Followers

Saturday, January 19, 2008

பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள்.கொலை செய்யத் தயங்காதவர்கள் பெண்கள்.

பெண்களை இழிவுபடுத்தும் இதிகாச புராண, சாஸ்திரப் புரட்டுகளை இதோ காணீர்!
ஒரு பெண் தன் நோக்கத்தைப் பூர்த்தி செய்வதற்குத் தனது கணவனையோ குழந்தைகளையோ சகோதரர்களையோ யாரை வேண்டுமானாலும் கொலை செய்யத் தயங்க மாட்டாள். (பாகவத ஸ்கந்தம் 4+14+42) இதன்மூலம் பெண் என்பவர் பிறவியிலேயே ஒரு கொலைகாரி என்று சித்திரிக்கப்படவில்லையா?

பெண்ணைவிடப் பாவகரமான பிராணி வேறு இல்லை. பெண் எரிகிற நெருப்புப் போன்றவள்.; பெண் மாய்கை (வஞ்சக) குணமுள்ளவள். க்ஷவரக்கத்தியின் கூர்மையான பதம் போன்றவள். இவைகள் எல்லாம் உண்மையாகவே ஒரு பெண்ணின் தன்மையில் இருக்கின்றன.
பாரதம் 42+43.இதன் மூலம் பெண் என்பவர் ஒரு மனிதப் பிறவியேகூட அல்ல ஒரு பிராணி மிருகம் என்று கேவலப்படுத்தப்படவில்லையா?

பெண்ணாய் பிறப்பதைவிட கெட்ட பிறப்பு வேறு எதுவுமில்லை எல்லாக் கேடுகளுக்கு வேர் பெண்களே!-பாரதம் அனுசான்ய பருவம் பெண்கள் என்பவர்கள் பிறவியிலேயே குற்றவாளிகள் (Born Criminals) என்று இதன் மூலம் குற்றப் பத்திரிகைப் படிக்கப்படவில்லையா?

இந்தவுலகில் ஆண்களைக் கற்பழிக்கும் இயல்பைப் பெண்கள் பெற்றிருப்பதனால்தான் புத்திசாலிகள் பெண்கள் மத்தியில் தற்காப்புடன் இருக்க வேண்டியவர்கள் ஆகிறார்கள்.(மனு-தர்மம் அத்தியாயம் 2 + சுலோகம் 213)

பெண்கள் என்பவர்கள் அடிப்படையில் விபச்சாரிகள் என்று இதன் மூலம் விமர்சிக்கப்படவில்லையா?

நாரதர் (ஸ்மிருதிக்குக் கர்த்தாவான ரிஷி) கூறுகிறார்: `எவனொருவன் வாங்கின கடனையோ, பொருளையோ திரும்பக் கொடுக்கவில்லையோ அவன், கடன் கொடுத்தவனுடைய வீட்டில் ஒரு அடிமையாகவாவது ஒரு வேலைக்காரனாகவாவது ஒரு ஸ்திரீயாக வாவது, ஒரு நாலு கால் மிருகமாகவாவது பிறப்பான்’.

பெண்ணாகப் பிறப்பது என்பது தண்டனைக்குரியது என்பது இதன்மூலம் கூறப்படவில்லையா?

போதாயனர் உரைப்பது: `மாதர்கள் அறிவுகளே இல்லாதவர்கள்; அவர்கள் சொத்துரிமை கொள்ளவும் யோக்கியதையற்றவர்கள்.’ பெண்ணென்றால் மூடர்கள் என்பது இதன்மூலம் சொல்லப்படவில்லையா?

``பால்யத்தில் தகப்பன் ஆக்ஞையிலும்,யௌவனத்தில் கணவன் ஆக்ஞையிலும் கணவன் இறந்தபின்பு பிள்ளைகளை ஆக்ஞையிலும் இருக்க வேண்டியதல்லாமல் ஸ்திரீகள் தன் சுவாதீனமாக ஒரு போதும் இருக்கக் கூடாது (மனுதர்மம் அத்தியாயம் 5 சுலோகம் 148)

பெண் என்பவருக்கு சுயமரியாதையோ சுய உரிமையோ இதன் மூலம் கிடையாது என்று வரையறுக்கப் படவில்லையா!

இதற்கு என்ன வியாக்யானம் சொல்ல வருகிறார். இந்து முன்னணியின் இராம. கோபாலர்?

ஒரு பெண் தந்தையோடு, கணவனோடு, பிள்ளைகளோடு இருப்பது பாதுகாப்பாக இருக்க வேண்டும். அனாதை ஆகிவிடக் கூடாது என்ற நோக்கத்தில்தான் இவ்வாறு சொல்லப்பட்டதாக வக்காலத்து வாங்குகிறார்.

மற்றவர்களின் பாதுகாப்பில் இல்லாமல் பெண்கள் இருந்தால்தானே அனுமதிக்கப்பட்டால்தானே பெண்ணும் ஒரு மனித ஜீவன் ஆணுக்கு சமமானவர்! அப்படியில்லாமல் எந்தப் பருவத்திலும் ஒரு ஆணின் பாதுகாப்பில் தான் பெண் இருக்க வேண்டும் என்றால் இதன் பொருள் என்ன? ஆணுக்கு என்றென்றும் அடிமையாக இருக்க வேண்டும் என்பதுதானே?

மனுதர்மத்தில் பெண்களைப்பற்றிச் சொல்லப்பட்டு இருக்கும் இலக்கணங்கள், வரையறைகளைப் படித்தால் தான் இராம. கோபாலன் மேற்கொள்ளும் சப்பைக் கட்டு அவிழ்ந்து விழுந்து விடும் என்பதை அறியலாம்.


படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தர் (மனுதர்மம் அத்தியாயம் 9 சுலோகம் 17)மகளிர்பற்றிய மனுதர்மத்தின் இந்தப் படப்பிடிப்புக்கு இராம. கோபாலர் என்ன பதில் சொல்லுவார்?

பெண்களையும், பிராமணர் அல்லாதாரையும் கொல்லுதல் பாதகமாகாது. (மனுதர்மம் அத்தியாயம் 11 சுலோகம் 66) இதன் மூலம் பெண்கள் அற்பத்திலும் அற்பம் என்று ஆரியம் கருதுகிறது என்பது புலப்படவில்லையா?

பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள் ( கீதை அத்தியாயம் 9 சுலோகம் 32) பெண்களின் பிறப்பையே இதன்மூலம் கீழ்மைப் படுத்தவில்லையா கீதை?மதவிதிகள் கூறும் நூல்களில் ஒன்றாகிய ராமாயணம் உரைப்பது: `தப்பட்டைகள், பயிரிடுபவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், மிருகங்கள், பெண்கள் ஆகிய இவர்கள் எல்லாம் கடுமையான முறையினால் ஒடுக்கி வைக்கப்பட வேண்டும்’ (சுந்தரகாண்டம் 5). இராமாயணத்திலும் பெண்கள்பற்றி இழிவாகத்தான் கூறப்பட்டுள்ளது என்பது இதன் மூலம் விளங்கவில்லையா?

இந்தக் கேவலங்களைப் பொசுக்கினால் பொத்துக் கொண்டு வருகிறது சிலருக்கு என்றால் அவர்களையும் அடையாளங்காட்ட இதுதானே சரியான வாய்ப்பு?

பெண்களை இப்படி கேவலப்படுதி, கேவலப்படுத்தி சிறுமைப்படுத்தி, சிறுமைப்படுத்தி கட்டிப் போட்டு வைத்திருந்தால்தான் இன்றுவரைகூட பெண்ணென்றால் இளக்காரம் என்ற நிலையும் மறுக்க முடியுமா?

பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறவன் பணம் கேட்கிறான், வீடு கேட்கிறான், கார் கேட்கிறான், நகைகள் கேட்கிறான் என்றால் என்ன காரணம்? மதிப்பிழந்த பெண்களை திருமணம் செய்து கொள்வதற்கு இழப்பீடு கேட்கிறான் என்று தானே பொருள்?

இன்றைக்கும்கூட சதி மாதா கோயிலை எழுப்பவில்லையா? 1987+இல் கூட பா.ஜ.க., ஆட்சியில் ராஜஸ்தானில் ரூப்கன்வர், இறந்த கணவனோடு கட்டி வைத்து துடிக்கத் துடிக்கப் படுகொலை செய்யப்படவில்லையா?

அந்த இடத்தில் சதி மாதா கோயில் கட்டப்படவில்லையா?அந்தக் கொடுமையைப் பற்றி காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி என்ன கூறுகிறார்?

`தர்ம சாஸ்திரங்களில் `சதி’-யைப்பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் சமூகங்கள் சிலவற்றில் இப்படிப் பழக்கம் இருப்பதாகத் தெரிகிறது. எவ்வாறாயினும் இந்தப் பழக்கத்திற்கு கண்டனம் தெரிவிக்க நான் விரும்பவில்லை. அது குறித்து மக்களும் கவனித்துக் கொள்வார்கள்’’(`தி வீக்’ அக்டோபர் 11-17, 1987)

இப்படி பெண்களை வஞ்சிக்கும், அவமதிக்கும் கூட்டம் இன்றைக்கும் இருக்கத்தானே செய்கிறது?இவ்வளவுக்கும் இந்து மதத்தில் மூம்மூர்த்திகளுக்கும் மூன்று பத்தினிகளைப் பிரதானமாகக் கூறுகிறார்கள். பார்வதி தேவி என்றும் இலட்சுமிதேவி என்றும் சரஸ்வதி தேவி என்றும் உருகுகிறார்கள்.பூமியைப் பூமாதேவி என்கின்றனர். தண்ணீரைக் கங்காதேவி என்று கசிந்துருகுகிறார்கள். பசுவை கோமாதா என்று கும்பிடுகிறார்கள்.

ஆனால் உண்மையான தாய்களை, பெண்களைப் பாவ யோனியிற் பிறந்ததாகக் கூச்சமின்றிக் கூறுகிறார்கள். பெண்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்றும் இரக்கமின்றிப் பேசுகிறார்கள்.

திருவாளர் `சோ’ ராமசாமி-யின் `துக்ளக்’ ஒவ்வொரு இதழிலும் பெண்கள் பற்றி நஞ்சைக் கக்கிக் கொண்டு தானிருக்கிறார். இவர்கள் பெண்ணாகிய தாய்க்குப் பிறக்கவில்லையா? சகோதரிகளோடு பிறக்கவில்லையா?

இவர்களுக்கு மகள்களே கிடையாதா? எண்ணிப் பாருங்கள்!பெண்களை இழிவுப்படுத்தும் இதிகாசங்களைக் கொளுத்தினால் இவர்களுக்கு ஆத்திரம் கரைபுரள்கிறது.மகளிரை இழிவுபடுத்தும் மனுதர்மத்தைப் பொசுக்குவோம் என்றால் `விட்டேனா பார்’ என்று `வீராவேசம்’ காட்டுகிறார்கள்.இவர்களின் ஆத்திரமும் எரிச்சலும், கொதிப்பும் கோபமும் இவர்கள் இன்னும் மனு மந்தாதா காலத்திலேயேதான் இருக்கிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு!எரிப்போம் எதிரிகளையும் சந்திப்போம்! http://viduthalai.com/20070324/snews01.htm
-----------------------------
படித்துவிட்டீர்க‌ளா?
மகளின் மாத விலக்கை பருகச் சொல்கிற மநு
லோகமே அழியப்போறது ஓய்... அழியப் போறது... ஓய்...
அடத்திருடா... நீ உட்கார்ந்திருப்பது காவிரிக் கரையில்...
----------------------------------------------
மற்ற பதிவுகள்

No comments: