Followers

Wednesday, January 30, 2008

பூணூல் புத்தி! பார்ப்பான் திருந்திவிட்டான் என்று பேசும் மேல்தாவிகள். தினமணிகூட திருந்திவிட்டதே!!!

தமிழ்நாட்டில் தமிழ்மொழி தொடர்பாகவோ, தமிழினம்பற்றியோ மறுமலர்ச்சிச் செயல்பாடுகள் மலரும்பொழுதெல்லாம் மாரடித்துப் புலம்புகின்றதே - ஒரு குறிப்பிட்ட வட்டாரம் - அது ஏன்?

சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டினால் அதற்கொரு கூப்பாடு; தமிழ் மொழிக்குச் செம்மொழித் தகுதி என்றால், அதற்கொரு குறுக்குச்சால்!

இப்பொழுது தைத்திங்கள் முதல் நாள்தான் - தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்று அரசு அறிவித்தால் அடேயப்பா, ஆத்திரம் அனல் பெருக்காய்க் குமட்டிக் கொண்டு வருகிறது அந்த வட்டாரத்துக்கு.ஏனிந்த நிலை? அவர்கள் தமிழர்கள் இல்லையா? நியாயமான கேள்வி.

தமிழர்களாக இருந்தால் தானாடாவிட்டாலும் சதை ஆடியிருக்குமே! இங்கே இருக்கின்ற ஆரியத்தின் தொங்கு சதைகள் வேண்டுமானால், அந்த வட்டாரத்துக்காரர்களைத் தமிழர்கள் என்று கூறிட ஆசைப்படலாம். ஆனால், அவர்களைப் பொறுத்தவரை எப்பொழுதுமே தங்களைத் தமிழர்கள் என்று ஒருபோதும் ஒப்புக்கொண்டதில்லையே!

அவர்களைப்பற்றி அறிஞர் அண்ணா அவர்கள் மிகவும் நேர்த்தியாக ஓவியம் தீட்டிக் காட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் பிறந்தும், தமிழ்மொழி பயின்றும், தமிழரெனச் சொல்லிக் கொண்டபோதிலும், தமிழ்மொழி மூலம் பிழைத்து வந்தாலும், தமிழிலே பண்டிதரெனப் பட்டம் பெற்றாலும், சங்கநூல் கற்றாலும் பார்ப்பனர்கள் தமிழிடத்திலே அன்பு கொள்வதில்லை. அதனைத் தம் தாய்மொழியெனக் கருதுவதில்லை. அவர்களின் எண்ணமெல்லாம் வடமொழியாகிய சமஸ்கிருதத்தின்மீதுதான். (திராவிடநாடு, 2.11.1947)

இதைவிட எவர்தான் பார்ப்பனர்களை எலும்பு, நரம்பு, சதை வரைபடம் பிடித்துக் காட்ட முடியும்? பார்ப்பனர்களின் செயல்பாடுகளைக் கூர்மையாகக் கவனிப்பவர்களுக்கு கறாராக அவர்களின் இந்தப் புத்தி பளிச்சென்று புலப்பட்டு விடுமே!

தைத்திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தொடக்கமாக அறிவிக்கப்படும் என்று சென்னைப் புத்தகப் பூங்கா விழாவிலே முதலமைச்சர் அறிவித்தார்.

பொங்கலன்று (15.1.2008) வெளிவந்த தினமணி ஏட்டின் முதல் பக்கம் தலைப்புச் செய்தி - இன்று பொங்கல் நாள்! அதன் முதல் பத்தியின் கடைசி வரி இப்படி அமைந்திருந்தது.இனிவரும் ஆண்டுகளில் தமிழர்தம் ஆண்டு, தை மாதத்திலிருந்து தொடங்கும் என்பதும் நல்ல அறிகுறி!

பரவாயில்லையே - தினமணிகூட திருந்திவிட்டதே என்று சிலர் நினைக்கலாம்.அப்பொழுது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத காலகட்டம். (ஏதோ சொல்லுகிறார் - நடக்கவா போகிறது என்று நினைத்திருக்கக் கூடும்).

ஆளுநர் உரையிலே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வந்தவுடன், திரிநூல்காரர்களுக்குத் தேள் கொட்டி நெரியும் ஏறிவிட்டது.

முன்னுக்குப்பின் முரண்பாடுகள் நிரம்பி வழியும் கட்டுரை ஒன்றை நடுப்பக்கத்தில் வெளியிட்டு, தன் ஆற்றாமையை அப்பட்டமாகக் காட்டிக்கொண்டு இருக்கிறது.26.1.2008 தேதியிட்ட தினமணி முதல் பக்கத்தில் சன்னமான ஒரு விஷமம்!

இதுதான் அந்த விஷமம்!
தமிழ்ப் புத்தாண்டு தைக்கு மாற்றம் - அரசு இந்தக் கார்ட்டூனுக்கும், தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் தை முதல் நாள் என்பதற்கும் ஏதாவது அறிவு ரீதியான தொடர்பு இருக்கிறதா? உச்சிக்குடுமிக்கும் உள்ளங்காலுக்கும் முடிச்சுப் போடும் வேலைதானே இது?

கனவு அவாளுக்கு மட்டும்தான் வருமா? நமக்கும் கனவு வந்தது என்று சொல்ல ஆரம்பித்தால் தாங்குவார்களா?பெரும்பாலும் சம்பந்தாசம்பந்தம் இல்லாமல்தான் கனவுகள் வரும். அதை எல்லாம் எழுத்தாக்க முடியுமா?

சரி, சனவரி 15 ஆம் தேதியிருந்த புத்தி - 26 ஆம் தேதி காணாமல் போவானேன்?

நாரதன் என்கிற ஆண் கடவுளுக்கும், கிருஷ்ணன் என்ற ஆண் கடவுளுக்கும் 60 பிள்ளைகள் பிறந்தன - அவைதான் தமிழ் ஆண்டுகள் என்று புராணம் எழுதி வைத்துக் கொண்டுள்ள ஆபாசக் கூட்டம், அதுபற்றிப் பேசத் துப்பில்லையே - ஏன்? துவேஷத்தையே ரத்த ஓட்டமாகக் கொண்டுள்ள கூட்டம் அல்லவா - அப்படித்தான் அம்மணமாக ஆடும்.

பார்ப்பான் திருந்திவிட்டான் - என்று பேசும் மேல்தாவிகள் இந்தச் சந்தர்ப்பத்திலாவது கொஞ்சம் புத்தியைச் செலவழித்துப் பார்ப்பது நல்லது! >>மயிலாடன்
http://viduthalai.com/20080128/news03.html
-----------------
படித்துவிட்டீர்க‌ளா?
விபச்சாரமே ஜாதிக்குக் காரணம்! கேவலமான ஜாதி ‘சனியன்’ களின் உயர்வும் தாழ்வும் எப்படி ?.

சுப்ரபாத ஒலி தமிழன் காதில் விழலாமா? சோ இராமசாமியின் திமிர்!! பார்ப்பனர் சூழ்ச்சி தெரியவில்லையா? சூடுசுரணை வரவில்லையா?

ஆண்குறி மட்டும் வானத்தின் வழியாக விர்ர்...றென்று பறந்து ஆனந்தமாக உடலுறவு கொண்டு விட்டு திரும்பி விடுகிறது. !!!!
---------------------------
மற்ற பதிவுகள்

No comments: