Followers

Friday, January 11, 2008

பார்ப்பனர்களின் பிலாக்கண அலறல்? விரலாக இருக்கும் ஆதிக்க ஜாதிப் பார்ப்பனர்கள் உரல் போல வளர அரசியலிலும் இடஒதுக்கீடு தனித்தொகுதி, தனிக்குளம், பள்ளிக்கூடம

நாட்டு நடப்பு >> பார்ப்பனர்களின் பிலாக்கண அலறல்? விரலாக இருக்கும் ஆதிக்க ஜாதிப் பார்ப்பனர்கள் உரல் போல வளர அரசியலிலும் இடஒதுக்கீடு தனித்தொகுதி, தனிக்குளம், பள்ளிக்கூடம், கோயில்?

ஒரு காலம் இருந்தது. சென்னைப் பெரு மாநிலத்தின் சட்ட மன்ற உறுப்பினர்களாகப் பார்ப்பனர்களே இருந்தனர்! ஆம், பார்ப்பனர்கள் மட்டுமே இருந்தனர்.

காங்கிரசுக் கட்சியின் சார்பாக பார்ப்பனர்கள் மட்டுமே நிறுத்தப்பட்டனர். வென்று வந்தனர்.நீதிக் கட்சி இந்த ஜாதி ஆணவத்தின் இடுப்பை ஒடித்தது. பார்ப்பனர் அல்லாதார் வெல்லத் தொடங்கினர். ஆட்சி நடத்தினர்.
இசுலாமியர்கள் யாரும் நிற்க முடியாத, வெல்ல முடியாத காலம் அன்று! அவர்கள் விடுத்த கோரிக்கைகளின் நியாயத்தைப் புரிந்துகொண்ட பிரிட்டிஷ் காரர்கள் இசுலாமியர்களுக்கு தனித் தொகுதியை உருவாக்கினார்கள். அதை முசுலிம் தொகுதி என அழைத்தனர்.

பார்ப்பனர்கள் இந்தச் சந்தர்ப்பத்தில் மற்ற தொகுதிகளை முசுலிம் அல்லாதார் தொகுதி (நான் முசுலிம் தொகுதி - நான் வெஜிட்டேரியன் என்பதைபோல) என அழைத்தனர்.

இன்றைக்கும் அந்த மாதிரி நிலை ஏற்பட்டுள்ளது தலைகீழாக! ஆம், பார்ப்பனர்கள் நிற்க முடியாத, வெல்ல முடியாத நிலைதானே இன்று!
தமிழ்நாட்டில் 234 சட்டமன்றத் தொகுதிகளில் 3 விழுக்காடு பார்ப்பனருக்கு 7 தொகுதிகள். ஆனால், நின்று வெற்றி பெற்றோர் 2 பேர்தானே!

அதே நிலை கருநாடகாவில்! ஆகவேதான் பார்ப்பனர்கள் தனித் தொகுதிக் கேட்கிறார்கள்.ஒருவகையில் வரலாறு திரும்புகிறது. பார்ப்பனரல்லா தார்க்கு பார்ப்பனர் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் செய்த கொடுமைகள் நியாயமான வழியில் அவர்களுக்கே திரும்பிக் கிடைத்துள்ளன.

ஏன் அலறுகிறார்கள்? இவர்கள் செய்த தீமைகள் இவர்களின் சாவுக்குப் பிறகும் தொடர்கின்றனவே என்பதால் அலறலோ? இட்லரும் முசோலினியும் செய்த கொடுமைகளை மனித சமுதாயம் இன்னும் நினைவில் வைத்திருக்கிறதே!

வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு கேட்டார்கள்! தனித் தொகுதி கேட்கிறார்கள்! தனிக்குளம், தனிப் பள்ளிக்கூடம், தனிக் கோயில் கேட்கும் காலமும் விரைந்து வராதோ?
http://viduthalai.com/20080109/news05.html

அரசியலிலும் இடஒதுக்கீடு வேண்டுமாம்தனித்தொகுதி கேட்கின்றனர் பார்ப்பனர்கள்
பெங்களூரு, ஜன. 9- அரசியலில் இட ஒதுக்கீடு தங்களுக்கும் தரப்படவேண்டும் என்கிற கோரிக்கையைப் பார்ப்பனர்கள் கருநாடகாவில் கிளப்பியுள்ளனர்.
``அரசியலில் பார்ப்பனருக்கு இட ஒதுக்கீடு எனும் பெயரில் கருத்தரங்கினை ``அகில பாரத சாணக்கியப் பார்ப்பனச் சங்கம் எனும் அமைப்பு நடத்தியுள்ளது.

பெங்களூருவில் நடந்த இக்கருத்தரங்கில் சங்கத்தின் துணைத் தலைவர் கே.என். சாயாபதி என்பவர் இந்தக் கோரிக்கை குறித்த வேண்டுகோள் மனுவினை கருநாடகா ஆளுநரிடம் தரப்போவதாக அறிவித்தார்.
கருநாடகாவில் பார்ப்பனர்கள் பெரும்பான்மையாக இருக்கும் தொகுதி என்று 30 முதல் 35 தொகுதிகளை இவர் அடையாளம் கண்டுள்ளாராம். இந்தத் தொகுதியைப் பார்ப்பனத் தனித் தொகுதிகளாக மாற்றவேண்டும் என்று கோருவார்களாம். இந்தப் பிரச்சினை பற்றி வலியுறுத்துவதற்காகத் தேர்தல் கமிசனையும் சந்திக்கப் போகிறார்களாம்.

பெரும்பான்மையான பார்ப்பனர்கள் அரசிலியலில் ஈடுபட ஆர்வம் காட்டுவதில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டாராம். பாகவத பிரகாஷ் ராவ் எனும் சமக்கிருதம் படித்தவர், அரசிலிலில் ஈடுபடாமல் ஒதுங்கிக் கிடப்பதால் பார்ப்பனச் சமூகத்தில் வளர்ச்சியற்ற நிலை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டாராம்.

பார்ப்பனர்களான முன்னாள் முதல் அமைச்சர்கள் குண்டுராவும் ராமகிருஷ்ண ஹெக்டேவும் பார்ப்பனச் சமூகத்தின் ஆதரவு இல்லாமலேயே அரசியலில் வளர்ந்தவர்கள் என்றும் கூறினாராம். ஆகவேதான் அந்த இருவரிடமிருந்தும் பார்ப்பனச் சமூகம் எந்த கோரிக்கையையும் வைக்க முடியாமல் போய்விட்டது என்றும் குறைப்பட்டுக் கொண்டாராம்.

பார்ப்பன அரசியல் வாதிகளின் பின்னால் ஒட்டுமொத்தச் சமூகமும் நின்றால்தான் பார்ப்பனர்கள் வலுவடைய முடியுமாம். அரசியல் கட்சிகளில் பார்ப்பனர்கள் அதிகம் அங்கம் வகிக்காவிட்டால் பார்ப்பனச் சமூகம் நன்மையடைய முடியாது எனக் குறிப்பிட்டு விட்டு ஆதிக்கப் பார்ப்பன ஜாதிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் இல்லாமல் சமூக மாற்றத்தைக் கொண்டுவர இயலாது என்று பேசிவரும் மாயாவதியின் கருத்தை வரவேற்றாராம்.

உத்தரப்பிரதேச முதலமைச்சர் மாயாவதியின் யோசனையைப் பார்ப்பனர்கள் வரவேற்கிறார்கள் எனும் போதே, ஒடுக்கப்பட்ட மக்கள் அதனைப் பற்றி சிந்திக்கும் நிலை ஏற்படுகிறது அல்லவா?

விரலாக இருக்கும் ஆதிக்க ஜாதிப் பார்ப்பனர்கள் உரல் போல வளர விரும்புகிறார்கள்; உரலாக இருக்கும் மக்கள் என்னவாக போகிறார்கள் எனும் கேள்வியையும் இச்செய்தி எழுப்புகிறதல்லவா?
http://viduthalai.com/20080109/news02.html
--------------------
Show all posts

No comments: