Followers

Tuesday, January 29, 2008

அமிர்த,புனித,மண்டை ஓடு வணிக> கங்கை ``யோக்கியதை’’?? + குமுதம்: மோடி!! மலம் சுமந்து பார்!!

நீரெல்லாம் கங்கை; ஊரெல்லாம் காசி எனப் பெருமையாக இந்துக்கள் கூறுவார்கள்.
உலகிலேயே அசிங்கம் பிடித்த மாசு படிந்த நீர் கங்கை நீர்தான் என்பது ஆய்வு முடிவு.

அந்தக் கங்கை ஆற்றில் மிதந்து செல்லும் பிணங்களை கரைக்கு இழுத்து, தலைகளை மட்டும் தனியாக அறுத்து எடுத்துக் கங்கைக் கரைகளில் புதைத்து வைத்து ஏழெட்டு மாதங்களுக்குப் பிறகு தோண்டியெடுத்து மண்டை ஓடுகளை விற்கும் ராம்சிங் எனும் ஆளைப் பொறிவைத்துப் பிடித்து கைது செய்ய வைத்திருக்கிறது - தைனிக்ஜாக்ரன் எனும் இந்தி நாளேடு. இப்பத்திரிகைக் குழுவினர் டிசம்பர் 18-ஆம் நாள் இதழில் இதுபற்றிய செய்தியை வெளியிட்டது.அரித்வார் காவல் ஆய்வாளர், ராம்சிங்கைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளாராம். ராம்சிங் எடுபிடிதானாம். இவனுக்கு எஜமான் அரிசிங்தானாம். அரிசிங்கைத் தேடுகிறார்களாம்.

இமயமலை அதன் அடிவாரங்களில் சாதுக்கள் எனும் பெயரில் திரிசூலம் ஏந்திய காட்டுமிராண்டிகள் உண்டு. கும்பமேளாவில் அம்மணமாக ஊர்வலம் வரும் ஆள்கள். இவர்கள், மொத்தம் 13 குழுக்களாக இருக்கிறார்கள். அஹாராக்கள் எனப்படும் இந்தக் குழுக்களில் 7 அஹாராக்களைச் சேர்ந்தவர்கள் இறந்துவிட்டால் அவர்களை ஜலசமாதி செய்வார்களாம்.

கங்கையில் எறியப்படும் இப்பிணங்களை மீன்களும் நாய்களும் நரிகளும் தின்றுவிடுமாம். ஜலசமாதி செய்தால்தான் அவர்களின் ஆத்மா முக்தி அடைந்து மோட்சம் போகுமாம். அப்படிப்பட்ட பிணங்களை ராம்சிங்கும், அரிசிங்கும் பின்னப்படுத்தியதை அறிந்து பண்டாரப் பரதேசிகளின் பொதுச்செயலாளர் ஹன்ஸ்தாஸ் என்பவர் மிகவும் கொதித்துப் போய்விட்டாராம்.

மாவட்ட ஆட்சித் தலைவர் கூட்டிய கூட்டத்தில் விவாதம் செய்தாராம். மீன்களைப் பிடித்து மனிதர்கள் சாப்பிட்டு விடுவதால் பிணந்தின்பதற்கு மீன்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது என்பது குறை. மீன்கள் குறைந்துவிட்டதால் பிணங்கள் மிதக்கின்றன; பிணங்கள் மிதப்பதால் ராம்சிங் தலையை வெட்டி எடுக்கிறான் என்று புகார் கூறினாராம். எப்படி லாஜிக்?

ஜலசமாதியில் இப்படிக் கோளாறு ஏற்பட்டுவிட்டதால் மாற்று ஏற்பாடாக பூமி சமாதி செய்யப்போகிறார்களாம். அதற்காகப் பெரிய இடத்தை இடுகாடாக ஒதுக்கித் தருமாறு கலெக்டரிடம் கேட்டிருக்கிறார்களாம் (பார்க்க: ஜூனியர் விகடன் -30-1-2008)

ஜலசமாதி அல்லது பூமி சமாதி. அப்போதுதான் முக்தி, மோட்சம் என்கிறார்கள் இவர்கள். ஆனால், அதர்வவேதத்தின்படி நீர்க்கடன் - அதாவது பிணத்தைச் சுட்டெரித்துக் கருமாதி செய்வதுதான் விதிக்கப்பட்டிருக்கிறது; இதுதான் இந்துக்கள் கடமை என எழுதப்பட்டிருக்கிறது.

பூமிசமாதி (பிணத்தைப் புதைப்பது) கிறித்துவ, இசுலாமியப் பழக்கம் என்கிற வழக்கம் உள்ளது. எது சரி? எது இந்து மதப் பழக்கம்?- அரசு
http://viduthalai.com/20080128/news21.html
அமிர்தம்? உலகிலேயே மோசமான அழுக்கு நீர்.ஆண்டவனுக்கும் அதே அழுக்கு நீர்தான்

அலகாபாத், மே 27- அலகாபாத் நகரில் கங்கை ஆற்றுடன் யமுனா ஆறு கலக்கிறது. இந்த இடத்தை திரிவேணி சங்கமம் என்கிறார்கள். அதாவது மூன்று ஆறுகள் கலக்குமிடம் என்று பொருள்.
இரண்டே ஆறுகள் கலப்பதை மூன்று ஆறுகள் என எப்படிக் கூறுகிறார்கள்?

அது தான் இந்து மதப் பித்தலாட்டம். சரசுவதி என்று ஒரு ஆறும் இங்கே கலக்கிறது என்று கதையளந்து விட்டார்கள். நான்கு பக்கமும் சுற்றிப் பார்த்தாலும் சரசுவதியைக் காணமுடியாது.
இந்த நதியைக் கண்டுபிடிக்க நான்கு கோடி ரூபாயைச் செலவழித்தார் பா.ஜ.க., கல்வி அமைச்சராக இருந்த முரளிமனோகர் ஜோஷி எனும் ஆர்.எஸ்.எஸ்., பார்ப்பனர்.

மக்கள் வரிப் பணம் மூடத்தனத்துக்குப் பாழானது. ``அண்டை வீட்டு நெய்யும், என் பெண்டாட்டி கையும்’’ என்பதைப்போல!

உலகிலேயே மோசமான அழுக்கு நீர் கங்கை ஆற்றில் ஓடுவதுதான். அதற்கடுத்த நிலையில் அசுத்தமான நீர் யமுனாவில் ஓடுவது. இந்த இரண்டும் சேர்ந்தால் - அசுத் தம் அசுத்தத்தோடு சேர்ந்தால் - மகா அசுத்தம்.

இந்த மகா அசுத்தம் புனிதமானது என்கிறார்கள். குளித்தால் புண்ணியம் என்கிறார்கள்.
இதை நம்பிக் குளித்துவிட்டுத் தங்கள் கடவுள் சிவனைக் குளிப்பாட்டுவதற்கு அதே அசுத்த நீரைக் காவடி கட்டித் தூக்கிச் செல்கின்றனர் இந்து மத மூட நம்பிக்கையாளர்கள். என்றைக்கு இவர்களெல்லாம் திருந்துவது?
viduthalai.com
புனித கங்கையின் ``யோக்கியதை’’ ``அவர்களே’’ கூறுகிறார்கள்
டாக்டர் வீரபத்ர மிஷ்ரா, பனராஸ் ஹிந்து பல்கலைக் கழகத்தின் முன்னாள் பொறியியல் பேராசிரியர். தற்போது வாராணாசியிலுள்ள சங்கட் மோகன் கோயிலின் மஹந்த் (பூசாரி). 1992-ல் அய்க்கிய நாடு சபையின் சுற்றுச்சூழல் திட்டத்தின் உலகம் போற்றும் 500 பேரில் இவர் பெயரும் இடம் பெற்றது.
கங்கையில் வந்து சேரும் கழிவுப் பொருட்கள் பற்றி மிஸ்ரா நன்கு அறிவார். 1982-ல் நிறுவப்பட்ட சங்கட் மோகன் அறக்கட்டளை மூலம் அவர் கங்கையை தூய்மைப்படுத்துகிறார். கங்கைக்கு புனர்வாழ்வு தருவது, ஏழை மாணவர்களுக்கு கல்வி, ஆரோக்கிய பராமரிப்பு அளிப்பது, பழைய சடங்குகளை சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பான முறையில் மாற்றி அமைப்பது போன்றவை இந்த அறக்கட்டளையின் குறிக்கோள்கள்.

களங்கம் நிறைய சேர்ந்துவிட்டது. இதற்கான தொடர்ந்த முயற்சிகள், கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து தூய்மைப்படுத்துவது ஆகியவை நடைபெற்ற போதும் குளிக்க லாயக்கில்லாத அளவு நீர் நிலை மோசமாயுள்ளது. சாக்கடைகள் அதனுள் விடப்படுகின்றன என்று புலம்புகிறார் மிஸ்ரா.
இதனால் கங்கை நீர் குடிக்கவோ, குளிக்கவோ பயனற்றுப் போய்விட்டது.

``கங்கையைத் தூய்மைப்படுத்த இப்போது அரசால் செயல்படுத்தப்படும் முறை, மனிதக் கழிவு பாக்டீரியாவை அகற்றும் திறனில்லாததாக இருக்கிறது. எனவே நீர் நன்னீராக மாறாமல் உள்ளது. மனிதக் கழிவில் உள்ள கிருமிகளால்தான் காலரா, மஞ்சள் காமாலை, டைபாய்ட் போன்ற வியாதிகள் பரவுகின்றன.

வீட்டுச் சாக்கடை, தொழிற்சாலைக் கழிவுகள் 95 சதவீதம் சூழல் கேட்டிற்கு காரணம். சுமார் 60 ஆயிரம் இந்துக்கள், கங்கை நதியை யாரும் அசுத்தமாக்க முடியாது என்ற நம்பிக்கையில் தினமும் இதில் குளிக்கிறார்கள்.

இதனால் எந்தப் பயனுமில்லை. மக்களுக்கு அறிவு ஏற்பட வேண்டும். தினந்தோறும் அதில் கேடுகெட்ட கழிவுகளைக் கொட்டக் கூடாது. இந்த மக்கள் மரபு சார்ந்த நம்பிக்கைகளையும் விட மாட்டார்கள்.
கங்கை நீரை அமிர்தம் எனப் பருகுபவர்கள் வியாதி வந்து சாவார்கள்.

இந்த கலாசாரம் காணாமல் போகும்’’ என்கிறார் அவர். எதிர்கால தலைமுறை கங்கையைப் போற்ற வேண்டும் என்றால் நதி அசுத்தமாகக் கூடாது. இல்லையென்றால் வருங்கால தலைமுறை புனித கங்கைக்கு பதிலாக அழுக்குச் சாக்கடையையே காண வேண்டிவரும். டாக்டர் மிஸ்ரா தொடர்ந்துப் போராடுகிறார்.>நன்றி: ``த சன்டே இந்தியன்’ 17.6.2007
http://viduthalai.com/20070617/news012.htm
`குமுதம் பார்வையில் `மோடி

கேள்வி: `மனித மலத்தை சுமந்தால் மோட்சம் கிடைக்கும் என்று மோடி சொன்னது பற்றி?

பதில்: தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது தமிழக சட்டமன்றத்தில் அதை எதிர்த்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, `தேவதாசி முறை கலாச்சார அடையாளம், நம் பண்பாடு, அதை ஒழிக்கக் கூடாது என்றார்.

கோபமாக எழுந்த முத்துலட்சுமி ரெட்டி `இத்தனை நாள் அந்த கலாச்சாரத்தை நாங்கள் சுமந்தோம், கொஞ்ச நாட்களுக்கு உங்கள் வீட்டுப் பெண்கள் சுமக்கட்டும் என்றார். சத்தியமூர்த்தி வாயடைத்துப் போனார்.

மோடிக்கும் அதே பதில்தான். மோட்சம் கிடைப்பதற்கு நீங்களும் கொஞ்ச காலம் மலம் சுமந்து பாருங்களேன் .`குமுதம் 30.1.2008
http://viduthalai.com/20080128/news22.html
-------------------------------------
படித்துவிட்டீர்க‌ளா?

பிறப்பு உறுப்புகளை வழிபடும் பழக்கம் + மாதாவின் மாத விலக்கு `மாலை’ யாம்!

நீ மனிதனே அல்ல ஜடம்தான். !!!!...கடவுள் பெயரைச் சொல்லி தண்ணீருக்கு மதச் சாயம் பூசிவிட்டால்...? ரத்தம் வழிய நீ உன்னை வருத்திக் கொள்வாயானால் ?.

கர்ப்பமான கிளி... ஒரு குட்டியைப் போட்டது !!!. கிளி குட்டி போட்டதா?... புராணம் அப்படித்தான் சொல்கிறது.
------------------------------------------
மற்ற பதிவுகள்

No comments: