Followers

Tuesday, January 8, 2008

யானை, கரடி உரு எடுத்து புணர்ந்த சிவனும் பார்வதியும் .. !!! வயிற்றுக்குள் விஷம் போனால், சிவன் செத்து விடுவானா? செத்தால் அவன் எப்படிக் கடவுளாவான்?

புராணங்களைப் புரிந்து கொள்ளுங்கள்! (47) >>>சு. அறிவுக்கரசு

இந்தக் கூர்மம் பல விசித்திர நிறங்களை உடைய ஆமையாம். நட்சத்திர ஆமை என்கிறார்களே, சிங்கப்பூருக்குக் கடத்துகிறார்களே, அந்த ஆமையோ?

சரி, ஆலகால விஷத்தைப் பரமசிவன் குடித்தானே, அதனால் என்ன ஆகிவிடும்? ஏன் அது வயிற்றுக்குப் போகாமல் தொண்டையிலேயே நிற்குமாறு பார்வதி இறுக்கிப் பிடித்து விட்டாள்? வயிற்றுக்குள் விஷம் போனால், பரமசிவன் பரலோகம் போய் விடுவானா? செத்து விடுவானா? செத்தால் அவன் எப்படிக் கடவுளாவான்? கடவுளை விஷம் ஒன்றும் செய்யாது எனப் பதில் கூறினால், பார்வதி ஏன் பயந்தாள்?

பெரிய ஜாம்பவந்தன், ஜாம்பவான் என்றெல்லாம் சொல்கிறார்களே! அனுமானின் பலம் என்னவெல்லாம் செய்யும் என்பதை அனுமானுக்கே எடுத்துக் கூறியவன் இவன் தான் என்கிறார்களே, அந்தக் கரடிப் பயல் எப்படி பிறந்தான் என்பதை இப்புராணம் கூறுகிறது.

யானை உருவெடுத்துச் சிவனும் பார்வதியும் புணர்ந்ததால் யானைத் தலையும் மனித உடலும் கொண்ட விசித்திர விநாயகன் பிறந்தான் என்பதைப் போலவே ஜாம்பவானும் பிறந்துள்ளான்.

சிவனும் பார்வதியும் கரடி உரு எடுத்துக் கலவி செய்தார்களாம். (வேறு லட்சணமான உருவே கிடைக்கவில்லையோ) கரடித் தலையும் மனித உடலுமாகப் பிள்ளை பிறந்து விட்டதாம். அதுதான் ஜாம்பவானாம்!

இந்தக் கரடிமகன் பாற்கடலில் ஓஷதிகளைக் சேர்த்த பின்னர்தான் அமிர்தம் கடையப்பட்டதாம். ஆல கால விஷத்தைச் சாப்பிட ஒரு பயலும் வரவில்லை. பாவம், பரமசிவன் சாப்பிட்டுக் கண்டம் கறுத்து நீலகண்டன் என்றாகி விட்டான். ஆனால் மற்ற பொருள் களுக்குப் பாருங்கள், நான், நீ என்று எல்லா பகவான்களும் போட்டி, அடிதடி என்றாகியிருக்கிறது. பெருமாளுக்குப் பெண்டாட்டியே கடலில் இருந்துதான் கிடைத்திருக்கிறது.

புராணத்தையே படியுங்கள்:
பிரம்மா ஸ்ரீ மகாலக்ஷ்மியிடம் ரத்தின மாலையைக் கொடுத்து அவளுக்கு இஷ்ட மானவர் கழுத்தில் போடு மாறு கூற, அவள் மகா விஷ்ணுவின் கழுத்தில் அம் மாலையைச் சூடி அவனருகில் சென்று சேர்ந்தாள்.இந்திரன் ஐராவதமும், அப்சரசுகளும், ரத்னகுடையும் பெற்றான். குபேரன் நவநிதிகளைப் பெற்றான்.

கிடைத்த ஏழு குதிரைகள் சூரியன் தேருக்கு அளிக்கப் பட்டன. சமந்தக மணியையும், குண்டலங்களையும் இந்திரனே பெற்றான். கௌஸ்துப மணியை மஹாவிஷ்ணுவுக்கு அளித்தனர். வருணன் புஷ்பக விமானத்தைப் பெற்றான். சிவபெருமான் சங்கை எடுத்துக் கொண்டார். கருடக் கொடி உள்ள தேரை ஸ்ரீ ஹரிக்குச் சமர்ப்பித்தனர். மகாசக்கரவர்த்திகளுக்குக் கிரீடங்கள், புஜகீர்த்தி, ரத்ன ஹாரங்களைப் பங்கிட்டளித்தனர். பிரம்மா ஒரு மணியை மட்டும் ஏற்று அணிந்தார்.

அரக்கர்கள் தங்களுக்ககு எதுவும் அளிக்காமல் தேவர்களே பங்கிட்டு கொள்வதைக் கண்டு `எங்களுக்கு எதுவும் கொடுக்கவில்லையே என, பிரம்மா `உங்களுக்குதான் அமிர்தம் இருக்கிறதல்லவா அதைப் பெற்றுச் சிரஞ்சீவிகளாக இருங்கள் என்றார்.

இவ்வாறு பிரம்மா சொன்னதும் ராக்ஷசர்கள் அமிர்த கலசத்தைக் கொடுக்குமாறு வற்புறுத்தலாயினர். ஆனால், பிரம்மா `அமிர்தம் தேவர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள் என்று பலருக்கும் சமமாகப் பங்கிட வேண்டும் என்று கூறினார். இவ்வாறு தகராறு முற்றுவதைக் கண்ட பிரம்மாதி தேவர்கள் ஸ்ரீ ஹரியிடம் சென்று தங்களுக்கு உதவுமாறு வேண்டினர்.

எல்லோரும் கடற்கரையில் கூடி அமிர்தம் பெறக் காத்திருந்தனர். அப்போது அவர்கள் காதில் ஓர் இனிய கானம் வந்து விழுந்தது. கானம் வந்த திசையில் எல்லோரும் வியப்புற்று பார்க்க ஓர் அழகு சுந்தரி தங்கள் இருக்குமிடத்திற்கு வருவதைக் கண்டனர். இவ்வாறு மகாவிஷ்ணு ஜகன் மோஹினி வடிவில் வந்து கொண்டிருந்தார்.

அவள் அழகில் ஈடுபட்டு மெய்மறந்த சிலர் அவள் காலில் வணங்கி வீழ்ந்தனர். அனைவரையும் மோகினி கவர்ந்து இழுத்துத் தன் மாய வலையில் சிக்க வைத்தாள்.

பின்னர் அவர்கள் முன் உள்ள பிரச்சினை என்ன என்று கேட்க, அவர்கள் அமிர்தம் பங்கீடு பற்றி உரைத்தனர். அப்போது மோகினி தேவர்களைப் பார்த்து `நீங்கள் இப்படி அநியாயம் செய்யலாமா? இது எனக்குக் கொஞ்சமும் பிடிக்காது! என்று தேவர்களை வெறுப்பது போலும், அசுரர்கள் பக்கம் சார்ந்து பேசுவது போலும் நடிக்க, அதை நம்பிய அசுரர்கள் மோகினியிடம் அவளையே அனைவர்க்கும் அமிர்தத்தைப் பங்கிட்டளிக்குமாறு வேண்டினர். தேவர்களும் அதனை ஆமோதித்தனர்.

பிறகு மோகினி பிரம்மனிடமிருந்து அமிர்த கலசத்தையும், சுரா பாத்திரத்தையும் எடுத்துக் கொண்டாள். பின்னர் தேவர்களை ஒரு பக்கமும், அசுரர்களை மற்றொரு பக்கமும் வரிசையாக, உட்காரச் செய்தாள். பின்னர் அசுரர்களைத் தன் மோகனச் சிரிப்பால் வசப்படுத்திக் கொண்டே அவர்களுக்கு சுராபானத்தையும், தேவர்களுக்கு அமிர்தத்தையும் பங்கிட ஆரம்பித்தாள்.

மோகினியின் மாயத்தால் அசுரர்களுக்குச் சுராபானத்திற்கும் அமிர்த்துக்கும் வேறுபாடு தெரியவில்லை. ஆனால் அரக்கர்களில் ஒருவன் மட்டும் தனக்கு அமிர்தம் கிடைக்காதென உணர்ந்து தேவர்கள் உருவில் அவர்கள் வரிசையில் அமர்ந்தான்.

இதை யாரும் கவனிக்கவில்லை. ஆனால், விண்ணிலிருந்து பார்த்து விட்ட சூரியனும், சந்திரனும் இது பற்றி மகாவிஷ்ணுவிடம் கூற அவர் சக்கராயுதத்தை ஏவி அவன் தலையை வெட்டச் செய்தார். அவன் மரணமடையவில்லை. தலையும், முண்டமும் வெவ்வேறாக ககனவீதியில் உயிருடன் திரிய பின்னர் அவையே ராகு, கேதுக்களாக மாறி நவக்கிரகங்களில் இரண்டாயின.
இதனால் கோபம் கொண்ட அசுரர்களைப் பகவான் அடக்கி பாதாளத்திற்கு அனுப்பினார். தேவர்களுக்கு தேவராஜ்ஜியம் கிடைத்தது.
http://viduthalai.com/20080105/snews02.html
---------------------------
அழுத்தவும் :- Show all posts

No comments: