Followers

Monday, January 28, 2008

தானும் த‌ன் மதமும் வாழ சாத்தானை காப்பாற்றிய பாதிரி அகம் பார்த்து கைதட்டி சிரித்த சாத்தான். தோல்வியில் தொங்கிய பாதிரியார் !!!

ஒருமுறை பாதிரி ஒருவர் ஒற்றையடிப்பாதையில் தன்னந்தனியே நடந்து சென்று கொண்டிருந்தாராம். குறுக்கிடுகிறது மனித முனகல் ஒன்று. சென்று பார்த்தாராம். திடுக்கிட்டுப் போகிறார்.

படுத்துக் கிடந்தான் ஒரு மனிதன் குருதியில் நனைந்து குற்றுயிராக. மாந்த நேயம் விரட்டுகிறது அவரை அருகில் சென்று சோதித்து விட்டு பாந்தமாக தூக்கினாராம். பேச்சுக் கொடுத்தால் மூச்சு நீடிக்கும் என்றே பெயரென்ன என்றாராம். அவனோ, பெயரெதற்கு முதலில் காப்பாற்றுங்கள் என்கிறானாம்.

பாதிரிக்கு அவனை இதற்குமுன் எங்கோ எவரையோ பார்த்தமாதிரி இருக்கவே மீண்டும் வினவினாராம் பெயரென்னவென்று. மாறாக அவனும், என்னை யாரென்று தெரிந்து கொண்டால் மாண்டு விடும் - உமது மாந்த நேயம் ஆதலால், ஆசையை அறுங்கள் முதலில் என்னை மருத்துவமனையில் சேருங்கள் என்கிறானாம்.

கூடிப் போகிறது ஆவல் இவருக்கு. சொன்னால்தான் ஆயிற்று என்று அடம் பிடித்தாராம். பார்த்தான் அந்த நோயாளி சொல்லி விட்டால் குறையொன்றும்
வந்து விடாது என்று நான்தான் ‘சாத்தான்’ - என்றதாம்.

சுமையை தொப்பென்று போட்டிட்டாராம். இமைக்கவும் மறந்து விழுந்தவனைப் பார்த்திட்டாராம். ‘எமையெலாம் வாட்டுகின்ற வல்லாளன் நீ குமைகின்றார் குவலயத்தோர் உன்னாலே. வாய்த்தது நல் வாய்ப்பெனக்கு எப்படியோ போனாய் இவ்விதம் ஆனாய் இப்படியே விட்டிட்டால் இல்லாமலேயே போவாய் அன்றோ எமக்கும் வேலை இல்லாமலேயே போகுமன்றோ?’

என்ற பாதிரி மொழி கேட்டே பதறாமல், சிதறாமல் சாத்தானும் சிந்தியதாம் ஒரு புன்னகையை. பாதிரியும் அணையும் சுடர்தானே அதுதான் நின்று எரிகின்றது என்றாராம்.

அணையும் சுடர் நானென்றால் என்னுடன் இணையும் சுடர் நீரென்பதை மறவாதீர் என்றதாம். மரணத்தின் அறிகுறி தொடர்பற்ற சொற்கள். நேருகிறது உனக்கும் என் நேர் காணலில். ஆனந்தம் காணாதீர். நடவாது அது இங்கு. நான் பிழைத்து எழுவேன். அதுவும் உம்மாலே இது நிச்சயம் என்றதாம்.

அது எப்படி என்னை அறியாமல் நான் உன்னைக் காப்பாற்றுவேன். இதோ, கிளம்பிவிட்டேன் நீ நாதியின்றி செத்துத் தொலைவாய் என்றே நடையைக் கட்டினாராம்.

நீத்தான் போல் கிடந்த சாத்தான் மீண்டும் சிரித்ததாம். எரிச்சலும் வியப்பும் பாதிரிக்கு ஒன்றாய் எழுந்ததாம். சாத்தான் தொடர்ந்தது. பார்த்தான் பாதிரி, காத்தான் பாதிரி என்றுதான் சரித்திரம் சொல்லும். மட்டுமல்ல உம்மால் என்னை காப்பாற்றாமல் இருக்கவும் முடியாது அதற்கான தேவையும் உண்டு என்றும் சொன்னதாம்.

கோபத்தால் முகம் சிவந்த பாதிரி பாபத்தின் திருவுருவே கூறிவிடு சமாதானம் உன் கூற்றுக்கு என்று எரிந்து விழுந்தாராம். இன்னமும் சொல்வேன் நான் சொல்வதைக் கேட்டு விட்டால் நீரே என்னைத் தூக்கிக் கொண்டு மருத்துவ மனைக்கு ஓ... டுவீர் இது சத்தியம் என்றதாம்.

ஆடிப்போன பாதிரியைப் பார்த்து மூடி வைக்க நினைத்தேன். கூடிடவில்லை எனதெண்ணம் கேட்கிறேன் சொல்லுங்கள் என்றதாம். கவனிக்கவும் கேட்கிறேன் சொல்லுங்கள் என்றதாம். அப்போதும் சரி, இப்போதும் சரி, எப்போதும் சரி, முப்போதும் நீர் செய்து கொண்டிருப்பது என்ன என்றதாம்.

பாவிகளை ரட்சிக்கிறேன் கர்த்தரின் பேரால். இருக்கும் வரை ரட்சிப்பீர் இல்லாது போனால்?

இது நடந்தால் கடல் நீரணைத்தையும் நக்கிக் குடித்து விடுகிறேன் நானொருவனாகவே. நடக்காது என்ற எண்ணத்தில் பேசுகிறீர். போகட்டும் பாவிகள்! எதனால் வருகிறார்கள் ஆலயங்களுக்கு? சந்தேகமென்ன இதிலே! பாவங்களை செய்ததினாலே வருகின்றனர். அந்த பாவங்களுக்கு காரணகர்த்தா யார்?

இதிலும் சந்தேகமா? நீதான். நீயேதான். நன்று சொன்னீர் நன்று சொன்னீர்
நான்தான் நானே தான் அந்த நானேதான் இப்படி வீணே இறந்து விட்டால்...? இறந்து விட்டால்?!

பாவங்களே இல்லாமல் போய்விடும் அல்லவா? ஆமாம்! பாவங்களே இல்லையென்றால் பாவிகளும் இல்லாமல் போய் விடுவர் அல்லவா? ஆ.... மா.... ம்! பாவிகளும் இல்லாமல் போய் விட்டால் யாரும் ஆலயங்களை நாடமாட்டார்கள் அல்லவா?

ஆ... ஆ... ஆமா.... ம்! ஆலயங்களுக்கு யாரும் வரவில்லை என்றால் உங்களுக்கும், ஏன்? உங்கள் மதத்துக்குமே வேலை கிடையாது அல்லவா? ஆ.... ஆ... ஆ... ம்....!

இப்பொழுது புரிகிறதா நீங்களும், உங்கள் மதமும் வாழவேண்டும் என்றால் நான் சாகக் கூடாது என்று. ஆ.....ம்! இப்பொழுது சொல்லுங்கள் நான் இறந்து விடட்டுமா?

என்று கேட்டுவிட்டு முனகலோடு கலந்த எக்காளச் சிரிப்பு சிரித்ததாம். பாதிரிக்கோ, மயிர்க் கூச்செறிந்ததாம்

சாத்தானைப் பார்த்தார். இன்னும் சில நொடிகளில் நீத்தான் ஆகிவிடும்
நிலையில் இருந்தது. சட்டென்று நெருங்கி பட்டென்று தூக்கி தோளில் சுமந்தவாறு உன்னை சாக விடமாட்டேன்! சாக விடமாட்டேன்! என்று தனை மறந்த நிலையில் கூறிக்கொண்டே மருத்துவமனையை நோக்கி ஓ....டினாராம். தோளில் தொங்கிய சாத்தான் தோல்வியில் தொங்கிய பாதிரி அகம் பார்த்து கைதட்டி சிரித்ததாம். - >> உடுமலை வடிவேள்
http://unmaionline.com/2005062/2005062u1.html
----------------------------------
படித்துவிட்டீர்க‌ளா?
பார்ப்பனர்கள் டாக்டருக்கு படிக்கலாமா?

சிவாஜியை கடத்த முயலும் இந்துத்துவா வரலாற்று புரட்டர்கள்!!!

காரி உமிழுங்கள்!
------------------------------------
மற்ற பதிவுகள்

No comments: