Followers

Sunday, January 13, 2008

ஞானிகளுக்கு மண்டை ஓடு வெடித்தும், பாபிகளுக்கு ஆசனவாய் வழியேயும் உயிர் போகும்!!! விபத்தில் தலை காயமடைந்து இறந்தவர்கள் தான் ஞானிகளோ? இறப்பு என்பது என்ன

சின்னஞ்சிறியதாக இருப்பதை பூதக் கண்ணாடி நன்றாகப் பெரிசு பண்ணிக் காட்டுகிறதல்லவா? இம்மாதிரி வேதத்தில் சுருக்கமாக, சின்னச்சின்னதாகப் போட்டிருக்கிற தர்ம விதிகளை கதைகள் மூலம் பெரிசு பண்ணிக் காட்டுவதுதான் புராணம்’’ என்று இறந்துபோன காஞ்சிபுரம் சங்கர மடத்தலைவர் சந்திரசேகரேந்திரர் எழுதியுள்ளார்.

வேதத்தைத்தான் சூத்திரர்கள் படிக்கக் கூடாதே! படித்தால் நாக்கை அறுக்க வேண்டுமே! படிக்கக் கேட்டு விட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டுமே! அப்படியானால் வேதக் கடமைகளை இவர்கள் செய்யாவிட்டால் +பார்ப்பனர்க்குத் தரவேண்டிய தானங்களைத் தராவிட்டால் விதைக்காத இவர்களின் கழனியில் விளையாமல் போய் விடுமே! வேதத்தில் விதித்தது முழுவதும் வீணாகிவிடுமே! எனவேதான் புராணங்களை எழுதினார்கள் பார்ப்பனர் சாப்பிட

அப்படி என்ன கடமைகளை விதித்திருக்கிறார்கள்? பிறந்ததிலிருந்து இறக்கும் வரையும் இறந்தபின்னும் இவர்களுக்குக் கொட்டியழுது கொண்டே இருக்க வேண்டும். அவற்றுக்குப் பெயர் தானங்கள். அரசர்கள் இவாளுக்குக் கொட்டிக் கொடுத்த தானங்கள் ஏராளம். வரி இல்லாத நிலங்கள் ஏராளம்.

வேத பாடசாலைகள் என்ற பெயரில் ஊரூருக்குப் போஜன சாலைகள் ``கட்டிச் சமூகத்தின் கண்ணவித்துத் தாமுண்ணக் கொட்டியளக்கும் குருக்கள்’’ எனப் புரட்சிக் கவிஞர் பாடினாரே, அந்த வகையில் இந்தப் பாடசாலைகளில் அவாளுக்கு மட்டுமே சாப்பாடு! அதற்காக நெல் மலை போல! உதாரணம் - உரத்தநாடு! இவாளுக்குத் தரப்பட்ட நிலங்கள் மங்கலங்கள் எனப்பட்டன. உதாரணம் சதுர்வேதிமங்கலம்! முழுக் கிராமத்தையே இவர்கள். (மு) விழுங்கி ஏப்பம் விட்டார்கள் அவை உத்தமதானபுரங்கள்!

இறப்பு எப்படி ஏற்படும் ? இறப்பு என்பது என்ன? உடலுறுப்புகள் செயலற்றுப் போன நிலை. உயிர் பிரிதல் என்றோ, கூடுவிட்டு ஆவி போதல் என்பதோ சரியல்ல. எதுவும் பிரிவதில்லை. விடுபடுதல் இல்லை. அறிவியல் இப்படித்தான் சொல்கிறது.

புராணம் என்ன சொல்கிறது? ``உயிரானது மனித உடலை விட்டு நீங்கும் போது கண், நாசி அல்லது உரோமக் கால்கள் வழியே நீங்குகிறது. ஞானிகளுக்குக் கபாலம் வெடித்து நீங்கும். பாவிகளுக்கு அபான (ஆசனவாய்) வழியே நீங்கும்’’ என்கிறது கருட புராணம்..

நீங்குவதே இல்லை எனும்போது இவாள் மண்டை வெடித்து நீங்கும் என்கிறார்கள். பாபிகளுக்கு ஆசனவாய் வழியே நீங்கும் என்கிறார்கள்.

கண்வழியே நீங்குமாம். மூக்கு வழியே நீங்குமாம். மயிர்க்கால்கள் வழியே நீங்குமாம். ஒன்பது ஓட்டைகள் உடலில் என்றார் ஒரு ஆள்! ஏன் மற்றவற்றை விட்டு விட்டார்கள் என்பதை எழுதியவனிடத்தில்தான் கேட்க வேண்டும். சரி, செய்திக்கு வருவோம்.

ஞானி யார்? ஞானிகளுக்கு மண்டை ஓடு வெடித்து உயிர் போகும் என்று எழுதியிருக்கிறார்கள். அப்படிப் பார்த்தால் இவர்களால் ஞானிகள் என்று அழைக்கப்பட்ட ஓர் ஆள்கூட மண்டை வெடித்துச் சாகவில்லையே! நடமாடும் தெய்வம் எனப்பட்டதுகூட அம்மாதிரிக்காகவில்லையே! ஞானி இல்லை என்றுதானே ஆகிறது?


அரவிந்தன், இராமகிருஷ்ணன், இரமணன் என யாருமே ஞானி அல்ல என்றுதான் இந்த இலக்கணப்படி ஆகிறது. ஹெல்மெட் அணியாமல் சவாரி போய் விபத்தில் சிக்கி தலைக்காயம் அடைந்து இறந்தவர் கள்தான் ஞானிகளோ?

இறந்த பிறகும் தானமாம். .`செத்த பிறகு சிவலோகம், வைகுந்தம் என்பார் + அவர் பித்த மனிதரென்று ஊது சங்கே’’ என்று பாரதி பாடினார். ஆனால் செத்த பிறகு பலன் கிடைக்க வேண்டுமானால் தானங்களைச் செய் என்கிறது கருட புராணம்.

கோயில்கள் ஏன்? நிரந்தர வருமானம் வேண்டுமல்லவா பூதேவர்களுக்கு? அதற்காகச் செய்யப்பட்ட ஏற்பாடுதான் கோயில்கள். எங்கும் நிறைந்தது கடவுள் என்கிறார்கள். எதிலும் இருக்கிறது கடவுள் என்கிறார்கள். அப்படி இருக்கும்போது கடவுளைக் கோயிலுக்குப் போய்த்தான் கும்பிட வேண்டுமா? எல்லாவற்றிலும் கடவுள் இருக்கும்போது தனியே சிலை செய்து கும்பிட வேண்டுமா?

எல்லா இடத்திலும் பால் உண்டாம்.இந்தக் கேள்விக்கு ஒரு சமயப்பிரசங்கி பதில் சொன்னார். பசுவின் உடலில் எங்கும் பால் இருக்கிறது; என்றாலும் மடியில் காம்புகளில் கை வைத்துதான் பால் கறக்கிறோம். அதுபோல கடவுள் எங்கும் நிறைந்திருந்தாலும் கோயிலுக்குப் போய்க் கும்பிட வேண்டும் என்றார். சரிதானா?

பசுவின் உடலில் எல்லா இடத்திலும் பால் இருக்கிறது என்பதுபோன்ற மடத்தனமான உளறல்களைச் சொல்பவர்கள்தான் ஆன்மீகவாதிகள்.

சோழ மன்னர்கள் சண்டைக் காலங்களில் பதுங்கிக் கொள்வதற்காகக் கோட்டை போலக் கட்டப்பட்டுக் கோயிலாகவும் பாவிக்கப்பட்டவை தான் பெரும் கோயில்கள். தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம் போன்ற கோயில்கள் இந்தக் கொள்கையை உறுதிப்படுத்தும் அந்த வகையில் கோயில்கள் மன்னர் குடும்ப வழிபாட்டுக்கெனக் கட்டப்பட்ட தனிக் குடும்பக் கோயில்கள். .

பொது மக்களும் வந்து கும்பிடும் பொதுக் கோயில்கள் அல்ல. பொதுக் கோயில்களும் கட்டிக் கொள்ளையடிக்கும் எண்ணம் பிற்காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு வழியாகப் புராணங்களை எழுதி வைத்துக் கொண்டார்கள். >>புராணங்களைப் புரிந்து கொள்ளுங்கள் ( 9 ) >>சு. அறிவுக்கரசு ( VIDUTHALAI.COM . 04.03.07 )
--------------------------------------
படித்துவிட்டீர்களா?
உடம்பெல்லாம் பெண் குறியாக இந்திரன் என்ன செய்தான்? அவன் எப்படிப்பட்ட அயோக்கியன் என்பதைப் புராணம் கூறுவதைப் படியுங்கள்.

விநாயகன் திருமணம் ஆனதா? அல்லது பிரம்மசாரியா? குழப்புகிறார்கள் புராணத்தில்

பிணத்தைத் தின்கிறார், பூசாரி!
-------------------------
:- மற்ற பதிவுகள்

No comments: