Followers

Tuesday, January 29, 2008

ஏசு கடவுள் அல்ல - பைபிள் புரட்டுகள். கிறித்தவ மதத்தில் A to Z வரை பிரிவுகள்:

ஏசு கடவுள் அல்ல - பைபிள் புரட்டுகள். கிறித்தவ மதத்தில் A to Z வரை பிரிவுகள் : சு. அறிவுக்கரசு.

இந்த நாட்டில் (நியூசிலாந்து நாட்டில் ) 48 எரிமலைகள் உயிர்ப்புடன் உள்ளன. 100 கி.மீ. அடியில் வெப்பச் சூழல் உள்ளதால் அடிக்கடி எரிமலைக் குழம்புகள் வெளிப் போந்தன. 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த எரிமலை வெடிப்பினால், அதன் குழம்பினால் நாட்டின் பகுதிகள் உருப்பெற்றன என்கிறார்கள். கடந்த 20 ஆயிரம் ஆண்டுகளில் நான்கு பெரிய எரிமலை வெடிப்புகள் ஏற்பட்டுள்ளனவாம்.

மிகச் சமீபத்தில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு 600 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட தீக்குழம்பு மணிக்கு 300 கி.மீ. வேகத்தில் வழிந்து பாய்ந்து பரவியது. வெடித்த இடம் சுமார் ஒரு கி.மீ. பள்ளமாக உள்ளது.

இந்த நாட்டு மண்ணின் தன்மையைக் கன்னித்தன்மையைக் காப்பாற்றி வருகிறார்கள். அவற்றின் இயற்கைத் தன்மையைக் கெடுக்கும் எந்தக் காரியத்தையும் செய்யாமல் பாதுகாத்து வருகிறார்கள். ஆயிரக்கணக்கான ஓடைகளும் ஆறுகளும் குறுக்கும் நெடுக்குமாக நாடு முழுவதும் கடல் போலக் காட்சியளிக்கும் ஏரிகள் பல. நாடெங்கும் காடுகள், மரங்கள், சோலைகள், பூத்துக் குலுங்கும் மலர்கள். அச்சமின்றி வாழும் விலங்குகள், பறவைகள். அழகே அழகாக உள்ளது.

மீன் பிடிப்பதிலும்....கடலின் உள்ளே நீந்தும் மீன்களைப் பிடிப்பதிலும் கட்டுப்பாடு. மீன் பிடிப்பதற்கு என்றே ஜாதி கிடையாது, இந்தியாவைப் போல் யார் வேண்டுமானாலும் பிடிக்கலாம். பிடிக்கிறார்கள். ஆனால், உரிமம் பெற்றுப் பிடிக்கவேண்டும். பொழுது போக்கிற்காகக் கூட உரிமம் பெற்றுத்தான் மீன் பிடிக்க வேண்டும். பொழுது போக்குக்காகப் பிடிப்பவர்கள் அதை விற்ககூடாது. சொந்தத்திற்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

45 நாள்கள் மீன்பிடிப்பதற்குத் தடை விதிக்கிறது இந்தியா. மீன் வளரும் காலத்தில் அதைப்பிடித்து இனப் பெருக்கத்தைக் குறைத்து விடக்கூடாது என்பதற்காக. அங்கோ எந்தக் காலத்திலும் பிடிக்கலாம். ஆனால், ஒரு அடிக்குமேல் பெரியதாக உள்ள மீனை மட்டுமே பிடிக்கவேண்டும். 12 அங்குலத்திற்குக் குறைவானவற்றைப் பிடிக்கக் கூடாது.

இப்படிப்பட்ட கட்டுப்பாடுகளையெல்லாம் விதித்துக் கடைப்பிடித்து வரும் நாட்டில் கடவுள் வணக்கத்திற்கு மட்டும் கட்டுப்பாடே கிடையாது.

A முதல் Z வரை அத்தனை எழுத்தைக் கொண்டும் கிறித்தவ மதத்தில் பிரிவுகள் உண்டு. அத்தனையும் இங்கே உண்டு. எத்தனைப் பேர் பின்பற்றுகிறார்கள் என்ற விவஸ்தையே இல்லாமல் அவனவன் ஒரு மூடக் குழுமத்தை வைத்திருக்கிறான்.

எத்தனை மதங்கள் ?அடிடாம் (Adidam) என ஒரு கிறித்தவர் பிரிவு உள்ளது. அமெரிக்காவில் பிராங்க்ளின் ஜோன்ஸ் என்பவர் 1939இல் தொடங்கிய மதப் பிரிவு. இந்து மத மூடக்கொள்கையான “கர்மா”, “மறுபிறப்பு” என்பவற்றைப் போதித்தாராம். இதைப் பின்பற்றுபவர்கள் மொத்தம் 1700 பேர்கள் உள்ளனராம். இவர்களில் இந்த நாட்டில் 45 பேர்கள் உள்ளனர். ஆக்லாந்து, வெலிங்டன், கிறிஸ்ட்சர்ச் ஆகிய மூன்று நகரங்களில் இவர்களின் ஆசிரமம் உண்டு.

கிறித்தவ மிசினரிகளின் கூட்டமைப்பு என்ற பிரிவில் 249 பேர்கள் உள்ளனர். கிறித்தவ கான்வென்ட் சர்ச் என்ற பிரிவில் 700 பேர் உள்ளனர். பெரும்பான்மைக் கிறித்தவ மதத்திலிருந்து சற்றே வேறுபட்டு தனிக்கடை நடத்துகின்றனர்.

ஒரு வகை பெந்தகோஸ்தல் பிரிவில் 135 பேர்கள் உள்ளனர். ஏவாளின் தூண்டுதலால் விலக்கப்பட்ட கனியை ஆதாம் சாப்பிட்டதால் பாவம் செய்து வீழ்ந்து விட்டான் (நல்லது, கெட்டது எவை என உணரும் தன்மையைக் கூறுகிறார்கள்) என்று சொல்கிறதல்லவா கிறித்தவம்?

அந்தக் காலத்துக்கு முந்தைய நிலைக்கு மக்களை அழைத்துச் செல்வதற்காக ஒரு பிரிவு ஏற்பட்டது. 1924இல் நெதர்லாந்து நாட்டில் தோன்றிய இந்தப் பிரிவு 40 நாடுகளில் இருக்கிறதாம். நியூசிலாந்து நாட்டிலும் இப்பிரிவினர் இருக்கின்றனர். அவர்களின் தொகை - அசந்து விடாதீர்கள் வெறும் 20 பேர் மட்டுமே! இவர்களுக்கு கிறித்துமஸ், ஈஸ்டர் எனும் இரண்டு பண்டிகைகள் மட்டுமே உண்டு! இவர்களின் அமைப்பின் பெயர்
LACTORIUM ROSICRUCIANUM.

நம் பக்கத்து மதம் :சுதந்திர கத்தோலிக்க சர்ச் என்று பெயர் வைத்துக் கொண்டு மரக்கறி மட்டுமே சாப்பிட வேண்டும், பெண்களுக்குச் சமஉரிமை கிடையாது என்பதைப் போதித்துக் கொண்டிருக்கும் பிரிவு கூட உண்டு. இதில் 135பேர் இருக்கின்றனர்.

கீழை நாடுகளான சீனம், ஜப்பான் ஆகிய நாடுகளின் மதங்களும் இங்கு உண்டு. சீனத்தில் காணாமல் போய்விட்ட கன்பூசியஸ் மதம் இங்கு உண்டு. மொத்தம் 51 பேர்கள். இதை இன்றும் பின்பற்றிக்கொண்டிருக்கின்றனர்.

அதேபோல, டாவோயிசம் 1107 பேர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்திய இறக்குமதி மூடப்பிரிவான ஆனந்தமார்க்கம் 1974இல் இருந்து இங்கே இருக்கிறது. ஆக்லாண்டு, டுனேடின் ஆகிய இரண்டு ஊர்களில் 300 பேர்கள் பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள். 57 ஜைனர்கள் உள்ளனர். 39 ஆயிரம் இந்துக்கள் இருக்கின்றனர். இவர்களில் 140 பிரிவுகள் உள்ளன என்றும் கணக்கிட்டுள்ளார்கள்.

கடவுள் காட்சி தந்த மதங்கள் :
மதமல்ல - வாழ்க்கை முறை என்று கூறிக்-கொள்ளும் ஷின்டோ (மதம்) ஜப்பான் நாட்டிலிருந்து இங்கு வந்து தங்கியுள்ளது. மொத்தம் 135 பேர்கள் இதைப்பின்பற்றுகின்றனர். “உண்மை விளக்கின் ஒளி” எனும் சுக்யோ மகிகாரி (SUKYO MAHIKARI) (1959-இல் ஜப்பானில் தோன்றியது. கொடாமா ஓகாடா என்பவருக்கு வானத்திலிருந்து அறிவுரைகள் வழங்கப்பட்டனவாம். அதன் அடிப்படையில் 111பேர் நியூசிலாந்தில் உள்ளனர். இதன் சிறப்பு என்னவென்றால் எந்த மதத்தினரும் இதில் அங்கம் வகிக்கலாம். ஆனாலும் 111 பேர் மட்டுமே உள்ளனர். அவனவனைக் கடைத்தேற்றி சொர்க்கம் அனுப்பி வைக்க ஒரு மதம் தேவைப் படுகிறதல்லவா ?

தென்கொரியாவில் சன்மியுங் மூன் என்பருக்கு வரிசையாக இயேசு, புத்தர் போன்ற மதத்தலைவர்கள் காட்சியளித்துக் கொண்டே இருந்தனர். இது நடந்தது 1954-இல் ஆதாமும், ஏவாளும் வீழ்ச்சியடைந்த காட்சி இவர் கண்களுக்குத் தென்பட்டதாம். இயேசு மீண்டும் வருவார் என்பதும் காட்சியாகத் தெரிந்ததாம். இப்படியெல்லாம் கூறி ஒரு மதப்பிரிவைத் தொடங்கிவிட்டார். அதைச் சேர்ந்தவர்கள் மூனிஸ் (Moonies ) என்ற பெயராலேயே அழைக்கப் படுகின்றனர். அவரும் அவரின் மனைவியும் “உண்மைப் பெற்றோர்”, அவருடைய குழந்தைகள் கடவுளின் குழந்தைகளாம்! எத்தனைக் குழந்தைகளைப் பெற்றவர்கள் என்ற கணக்கு நமக்குக் கூறப்படவில்லை. பைபிளைக் கடைப் பிடிக்கும் இவர்களைப் பின்பற்றும் பைத்தியக்காரர்கள் 153 பேர் மட்டுமே! இவர்களின் ஆலயத்துக்குப் பெயர் ஒன்றிணைக்கும் ஆலயம் என்பதாம்!

ஏசு கடவுள் அல்ல
ஏசுவைத் தேவகுமாரன் என்றவர்கள் இப்போது ஏசுவையே தேவனாக ஆக்கிவிட்டார்கள். இது தவறு. ஏசு கடவுள் அல்ல. ஏசு, பரிசுத்த ஆவி தந்தை என்ற மூன்று (Trinity) கிடையாது. தந்தை என்பவர் கடவுளல்ல, அவருக்குச் சமமுமல்ல என்று ஒரு பிரிவு. சர்ச் (ஆலயம்) எனக் கூறக்கூடாது என்கிறது இது. அதாவத தேவனின் இல்லமல்ல அது வெறும் கட்டடம்தான் எனக் கூறுகிறது. கிறிஸ்டா-டெல்பியன்கள் என இப்பிரிவுக்குப் பெயர்.
1840-இல் ஜான் தாமஸ் என்பவர் தொடங்கியது. இதைப் பின்பற்றுவோர் இந்த நாட்டில் 1686 பேர் உள்ளனர்.

ஜெஹோவின் சாட்சிகள் என்ற பிரிவில் 18 ஆயிரம் பேர் உள்ளனர். இப்பிரிவு 1800இல் தொடங்கப்பட்டது. 230 நாடுகளில் உள்ளது. தலைமையிடம் நியூயார்க் நகரம். இதில் ஆண்கள் மட்டுமே பாதிரிகளாக முடியும். கிறித்தவ மதத்தின் எந்தப் பண்டிகையையும் இவர்கள் கொண்டாடுவதில்லை. இயேசு இறந்ததை மட்டுமே கொண்டாடுகிறார்கள். அது கூட சிலுவையில் அறையப்பட்டுச் சாகடிக்கப்பட்டார் என்பதை ஏற்பதில்லை. மாறாக அவர் கழுவேற்றிக் கொல்லப்பட்டார் (மரக்கழு) என்கிறார்கள். நரகம் கிடையாது என்கிறார்கள். இந்தக் கொள்கையை ஏற்கவில்லையென்றால் கதி மோட்சமே கிடையாது. நித்திய வாழ்வை இழப்பீர்கள் என்றெல்லாம் மிரட்டுகிறார்கள்.

ஏசுவுடன் ஒரு லட்சத்து 44 ஆயிரம் பேர்கள் “ராஜ்ய பரிபாலனம்” கெய்வார்கள் என்கிறார்கள். ஏசுவைக் கடவுளல்ல என்கிறார்கள். முழுநேர ஊழியர்களை முன்னோடிகள் (Pioneer) என்றும் பகுதிநேர ஊழியர்களை வெளியீட்டாளர் (Publishers) என்றும் கூறுகிறார்கள்.

எல்லாவற்றிற்கும் மறுப்பு மதம்
பைபிளை மனிதர்கள் உணர்ச்சியின் தூண்டுதலால் எழுதினார்கள். கடவுளின் சொற்கள் அல்ல எனக் கூறும் மதப் பிரிவும் உண்டு. ஞாயிற்றுக்கிழமை புனித நாள் அல்ல. எல்லா நாட்களைப் போல அதுவும் ஒரு நாள். பிரார்த்தனை தேவையில்லை. ஜெப வார்த்தைகள் கூற வேண்டியதில்லை. பாட்டுப் பாடி ஸ்தோத்திரம் கூற வேண்டியது இல்லை. வழிபாடு தேவையற்றது. பாதிரி கூடாது. கடவுளின் வார்த்தைகளுக்காகவே காத்திருந்து கேட்க வேண்டும்; அனுபவத்தைப் பெற வேண்டும் என்றார் ஜார்ஜ் பாக்ஸ் (1624-1691) என்பவர். இவரது கொள்கைப் பிரிவுக்கு மத நண்பர்களின் சங்கம் (Religious Society of Friends) என்று பெயர். நண்பர் கழகம் (Quakers) என்றும் கூறுவர். இவர்களும் 1074 பேர் இந்த நாட்டில் உள்ளனர்.

கர்த்தர் ஓய்வு எடுத்தநாள் ஞாயிறு அல்ல; சனிக்கிழமை தான். கிறித்து மீண்டும் வருவார். சரியானவர்கள் அவருடன் ஆயிரம் ஆண்டுகள் சேர்ந்து வசிக்கலாம். கிறித்துவும் தகுதியானவர்களும் பூமிக்கு இறங்கி வருவார்கள். சாத்தான் முழுமையாக அழிக்கப்படும் என்று இந்தக் கொள்கைகளைக் கூறினார் ஒருவர். அவர் எல்லன் ஒயிட். அமெரிக்காவில் தொடங்கிய இப்பிரிவு நியுசிலாந்தில் சுமார் 12 ஆயிரத்து 600 பேர்களைக் கொண்ட பிரிவாக வளர்ந்துள்ளது.

இவர்கள் செவன்த்டே அட்வென்டிஸ்ட் (Seventh Day Adventist) எனப்படுவோர். கர்த்தர் ஒரு நாள் ஓய்வெடுக்கவில்லை, ஏழு நாளும் வேலை செய்தார்; இரண்டாம் முறையாக இயேசு வருவார் எனும் இரண்டையும் நம்புபவர்கள் இவர்கள்.

பைபிள் புரட்டு :இத்தனை சமாச்சாரங்களுக்கும் அடிப்படை பைபிள், அதில் கூறப்பட்ட கதைகள். அது கடவுளால் எழுதப்பட்டதல்ல; ஏசுவால் எழுதப்பட்டதல்ல. நான்கு நபர்களால் எழுதப்பட்டவை. ஒரே காலகட்டத்தில் கூட அல்ல. பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டவை.

மார்க் எழுதியது கி.பி. 64-ல் மாத்தியூ எழுதியது கி.பி. 110இல் லூக் எழுதியது கி.பி. 180இல் ஜான் கடைசியாக எழுதியது கி.பி.200இல் முதல் மூவரும் சுருக்கமாக எழுதிவிட்டனர். ஏசுவின் சில சம்பவங்களை மட்டுமே எழுதினர் என்று முழுவதுமாக எழுதுகிறேன் என்று கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு ஜான் (யோவான்) எழுதிய சுவிசேஷம் தான் விரிவானது. இந்த பைபிள்கள் எல்லாமே அராமிக் மொழியில் எழுதப்பட்டன. இந்த மொழி தெரிந்தவர்கள் இன்றைக்கு நூறு பேருக்குக் குறைவானவர்கள்.

இந்த மொழியில் ஏசு பேசும் காட்சிகள் கொண்டது “டாவின்சி கோட்” சினிமா.அராமிக் மொழியில் இருந்த பைபிள்களை (நான்கையும்) இலத்தீன் மொழியில் பெயர்த்து எழுதியவர் ஜெரோம் என்பவர். ரோமானிய அரசு இதை கி.பி. 392 இல் பரப்பியது.

இந்த பைபிளை வைத்துக் கொண்டு பல பிரிவுகள் கிறித்தவத்தில் அவை அத்தனையும் உண்டு நியூசிலாந்து நாட்டில்!

கடவுளை நம்பாத, மதச்சார்பற்ற, பகுத்தறிவாளர்கள் 30 விழுக் காட்டினர் இந்த நாட்டில் உண்டு!

பல மதப் பிரிவுகளையும் தனித்தனியே கணக்கிட்டுப் பார்த்தால் மதச்சார்பற்ற நாம்தான் நியூசிலாந்து நாட்டில் பெரும்பான்மை!.
> சு. அறிவுக்கரசு. > http://unmaionline.com/20070701/12.htm
----------------------
படித்துவிட்டீர்க‌ளா?
ஆணுடைய உயிர்த்துளிகள் ( இந்திரியம் ) பெண்ணுடைய பாகத்தில் சேராமல் வழிதவறி விழுந்தால்... ?? கவலை வேண்டாம் சுகமே !!!

என் மதத்தின் அற்பத் தன்மையைப்பற்றி வாய் திறக்காதே - கத்தி போயி வாலு வந்தது

பார்வதி குளிப்பதை திருட்டுத்தனமாக பார்த்த சிவன்.!!!! + விநாயகர் யானை தலை ஏன் ?
---------------------------
மற்ற பதிவுகள்

5 comments:

Xavier said...

//மாத்தியூ எழுதியது கி.பி. 110இல் லூக் எழுதியது கி.பி. 180இல் ஜான் கடைசியாக எழுதியது கி.பி.200இல்//

அடேங்கப்பா... இயேசுவின் மரணம் சுமார் கி.பி 3 என்று வைத்துக் கொண்டால், யோவானுக்கு அப்போது சுமார் 30 வயது என்று வைத்துக் கொண்டால் இந்த மனுஷன் 230 வருஷம் வாழ்ந்திருக்காரே :)

சூ.அறிவுக்கரசு கவனிக்கலையோ :)

சிந்திக்க உண்மைகள். said...

பல நபர்கள் ஒரே பெயெரை சூடி இருக்கும் வழ‌க்கம் ஆச்சரியமில்லையே. புதிதல்லவே !!!

Xavier said...

//பல நபர்கள் ஒரே பெயெரை சூடி இருக்கும் வழ‌க்கம் ஆச்சரியமில்லையே. புதிதல்லவே !!!//

வரலாறை முழுக்க படித்துக் கொண்டு வந்து பேசினீர்கள் எனில் மகிழ்ச்சியடைவேன்.

விவிலியம் பல்வேறு காலகட்டத்தில் எழுதப்பட்டது என்பதும் மனிதர்களால் எழுதப்பட்டது என்பதும், இயேசுவின் மரணத்திற்குப் பிறகே எழுதப்பட்டது என்பதும் எல்லாம் உண்மை தான்.

அப்படியே இந்த யோவான், மத்தேயு, மார்க், லூக்கா இவர்களைப் பற்றிய வரலாறுகளையும் படித்துக் கொண்டு விவாதிக்க வந்தால் பயனுள்ளதாக இருக்கும்.

நான் மதம் சார்ந்த விவாதங்களுக்குள் பெரும்பாலும் வருவதில்லை, ஆனால் இந்த பதிவிலிருந்த சில தகவல்கள் நகைச்சுவையாய் இருந்ததால் குறிப்பிட்டேன். :)

Anonymous said...

nice post.

http://dogkutty.blogspot.com

ஜோனதான் said...

புட்டு புட்டுனு வச்சிருக்கியே நைனா... கலாசல்.

நம்ம பக்கத்தையும் பாருங்க... ஆனா இது நம்ம சாமி பத்தினது சாமியோவ்.

http://muttalyesu.blogspot.com