Followers

Thursday, January 10, 2008

பிணவாடை அடிக்கும் மோடியின் தமிழக வருகை! ஆர்.எஸ்.எஸ். புரோக்கர் துக்ளக் சோ அன்று முதல் இன்றுவரை

குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்று குவித்திட தனது அரசு இயந்திரத்தை பயன்படுத்திய சங்பவார சக்திகளுக்கு 3 நாட்கள் வரை பெருந்தன்மையுடன் அனுமதி அளித்து உற்சாகப் படுத்திய மதவெறி நரேந்திர மோடி தேர்தலிலும் நின்று வெற்றியும் பெற்று விட்டார்.

மோடியின் வெற்றி அகில இந்திய தேர்தலிலும் எதிரொலிக்கும் என பாஜக வினர் புளங்காகிதமடைந்து வருகின்றனர் மென்மையான இந்துத்துவாவை கைவிடாத காங்கிரஸ், குஜராத்தில் வெற்றி வாய்ப்பு போய் விட்டதே என புலம்பியிருக்கிறது.

இந்நிலையில், தமிழகத்தின் அறிவிக்கப்படாத ஆர்.எஸ். எஸ். தலைவராக செயல்பட்டு வரும் அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதா மோடியின் வெற்றிக்கு மனம் குளிர்ந்து வாழ்த்து தெரிவித்ததுடன் கடந்த முறை போல நேரடியாக சென்று பதவியேற்பு விழாவிலும் கலந்து கொண்டு ஆரிய ஜோதியில் சங்கமமாக திட்டமிட்டிருந்தார். கடைசி நேரத்தில் அந்த பயணம் ஏனோ ரத்து செய்யப்பட்டு விட்டது.

இந்நிலையில் மத வெறியன் நரேந்திர மோடி ஆர்.எஸ்.எஸ். புரோக்கர் சோ. நடத்தும் துக்ளக் பத்திரிக்கையின் ஆண்டு விழாவில் கலந்து கொள்ள ஜனவ 14 அன்று தமிழகத்திற்கு அழைக்கப்பட்டிருக்கிறார் பின்னர் ஜெயலலிதா விடுத்திருக்கும் சிறப்பு அழைப்பின் பேரில் போயஸ் தோட்டத்திற்கு மோடி சென்று ஜெ.வுடன் அளவளாவ இருக்கிறார். இதை பத்திரிக்கையாளர் சந்திப்பில் பூரிப்புடன் சொல்லியிருக்கும் ஜெ. அ.தி.மு.க. பி.ஜே.பி. கூட்டணி மலர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதையும் மறுக்க வில்லை.

""இனிமேல் பி,ஜே.பி.யுடன் கூட்டணியே வைக்க மாட்டேன்'' என்று சத்தியம் செய்த இந்த நம்பிக்கை துரோகிக்குத் தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் சில சமுதாயத் துரோகிகள் ஊன் உறக்க மின்றி, வெட்கமுமின்றி தேர்தல் களப் பணியாற்றினர் இந்த சுயநலவாதிகள். இப்போது முகத்தை எங்கே வைத்து கொள்ளப் போகின்றார்கள் என்று தெரியவில்லை.

நரேந்திர மோடியின் தமிழக வருகை முஸ்லிம், கிருத்துவ, ஒடுக்கப்பட்ட மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கங்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த நரேந்திர மோடி அவனது சொந்த மாநிலத்தில் வேண்டுமானால் சகல பாதுகாப்புடன் சுகமாக இருக்கலாம் ஆனால் சமூக நீதி மற்றும் விழிப்புணர்வுள்ள முஸ்லிம் இயக்கங்களை கொண்டுள்ள தமிழகத்திற்கு வர இருக்கும் நரேந்திர மோடிக்கு இங்கு எப்படிப்பட்ட வரவேற்பு(?) இருக்கும் என்பது காவல்துறைக்கும் தமிழக அரசுக்கும் தெரியாததல்ல.

ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் கோரச் சாவுக்கு காரணமானவனை புன்னகையுடன் தமிழக மண்ணில் கால் பதிக்க எந்த உணர்வுள்ள மனிதனும் அனுமதிக்க மாட்டான். அதை மீறி மோடி வந்தால் இந்திரா காந்தி தமிழகத்திற்கு வந்த போது தி.மு.க. தொண்டர்கள் எந்த வரவேற்பை அளித்தார்களோ அதை, மோடிக்கு கொடுக்க தமிழர்கள் தயங்க மாட்டார்கள்.

எனவே மோடியை தமிழகத்திற்கு வர தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என்று எச்சரிக்கிறோம்.

பாதுகாப்பு காரணங்களுக்காக அரசியல் தலைவர்களுக்கு சில இடங்களுக்கு செல்வதற்கு அனுமதி மறுக்கப் படுவது புதிதல்ல. எனவே நரேந்திர மோடியை தமிழகத்திற்கு அனுமதிக்கச் செய்வது அமைதியுடன் இருக்கும் தமிழகத்தில் தேவையற்ற பதட்டத்தை எற்படுத்தும் என்பதை தமிழக அரசும், காவல்துறையும் உணர வேண்டும். நிகழ்ச்சியை எற்பாடு செய்யும் பாசிச ஆதரவாளர்கள் தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வார்களா?
http://www.tmmkonline.org/tml/others/108722.htm

துக்ளக் சோவின் ஆர்.எஸ்.எஸ். ஆதரவு! அன்று முதல் இன்றுவரை-

தமிழர் திருநாள் என போற்றப்படும் தை முதல் நாள் ஜனவரி 14 அன்று துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழா நடைபெறுகிறது. சென்ற முறை அத்வானி அழைக்கப் பட்டார். இந்த முறை நரேந்திர மோடி அழைக்கப்பட்டுள்ளார்.

பாபரி மஸ்ஜித் இடிப்பின் முக்கியக் குற்றவாளியான அத்வானி, நாட்டில் எராளமான கலவரங்களுக்குச் சூத்திரதா ரதயாத்திரை நடத்தி பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படக் காரணமானவர்.

நரேந்திர மோடி, பேரைக் கேட்டாலே பிணவாடை அடிக்கும் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலைகளைத் திட்டமிட்டு நடத்தி முடித்த கொலைப்படைத் தலைவன். இவர்களையெல்லாம் தமிழகத்திற்கு சிறப்பு விருந்தினராக துக்ளக் சோ அழைப்பது எதனால்?
நடுநிலையாளர் என்ற போர்வைக்குள் ஒளிந்து நர்த்தனம் செய்கின்ற சோ, எத்தகைய ஊழுத்து பயங்கரவாதி ஊன்பதை இதன்மூலம் அறியலாம்.
தமிழகத்தில் சங்பரிவார சக்திகளைக் காலூன்ற வைத்ததில், இந்த சோவுக்குப் பெரும் பங்குண்டு. ஆர்.எஸ்.எஸ்.ஸின் தலைவராக இருந்த தேவரஸ் தமிழ்நாடு எளிதில் உடைக்க முடியாத கடுங்கொட்டையாக இருக்கிறது என 1970களிலேயே அங்கலாய்த்துள்ளார்.

தமிழ்நாட்டில் சங்பரிவாரத்தை வளர்க்க 1949ம் அண்டே 13 சித்பவன் பார்ப்பனர்களையும் உள்ளடக்கியக் குழு ஐன்று அனுப்பி வைக்கப்பட்டது. 1979 வரை அவர்களால் இங்கே இயக்கம் வளர்க்க முடியவில்லை.

நெருக்கடி நிலைப் பிரகடனப்படுத்தப் பட்டபோது, ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். 1975ல் ஆர்.எஸ்.எஸ். தலைவர் தேவரஸ் இந்திரா காந்தியிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு விடுதலை ஆனார்.

1975ம் ஆண்டு துக்ளக் பத்திரிகை தனது ஆசிரியர் குழுவை, ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்திற்கு அனுப்பி, அங்குள்ள நடைமுறைகளை சிறப்பாக சித்தரித்து, பத்திரிகையில் பிரசுரித்தார். இதை சங்பரிவாரம் மிகப்பெரிய உதவியாகக் கருதியது.
மரண வியாபாரியை இந்த எழுத்து வியாபாரி இங்கே மீண்டும் அழைத்துள்ளார். விஷமிகள் வீரியம் பெறும் முன் விழித்துக் கொள்ள வேண்டும் தமிழகம்.
http://www.tmmkonline.org/tml/others/108721.htm
தகவலுக்கு நன்றி : >> அன்பர் சதாசிவம் அவர்கள்
----------------
மற்ற பதிவுகள்

No comments: