Followers

Saturday, January 5, 2008

இப்படிப்பட்ட கணவன் அமைய வேண்டும் என்று தான் பெண்கள் விரதம் இருந்து வேண்டுகிறார்களா? ஸ்ரீ ராமஜெயம் எழுதும் பெண்களின் கவனத்திற்கு

ஸ்ரீ ராமஜெயம் எழுதும் பெண்களின் கவனத்திற்கு (1)
சீதை குடிகாரி என்று ராமனே சொல்லி இருக்கிறான்.

ராமனின் சிறப்பியல்பாகச் சொல்லப்படும் முக்கிய விஷயமே, 'இந்த இப்பிறவிக்கு இரு மாதரைச் சிந்தையாலும் தொடாத யோக்கியாம்சம்' என்பார்கள். அவன், ஒரே மாதான சீதையையாவது சிந்தையால் தொட்டானா என்பது சந்தேகமாக இருக்கிறது.

இதற்கான ஆதாரங்களாக நான் வால்மீகிக்கெல்லாம் போகப்போவதில்லை. கம்ப ராமாயணத்திலிருந்து தான் எடுத்து வைக்கப் போகிறேன். இவற்றைப் படித்த பிறகு நம் பெண்களை தமது ராம பக்தியைத் தொடரட்டும்.

"நீதி தவறிய அரக்கனின் நகரில் அவனுக்கு அடங்கி அறுசுவையுள்ள உணவுகளை விருப்பமுடன் உண்டு நெடுங்காலம் நீ உயிர் வாழ்ந்து இருக்கிறாய். உன் நல்லொழுக்கம் பாழ்படவும் நீ இறந்தாயில்லை.அந்த அச்சமே இல்லாமல் இப்போது என்ன நினைப்போடு மீண்டும் வந்திருக்கிறாய் என்னிடம்? இன்னும் உன்னை விரும்புவேன் என்பது உன் எண்ணமோ?"
இவைதான், ராமன் ராவணனைக் கொன்ற வெற்றி வீரனாய் நின்றிருக்க, சீதை அத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு தன்னை மீட்க வந்திருப்பவனிடம் ஆவலாக வந்து அவன் எதிரே நின்ற போது

அவளை வரவேற்ற ராமனின் முதல் வார்த்தைகள். "உன்னை மீட்பதற்காகவா போர் செய்தேன் என்று நினைத்தாய்? மனைவியைக் கவர்ந்து சென்றவனைக் கொல்லவில்லை என்கிற பழி என்னை வந்து சேர்ந்துவிடக் கூடாதே என்பதற்காகத் தான்

இந்தப் போரே"" என்னுடைய அன்பினை மறந்து இலங்கையில் மாமிசத்தையும், மதுவையும் அமிழ்தத்தினை விட சுவை மிக்கதாக எண்ணி இலங்கையில் உண்டனையே. இனி நீ எப்படி எனக்குத் தகுதியானவளாக இருக்க முடியும்?""

நல்ல குலத்தில் பிறவாமல். புழுவைப் போல் மண்ணிலிருந்து தோன்றியவள் தானே நீ? அதற்கு ஏற்ற இயல்பினைக் காட்டி விட்டாயே""

நாணம் முதலான பெண்மைக்குரிய குணங்களும், கற்பறம் என்கிற கலக்கமற்ற தன்மையும், நல்லொழுக்கமும், கணவனைக் கடவுளாகக் கருதும் தெளிவும் புகழும், உன் ஒருத்தியின் பிறப்பால் உலகத்தை விட்டே அழிந்து விட்டனவே""
நல்ல குலத்துப் பெண், கணவனைப் பிரிய நேர்ந்தால், புலன் பொறிகளை அடக்கி வைப்பர்; தலைமயிரைப் பேணாது சடையாகத் திரிய விடுவர்; வாழும் போது பழி உண்டானால் தம் உயிரை விட்டுப் பழியைப் போக்கிக் கொள்வர்"" உன் தீயொழுக்கம் என் அறிவை அறுக்கிறது; நீ செய்யக் கூடியது என்னவென்றால், உடனே நீ இறப்பாயாக; அல்லது உனக்குத் தக்கதொரு வேறிடத்துக்குச் செல்வாயாக"இவை தாம் ராமன் உதிர்த்திருக்கும் மற்ற பொன்மொழிகள். (கம்பராமாயணம், யுத்த காண்டம் - பாடல்கள் 3954 முதல் 3960 வரை).

அதுவும் தனிமையில் அல்ல; தம்பி, விபீஷணன், சுக்ரீவன், அனுமன், வானரப் படைகள், சீதையை அழைத்து வந்த அரக்கர் குலப் பெண்கள் என்று எல்லோர் மத்தியிலும்.இப்படிப்பட்ட கணவன் அமைய வேண்டும் என்று தான் பெண்கள் விரதம் இருந்து வேண்டிக் கொள்கிறார்களா?
Posted by RATHNESH http://rathnesh.blogspot.com/2007/09/1_22.html
-------------------
ராமனைப் போல் ஒரு கணவன் வேண்டும் என்று தவம் இருப்பவர்கள் யோசிக்கட்டும். ஸ்ரீ ராமஜெயம் எழுதும் பெண்களின் கவனத்திற்கு (2) )

"சீதையின் உந்திச் சுழிக்கு சிறு கூதாளிச் செடியும், நந்தியா வர்த்தமும் என்னும் இவற்றின் வட்ட வடிவமான மலர்களால் பொருந்திய அழகிய துளைகள் என்கிற உவமையை விட, கங்கையாற்றின் நீர்ச்சுழி அவளது கொப்பூழ்ச் சுழியை ஒத்திருக்கும் என்பது சரி

"அவளுடைய வயிற்றில் பொன்னிறமான கொடியின் வடிவான மூன்று மடிப்புகள் உண்டு. அவை மன்மதன் மூன்று உலகங்களிலும் சிறந்த அழகி இவள் என்று நிலை நிறுத்திய வெற்றியின் அடையாள ரேகைகள் ""மணிச்சிமிழ், பொற்குடம், தென்னையின் இளநீர்,பவழத்தினால் கடைந்து செய்யப்பட்ட திரண்ட சொக்கட்டான் காய் பகலில் வெளிப்பட்ட சக்கரவாகப் பறவை என்றெல்லாம் சொல்லியும்

அவள் கொங்கைகளுக்கு சரியான உதாரணம் சொல்ல முடியாமல் வருந்துவேன்""சிவந்த நிறத்தைக் கொண்ட ஓர் அமிழ்தம் இல்லை; சீதையின் உதடுகளைப் போல அத்துணைச் சிவந்த தேனும் இல்லை.அப்படியே இருந்தாலும் அவை எடுத்து உண்டபோதன்றி நினைத்த அளவில் ஒப்பில்லாத மகிழ்ச்சியை உண்டாக்க மாட்டா""

முகபடாம் அணிந்த மதமுடைய ஆண்யானையின் தந்தங்கள் என்பதற்கும் நிகராகாத கொங்கை மலைகளைத் தாங்கிப் பாரம் பொறுக்காத வானின் மின்னல் போன்ற இளங்கொடி"மேற்சொன்னவை எல்லாம் ராமன் தன் மனைவியைப் பற்றி அனுமனிடம் அடையாளமாய்ச் சொன்ன வார்த்தைகளில் சில. (கம்ப ராமாயணம் - கிஷ்கிந்தா காண்டம் - பாடல் எண் 770 முதல் 809 வரை - நாடவிட்ட படலம்).

( குகனுடன் படகில் ஆற்றை கடக்கும் பொழுது ‌களைத்தவர்கள் எவ்வாறு சீதையின் பென்குறியை நனைந்த சேலையின் ஊடே பார்த்து களைப்பு நீங்கி பயனித்தார்கள் என்பதையும். எவ்வாறெல்லாம் சீதையின் அங்கங்களை ( மர்ம ஸ்தான‌ம் உட்பட‌ ) எவ்வள‌வு கீழ்த்தரமாக அனுமானிடம் ராமன் விவரிக்கிறான் என்பதையும் அறிய‌ அறிஞர் அண்ணா எழுதிய " கம்பரசம்" என்ற நூலை வாங்கி படியுங்கள். )

தென் திசையில் சீதையைத் தேடப் போகும் அனுமன் இந்த அடையாளங்களைக் கொண்டு அவள் தான் சீதை என்று கண்டு கொள்ள வேண்டுமாம். என்ன கண்றாவி. எந்த ஒரு பெண்ணும் தன் கணவன் தன்னைப் பற்றி இத்தகைய 'புகழுரை'களை ஓர் அந்நியனிடம் விவரிப்பதை ஜீரணிப்பாளா?

ராமனைப் போல் ஒரு கணவன் வேண்டும் என்று தவம் இருப்பவர்கள் யோசிக்கட்டும்.இதில் கூத்து என்னவென்றால் இப்படிப் புலம்பிய பிரகஸ்பதி ராமன் தான் அவள் மீண்டு வந்ததும், "நானொன்றும் உன்னை மீட்பதற்காக சண்டையிடவில்லை; மனைவியைக் கடத்தியவனை ராமன் கொல்லாமல் விட்டானே என்கிற பழி ஏற்படாமல் பார்த்துக் கொள்ளத்தான் இந்த யுத்தமே" என்று வசனம் பேசுகிறான் பின்னாளில் (யுத்த காண்டம் பாடல் எண்:3955).
http://rathnesh.blogspot.com/2007/09/2_22.html NANDRI TO : RATHNESH
----------------------------
இதையும் படிக்கவும்: >> ராமன் தேடிய சீதை.தினமும் ராமன் குடித்துவிட்டு வந்து சீதையை அடித்து உதைத்து மிகக் கொடிய வார்த்தைகளால்.....
---------------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

No comments: