளையபாரதமே எழுக’ என்று ராமகிருஷ்ணா மடம் விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகளை வெளியிட்டுள்ள புஸ்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேதம் வகுத்த இயற்கை வழிபாட்டு நெறிமுறைகள் லோகசேமத்துக்கே ‘இந்தா பால் இதைக் குடித்து வளமோடு வாழு...’ என்கிறது வேதம். மதம் என்னும் கோப்பையில் நல்லபாலை ஊற்றி அருந்துங்கள்... லோக சேமம் பெறுங்கள்! (நிறைவு) நன்றி: ‘நக்கீரன்’ 30.11.2005

--------------------

Wednesday, February 20, 2008

பாரதத்தின் பெருமையை வேதங்கள் பறை சாற்றுகின்றனவா? கள்ளேதான் கடவுளடா என்றே வேதம் கூறுகிறது.

தந்திரப் புத்தி படைத்த பார்ப்பனர்கள் ஏமாளி மனிதர்களை மேலும் ஏமாற்ற ...... --சார்வாகன்

இந்தியாவின் தப்பு, தப்பு பாரதத்தின் பெருமையை வேதங்கள் பறை சாற்றுகின்றன என்கிறார்கள். இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த வேதங்களைப் பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் படிக்கக் கூட முடியாதவாறு, ``சட்டங்கள் எழுதி வைத்துக் கொண்டார்கள்.

சூத்திரன் வேதத்தைப் படித்தால் காதில் ஈயத்தையும் அரக்கையும் காய்ச்சி உருக்கி ஊற்றவேண்டும் என்று எழுதி வைத்துக் கொண்டார்கள். வேதத்தைச் சொன்னால், நாக்கை அறுக்க வேண்டும். மனனம் செய்தவர்களின் இதயத்தைப் பிளக்கவேண்டும் என்றும் எழுதிவைத்துக் கொண்டார்கள்.

இன்று நிலை மாறி விட்டது. யாரும் படிக்கும் நிலை உருவாகிவிட்டது. வேதங்கள் பற்றி ஆய்ந்து பார்த்த மேலை நாட்டார் அவற்றை இங்கிலீசில் மொழிப் பெயர்த்துத் தந்துவிட்டனர். அனைவரும் படித்துவிட்டனர். அதன் உள்ளடக்கம் என்ன என்பது அனைவருக்கும் அம்பலமாகிவிட்டது.
ஆனாலும் வேதப் பெருமைகளைப் பேசும் பழக்கம் பார்ப்பனர்களை விட்டகலவில்லை.

கி.பி. 1400 இல் வாழ்ந்த ஸாயணாச்சாரி என்பவர் ரிக் வேதத்தை எழுத்து வடிவில் கொண்டு வந்துவிட்டார். அதற்கு முன்பு அது செவி வழியாகக் கேட்ட வாய்வழியாகச் சொல்லி வரப்பட்ட ``எழுதாக்கிளவியாகவே இருந்தது.
அதற்கும் முன்னதாகவே கி.பி. 629 முதல் 645 வரை இந்தியாவில் பயணம் செய்த பவுத்தக் கொள்கையினரான யுவான் சுவாங் தம் நாள் குறிப்பில் வேதங்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளர்.

இந்த நாள் குறிப்பை சீன மொழியிலிருந்து பிரெஞ்ச் மொழிக்கு பெயர்த்தார். பிரஞ்சுக்காரர் ஸ்டானிஸ லாஸ் ஜூலியன். இந்த நாள் குறிப்பில் நான்கு வேதங்களையும் பற்றிய குறிப்புகள் உள்ளன.

பார்ப்பனச் சமூகக் குழுக்கள் (கணம்) பலவற்றிலும் பலவாறாக வேதங்கள் வழங்கப்பட்டு வேதங்கள் நிறைந்ததாக இருந்திருக்கின்றன. அதைக் குறிப்பிட்டு அவை ஒரே மாதிரியாகத் திருத்தப்பட்டு, எழுதப்பட்ட காலம் கி.மு. 800 ஆக இருக்கலாம் என்று ஜெர்மானியரான மாக்ஸ் முல்லர் தெரிவித்துள்ளார். ``கேம்பிரிட்ஜில் இந்திய வரலாறு எனும் நூல் இதனை கி.மு. 600 எனக் குறிப்பிடுகிறது.

வேத காலம் என்பதைச் சுமாராக 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றே வைத்துக் கொள்ளலாம். அந்தக் காலத்தில் அறிவு வளர்ச்சி இல்லாத - ஆடு, மாடு மேய்க்கும் இடையர்களாக இருந்த ஆரியர்கள் தாம் எவற்றை கண்டு பயந்தார்களோ, அவற்றை யெல்லாம் வணங்கியிருக் கின்றனர்.
அவற்றுக்கெல்லாம் தங்கள் உருவத்தைக் கற்பித்து குணங்களையும் கொடுத்துவிட்டனர்
.

விருப்பு, வெறுப்பு, கோபம், மகிழ்ச்சி எல்லாவற்றையும் அவற்றிற்கு அளித்ததோடு நிறுத்தாமல் அவற்றை வசியப்படுத்துவதற்கு வழி வகைகளையும் கூறிவிட்டனர்.

``போற்றிப் பாடடி, கடவுள் காலடி மண்ணை என்கிற பாணியில், இதைச் செய்தால் அதற்கும் பிரீதி என்றெல்லாம் கற்பனைக் கதை கட்டி வைத்துவிட்டார்கள்.

இதற்காகக் கண்டுபிடிக்கப் பட்ட சொல்தான் ``ஹவிஸ் ```அவிர்பாகம் முதலியன அப்படிப்பட்ட கடவுள்களுக்கு நாள் முழுக்கப் பணி ஒதுக்கீடு செய்து வேலை வாங்காமல் ஒவ்வொரு பொழுதுக்கும் ஒவ்வொரு கடவுள் என்று பாகம் பிரித்துக் கொடுத்துவிட்டனர்.

அந்தக் கடவுள்களில் பெண்களும் அடக்கம்.உஷஸ், அக்னி, சூரியன், ப்ருத்வி (மண்) த்யவுஸ் (வானம்) வருணன், இந்திரன், இந்திராணி, வருணானி, அத்னாயி என்ற பட்டியல் நீளும். இன்று இந்தக் கடவுள்கள் எதுவுமே `உயிருடன் இல்லை.

எல்லாம் மாஜி கடவுள்கள்!
வேதகாலக் கணக்கின்படி சொர்க்கம், மத்திய ஆகாயம், பூமி என்ற மூன்று லோகங்கள் மட்டுமே!
கவனியுங்கள் பாதாளம் கிடையாது. ஈரேழு லோகங்கள் என்கிற கணக்கின்படி 14 லோகங்கள் கிடையாது.
மூன்று லோகங்களுக் குமாகச் சேர்ந்து 11 கடவுள்கள் வீதம் மொத்தம் 33 கடவுள்கள் மட்டுமே!
இதனை எவன் 33 கோடியாக்கினான் எனத் தெரியவில்லை.

இதே மாதிரி மூன்று லோகத்தை யூதர்களும் கூறுகிறார்கள்.வருண்: ரிக் வேதப்படி மிகவும் சக்தி வாய்ந்த கடவுளாகக் கற்பிக்கப்பட்டது. வருணன்தான் தேவர்களின் கடவுளும் அதுவே மனிதர் களின் கடவுளும். அதுவே. பூமியையும் ஆகாயத்தையும் தனித்தனியே பிரித்தது வருணனால் தானாம். நதிகளெல்லாம் கடலில் கலப்பதும் இதனால் தானாம்

சூரியன் ஒளி வீசித் திகழ்வதும் வருணனால்தான். பூமியில் இருக்கும் கடல் நீர் கவிழ்ந்து ஒழுகாமல் இருப்பதும் வருணனால் தானாம்! ஆனால், இதே வருணன் அதர்வ வேதத்தில் சக்தி குறைந்த நோஞ்சான் கடவு ளாக்கப்பட்டுள்ளது

இந்திரன்: மனிதர்களின் வாழ்க்கை விவகாரங்களில் அடிக்கடி தலையிடும் கடவுள் இந்திரன். வாயு என்கிற கடவுள் இதற்குத் தேரோட்டி. இதற்கு ஆயுதம் வஜ்ரம்.

இதற்கு மற்றொரு பெயர் சோமன் பெயருக்கேற்ப சோம பானம் இதற்கு பிடித்த மது ஆகும்.

ஆரியர்களின் பாதுகாவலனாக இருந்துள்ளது. அதனாலேயே அதிகமாக இந்தக் கடவுளைத் துதித்தும் வாழ்த்தியும் நிறைய பாடல்கள் ரிக் வேதத்தில் உள்ளன.
இதன் பலத்தைக் கண்டு வான் கோளங்கள் பயந்தன. சீறிப் பாய்ந்த மலைகளை இதுதான் அடக்கிற்றாம். மேகங்களைப் பிளந்து நதிகளை ஒழுகச் செய்ததாம்.

சோமச் செடியை அம்மிக் குழவியினால் அமுக்கிப் பிழிந்து சாறு எடுத்துச் சோமபானம் தயாரிப்பவனாம். சூரியனின் ஏழு கதிர் களையும் ஏழு நதிகளையும் இந்திரனே என்றெல்லாம் போர்க் கடவுள் என்றே போற்றிப் பாடுகின்றன.

அக்னி: சூரிய ஒளி, மின்னல், எரிகின்ற தீ இவையெல்லாம் அக்னி என்றனர். இதனை சொர்க்கத்திலிருந்து பூமிக்குக் கொண்டு வந்ததாகக் கூறுகின்றனர். கிரேக்கப் புராணங்களிலும் புரொமீதியஸ் இந்தப் பணியைச் செய்ததாகக் கூறும். அக்னி, மரத்துண்டுகளிலிருந்து பிறக்கிறது என வேதம் கூறுகின்றது. ஆனா லும் கூரிய தாடை எலும்புகளும் சிவந்த தாடியும் தீப்பிடித்து எரியும் பல்களும் கொண்ட உருவை அக்னிக்கு அளித்துள்ளனர்.

இருட்டைப் போக்கும் அக்னி, கெட்ட ஆவிகளை யும் மந்திரங்களையும் துரத்தும் சக்தி பெற்றதாக வருணித்துள்ளனர். இதன் உணவாக நெய்யை உருவ கப்படுத்தி காண்பிக்கச் செய்தான். இன்றளவும் செய்கிறான். அக்னியில் எதைக் கொட்டினாலும் அவை கடவுளிடம் சேர்ந்து விடுவதாகக் கூறப்பட்டுள்ளது.

உஷஸ்: விடியற்காலைப் பொழுது எனப் பொருள் படும் வேதங்கள் வியந்து பாடும் பெண் கடவுள் இதுதான். இதற்காக 22 சூக்தங்கள் எழுதப்பட்டுள்ளன. இது மிக அழகுள்ளதாக எழுதப்பட்டுள்ளது. அதனாலேயே அக்னி, சூரியன், பூஷன், அஸ்வினி தேவர்கள் முதலியோர் இதன்மீது மையலுற்றுக் காமுற்று அலைந்தார்கள் என்று கூட எழுதி வைத்துள்ளனர்.

மிரட்டும் இருளைப் போக்கும் உஷஸ், கெட்ட கனவுகளைத் துரத்தும் உஷஸ், சிரிக்கும் உஷஸ், பாடும் உஷஸ், துணி இல்லாமல் மார்பழகைக் காட்டும் உஷஸ் என்றெல்லாம் கவர்ச்சிகரமாக உஷஸ் வருணிக்கப்பட்டுள்ளது.
அதிதி சரஸ்வதி, அரண்யாணி, (வாக்குவன்மைக்கான கடவுளச்சி) என்றெல்லாம் பெண் கடவுள்கள் உள்ளன.

சூரியன்: பத்து சூக்தங்கள் சூரியனைப்பற்றி உள்ளன. கீழேயுள்ள மனிதர்களைப் பார்ப்பதாகவும், தாவரங்கள் உயிர் இனங்கள் அனைத் தையும் காத்து வருவதாகவும் மனிதர்களுடைய பாவ புண்ணியங்களுக்குத் தீர்ப்பு வழங்குவதாகவும் உலகைப் படைத்துக் காப்பது சூரி யனே என்றும் எழுதப்பட்டுள்ளது.

ஸவித்ரு பூஷன்: இரவில் எதேச்சையாகத் தெரியக் கூடிய சூரியன் உண்டாம்.
அதுதான் ஸவித்ருவாம். அதுபோல கால் நடைகளின் பாதுகாவலனாகவும் மனிதனின் உற்ற நண்பனுமாகத் திகழ்வது பூஷன் என்பதாகும். இவை இரண் டும் சூரிய தேவர்களாம்.

அஸ்வினிகள்: இரட்டை யாகப் பிறந்த கடவுள்களாம், ஒளிக்கு அதிபதிகளாம். புனர் காலையிலும் மங்கிய மாலையிலும் ஏற்படும் வெளிச்சம்தான் அஸ்வினி களாம். தாம்பத்திய வாழ்க்கை, தாம்பத்ய சுகம் ஆகியவற்றைப் பாதுகாப்பதும், தேவர்கள், மனிதர் கள் ஆகியோரின் மருத்துவர்களாகவும் இவைகளுக்கு வேலையாம்.

சோமன்: சோமரசம் அல்லது சோமபானம் எனும் மது போதைத் தரக்கூடியதையும் கடவுளாக்கிவிட்டனர். இதிலிருந்தே கள் குடிக்கும் ஆரியர்கள் தந்த மரியாதையை ரிக் வேதம் பிரதிபலிப்பதை புரிந்து கொள்ளலாம்.

கள்ளேதான் கடவுளடா என்றே வேதம் கூறுகிறது.

வாயு ருத்ரன் என்றெல்லாம் கடவுள்கள் பேசப்படுகின்றன. விஷ்ணு என்பது ஒரு நோஞ்சான் கடவுள். பிற் காலத்தில் இது பயில்வான் ஆகிவிட்டது. கீதை எழுதப்பட்ட காலத்தில் இதை ஊதிப் பெருக்கி இதுவே ஹோமம். இதுவே யாகம், இதுதான் ஸ்வதா. இது மருந்து, இது மந்த்ரம், இது நெய், இது தீ, இது ஹவிஸ் என்றெல்லாம் புகழ்ந்து தள்ளிப் பெரிய கடவுளாக்கிவிட்டனர்.
``ஓம் என்பதும்தான். ரிக் வேதமும், சாம வேதமும், யஜூர் வேதமும் நான் நான் என்றே விஷ்ணு கீதையில் கூறுகிறது.

நாடுவிட்டு நாடு மாறிப் போகிற பகுதிகளில் ஆரியர்களுக்கு ஏற்பட்ட தோல்விகள் அவர்களின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தின. சீரான ஒரு பாதையில் தான் அனைத்தும் இயங்குகின்றன என்கிற எண்ணம் ஏற்படத் தொடங்கியது. கடவுள்களின் பலவீனமும் விதிபற்றிய நம்பிக்கையும் படிப்படியாக ஏற்பட்டு ஆரிய கோத்திரங்களை விழுங்கிவிட்டன.

கடவுள்கள், பேய்கள், ராட்சகர்கள் போன்றோரை வயப்படுத்துவதற்காக வித்தைகளும், மந்திரவாதமும் வளரத் தொடங்கின. மந்திரங்களால் கடவுளை மகிழ்ச்சி கொள்ள செய்து தங்கள் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று நினைத்தனர்.

இந்தக் காலகட்டத்தில் தந்திரப் புத்தி படைத்த பார்ப்பனர்கள், ஏமாளி மனிதர்களை மேலும் ஏமாற்ற ஏதோ மந்திரங்களைச் சொல்லிக் கட்டுப் படுத்த முயற்சி செய்தனர். அதர்வ வேதம் பிறந்தது! --சார்வாகன்
http://viduthalai.com/20071215/snews04.html
----------------------------------
படித்துவிட்டீர்க‌ளா?
அப்துல்கரீம் அய்யங்கார் ? ஆபாசமே! இதுதான் தமிழ் வருடப் பிறப்பா? அறிவிற் சிறந்த தமிழ்ச் சமூகம் ???

நாரதருக்கும், விஷ்ணுவுக்கும் பிறந்த பிள்ளைகளா தமிழ் வருடங்கள்? முதலமைச்சர் கலைஞர் கேள்வி
---------------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

Tuesday, February 19, 2008

சிறிதளவு சாணி பட்டு விட்டால் கழுவியவன்.. சாணியை ....???

சிறிதளவு சாணி பட்டு விட்டால் கழுவியவன்.. சாணியை உருண்டை செய்து வைத்து கன்னத்தில் அடித்துக் கொண்டு குப்புற விழுகிறான்.

பகுத்தறிவு முன் கடவுள் நிற்குமா?தன்னுடைய உடையில் சிறிதளவு சாணி பட்டு விட்டால் உடனே தண்ணீரினால் கழுவியது போதாது என்று சோப்பினால் தேய்த்து அதன் துர்நாற்றம் போகும் வண்ணம் கசக்குகிறான்.

ஆனால் சிறிதளவு சாணியை உருண்டை செய்து வைத்து, இதுதான் பிள்ளையார், விழுந்துக் கும்பிடு என்று கூறவும் உடனே கன்னத்தில் அடித்துக் கொண்டு குப்புற விழுகிறான்.தெருவில் போகும்போது யாராவது தாய்மார்கள் குப்பையில் கொட்டும் சாம்பல் காற்றில் பறந்து வந்து மேலே பட்டவுடன், ஆத்திரம் பொங்கிக் கொண்டு, ஒரு பெண் பிள்ளை நம்மேல் குப்பையைக் கொட்டினாள் என்பதற்காக முறைத்துப் பார்த்துப் பேசிவிட்டுச் செல்கிற அதே மனிதன்

மேல் அடுத்த வீதியில் காளிதேவியின் உருவம் என்ற பரட்டைத் தலையுடனும், மஞ்சள் துணியுடனும் வேப்பிலைக் கொத்துடனும் ஆடிப்பாடிக் கொண்டிருக்கும் பெண் ஒருவள், ஒருபிடி சாம்பலை எடுத்து முகத்தில் வீசி அடித்தவுடன், "அம்மா தாயே இன்னொரு அடி அடிதாயே; என் பெண் ஜாதி பிள்ளைகளுக்கும் பிரசாதம் கொடு தாயே!" என்று தலையைக் குனிந்து கும்பிடுகிறான்.இவைகளின் மூலம் அவனுடைய பகுத்தறிவை எடை போட முடிகிறது.

தன் பகுத்தறிவையே உபயோகிக்கும் இடத்தில் உண்மை விளங்குகிறது. சாணியாகவும், சாம்பலாகவும் தோன்றி அவைகளின் ஆபாசங்கள் தோன்றுகின்றன.

ஆனால் பகுத்தறிவற்ற நேரத்தில் பகுத்தறிவை சரியாக உபயோகிக்காத நேரத்தில் சாணி உருண்டை சாமியாகவும், சாம்பல் கடவுளின் பிரசாதமாவும் தோன்றுகிறது.சாதாரணமாக ஒரு பெண் கடைக்குச் சென்று சிறிய திருகு அணி போன்ற நகை வாங்கினால் அந்தக் கடைக்காரன் படும்பாடு கொஞ்சமல்ல.

எத்தனைப் பவுன் எடை? நீடித்து உழைக்குமா? முன்பு இக்கடைக்காரனிடம் வாங்கியது இப்போது எப்படி இருக்கிறது? பவுன் சரியான மாற்று உடையதா? உறுதியான வேலைப்பாடாக இருக்கிறதா?

என்று தான் யோசித்துப் பார்ப்பதுமன்றி, அக்கடைக்காரனைக் குறுக்கிட்டுக் கேட்கும் கேள்விகள் அவனைத் திணற வைத்து விடும்.அதைப் போன்றே ஒருவன் ஜவுளிக் கடைக்குச் சென்று துணி வாங்கினால், அத்துணியைப் பற்றி என்ன நம்பர் நூலில் செய்யப்பட்டது? கைத்தறியா, மில் துணியா? சாயம் வெளுக்காமல் இருக்குமா? அடுத்தக் கடையைவிட இந்தக் கடையில் கெஜத்துக்கு எவ்வளவு விலை அதிகம்? கெஜத்துக் கோலில் அளவு குறைவாக இருக்கிறதா?

–என்று இவ்வளவும் பார்த்த பிறகு பீஸ் விலை என்னவென்று கேட்டு மொத்தமாக வாங்கினால் சில்லறையில் வாங்குவதைவிட எவ்வளவு நயமாக இருக்கும் என்று இதையும் கணக்குப் பார்த்து கையில் உள்ள தொகையையும் எண்ணிப் பார்த்து இறுதியில் ஒரு கெஜம் துணி கொடு என்று வாங்கிச் சொல்கிறான். இக்காட்சியை சாதாரணமாகக் கடைவீதிகளில் காணலாம்.ஆனால் இவ்வளவு கேள்வியும், ஆராய்ச்சியும் அங்கே தான் தென்படுகிறதே தவிர வீட்டிற்கு வந்தவுடன் சாணி உருண்டையின் முன்பாகத்தான் விழுந்து கும்பிடுகிறான். கோயிலுக்குள் அடியெடுத்து வைத்தவுடன் நிமிர்ந்திருக்கும் கற்களெல்லாம் சாமியாகக் கருதுகிறான்.

ஏனெனில் இங்கே பகுத்தறிவுக்கு அவன் கொடுக்கும் மதிப்பு அவ்வளவுதான். சிறிதளவு பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்தாலும் போதும். அத்தனையும் கருக்கல் என்று தென்பட்டுவிடும்.பாமர மக்கள் தான் இதைப்பற்றி சிந்திப்பதில்லை என்றாலும், படித்தவன், அறிவாளி என்று கூறிக் கொள்பவனும் இதைப் பற்றி சிந்திப்பதே கிடையாது.படித்த அறிவாளி என்பவனும் கடவுள் சொன்னது, ரிஷிகள் சொன்னது, சாஸ்திரத்தில் உள்ளது என்றால் உடனே முட்டாளாகி விடுகிறான். கடவுள் என்ன சொன்னார்? ஏன் சொன்னார்? எப்படிச் சொன்னார்? எதற்காகச் சொன்னார்?

என்பதை சிந்திப்பதே கிடையாது. மேல் நாட்டு உடைதான் உடுத்துகிறான். அயல் நாட்டில் சென்று கல்வி கற்று வருகிறான். மேல் நாட்டு விஞ்ஞான ஆராய்ச்சி பெற எவ்வளவோ செலவு செய்து படித்துவிட்டு வரும் பட்டதாரி என்பவன் கூட இங்கு வந்தவுடன் பிள்ளையார் கோவிலைக் கண்டவுடன்; அவசரமாக கால் செருப்பைக் கழட்டிக் கொண்டே தொப்பியை எடுத்து நெற்றியில் அடித்துக் கொள்வதைப் பார்க்கிறோம்.

ஆராய்ச்சிக்கென்றே அயல் நாடு சென்றவன் இங்குள்ள பாழும் கடவுளையும், மதத்தையும்பற்றி சிறிதளவு கூட தன் புத்தியைச் செலுத்துவதில்லை. அதனால் தான் இங்கில்லாத கல்வி முறைகள் மேல் நாடுகளில் காணப்படுகின்றன. இங்குள்ளதைப் போன்று பாழாய்ப் போன கடவுள்களும் சாஸ்திரப் புராணங்களும் விஞ்ஞானிகளைக் கொண்ட நாடுகளில் இல்லை.

ஆதலால் ஆராய்ச்சி தங்குதடை இன்றி வளர்ந்து கொண்டே போகிறது அல்லது இவைகள் அங்கு இருந்திருக்குமெயானால் இத்தனை நாட்கள் வரை விட்டு வைத்திருக்கவும் மாட்டார்கள்.கடவுள் அவதாரம், மகான், ரிஷி, மகாத்மா இவர்கள் எல்லாம் மனிதனுக்கு மேலான எதைத்தான் கண்டுபிடித்தனர்?

ஏன் அவர்களுக்கு இப்பெயர்கள் உண்டாக வேண்டும்?
அவர்கள் கூறியது தான் முடிந்த முடிவானதா?
அவர்கள் உடம்பிலும் இரத்தம் தானே ஓடுகிறது?
அவர்கள் சிறுநீர் பன்னீரும் ஜவ்வாதும் கலந்த வாசனையாகவும் நம்முடையது கவிச்சியும் அடிக்கிறதா?

இதையெல்லாம் சிறிதளவு யோசனை செய்தால் போதும் எல்லாம் கற்பனைகளும் காட்டுமிராண்டிகள் கையாள்வதும் என்பது விளங்கும்.நாஸ்திகம் என்ற சொல்லை சிறிதளவு ஆராய்வோமானால் இச்சொல் முதலில் கூறியபடி வட சொல்லாகும் இதற்கு கடவுள் இல்லை என்ற பொருளைப் புகுத்திய பார்ப்பனர்கள், கடவுளை நிந்திக்க வேண்டுமென்பதற்கே புகுத்தி இருக்கிறார்கள்.

உண்மையாக கடவுள் நம்பிக்கைக்காரனும், கடவுளை நன்றாய் உணர்ந்தவனும் நாஸ்திகம் என்ற சொல்லுக்கு கடவுள் இல்லை என்ற பொருளைக் கூறவே மாட்டான், அப்படிக் கூறுகிறவன் கடவுளை அவமானப்படுத்துகிறவன் கடவுளை மட்ட ரகமாக நினைத்திருப்பவன் என்று தான் பொருள்படும்.

ஆனால் கடவுள் இல்லை என்பதற்கு தமிழர்களிடையில் ஒரு சொல் கிடையாது. ஏனெனில் கடவுளை அவமானப்படுத்தும் எண்ணம் இருந்திருக்குமானால் அதற்கு ஏதாவது ஒரு சொல்லை ஏற்படுத்தி இருக்கலாம். எவ்வளவோ தமிழ்ப் புலவர்கள், தமிழைப் போற்றி வளர்த்தவர்கள், தமிழில் ஆராய்ச்சியாளர்கள், தமிழை வளர்க்கப்பாடுபட்ட அரசர்கள், புலவர்கள் எல்லாம் இருந்திருக்க இதற்கு ஒரு சொல் இருப்பதாகக் காணவுமில்லை.

புதிதாக உண்டாக்கவுமில்லை. ஏன் என்றால் தமிழன் அவ்வளவு அறிவாளியாக, கடவுளை உணர்ந்தவனாக, கடவுளை அவமானப்படுத்தும் எண்ணம் இல்லாதவானாக இருந்திருக்கிறான். என்ன லாபம்? கடவுளின் தன்மைகள் என்ன? சர்வவல்லமை உள்ளவர் சர்வ வியாபி (எங்கும் நிறைந்தவர்) சர்வத்தையும் (யாவற்றையும்) செய்ய வல்லவர் அவருக்கு மேம்பட்டவர் எவரும் இல்லை. அவனுடைய அனுமதியின்றி அணுவும் அசையாது என்பதாகக் கூறிவிட்டு அந்தக் கடவுளை சாதாரண மனிதர் என்பவன் எப்படி இல்லை என்று சொல்ல முடியும்?

இவன் உண்டு என்பதால் அதை உண்டாக்கப் போகிறானா? அல்லது இல்லை என்பதால் அழிந்து விடப் போகிறானா?

இப்படிப்பட்ட கடவுள் உண்டு என்றோ கடவுள் இல்லை என்றோ கூறுவதால் கடவுளுக்கு இதனால் தான் பெருமை கிடைக்கப் போகிறதா? அல்லது இவனுக்குத்தான் என்ன லாபம் கிடைக்கும்? யாவற்றையும் செய்விக்கிற, அவனன்றி அணுவும் அசையாத சக்தி உடைய கடவுளின் அனுமதி இன்றி நான் இக்கூட்டத்தில் பேசுவதற்கு வர முடியுமா?

இங்கு வந்து கடவுள்கள் இப்படியெல்லாம் பித்தலாட்டங்களையே உருவெடுத்தன என்றும், அவைகள் அத்தனையும் ஆபாசம், அநாகரிகம் என்றும் சொல்ல முடியுமா? இதையும் அவர் செய்விக்கிறார் என்று தானே பொருள்படும்? அவரே மனதில் இருந்து இதைப் போய் சொல் என்று உத்தரவு கொடுக்காவிட்டால் நான் எப்படி இங்கு கூற முடியும்? எனவே எல்லாம் அவருடைய அனுமதியின் பேரில் தான் கூறப்படுகிறது.

மேலும் இப்பேர்ப்பட்ட மேன்மை குணங்கள் கொண்ட கடவுள் என்ற சாதனத்தை சாதாரண மனிதன் இல்லை என்று சொல்லுவதால் அக்கடவுள் அழிந்து விடுமா? அக்கடவுளை காப்பாற்ற பார்ப்பனர்கள் தேவையா? அப்படி அழிந்து விடுவதாக இருக்குமானால் அக்கடவுளின் சர்வவல்லமையும் எங்கே போனது? தனக்கு மீறிய வேறு ஒருவர் இல்லை என்ற தன்மை எங்கே போனது? சர்வத்தையும் செய்விக்கும் குணத்தின் மேன்மைதான் என்ன?

ஆகவே அத்தனையும் பொய் அல்லது கற்பனை என்றுதான் கொள்ள வேண்டும். அல்லது மற்றவனைக் கடவுள் இல்லை என்று சொல்பவன் என்னும் அவனுக்கு நாஸ்திகன் என்னும் பெயர் கூறி அழைப்பது அறியாமையால் கூறுவதாகும்.

இல்லையேல் ஏதாவது நன்மையைப் பொறுத்து நாஸ்திகம் என்ற வார்த்தையைப் புகுத்தி இருக்க வேண்டும். அதாவது ஆண்டவனை வியாபாரப் பொருளாக்கக் கொண்டு பிழைத்து வரும் பித்தலாட்டக்காரர்கள் உண்டாக்கியதுதான் நாஸ்திகம் என்ற சொல். ஆனால் இந்த ஆயதத்தினைக் கொண்டு பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்பே அறிவாளிகளை அடக்கி இருக்கின்றனர்.

ஆரியர்களின் ஆணவத்தை அடக்கத் தோன்றிய வள்ளுவர் மக்களிடம் "எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு" என்றார். அதாவது எதை யார் சொன்னாலும் மனிதனாகட்டும், ரிஷிகள், முனிகள் மற்றும் மற்றும் கடவுளே சொல்லியவை என்பதாக இருந்தாலும் அதனை ஆராய்ந்துப் பார்த்து அவன் உண்மைப் பொருளை அடைவதே மனிதனின் பண்புக்கு அழகு என்றார்.

இதுவுமன்றி "எப்பொருள் எத்தன்மைத்தாயினும், அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு" என்றும் கூறியதிலிருந்து அப்படிக் கூறிய விஷயம் எதைப்பற்றியதானாலும் அக்கறை இல்லை உன்னைப் படைத்த கடவுள் என்கின்ற ஆண்டவனே கூறியதானாலும் சும்மா விடாதே அதையும் அலசி ஆராய்ந்து பார்.

அறிவு என்ற உரை கல்லில் உரைந்து அதைப் பற்றிய மதிப்பு என்ன? அது எத்தனை மாற்றுடையது? தங்கத்துக்கு சமமா? பித்தளைக்குச் சமமா? – என்று ஆராய்ந்து பார் என்றும் கூறிச் சென்றார்.அவரைப்போன்றுதான் புத்தரும் தோன்றினார். அவர் அறிவுக்கும் மேம்பட்டது ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட்டார். மற்றும் வெளிப்படையாக "கடவுளாவது வெங்காயமாவது" எல்லாம் அறிவுக்கும் கீழ்பட்டதுதான் என்று பொருள்படும்படி பச்சையாகவே கூறியிருக்கிறார்.

அதனால்தான் அவ்வித பகுத்தறிவாளிகளை எல்லாம் பார்ப்பனர்கள் கொடுமைக்குள்ளாக்கி அழித்திருக்கின்றனர். புத்தர் தோன்றிய இந்நாட்டிலேயே புத்தரின் கொள்கைகள் பரவாவண்ணம் போய்விட்டன.பார்ப்பனர்கள் இல்லாத அயல் நாடுகளில் புத்தரின் கொள்கைகளை அநேக மக்கள் பின்பற்ற இந்நாட்டிலோ புத்தரின் கொள்கைகளை கடைப்பிடிப்போர் மிகச் சிலர்தான்.

இதைப் போன்றே வள்ளுவரின் திருக்குறள் இருந்த இடமே தெரியாது போன காலமும் இருந்தது. எங்கள் முயற்சியால் தான் ஓரளவாவது திருக்குறளின் மேன்மையைப் பலர் அறிய முடிந்தது. குறள் மாநாடுகள் கூட்டினோம்.

மறைந்து கிடந்த அதன் மேன்மைகளை மக்களிடம் கூறினோம். அதன் பயனாக மக்கள் அதன் வழி நிற்க ஓரளவு வாய்ப்பும் கிடைத்தது.எவ்வளவோ நாகரீகம் கொண்ட தமிழர்கள் இன்றைக்கு அநாகரிகத்திலேயே ஆழ்ந்தவர்களாகவும், மூடப்பழக்க வழக்கங்களிலேயே ஆழ்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள் என்றால் இந்நாட்டில் உள்ள கடவுள் மதம் சாஸ்திர புராணங்களே காரணமாகும்.

நாகரிகமே தெரியாத காலத்திலும் நாகரிகத்தில் தலை சிறந்து விளங்கிய தமிழ் மக்கள் இன்றைக்கு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் அநாகரிகம் கொணடவர்களாக இருக்கிறனர்.உலகத்தில் ஒரு இடத்திலும் இல்லாத மதமும், ஆயிரக்கணக்கான கடவுள்களும் இங்கு தான் இருக்கின்றன. எங்கிலும் இல்லாத பார்ப்பனர்கள் இங்குதான் இருக்கின்றனர்.

ஆங்கில நாட்டில் பறைய துரை, பார்ப்பன துரை கிடையாது. ஜெர்மனி நாட்டிலும், அமெரிக்க நாட்டிலும் பார்ப்பனனும், பறையனும் கிடையாது. இப்படி ஆயிரக்கணக்கான கடவுள்களைக் கொண்டவர்களாகிய நாம் காட்டுமிராண்டிகளாக இருக்கிறோம். ஓரே கடவுளைக் கொண்ட மேநாட்டவர்கள் நாகரிகத்தில் சிறந்து அறிவில் சிறந்து விளங்குகின்றனர்.

(19-08-1955 அன்று பெங்களுரில் நடந்த பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதி 30-08-1955 "விடுதலை" இதழில் வெளியானது. "பெரியார் களஞ்சியம்" - தொகுதி: 2 பக்கம்… 266)
>> TAMILACHI BLOGSPOT.
-------------------------------
படித்துவிட்டீர்க‌ளா?
அலறும் R.S.S. இந்து மதத்தில் குறைந்து வரும் எண்ணிக்கை பிற மதத்தில் வளர்வதால் ஒவ்வொரு இந்து பெண்ணும் மூன்று பிள்ளைகளை பெறவேண்டும் -ஒழிக நிரோத்!!

இந்து மதத்தை விட்டு விட்டால் எங்களை என்ன மதம் என்று சொல்லிக் கொள்வது?’

வள்ளுவர் ஓர் இந்துவாக நிச்சயம் இருக்க முடியாது.-----
---------------------------------
மற்ற பதிவுகளுக்கு:- சிந்திக்க உண்மைகள்

Monday, February 18, 2008

உன்னைப் பார்த்துத்தானே என் புருஷனும் தேவடியாள் வீட்டுக்குச் சென்று விடுகிறான் ! .

உன்னைப் பார்த்துத்தானே என் புருஷனும் தேவடியாள் வீட்டுக்குச் சென்று விடுகிறான் ! .

வருடந்தோறும் கல்யாணம் ? தேவடியாள்கள் ?

கடவுள் இருக்கட்டும் - நாங்கள் வேண்டாமென்றுகூறவில்லை! எங்கும் வியாபித்திருக்கும் அந்தக்கடவுளுக்கேன் சொந்தமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள்?

அவருக்கேன் 10 - ஏக்கர், 20 - ஏக்கர்,விஸ்தீரணத்திற்கு மாடமாளிகையும் கூடகோபுரங்களும்? அவருக்கேன் ஒரு கோடி இரண்டுகோடி மதிப்பு பெறும்படியான நகைகள்?

அவருக்கேன்பல லட்சரூபாய் பெறுமான தங்கக் குல்லாய்கள் -வைரக் குல்லாய்கள்?அவருக்கேன் நித்தியம் ஆறுவேளை பூஜை?
பாடுபட்டும் பல பாட்டாளி மக்கள் பசியுடன் இருக்க அவருக்கேன் 10 - படி, 20 - படி சோற்றுருண்டைகள்? அவருக்கேன் பாலாபிஷேகம் - தேனாபிஷேகம்?

அவருக்கேன் வருடந்தோறும் கல்யாணம்? அவருக்கேன் தேவடியாள்கள்?
அவருக்கேன் தேரும் - திருவிழாவும்?
சர்வசக்தி படைத்த அவருக்கேன் ஏராளமான பொருள் செலவு செய்து நாம் இதையெல்லாம் சம்பாதித்துக் கொடுக்க வேண்டும்?
இவை அவருக்குத் தேவையில்லை என்றால் நாஸ்திகமா?
அவர் பேரைச் சொல்லி நம்மை ஏமாற்றும் பார்ப்பான் தன்மையை ஏன் இன்னும் நீ ஒழிக்காமல் இருக்கிறாய்?
நீ கொடுப்பதால் இத்தனையும் நடக்கிறதா?

அல்லது நீ கெடாமல் இருந்தால் கூட இத்தனையும் நடக்குமா?
நீ கொடாமல் இருந்தால் ஒரு நாள் வைத்திருப்பானா இந்தக் கல்லுப்பொம்மைக் கடவுளை - இந்தப் பேராசை பார்ப்பான்?

உனக்கு முன்னாலன்றோ கடப்பாரை எடுத்துக் கொண்டு போவான் - கோயிலை இடித்து உள்ளதையும் அபகரித்துக் கொள்ள?
இதை அறியாமல் பைத்தியக்காரத்தனமாக ஏனப்பா அள்ளிக் கொடுத்து வருகிறாய்?
கடவுள் பேரால் ஏனப்பா அள்ளிக் கொடுத்து வருகிறாய்?
கடவுள் பேரால் ஏனப்பா ஒரு கூட்டத்தை சோம்பேறிகளாக்கி வருகிறாய் - என்று கேட்பதா பாவம்? கடவுள் சொத்தால் யாருக்கு லாபம்?

கடவுளின் சொத்துக்களைக் கொண்டு எத்தனைத் தொழிற்சாலைகள் ஆராய்ச்சிப் பண்ணைகள் நடத்தலாம்!

இத்தனை சொத்துக்களையும் கடவுளுக்கு அழுதவன் நீயும், உன் பாட்டனும் பூட்டனும் தானே? ஒரு பார்ப்பானாவது ஒரு அடி நிலம் விட்டிருப்பானா சாமிக்கென்று? அப்படிச் செய்ய அவனென்ன உன்னைப் போல் பைத்தியக்காரனா?

பார்ப்பானுக்குப் பைத்தியம் பிடித்தால் கூட வீதியிலுள்ள சாமான் வீட்டுக்குள் போகுமே ஒழிய, ஒரு ஓட்டை உடைகல் சட்டிப்பானைக்கூட வீதிக்கு வராதே – தெரியுமா உனக்கு அது?

எந்தப் பார்ப்பானாவது தன் வீட்டு எண்ணெயைக் கொண்டு கடவுளுக்கு தீபம் வைக்கிறானா?
எந்தப் பார்ப்பானாவது திருவண்ணாமலை தீபத்திற்கு நெய் டின்கள், எண்ணெய் டின்கள் அனுப்பியிருக்கிறானா?
எந்தப் பார்ப்பானாவது சூத்திரனுக்குச் சமாராதனை செய்திருக்கிறானா?
ஏன் ஒரு குண்டு விறகாவது உங்கள் சமாராதனைக்காக அவன் அனுப்பியிருப்பானா?

ஏன் அப்பா நீ மட்டும் இப்படி அழ வேண்டும்? அவன் மட்டும் ஏன் டிக்கெட் கொடுத்து வர வேண்டும் என்றால் இதையா நாஸ்திகம் என்பது?
ஒரே அடியாக மோஷத்தில் இடம் பிடித்துக் கொள்ள வேண்டுமென்று நீங்கள் ஆசைப்பட்டால் அதற்கு எங்களைத்தானா தூற்ற வேண்டும்?

ஒழுக்கமுள்ளவனுக்குத்தான் மோஷத்தில் இடம் இருக்குமென்றால் நீங்கள் நினைக்கிறீர்களா? ஒரு பார்ப்பானுக்காவது மோஷத்தில் இடம் கிடைக்குமென்று?

கடவுளுக்குத்தான் நேர்மை நீதி இருக்குமானால் அவர் பேரால் நம்மை வஞ்சித்துப் பிழைக்கும் பார்ப்பான் ஒருவரையாவது மோஷத்திற்கு அனுப்பி வைப்பாரா அவர்?

அப்படிப்பட்ட பார்ப்பானா உனக்கு மோஷத்திற்கு டிக்கட் கொடுப்பது? அதற்காகவா நீ அவன் காலைக் கழுவி தண்ணீர் குடிப்பது?
அறிவிருக்கும் போது நீங்கள் சிந்திக்க வேண்டாமா இவற்றையெல்லாம்?

நம்பத்தகாத காட்டுமிராண்டிக் காலத்திய சங்கதிகளைக் கொண்டு வந்து புகுத்தி மதம் கடவுள் என்ற பேரால் நம்மை ஏமாற்றி வாழும் பார்ப்பானை நம்பியா இந்த 1947-லும் நீ சூத்திரனாயிருப்பது?

இந்த இருபதாவது நூற்றாண்டிலா நீ உன் கடவுளைத் தாசி வீட்டிற்கு அழைத்துச் செல்லுவது?

உன் மனிதத்தன்மை ஒப்புக் கொள்கிறதா இதை?ஆண் மகன் தான் தானும் கடவுளைப் போல் இரண்டு பெண்டாட்டி வைத்துக் கொள்ளலாம். கடவுளைப் போல் தாசி வீட்டிற்குச் சென்று வரலாம் என்று நினைத்துக் கடவுளைக் கும்பிடுவானானால் என்னருமைத் தாய்மார்களே நீங்களுமா அந்தக் கடவுளுக்குத் தேங்காய், பழம் கொண்டு சென்று படைப்பது?

உன்னைப் போல் என் புருஷனும் தினம் தேவடியாள் வீட்டுக்குச் செல்லட்டும் என்று துதிக்கவா நீங்கள் கோயிலுக்குச் செல்லுவது அல்லது என் புருஷனைப் போல் எனக்கும் இன்னும் இரண்டாரு மாப்பிள்ளைமாரைத் தேடிக் கொடு என்று கேட்கவா சொல்லுகிறீர்கள்?

இல்லையே! பின்னையேன் போக வேண்டும்?
உங்களுக்கு அறிவிருந்தால் மனிதத் தன்மையில் விருப்பமிருந்தால் ஒழுக்கத்தில் நாட்டமிருந்தால் தாய்மார்களே! நீங்கள் ஆளுக்கொரு கம்பு எடுத்துச் செல்ல வேண்டும் - கோயிலுக்குப் போகும்போது!
சாமி உனக்கேன் இரண்டு பொண்டாட்டி? என்று கேட்டு அடிக்க வேண்டும் - அந்தக் கம்பால்!

இரண்டு பொண்டாட்டி இருந்தும் சாமி உனக்கேன் தேவடியாள்?

உன்னைப் பார்த்துத்தானே என் புருஷனும் தேவடியாள் வீட்டுக்குச் சென்று விடுகிறான்! என்று கூறி உடைத்து தூளாகும்படி அடிக்க வேண்டும் - அந்தக் கம்பால்.என் சகோதரியை ஏன் சாமி பொட்டிக் கட்டிக் கொள்ள வேண்டுமென்கிறாய்? என்று கேட்டு அடிக்க வேண்டும் - அந்தச் சாமியை!

அய்யரோ, தர்மகர்த்தாவோ அதைத் தடுக்க வந்தால் நியாயம் கூறையா?
அந்தச் சாமிக்கேன் வருடத்திற்கொரு கல்யாணம் போன வருஷம் செய்த கல்யாணம் என்ன ஆயிற்று?

அதுவும் போதாமல் தேவடியாள் வேறு ஏன்? என்று அவர்களையும் அடித்துக் கேளுங்கள். உங்களைக் கோர்ட்டுக்கு அழைத்துச் சென்றால் அங்கும் கேளுங்கள்.

கம்பைக் காட்டி நாங்கள் ஏனையா சட்டப்படி சாஸ்திரப்படி கடவுள் வாக்குப்படி சூத்திரச்சிகள் தாசிகள்?

இதை ஆதரிக்கும் இவர்களையும் இதை அனுமதிக்கும் கடவுளையும் இந்த இரும்புத்தடி கம்பால் அடித்தாலென்ன பாபம் வந்துவிடும்? என்று ஓங்கிக் கேளுங்கள்!

இப்படிச் செய்தாலன்றோ பாபம் வந்துவிடும்? என்று ஓங்கிக் கேளுங்கள்! இப்படிச் செய்தாலன்றோ உங்கள் இழிவு நீங்கும்!இதை விட்டு உங்களைப் பழிக்கும் கடவுளர்களுக்கு நீங்கள் ஒய்யார நடை நடந்து தேங்காய், பழம் எடுத்துச் செல்கிறீர்கள் என்றால் உங்கள் இழிவு நீங்குவது தான் எப்போது?

உங்கள் தாசிப்பட்டம் போவது தான் எப்போது? சூத்திரனுக்கும், சூத்திரச்சிக்கும் கடவுளுண்டா என்பது தெரியுமா உங்களுக்கு?

மனுநீதிப்படி சூத்திரர்களுக்குக் கடவுள்கள் இந்தப் பார்ப்பனர்கள் தான் இவர்கள் தான் சூத்திரர்களுக்குப் பூதேவர்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா?

கடவுளை நோக்கி தவம் செய்தான் என்பதற்காக சூத்திரனான சம்பூகன் ராமன் என்ற கடவுளால் கொல்லப்பட்டான் - மனுதர்மப்படி என்பது சாஸ்திரம். இதை நீங்கள் படித்திருக்கிறீர்களா?

நீங்களெல்லோரும் பார்ப்பானுக்கு அடிமைகள்! உங்கள் சொத்துக்களையோ, உங்கள் மனைவி மக்களையோ அனுபவிக்க அவனுக்குச் சகல உரிமையுண்டு என்று கூறும் சாஸ்திரங்கள் இன்றும் இருந்து வருகின்றன என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?

நாங்கள் இவற்றை எல்லாம் எடுத்துக் காட்டிக் கண்டித்து வருவதால் ஏதோ தந்திரமாக சில சீர்திருத்தங்கள் செய்யப்படுகின்றனவே அல்லாது நாங்களே இல்லாவிட்டால் சூத்திரத் தாய்மார் ஒவ்வொருத்தரும் பொட்டுக் கட்டிக் கொள்ள வேண்டும் என்ற சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்குமே இந்நாட்டில்!

உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும் நான் கூறினால் சமீப காலம் வரைக்கும் நம் திராவிட நாட்டின் ஒரு பாகத்தில் பக்குவமடைந்த பெண் ஒவ்வொருத்தியும் முதலில் ஒரு ஜாதி பிராமணனால் தான் ருசி பார்க்கப்பட வேண்டும் என்ற முறை இருந்து வந்ததை நீங்கள் அறிவீர்களா?
இதை நான் கூறவில்லை.தோழர் அம்பேத்கர் அவர்கள்,

காந்தியாரும் காங்கிரசும் தீண்டப்படாத மக்களுக்குச் சாதித்ததென்ன? என்ற தமது புத்தகத்தில் 205 –ம் பக்கத்தில் மேல்நாட்டு ஆசிரியர்களின் மேற்கோள்ளுடனும் மலபார் கெஜட்டின் ஆதாரத்துடனும் இப்படிப்பட்ட ஒரு பழக்கம் - சம்பந்தமுறை திருமணம் செய்து கொண்ட மக்களிடையே இருந்து வந்ததாக விளக்கிக் கூறுகிறார்! வாங்கிப் பாருங்கள் அதில் ஊர் பேர் இருக்கிறது.

இப்படிப்பட்ட அக்கிரம அந்தணர்களுக்கா நீங்கள் அடிபணிவது?ஆகவே உங்கள் இழிவு நீங்க வேண்டுமாயின் ஒன்று இப்படிப்பட்ட இந்து மதம் ஒழிய வேண்டும் அல்லது அதை விட்டு நீங்கள் வெளியேற வேண்டும்!

நீங்கள் வெளியேறும் பட்சத்தில் கும்பிடவோ, கொடுக்கவோ மொட்டையடித்துக் கொண்டு காணிக்கை செலுத்தவோ, காவடி தூக்கிக் கொண்டு குரங்காட்டம் குதிக்கவோ அக்கிரகாரத்தில் ஆள் கிடையாது.

உண்மையாகவே கேட்கிறேன், ஒரு பார்ப்பானாவது பார்ப்பன அம்மையாவது திருப்பதியில் மொட்டை அடித்துக் கொள்ளும்போதோ அல்லது திருத்தணிக்குக் காவடி தூக்கும் போதோ அல்லது கோவிந்தா கோவிந்தாவென்று கூறிக் கொண்டு தெருவில் உருளும் போதோ நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?

நீங்கள் கொடுப்பது ஒழிந்தால் கோயில்கள் தாமாக ஒழியும். அவை ஒழிந்தால் ஆரியத்தின் மோச வேலைகளும் அன்றே ஒழிந்துவிடும்.

ஒருவேளை ஆற்று மண்ணையாவது எண்ணி விடலாம். நமது சாமிகளை எண்ண முடியாது போல் இருக்கிறதே! எத்தனைச் சாமிகள்!

நூல் கேட்கும் சாமிகள், துணி கேட்கும் சாமிகள், மயிர் கேட்கும் சாமிகள், வெடி கேட்கும் சாமிகள், தேங்காய் கேட்கும் சாமிகள், காசு கேட்கும் சாமிகள், கற்பூரங் கேட்கும் சாமிகள்!இன்னும் என்னன்னமோ கேட்கும் சாமிகள். எத்தனை எத்தனை கோடியோ இன்னும் நம் நாட்டில் இருக்கின்றனவே!

அத்தனைக்கும் படைத்துத்தானே நாம் வர வர குட்டிச் சுவராகி வருகின்றோம்.

இதைக் கூறுவதா நாஸ்திகம்? நாஸ்திகம் என்றால் அர்த்தம் தெரியுமா உனக்கு? நாஸ்திகன் என்றால் அவனை தலைசிறந்த அறிவாளி என்று உலகம் போற்றும் என்பதை நீ அறிவாயா?

மேல் நாட்டார் தம் குழந்தைகளுக்கு ஒரு நாஸ்திகன் பெயரை இடுவதில் அளவற்ற பெருமையும், மகிழ்ச்சியும் கொள்வார்கள். உருவச் சிலை வைப்பார்கள் என்பது உனக்குத் தெரியுமா?

ஒருவன் கடவுள் இல்லை என்று கூறுவானானால் அவனே கடவுள் தன்மை பெற்றிருக்க வேண்டும். அவனுக்கு உலகில் நடக்கும் சகல காரியங்களுக்கும் காரணங்கள் தெரிந்திருக்க வேண்டும் என்பதை நீ அறிந்திருக்கிறாயா?கடவுள் இல்லை என்று ஒருவன் கூறுவானானால் கடவுள் தன்மை என்பதை தெரிந்த அவ்வளவு அறிவு பெற்று இருக்கிறான் என்று தான் அர்த்தம். கடவுள் இல்லையென்றால் யாருக்குக் கடவுள் இல்லை?

உண்மை ஞானிக்குத்தான் கடவுள் இல்லை! வேதாந்தி உண்மையின் முடிவு கண்டவனுக்குத்தான் அப்படிப்பட்ட ஒரு ஞானியை யாரும் வெறுக்க மாட்டார்கள். அவனும் யாரையும் வெறுக்க மாட்டான். அவனை யாரேனும் வெறுப்பார்களானால் அவர்களை அறிவிலிகள், முட்டாள்கள் என்று தான் உலகம் கூறும். அப்படியிருக்க என்னைப் போன்ற சாதாரண ஆட்கள் கடவுள் இல்லை என்று கூறும்படியான அவ்வளவு பெரிய அறிஞர்கள் அல்ல!

சாக்ரடீஸ், இங்கர்சால், பிராட்லா, ஸ்பென்சர் போன்றவர்கள் தான் அதற்குத் தகுதி வாய்ந்தவர்கள். நாங்களென்ன கடவுள் இல்லை என்று கூறி தப்பட்டையா அடித்துக் கொண்டு வருகிறோம்?

கடவுள் பேரைச் சொல்லி யாரும் யாரையும் ஏமாற்ற வேண்டாம் என்று தானே கூறி வருகிறோம்? அப்படி ஏதாவது கடவுளைப்பற்றிப் பேச நேர்ந்தால் எது கடவுள்? அது எப்படி இருக்கும்? எதைக் கொண்டு அதைக் கடவுளென்று தீர்மானிப்பது என்று தானே நாங்கள் கேட்கிறோம்?

சரியான சமாதானம் கூறத் தெரியவில்லையானால் தெரியவில்லை என்று சொல்லி விட்டுப் போயேன். எங்களை ஏன் நாஸ்திகர்கள் என்று கூறி மக்களிடம் எங்கள் மீது துவேஷத்தை உண்டாக்குகிறாய்?

ஒன்றரை முழம் குழவிக்கல் பொம்மையைக் கடவுளென்று கூறி அதற்கு பாலாபிஷேகம் செய்து, பட்டாடையும் உடுத்தி பல நகைகளும் போடுகிறாய்! அம்மனை அய்யர் தொடுகிறாரே என்ற கவலை இல்லையே உனக்கு!
மறுநாள் காலையில் போய்ப் பார்த்தால் அம்மணமாயிருக்கிறதே அந்த அம்மன் வந்தத் திருடன் நகையைக் கழட்டிக் கொண்டு போனதல்லாமல் சேலையையும் அவிழ்த்துப் போய்விட்டானே! உன் சாமியால் அதைத் தடுக்க முடியவில்லையே!

உண்மையில் சாமி அந்தக் கல்லில் இருக்குமானால் கிட்டப் போவானா அந்தத் திருடன்? போனாலும் தொடுவான் அந்தச் சாமியை? நினைத்தவுடன் நெஞ்சு புகைந்து போகாதா அவனுக்கு?ஏன் இப்படி என்று சிந்தித்துப் பார்த்தாயா நீ?

மற்ற உலக மக்களுக்கெல்லாம் முஸ்லீம், கிறிஸ்துவர்களுக்கெல்லாம் கடவுள் இல்லாமலா போயிற்று?

அவர்களெல்லாம் இப்படி ஒரு முழ பொம்மையை வைத்துக் கொண்டு கும்பாபிஷேகம், பூஜை, கல்யாணம், கருமாதி, உற்சவம் முதலியன செய்து கொண்டா கூத்தடித்தார்கள்?உன் சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தாயா? திராவிடனுக்கு எங்காவது குழவிக்கல் பொம்மை சாமி இருந்தது என்று எழுதப்பட்டிருக்கிறதா அதில்?

அப்படித்தான் உனக்கு ஒரு சாமி வேண்டுமென்றால் அது உன்னைப் போலல்லவா இருக்க வேண்டும்?

உன்னைத் தொட்டாலும் உன் நிழல்பட்டாலும் தான் செத்துப் போவதாகக் கூறுவதா உனக்குச் சாமி? வெட்கமில்லையா உனக்கு?கோயில் கட்டுவதும் நீ! கும்பாபிஷேகம் செய்வதற்குப் பொருள் கொடுப்பதும் நீ! சாமியின் பூஜைக்கும் சாப்பாட்டிற்கும் படியளப்பதும் நீ!

அந்தச் சாமிக்கு தன்னைப் போல் உச்சிக்குடுமி வைத்து விட்டு தன்னைப் போல் பூணூலும் போட்டு விட்டு நீ கொடுத்த துணியை தன்னைப் போல் பஞ்சகச்சம் வைத்து அதற்கு உடுத்திவிட்டு அதன் மீது மாட்டு மூத்திரத்தைத் தெளித்துவிட்டு சாமிக்கு உயிர் வந்துடுத்து இனி எட்டி நில் - தொடாதே! என்று உன்னிடம் கூறிவிடுகிறானே பார்ப்பான்!

நீ அவனையும் தொடக்கூடாது. சாமியையும் தொடக்கூடாது. நீ அவன் சாப்பிடும் போதும் பார்க்கக்கூடாது! ஆனால் இரண்டு பேருக்கும் நீ தானே படியளக்க வேண்டும்?

இது யோக்கியமா ? ஏமாற்றுதல் அல்லவா என்று கேட்டால் இதற்கா நாஸ்திகம் என்று பெயர் கொடுப்பது? மாமாங்கம் என்று கூறிக் கொண்டு போய் மக்களின் மூத்திரம் கலந்தச் சேற்று நீரைத் தெளித்துக் கொண்டு வருகிறாயே!

புத்தியிருக்கா உனக்கு ?இங்கு உன் பெண்டாட்டியை மீட்டிங்குக்கு கூட்டிவர நடுங்குகிறாய் எட்டிப் பார்த்துவிட்டால் கூட அடிக்கப் போகிறாய். அங்கு மாமாங்கக் கும்பலில் அவள் கூட்டத்தில் அகப்பட்டு கூட்டத்தால் கசக்கப்படும் போது வெட்கமில்லாமல் கொந்து பத்திரம், செவ்வு பத்திரம், கழுத்து பத்திரம், காது பத்திரம் என்றுதானே கூறுகிறாய்.

கொஞ்சமாவது மானமிருந்தால் அப்படிப்பட்ட இடத்திற்குப் பெண்களை இழுத்துக் கொண்டு போவாயா நீ ?

மாமாங்கக் குளத்தில் எப்படித் தண்ணீர் பொங்கும் என்று சிந்தித்ததுண்டா நீ? இன்றாவது தெரிந்து கொள்.

ஜனநெருக்கத்தால் மூத்திரம் வெளியில் விட முடியாத ஜனங்கள் சரசரவென்று குளிப்பது போல் குளத்தில் இறங்கி மூத்திரப்பையை காலி செய்து விடுகிறார்கள். அதுதான் நுரைவரக் காரணம் என்றும் அவர்கள் விடும் மூத்திரத்தாலும், பல ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே சமயத்தில் நீரில் இறங்குவதாலும் தான் அந்த நீர்மட்டம் ஏறுகிறதென்றும் அறிவாளிகள் சொல்லுகிறார்கள்.

ஆகவே உங்களை இவையெல்லாம் சரியா, தப்பா என்று பகுத்தறிவு கொண்டுதான் நடக்கும்படி சொல்லுகிறோம். நாணயமாகத் தான் நடக்கும்படி சொல்லுகிறோம். இதற்கா நாங்கள் நாஸ்திகர்கள் ஆக்கப்படுவது ?

இதற்கா நரகத்திற்குப் போக வேண்டும் ?
உண்மையான கடவுள் இருந்தால் அவர் பேரைச் சொல்லி மக்களை வஞ்சித்து வரும் இந்தப் பார்ப்பனர்களையன்றோ நரகத்திற்கு அனுப்பிவிட்டு நமக்கு மகிழ்ச்சி செய்தி அனுப்பி வைப்பார்.
இதைக் கேட்பதா நாஸ்திகம்? இந்த அக்கிரமங்களைக் கண்டு இரத்தம் துடிக்க வேண்டாமா உங்களுக்கு ?

எங்களை நாஸ்திகர்களென்று கூறும் இவர்கள் மட்டுமென்ன மகாபக்தர்கள்? எவனாவது கடவுள் காப்பாற்றித் தருவார் என்று நினைத்துத் தன்னுடைய பணத்தை மேஜை மீது வைத்து விட்டுப் போய்விடுவானா ?

அப்படித்தான் கடவுளை காவல் வைத்துவிட்டுப் போனாலும் அந்தப் பணம் அப்படியே இருக்குமா?

கடவுள் காவலிருக்கும் போது பணம் வைக்க இரும்புப் பெட்டி ஏன்? அதற்குப் பூட்டேன்? அவரையே ஜெயில் கைதி மாதிரி பூட்டி வைப்பதேன்?

அப்படி பூட்டு போட்டுங்கூட அவரைப் பெயர்த்து விட்டு அடியில் இருப்பதை அடித்துக் கொண்டு போவானேன்? கோயில் நகைகள் கொள்ளைப் போவானேன்?அன்பர்களே!

கோயிலும் கடவுள்களும் மதங்களும் பார்ப்பனர் தம் வாழ்வுக்காக வகுத்துக் கொண்ட வழிகள். அவை இருக்க வேண்டிய அவசியமில்லை !

அப்படி இருக்க வேண்டுமென்றாலும் அறிவுக்கேற்ற ஒரு நாணயமான, பாராபட்சமற்ற கடவுளை வணங்குங்கள். உங்களை இழிவுபடுத்தாத முட்டாள்களாக்கி வைக்காத ஒரு மதத்தை தழுவி நடவுங்கள் என்று தான் பணிவுடன் வேண்டிக் கொள்கிறேன்.

(14-12-1947 அன்று திருவண்ணாமலையில் நடந்த திராவிட நாடு பிரிவினை மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் பேசியது – 23-12-1947 "குடிஅரசு" இதழில் வெளியானதில் ஒரு பகுதி)(பெரியார் களஞ்சியம் 2-ஆம் தொகுதியில் இருந்து…. பக்கம் :202) >>> http://www.viduthalai.com/
------------------------------
படித்துவிட்டீர்க‌ளா?
புத்திரார்த்த நிமித்தமாக தாய், தமக்கை, மகள், பிள்ளை யாரோடாயினும் கூடலாம்??? எந்தப் பார்ப்பனராவது பார்ப்பனப் பெண்ணாவது மொட்டை அடித்துக் கொள்ளவோ, தெருவ

ஊடகங்களில் பொய்யை உருவாக்கி, பரப்பி, பார்ப்பனர்களின் தொடரும் புரட்டுகள்..

பூமி அய்ந்து கண்டங்களா ? ஏழு கண்டங்களா?பாதாள லோகம்? உலகின் அமைப்பு பற்றிப் புராணப் புளுகுகளைப் பார்ப்போம்..
---------------------------
மற்ற பதிவுகள்

Sunday, February 17, 2008

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி - 82 -2 to 91 - 1.

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 82-2 to 91 - 1.

சுட்டியை சொடுக்கி படிக்கவும்.


Saturday, February 16, 2008

வள்ளுவரிடம் - எந்த விலைமாது சதை விற்று முதலாளி ஆனாள் ?.மகளுக்குக் குபேரன் வீட்டில் சம்பந்தம் பேசினாள்?

வள்ளுவர் எதிர்பார்க்கவில்லை வினாக் குறிகளாக இரண்டு
விலை மாதர்கள் நின்றனர் அவர் முன்.

அதிர்ச்சியில் வள்ளுவர் வானில் கீறல்கள்!
திகைப்பில் வள்ளுவர் நொடிகளில் முடிச்சுகள்!
மருட்சியில் வள்ளுவர் மூச்சில் நெரிசல்கள்!

“எங்களுக்கும் ஓர் அதிகாரம் ஒதுக்கியதற்கு நன்றி அய்யா!”
வள்ளுவர் கண்கள் வந்தவர்கள் அமர்வதற்கு அனுமதியை உச்சரித்தன

“தீட்டுப் படாதல்லவா உங்கள் வீட்டுத் திண்ணை?”
இப்படி கேட்டபடி அமர்ந்தனர் இருவரும்.

‘மனைத்தக்க மாண்பு’ இல்லாத இனம் எங்களுடையது.
‘கற்பென்னும் திண்மையை’ உடைத்து நொறுக்கிய சமுதாயம்
எங்களைப் ‘பெருந்தக்க’வாக எப்படி ஏற்றுக் கொள்ளும்?

‘மாய மகளிர்’ என்று எங்களை வருணித்த வள்ளுவரே!
எங்கள் அனுபவம் உங்களுக்கும் உண்டோ?

‘மாயும் மகளிர்’ என்று திருத்தம் செய்தால் உங்கள் பாட்டு,
தளை தட்டாது என்று நினைக்கிறோம்

இப் ‘பண்பில் மகளிர்’ இப்படியொரு பாடபேதம் செய்து கொள்ளலாமா?

உடம்பைக் ‘காயம்’ என்றது உங்களைவிட எங்களுக்குத்தன் அதிகம் பொருந்தும்

காமுகர் செய்யும் காயங்களால் ஆன காயங்கள் எம்முடையவை. நாங்கள் செத்த பிறகும் எங்கள் காயங்கள் வாழும் நியாயங்கள் கேட்கும்.

அவசரப்பட்டவர்கள் விந்துகள் தெறித்துத் தெறித்து எங்கள் பாடல்கள் கறைபடிந்தன.

எங்கள் தூக்கங்களும் துகிலுரியப்படுகின்றன கனவுகள் உள்ளேயும் புகுந்து அங்குலம் அங்குலமாகக் காமப் பற்களால் கடித்துக் குதறுகின்றனர்.

கல்யாணி இராகத்தை மீட்ட முடியாத கண்ணீர் வீணைகள் நாங்கள். எங்கள் கிழக்கில் இருட்டுச் சூரியன்... எப்படி எழுதுவான் எங்கள் விடியலை?

புண்ணின் இரத்தத்தில் பூத்த பூக்கள் நாங்கள்... ஒவ்வொரு இதழிலும் மாறுவேடம் பூண்ட மரணம். எங்கள் உடம்பின் எந்த ஓர் அங்குலத்திலும்
எங்கள் ஆன்மாவுக்கு இடம் இல்லை.

காமக் கழுகுகள் கொத்தும்போது நாங்களும் எங்கள் உடம்பிலிருந்து வெளியேறி விடுகிறோம்.

நீங்கள் எங்களை ‘ஏதில் பிணம்’ என்று சொன்னது பிழையே இல்லை வள்ளுவரே! பிணம் கொத்திச் சுகம் பொறுக்கும் ஆண்களைக் காப்பாற்றத் துடிக்கும் நீங்கள்... எங்களைக் காப்பாற்ற எங்களை மீட்க ஏதும் சொன்னீர்களா?

எங்கள் ‘பால்’ அங்கங்கள் படைத்த குறள் வெண்பா ஒன்று சொல்லவா? பிழையிருந்தால் பெரியவர் நீங்கள் மன்னிக்க வேண்டும்.

‘பால் அங்கங்கள்’ - சிலேடை... புரியுமே உங்களுக்கு!
காம வெறியரின் கள்ள முயக்கமே காட்டு விலங்கணைத் தற்று”
பதவுரை மொழிப்புரை பரிமேலழகரைக் கேட்டால் சொல்வார்.

‘அய்ய! நீங்கள் சொன்னதுபோல் எல்லாம் விற்கிறோம் - எனினும் இதயத்தை விற்பதில்லை’

அதனால்தான் எங்கள் முயக்கம் ‘பொய்ம்மை முயக்கமோ’
ஆடவர் எம்மை அணைப்பது மட்டும் அன்பு முயக்கமோ?

ஆடவரைக் காப்பாற்றக் கையில் விளக்கோடு எங்கள் தெருமுனையில் தவிக்கும் உங்கள் குறட்பாக்களுக்குக் கண்பறிக்கப்பட்ட எங்கள் கதறல்கள் காதில் விழுமா?

பிணங்களை வாடகைக்கு எடுக்கக் கையில் பணத்தோடு திரியும் உம் இனம் பலியாவது பற்றிப் பதற்றம் அடையும் உம் குறட்பாக்களைக் கூப்பிட்டுக்
கேளும்...

எந்த விலைமாது சதை விற்று முதலாளி ஆனாள் என்று... எந்த விலைமாது இரவுகளை விற்றுக் கிழக்கைக் கிரையம் செய்து கொண்டாள் என்று.... எந்த விலைமாது தன் மகளுக்குக் குபேரன் வீட்டில் சம்பந்தம் பேசினாள் என்று....

எழுந்து புறப்படும் முன் இருவரும் கூறினர்...
‘நீங்கள் ஏதும் பேசாமல் நாங்களே பேசிக்கொண்டிருந்து விட்டோம்’.

தவறில்லை என்று தங்கள் மனத்திற்குப் பட்டால் உங்கள் குறட்பாக்களைக் கொஞ்சம் எங்கள் வீட்டுப் பக்கம் அனுப்பி வையுங்கள்.

நாங்கள் அவற்றோடு நிறையப் பேசவேண்டியிருக்கிறது...
விடைபெறவா நாங்கள்?

வள்ளுவரின் கண்கள் அவர்களுக்கு விடையளித்தன
விடையளிக்க முடியாமலே!
http://unmaionline.com/2005012/2005012u1.html
--------------------------
படித்துவிட்டீர்க‌ளா?
இந்து மதம் விலங்குகளை மட்டுமல்ல, நரபலி இடுவதையும் நியாயப் படுத்துகிறது. கற்பனையில் காட்டு விலங்காண்டி ஆரியர்களால் உருவாக்கப்பட்ட கடவுள்கள்.

எவ்வளவு பெரிய மோசடியை எவ்வளவு சாதாரணமாக எழுதி வைத்திருக்கிறார்கள் பார்த்தீர்களா? யாரால்? யாரை ஒழிக்க?

கல்கி பகவான் படத்தில் குங்குமம் கசிகிறதாம்.பக்தியின் பெயரால் மோசடி செய்யும் சாமியார்களைத் தோலுரிக்க....
-------------------
மற்ற பதிவுகள்

Friday, February 15, 2008

இந்துக்களிடம் பசுமாட்டுக் கொழுப்பல்லவோ? முஸ்லிம்களிடம் பன்றிக் கொழுப்பல்லவோ? பார்ப்பனர்கள் தூண்டி விட்ட கலவரம்.

பார்ப்பனர்கள் திரைமறைவில் தூண்டி விட்ட கலவரம்.

உயிருடன் பாடையில் வைத்துக் கயிறு போட்டுக் கட்டி, கொளுத்தும் வழக்கம் -பெண் குழந்தை பிறந்தால் கழுத்தைத் திருகிக் கொன்றுவிடும் பழக்கம் இருந்தது.

(18, 19, 20.3.1965 ஆகிய நாள்களில் சென்னைக் கூட்டங்களில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு )

தோழர்களே! இந்த இராஜாஜி வந்து என்னை வேண்டிக் கொண்டார். ``நாயக்கரே விட்டுவிடாதீர். பதவியை ஒத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவோ இந்த நாட்டுக்காகப் பாடுபட்டவர். காங்கிரஸ்காரர்கள் எதிர்ப்பார்கள் என்று நீங்கள் அஞ்சவேண்டாம். நான் காந்தி இடம் கூறி சரிப்படுத்தி விடுகின்றேன்.’’``நீங்கள் இஷ்டப்பட்டால் எனக்கும் ஒரு மந்திரி பதவி கொடுங்கள். நான் இருந்து உங்களுக்கு உதவி செய்கின்றேன்’’ என்று கூறினார். நம் திரு. டி.டி. கிருஷ்ணமாச்சாரியாருக்கும் இது தெரியும்.நான் மறுத்துவிட்டேன்.

பிறகு தான் வெள்ளைக்காரன் வேறு ஆள்களை வைத்து ஆட்சியை ஏற்படுத்தினான். நானும் ``என்னால் ஆன உதவியைச் செய்கின்றேன்’’ என்றேன். அதன்படி செய்தேன்.

ஆச்சாரியாருக்கு அடுத்து வந்த மந்திரிசபை இந்தி கட்டாயம் என்பதை மாற்றியது.தோழர்களே, 1955-இல் காமராசர் முதன் மந்திரியாக இருக்கும்போது ``இந்தி கட்டாயமாகப் புகுத்தப்படுமானால், தேசியக் கொடியையே எரிப்பேன்’’ என்றேன். அதற்காகத் தேதி குறிப்பிட்டு நாட்டில் மக்களைச் சந்தித்துப் பிரச்சாரம் செய்து வந்தேன்.அதுபோது, ``தமிழ்நாட்டில் இந்தி கட்டாயமாகப் புகுத்தப்படமாட்டாது’’ என்று முதலமைச்சராக இருந்த காமராஜர் தமது சர்க்கார் சார்பாகவும், இராஷ்டிரபதியாக இருந்த திரு. இராஜேந்திரபாபு சார்பாகவும், பிரதமராக இருந்த நேரு சார்பாகவும் எனக்கு உறுதிமொழி எழுதிக் கொடுத்து இருக்கின்றார்கள்.

பிறகுதான் கொடி கொளுத்துவதை ஒத்திப் போட்டேன்.அதில் இருந்து நானும் கவனித்துக் கொண்டுதான் வருகின்றேன். இந்தி எங்கே எப்போது புகுத்தப்பட்டது? சொல்ல வேண்டாமா?

காங்கிரஸ் சர்க்கார் மேற்கொண்டு உள்ள சோஷ்யலிச திட்டத்தை முறியடிக்க பார்ப்பனர்களும், பணக்காரர்களும், மில் முதலாளிகளும் கூடிச் செய்த கூட்டுச் சதி காரணமாக ஏற்பட்டது தான் இந்தக் கலவரம் ஆகும்.இவர்களுக்கு இந்தக் கண்ணீர்த் துளிகள் நாளைக்கு இந்த ஆட்சி ஒழிந்தால், நமக்குப் பதவி கிடைக்காதா என்ற கருத்தில் நல்ல வண்ணம் உதவி செய்து இருக்கின்றார்கள்.

ஒன்றும் அறியாத மாணவர்களைத் தூண்டி விட்டுக் கலவரத்தை ஆரம்பிக்க வைத்து காலித்தனம், கொலை, கொள்ளை, தீ வைப்புப் போன்ற நாச வேலையினை நல்ல அளவுக்குச் செய்யத் தூண்டி விட்டுவிட்டனர்.பார்ப்பனர்கள் தங்கள் இன நலனுக்குக் கேடாக எதாவது சீர்திருத்தங்கள் நாட்டில் நடைபெற்றபோதெல்லாம் நம்மவர்களைத் தூண்டி விட்டுக் கலவரம், குழப்பம் விளைவித்தே வந்துள்ளர்.இப்போது நடைபெற்ற காலித்தனம், குழப்பத்துக்கு ``மாணவர்களின் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி’’ என்று பெயர் கொடுத்துப் பார்ப்பனர்கள் திரைமறைவில் இருந்து தூண்டி விட்டு நடத்துகின்றார்களே, அதுபோலவே, 1857-இல் சிப்பாய்க் கலவரம் என்ற ஒன்றையும் தூண்டி விட்டார்கள்.

பொய்யாக இந்தி எதிர்ப்பு என்ற பேரில் நடைபெறும் காலித்தனத்துக்குப் பார்ப்பனர்களும், பத்திரிகைக்காரர்களும் மாணவர் போராட்டம், இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி என்று பெயர் சூட்டியுள்ளார்களே,

அதுபோலத்தான் 1857 இல் சிப்பாய்க் கலவரம் பற்றியும், அது முதல் முதல் ஏற்பட்ட சுதந்திரக் கிளர்ச்சி என்று பெயர் சூட்டியுள்ளர்.தோழர்களே, 1857-இல் நடந்த சிப்பாய்க் கலவரமானது சுதந்திர உணர்ச்சியின் பேரில் ஏற்பட்ட கலவரம் அல்ல; அன்று ஆட்சி செய்த வெள்ளைக்காரன் செய்த சில சமுதாயச் சீர்திருத்தங்கள் காரணமாகப் பார்ப்பனர்கள் தூண்டிவிட்ட கலவரமாகும்.

அன்று இந்த நாட்டில் புருஷன் இறந்தால் அவனுடன் அவன் மனைவியையும் உயிருடன் பாடையில் வைத்துக் கயிறு போட்டுக் கட்டி, கொளுத்தும் வழக்கம் இருந்தது.இந்தப் பழக்கத்தை பல்வேறு காலங்களில் பல முஸ்லிம் அரசர்கள் எதிர்த்துப் பார்த்து, தோல்வியே கண்டார்கள்.

வங்கத்தில் தோன்றிய இராஜாராம் மோகன்ராயின் அண்ணன் இறந்தபோது, அவருடைய மனைவியை உயிருடன் பிணத்துடன் சேர்த்துக் கொளுத்தப் பார்ப்பனர்கள் முற்பட்டார்கள். அது கண்டு அந்த அம்மாள் திமிறிக்கொண்டு ஓட ஆரம்பித்தார், பார்ப்பனர்கள் விடவில்லை; விரட்டிப் பிடித்துக் கொடூரமாகத் தாக்கி நெருப்பில் தூக்கிப் போட்டுக் கொளுத்தினர்.

இந்த நிகழ்ச்சி சிறந்த கல்விமானான இராஜாராம் மோகன்ராய் மனதை வாட்டியது. அவர் இந்தக் கொடிய உடன்கட்டை ஏறும் வழக்கத்தை முறியடிக்க முயற்சி செய்தார்.வெள்ளைக்கார அரசாங்கத்தை அணுகி, ``என்ன நாகரிகம் வாய்ந்தவர்கள் நாங்கள் என்று பறைசாற்றிக் கொள்ளுகின்றீர்கள்.

உங்கள் ஆட்சியில் தானே ``சதி’’ என்ற இந்தக் கொடுமை நடக்கின்றது? இதனைத் தடை செய்ய வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார். அரசாங்கமும் ஏற்றுக்கொண்டு `சதி’ என்று உடன்கட்டை ஏறும் பழக்கத்தையும் சட்ட விரோதமாக்கியது.

வைதீகப் பார்ப்பனர்களும், மதவாதிகளும் எதிர்த்துப் பார்த்துத் தோல்வியே அடைந்தனர். இதுதான் இந்திய வரலாற்றி-லேயே ஏற்பட்ட முதல் சீர்திருத்தமாகும்.

அடுத்து இந்த நாட்டில் பெண் குழந்தை பிறந்தால் கழுத்தைத் திருகிக் கொன்றுவிடும் பழக்கம் அன்று இருந்து வந்திருக்கின்றது. அதனையும் ஆங்கில அரசாங்கம் சட்ட விரோதமாக்கித் தடுத்து விட்டது.அந்தக் காலத்தில் விவசாயத் தோட்டங்களுக்கு நரபலி கொடுத்து திருஷ்டி கழிக்கும் வழக்கம் ஆங்காங்கு நடந்து இருக்கின்றது.

அதனையும் வெள்ளைக்கார ஆட்சி ஒழித்தது.அடுத்து அது செய்த `பாவம்’ பெண்களுக்குப் பள்ளி ஏற்படுத்தியதும், ஆஸ்பத்திரி ஏற்படுத்தியதும் ஆகும்.

இதனால் பார்ப்பனர்கள் கொதிப்படைந்து, தந்திரமாகப் பட்டாளத்துக்காரன்களைத் தூண்டி விட்டுக் குழப்பம் பண்ணச் செய்தார்கள்.

முஸ்லிம் தோழர்களிடம் சென்று, ``நீங்கள் உபயோகப்படுத்தும் துப்பாக்கியில் பன்றிக் கொழுப்பு தடவி இருக்கின்றார்-கள். உங்கள் மதத்துக்குப் பன்றி கூடாது. உங்கள் மத உணர்ச்சியைக் குலைக்கவே பன்றிக் கொழுப்புத் தடவி இருக்கின்றார்கள்’’ என்று தூண்டிவிட்டார்கள்.

இந்துக்களாக இருக்கின்ற சோல்ஜர்களிடம் சென்று, நீங்கள் உபயோகிக்கும் துப்பாக்கியிலும், தோட்டாவிலும் பசுமாட்டுக் கொழுப்பல்லவோ தடவி இருக்கின்றார்கள்.

இந்துக்கள் கடல் தாண்டுவது என்பது சாஸ்திர விரோதமானதாகும்.

உங்களை எல்லாம் கப்பலில் ஏற்றிக் கொண்டு போய் வெளி இடங்களுக்குச் சென்று சண்டை போடச் சொல்லுகின்றார்கள்’’ என்று தூண்டி விட்டார்கள்.அன்று பட்டாளத்தில் பார்ப்பனர்களும் அதிகமாக இருந்தபடியால் கலகம் பண்ணினார்கள்.

அரசாங்கத்துக்குக் கீழ்ப்படிய மறுத்ததோடு வெள்ளைக்காரர்கள் மீது துப்பாக்கியை நீட்டவும் ஆரம்பித்தார்கள். ஏராளமான வெள்ளைக்காரர்களும், பெண்களும் குழந்தைகளும் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள். வெள்ளைக்காரர்கள் பயந்து அங்குமிங்குமாக ஓடினார்கள். ஓர் இடத்தில் என்ன பண்ணினார்கள் தெரியுமா?

ஒரு படகைக் கொண்டு வந்து நிறுத்தி ``இதில் ஏறிக்கொள்ளுங்கள்; உங்களைப் பாதுகாப்பான இடத்தில் கொண்டு விடுகின்றோம்’’ என்று ஏற்றிச் சென்று, நடுக்கடலில் கொண்டு போய்ப் படகைக் கவிழ்த்துவிட்டு அத்தனை பேர்களையும் கொன்று விட்டார்கள்.


வெள்ளைக்காரனால் கட்டுப்படுத்த முடியாமல் போகவே பார்ப்பனர்களைக் கூப்பிட்டு ஏன் இப்படிக் கலகம் பண்ணுகின்றீர்கள் என்று ராசி பேசினான்.பார்ப்பனர்கள் ``நீங்கள் எங்கள் மதத்திலே, பழக்க வழக்கங்களிலே தலையிடக் கூடாது’’ என்று உறுதி கேட்டார்கள். அதன்படி எழுதிக் கொடுக்கப்பட்டது. அதுதான் விக்டோரியா மகாராணியின் மகாசாசனம் ஆகும்.

பிறகு எக்கேடு கெட்டாவது போங்கள் என்றும், ஆட்சி சரியாக நடைபெற்றால் போதும் என்றும் எண்ணிக் கொண்டு நமது சமுதாய முன்னேற்றத்தில், மாறுதலில் நாட்டம் செலுத்தவில்லை.தோழர்களே, பார்ப்பனர்கள் இப்படியாக நமது சமுதாயத்தில் சில மாறுதல்களை மேற்கொண்டதற்காக எப்படி பட்டாளத்துக்காரர்களைத் தூண்டி விட்டுக் கலவரம் செய்யச் சொன்னார்களோ

அதுபோலத்தான் இன்றைய ஆட்சியின் சமதருமத் திட்டத்தினால் ஏற்படும் மாறுதல்களை ஒழிக்க மாணவர்களையும், காலிகளையும், கூலிகளையும் தூண்டிவிட்டுக் காலித்தனம் பண்ணச் சொல்லுகின்றார்கள்.இன்றைய ஆட்சியானது மேற்கொண்டு உள்ள சமதருமத் திட்டத்தினால் சாதி ஏற்றத் தாழ்வு ஒழிந்து எல்லோரும் சமுதாயத்தில் ஒரே மாதிரியாக ஆகிவிடுவார்களே, பொருளாதார ஏற்றத்தாழ்வு ஒழிந்து எல்லோரும் பொருளாதாரத் துறையிலும் சமமாகி விடுவார்களே, என்ற ஆயாசப்படுகின்றார்கள்.

இதுவரை கல்வித் துறையிலே, உத்தியோகத் துறையிலே மற்ற மற்றத் தங்களுக்கு இருந்து வந்த ஆதிக்கமானது காங்கிரசில் எல்லோருக்கும் கல்வி, எல்லோருக்கும் எல்லா உத்தியோகங்களிலும் பெற வாய்ப்பு அளிக்கப்பட்டதன் காரணமாக மணல் வீடு சரிவதுபோல் அல்லவா சரிகின்றது? என்று வயிற்றெரிச்சல் அடைகின்றனர்.

எனவே, இந்த ஆட்சியினை என்ன பண்ணியாவது, எந்த வழியினைக் கையாண்டாவது, யாருடன் கூட்டுச் சேர்ந்தாவது ஒழித்துக் கட்டுவது என்று முன்வந்து காரியம் ஆற்றுகின்றார்கள்.இந்த நிலையில், பொது மக்களாகிய உங்கள் கடமை என்ன?

100க்கு 97 பேர்களாக உள்ள உங்கள் நலனில் அக்கறை கொண்டு ஆட்சி நடத்தும் இந்த ஆட்சியைப் பாதுகாப்பதா? அல்லது ஆச்சாரியாருடனும், கண்ணீர்த் துளிகளுடனும்,பணக்காரர்களுடனும் சேர்ந்து கொண்டு இந்த ஆட்சியை ஒழிப்பதா? நன்கு சிந்தியுங்கள் >>.http://viduthalai.com/20070403/news07.htm
---------------------------
படித்துவிட்டீர்க‌ளா?
இந்து மதத்தில் கடவுள்களைத் தவிர விலங்குகள், பூச்சிகள், செடிகள், மரங்கள் என கண்டதையும் வணங்கும் கொடுமை!!! ஆர்.எஸ்.எஸ். நாளேடு மோசடி?

ஞானிகளுக்கு மண்டை ஓடு வெடித்தும், பாபிகளுக்கு ஆசனவாய் வழியேயும் உயிர் போகும்!!! விபத்தில் தலை காயமடைந்து இறந்தவர்கள் தான் ஞானிகளோ? இறப்பு என்பது என்ன

எலுமிச்சையில் அம்மன் தோன்றி கண்ணீர் வடிக்க, கெட்டிக்கார ஆர்.எஸ்.எஸ் க்கு போட்டியாக ஆரோக்கியமாதா சிலை திரும்ப !!! எம்.ஜி.ஆர் காளை மாட்டுக் கண்ணில்!!!
-----------------------
மற்ற பதிவுகள்

Thursday, February 14, 2008

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி - 71 to 82-1.

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி - 71 to 82-1.

சுட்டியை சொடுக்கி படிக்கவும்.


--> இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி - 72. பிராமணர்கள் தமிழகத்திலே வாழக்கூடாதாம்.? பிராமணர்கள் சமஸ்கிருதம் தவிர வேறு பாஷை எதுவுமே பேசினால் பாவம் . பிராமணர்கள் வாழ வேண்டிய பகுதி ஆப்கானிஸ்தானாக இருக்கிறது. தமிழா, வேதம் உன் தாய்மொழியை கெட்டது, உன் தாயை கெட்டவள் என்கிறது. வேதம் சொன்ன எல்லாவற்றையும் செய்வாயா?

--> இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி – 73. தமிழா! ஜடமாகி போனாயா? `ஜாதி'களை உத்தரவாக்கி, பல கூடாதுகளை பின்பற்றுகிறவன், கடவுள் பெயரைச் சொல்லி உடல் ரீதியாக தன்னைத்தானே வருத்திக் கொள்பவ‌ன் மனிதனே அல்ல ஒன்றுக்கும் உதவாத ஜடம்தான். புனித நீராடல், தீர்த்தவாரி என்றும் பெயர் கொடுத்து தண்ணீருக்கே மதச் சாயம் பூசி விட்டார்கள்


--> இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 76 to 82-1. திருப்பதியில் உள்ளது காளி சிலையா? திருப்பதியில் நடப்பதென்ன? ஆண் ஆகிய‌ திருப்பதி பெருமாளுக்கு தலையை சீவி சிங்காரித்து அழகான பின்னல் ஏன்? பிராமணர்களால் காளியை சிவனாக்கி பின் திருப்பதி பெருமாளாக எவ்வெவ்வாறு மாற்றப்பட்டது? திருப்பதியில் உங்களை மொட்டை போடச்செய்து பிராமணர்களால் "மொட்டை" அடிக்கப்படுபவர்களே!. சிந்தியுங்கள்.

கொலைகாரனிடமிருக்க வேண்டிய ஆயுதங்கள் கடவுளுக்கு எதற்கு?

இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளுக்குள் தோன்றியதுதான் இந்தக் கடவுள் சங்கதி.

அதுவும் இந்தக் கடவுளை நமது ஆள் உண்டாக்கவில்லை. வெள்ளைக்காரன்தான் இந்தக் கடவுளையே உண்டாக்கியவன். அதைப் பார்ப்பான் ஒன்றுக்குப் பத்தாகப் பெருக்கி விட்டான்.

ஒரு கடவுள் பெயர் கூடத் தமிழ்ப் பெயரே கிடையாது. இங்கு இருக்கிற கடவுள்களின் பெயர்கள் எல்லாம் வடமொழிச் சொற்கள்தான்.

கடவுள் என்ற சொல்லே தமிழில் கிடையாது. தமிழனுக்குக் கடவுளே இல்லை. இன்றைக்கும் தமிழ்ச் சொல்லில் உள்ள ஒரு கடவுளும் கிடையாது.
வெள்ளைக்காரனும் காட்டுமிராண்டியாக இருந்த காலத்தில்தான் கடவுளைக் கற்பித்தான். அந்தக் கடவுளுக்கு நிறம் மஞ்சள் வர்ணம் என்றும் சொன்னான். அந்தக் கடவுளைக் காட்டு மனிதன் சிங்காரித்தான்.

அதற்கு உடை என்னடா என்றால் புலித்தோல் என்றான். தலை எல்லாம் சடை. காது எல்லாம் பெரிய ஓட்டை. நகைகள் எல்லாம் பாம்புகள்.

குடி இருக்கிற இடமோ சுடுகாடு. கையில் இருக்கிற கருவிகளோ மண்டை ஓடுகள். இவை எல்லாம் மனிதனுக்கு இருக்கக் கூடிய யோக்கியதையா?

இவை எல்லாம் காட்டுமிராண்டித்தனமான சின்னங்கள் அல்லவா?


வெள்ளைக்காரனைப் பார்த்துதான் பார்ப்பான் இங்குக் கடவுளை உண்டு பண்ணினான்.
வெள்ளைக்காரன் கடவுள் ஜுபிடர்; பார்ப்பான் அதற்கு கொடுத்த பெயர் இந்திரன்.
வெள்ளைக்காரன் - மைனாஸ்; பார்ப்பான் வைத்த பெயர் எமன். வெள்ளைக்காரன் - நெப்டியூன்; பார்ப்பான் - வருணன்.
வெள்ளைக்காரன் - லூனஸ்; பார்ப்பான் - சந்திரன்.
வெள்ளைக்காரன் - சைனேஸ்; பார்ப்பான் - வாயு.
வெள்ளைக்காரன் - அப்பல்லோ; பார்ப்பான் - கிருஷ்ணன்.
வெள்ளைக்காரன் - மெர்குரி; பார்ப்பான் - நாரதன்.
வெள்ளைக் காரன் - மார்ஸ்; பார்ப்பான் - கந்தன்.
இப்படியாக வெள்ளைக்காரனைப் பார்த்து காப்பி அடித்தவன்தான் இந்தப் பார்ப்பான்.

அப்படிக் காப்பி அடித்த கடவுள்களுக்கும் கதைகள் எழுதி, புராணங்கள் எழுதி, பார்ப்பான் வயிறு வளர்க்க ஆரம்பித்து விட்டான்.

அதை அப்படியே தமிழன் நம்பி ஏற்றுக் கொண்டு விட்டான்.அப்படி ஏற்றுக் கொண்ட கடவுள்களில் ஒன்றுதான் இந்த விநாயகன். விநாயகன் என்ற சொல்லே தமிழ் கிடையாது.

கடவுளுக்கு நாட்டில் என்ன பொதுவாக இலக்கணம் சொல்கிறார்கள். கண்ணுக்குத் தெரியாது - கைக்குச் சிக்காது புத்திக்கும் எட்டாது என்கிறான். அப்படியானால் எப்படிக் கடவுளை நம்புவது என்று கேட்டால், நம்பு என்கிறான்

கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்கு எப்படி உருவத்தை உண்டாக்கினான்?

கருணையே வடிவானவர் என்கிறான். அவன் கையில் ஏன் சூலாயுதம்? வேலாயுதம்? அரிவாள், மண்வெட்டி, கோடாரிகள் எல்லாம்?

இவை எல்லாம் கருணையின் சின்னங்களா?

கொலைகாரப் பசங்களுக்கு இருக்க வேண்டிய கருவிகள் எல்லாம் கடவுளுக்கு எதற்கு?

கடவுளுக்கு ஒழுக்கத்தையாவது நல்ல முறையில் கற்பித்து இருக்கிறானா?

எந்தக் கடவுள் இன்னொருத்தனுடைய மனைவியை கெடுக்காமல் இருந்திருக்கிறான்?

விபச்சாரம் செய்யாத கடவுள் ஒன்றாவது உண்டா?
இருந்தால் சொல்லட்டுமே, ஏற்றுக் கொள்கிறேன்.

கடவுள் பிறப்பைப் பற்றி தான் எழுதி வைத்து இருக்கிறானே கொஞ்சமாவது யோக்கியம் வேண்டாமா?

விநாயகன் பிறப்பு எவ்வளவு ஆபாசமானது!


இன்றைக்கு நாம் சூத்திரர்களாக இருக்கிறோம் என்றால், அது பார்ப்பானால் மட்டுமல்ல - நாமே அதை ஒத்துக் கொண்டு இருக்கிறோம்.

பார்ப்பான் நம்மைச் சூத்திரன் என்று சொல்லப் பயந்து விட்டான். ஆனால், நாமே நாம் இந்து என்று ஒப்புக் கொண்டு, கோயில்களுக்குச் செல்வதன் மூலமாகவும், நெற்றியில் சாம்பலைப் பூசிக் கொள்வதன் மூலமாகவும் சூத்திரன் என்பதை ஏற்றுக் கொண்டு இருக்கிறோம்.

இன்றைக்கு இருக்கிற அரசாங்கம் நமது அரசாங்கம் என்று பேர். என்னத்துக்காக இந்தப் பண்டிகைகளுக்கு எல்லாம் லீவு விட வேண்டும்?

நம்மை இழி மகன் என்று முத்திரைக் குத்திக் கொள்ளவா? துணிச்சலாக இந்த லீவுகளை எல்லாம் கேன்சல் செய்ய வேண்டும்.

இந்த அரசாங்கங்கூட, இந்த இடிந்து போன கோயில்களை எல்லாம் பழுது பார்த்துப் புதுப்பித்துக் கொண்டு இருக்கிறது. என்ன அர்த்தம்?

நம்மை என்றென்றும் இழிமக்களாக்கச் செய்யும் முயற்சிதானே இது? வெட்கப்பட வேண்டாமா?


எங்களுடைய இயக்கம் இந்த நாட்டில் தோன்றிப் பாடுபடவில்லை என்றால், இந்தக் கடவுளைச் செருப்பாலடித்து, சாத்திரங்களைக் கொளுத்தி எரிக்கவில்லை என்றால், நமக்குப் படிப்பு ஏது? உத்தியோகம் ஏது?

இன்றைக்கு நூற்றுக்கு நூறு தமிழனாக இந்த நாட்டை ஆட்சி செய்கிறார்களே! இது எப்படி வந்தது? நம்முடைய முயற்சியால் அல்லவா?

(29.8.73 அன்று சிதம்பரத்தில் விநாயக சதுர்த்தி கண்டனப் பொதுக் கூட்டத்தில் ஆற்றிய உரை) நன்றி:>> http://kilumathur.blogspot.com/2007/01/blog-post.html
-----------------------------------------
படித்துவிட்டீர்க‌ளா?
ராமன் தேடிய சீதை.தினமும் ராமன் குடித்துவிட்டு வந்து சீதையை அடித்து உதைத்து மிகக் கொடிய வார்த்தைகளால்.....

18 லட்சம் மக்களுக்கு 24 லட்சம் கோயில்!!. தினமும் ஒன்று கட்டி ஒவ்வொருத்தரும் ஒரு கோயிலை வைத்துக் கொள்வோம் என்பது நியாயமா?’’-’’மலேசிய அமைச்சர் சாமிவேலு

பன்றியின் ஆண் பெண் குறி அவ்வளவு புனிதம் உருவமே யாகம். -புராணம். இந்து முண்ணனி..சங்பவார சக்திகள் அதை முஸ்லிம்களுக்கெதிராக பயன்ப‌டுத்தும் விதம் காணீர்.
-----------
மற்ற பதிவுகள்

Wednesday, February 13, 2008

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 62 - 70

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 62 - 70

சுட்டியை சொடுக்கி படிக்கவும்.