Followers

Friday, February 1, 2008

ஹேராம் - என்பது காந்தியாரின் இறுதிச் சொற்களா? காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே கையில் இஸ்மாயில் என்ற பச்சை குத்தப்பட்ட பெயர்

ஹேராம் - என்பது காந்தியாரின் இறுதிச் சொற்களா?
காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே கையில் இஸ்மாயில்... என்ற பச்சை குத்தப்பட்ட பெயர்

லக்னோ, ஜன. 31- இந்துத்துவவாதிகளின் இரட்டை வேடத்திற்கும், பொய்யைப் பரப்பி மக்களை ஏமாற்றுவதற்கும் எல்லையே இல்லை.

காந்தியடிகள் ஜன. 30 - 1948-இல் சுட்டுக் கொல்லப்பட்டு நேற்றுடன் 60 ஆண்டுகள் முடிகின்றன.
அவரைக் கொன்ற புனெயைச் சேர்ந்த பார்ப்பனன் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திடம் பயிற்சி பெற்றவன். இந்து மகாசபைத் தலைவர் வித்யாதர் தமோதர் சவார்கரின் (வி.டி. சவார்க்கரின்) வழி காட்டலில் நடந்த சதியின்படி காந்தியார் கொல்லப்பட்டார்.


இவ்வளவையும் செய்த இந்துத்துவாதிகள், காந்தியாரின் பெயரையும் தங்கள் இயக்கத்திற்கு வலிமை தேடுவதற்குப் பயன்படுத்துவதைப் பாமரர்கள் அறிந்துகொள்வதில்லை. காந்தியார் சுடப்பட்டு விழுந்த பொழுது ஹேராம் எனச் சொல்லிக் கொண்டே உயிர் துறந்தார் என்ற ஒரு பச்சைப் பொய்யை பாமர மக்கள் நம்பும் வகையில் பரப்பிவிட்டனர்.

ராமனை வைத்து அரசியல் நடத்துகிறவர்கள் அல்லவா அந்தப் பேர்வழிகள்! அவர்களுடைய வழிக்கு வராத காரணத்தால் காந்தியாரை வீழ்த்தியவர்கள்,

அதே நேரத்தில், அவருடைய புகழைப் பயன்படுத்திப் பொய்ப் பிரச்சாரம் செய்து, அவர்கள் தூக்கிப் பிடிக்கும் ராமனுக்கு மரியாதை சேர்க்கத் தயங்கவில்லை.

ஆனால், ஆய்வாளர்களின் விசாரிப்புகள், காந்தியார் தம் இறுதிச் சொற்களை ஹே ராம் எனச் சொல்லவில்லை என்பதை மெய்ப்பித்தன.

அதற்கு இப்பொழுது கிடைத்துள்ள ஆதாரம், `மகாத்மா காந்தி: பிரம்மச்சரிய கே பிரயோக் (மகாத்மா காந்தி: உடலுறவு கொள்ளாமையில் சோதனை) எனும் இந்தி நூல் ஆகும். அதை எழுதியவர், தயா சங்கர் சுக்லா `சாகர் என்பவர் புகழ்பெற்ற இந்தி நாளிதழில் இவர் பணியாற்றுகிறார்.70-78மகாத்மாவின் பேத்தி மனு கூறுகையில், ஹே ராம் எனும் சொற்களைத்தான் கேட்க முடிந்தது என்றார்.

ஆனால், இதைப்பற்றி, காந்தியாரைச் சுட்ட நாதுராம் விநாயக் கோட்சே சொன்னபொழுது, ஆ என்ற சொல்லோடு அவர் வீழ்ந்ததாகக் கூறினான்.

காந்தியார் இறந்த இந்த 60 ஆம் ஆண்டுக்குப் பின்பாவது, இந்துத்துவாவின் இரட்டை வேடத்தை மக்கள் புரிந்து கொள்வார்கள் என எண்ணுகிறேன் என்றெழுதியுள்ளார்.
http://viduthalai.com/20080131/news16.html

காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே கையில் இஸ்மாயில்... என்ற பச்சை குத்தப்பட்ட பெயர்

கேள்வி: அன்று காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே கையில் இஸ்மாயில்
என்ற பச்சை குத்தப்பட்ட பெயர்;
இன்றோ அய்யா சிலையை உடைத்த காலிகள் உடலில் `கருப்புச் சட்டை’. இது எதைக் காட்டுகிறது?பதில்: ஆர்.எஸ்எஸ் பார்ப்பன புத்தி மோசடியைக் காட்டுகிறது!

காந்தியாரை ஒரு முஸ்லிம் கொன்று விட்டான் என்ற ஒரு தவறான விஷம பிரச்சாரத்தைக் கிளப்பிவிட்டார்கள்-

-தமிழர் தலைவர் தர்க்கரீதியான பேச்சுசிறீரங்கம் டிச. 20- பார்ப்பனர்களுக்கு எப்பொழுதும் முன் புத்தியில்லை. சிறீரங்கநாதரிடம் மனு கொடுக்காமல் ஏன் ராமனிடம் கொடுத்தீர்கள்? ஏன் உச்சநீதி மன்றத்திற்கு ஓடி மனு போட்டீர்கள். உங்களுக்கு கொஞ்சம்கூட புத்தி இல்லையே என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் அறிவார்ந்த முறையிலே கேள்வி எழுப்பி விளக்கவுரையாற்றினார்.

காந்தியார் கொல்லப்பட்டார். நாதுராம் வினாயக் கோட்சே என்ற மராத்திய பார்ப்பனன் காந்தியாரைச் சுட்டுக் கொன்றான். என்ன நடந்தது?

மிகப் பெரிய விஷம பிரச்சாரத்தை அன்றைக்குத் தொடங்கினார்கள். 1948 ஜனவரி 3010ஆம் தேதி காந்தியார் கொல்லப்பட்ட சம்பவ செய்தி வெளியே வருகிறது. மக்கள் கூட்டம் கூட்டமாக ஆங்காங்கே திரளுகிறார்கள். அந்த நேரத்திலே சொல்லுகின்றார்கள்.

காந்தியாரை ஒரு முஸ்லிம் கொன்று விட்டான் என்ற ஒரு தவறான விஷம பிரச்சாரத்தைக் கிளப்பிவிட்டார்கள்.

காந்தியாரைச் சுட்டுக் கொன்றவன் R.S.S.காரன். அவன் கையிலே இஸ்மாயில் என்று பச்சைக் குத்திக் கொண்டிருந்தான். அதுமட்டுமல்ல இசுலாமியர்களின்மீது பழிபோட சுன்னத் செய்திருந்தான் அவன்.

பிறகுதான் தந்தை பெரியார் அவர்கள் வானொலி மூலமாக மக்களுக்கு தெளிவுபடுத்தினார். காந்தியை சுட்டுக் கொன்றவன் இசுலாமியர் அல்ல. தயவு செய்து எங்கேயும் மதக் கலவரங்கள் வரக்கூடாது என்று சொன்னார்.

அன்றைக்கு முதலமைச்சராக இருந்த ஓமந்தூரார் அவர்கள் தந்தை பெரியார் அவர்களை அழைத்து வானொலியில் பேச வைத்ததன் மூலமாக மக்களிடத்திலே மதக் கலவரம் ஏற்படாமல் தடுத்தார். அந்த காலத்திலே எங்களுடைய தலைவர்களை வானொலி அழைக்காது. பெரியார்தான் அமைதி காக்கவேண்டும் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். காந்தியாரை சுட்டது யார் என்று உறுதியாக இன்னும் தெரியாத நிலையில் நீங்கள் பதற்றப்படக்கூடாது' என்று சொன்னார்.இசுலாமியர்கள் வாழக்கூடிய வாணியம்பாடியிலே ஈரோட்டிலே கலவரம் நடந்தபோது மதக் கலவரங்களில் ஈடுபடக் கூடாது. மக்கள் ஒவ்வொரு வரும் கைகோத்து வாழவேண்டும் என்று சொல்லி பிரச்சாரம் செய்தார்.

அதற்குப் பிறகு காந்தியாரைச் சுட்டுக்கொன்றது கோட்சே என்ற மராத்திய பார்ப்பனன் என்ற தகவல் வெளியானது. தந்தை பெரியார் அவர்கள் எழுதினார்கள் துப்பாக்கிப் பிடித்த கைக்குப் பின்னாலே என்ன சதி என்பதைத்தான் பார்க்கவேண்டுமே தவிர வன்முறை கூடாது. எந்த பார்ப்பனர்க்கும் யாரும் தீங்கு செய்துவிடக் கூடாது என்று தந்தை பெரியார் அவர்கள் வேண்டுகோள் விடுத்து அமைதி காத்தார்.
இந்த பொறுப்புணர்ச்சி வேறு எந்த தலைவருக்காவது உண்டா?

வேறு இயக்கத்திற்கு உண்டா? அதே பொறுப்புணர்ச்சி இன்றைக்கும் பெரியாருடைய தொண்டர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது (பலத்த கைதட்டல்).மொரார்ஜி எழுதியிருக்கிறாரே அதன் காரணமாகத்தான் நாங்கள் கட்டுண்டோம் என்ற நிலையிலே இருக்கின்றோம். அன்றைய காலக்கட்டத்திலே உள்துறை அமைச்சராக இருந்தவர் மொரார்ஜி தேசாய் அவர்கள். அவர் தன்னுடைய சுய சரிதையிலே எழுதியிருக்கின்றார்.

காந்தியார் அவர்கள் சுடப்பட்ட செய்தி கேட்டவுடன் அன்றைய பம்பாய் மாநிலத்தில் பல பகுதிகளில் அக்ரகாரங்கள் சூறையாடப்பட்டன. மராத்திய பார்ப்பனர்கள் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தியை மொரார்ஜி தேசாய் அவர்கள் ஆதாரப்பூர்வமாக எழுதியிருந்தார்கள்.ஆனால் தமிழ்நாட்டிலே அதுபோன்ற கலவரங்கள் நடைபெற்றதா? கிடையாது. எதற்காக இதை சொல்லுகின்றோம். நாங்கள் மனித நேயத்தை மறக்காதவர்கள். >>VIDUTHALAI 21.12.06
-------------------------------
படித்துவிட்டீர்க‌ளா?
பைபிளின் வகைகள்-- பைபிளில் அக்கிரமஙகள் ஆபாச, காம அபத்தஙகள் ஒழுக்க எதிர்மறைகள், பெண் இழிவு
-----------------------
மற்ற பதிவுகள்

No comments: