Followers

Monday, January 28, 2008

சபரிமலை சென்று வந்த பக்தர்கள் இருவரின் ரத்தக்கண்ணீர் வடித்து புலம்பலோ புலம்பல்!

இதை எழுதுவது பகுத்தறிவுவாதிகள் அல்லர்! சபரி மலைக்குச் சென்ற பக்தர்கள் இருவர்தான் இதனை எழுதியுள்ளனர்.

சபரிமலையில் நடைபெறும் அநியாயங்கள், அசிங்கங்கள், அசுத்தங்களை நேரில் கண்டு மனம் புழுங்கி ரத்தக் கண்ணீர் வடித்து எழுதியிருக்கின்றனர். படியுங்கள்! சிந்தியுங்கள்!

உலகத்தில் உள்ள அனைத்து மதத்தினரும் அவரவர்களின் எண்ணங்களின்படி பல வகைகளில் இறைவனை வழிபட்டு வருகின்றனர்! மற்ற மதத்தினரின் மனங்களைப் புண்படுத்தும் நோக்கம் இல்லாமல் இக்கட்டுரையை எழுதுகிறோம்.

பொது மக்களில் சிலர் தங்களின் ஆறாவது அறிவை முற்றிலும் இழந்து மதி மயங்கிச் செய்யும் சில மூட நம்பிக்கைகளை விவரிக்கும் மிகச் சில செயல்களை விவரிக்கிறோம்.

சாதாரண மனிதனும் சபரிமலைக்குச் செல்வதற்காக வேண்டி மாலை அணிந்து இருவேளை குளித்து சைவ உணவுகளை உட்கொண்டு புனிதமானவனாக அல்லது சுவாமியாகவே ஆகி விடுகின்றான்.
ஆசாமிகளையெல்லாம் ஒருவருக்கொருவர் சாமி என்று விளித்து பக்தி பழமாகவே மாறி விடுகின்றானே ஏன்? அப்படி என்னதான் அதிசயம் உள்ளது சபரி மலையில் என்ன விசேஷமான சக்தி உள்ளது அய்யப்பனிடம்?

என்ற கேள்விகள் எங்கள் மனதை வாட்டியது! இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் விடை காண நாங்களும் சென்றோம் சபரி மலைக்கு!
ஆம்! வருடத்தில் கார்த்திகை மாதம் 1-ம் தேதி ஆரம்பிக்கும் மூட நம்பிக்கைகள் மற்றும் பழமையான கற்காலத்து செயல்களை அரங்கேற்றும் அய்யப்பா சாமிகளின் சபரிமலையின் அநியாய அசிங்கங்களைப் பற்றி விவரிக்கிறோம்.

பக்திப் பரவசத்தோடு படியுங்கள்.கடந்த 21-12-2007 அன்று இரவு சென்னை சென்ட்ரலில் இருந்து கிளம்பி ரயில் மூலம் சென்று 22-12-2007-ல் இரவு எரிமேலி வழியாக பம்பை சென்றடைந்தோம்.

48 நாட்கள் விரதம் என்ற பெயரில் வீட்டில் இருக்கும் பெண்களை வாட்டி வதைப்பது, பின்னர் இருமுடி என்ற பெயரில் சொந்த பந்தங்களை அழைத்து சாமி பூஜை என்ற ஒரு விழா எடுத்து அவர்களை கடன்காரர்களாக ஆக்குவது என்று மட்டுமல்லாமல், இவர்கள் இங்கிருந்து தொடங்கி நேராக முதலில் எரிமேலி என்ற இடத்தில் சென்று கூடுகிறார்கள்.

எல்லாம் மலையாளிகள் மயம்!அங்கு நடக்கும் அநியாயங்களைப் பார்ப்போம்! முதலில் ஆங்காங்கே மலையாளிகள் மட்டும் வைத்திருக்கும் கடைகளில் சென்று சில மூட சம்பிரதாயங்களின்படி பொருட்களை வாடகைக்கு வாங்குகிறார்கள். கலர் பேப்பர், தோரணங்கள், அட்டைக் கத்தி, அட்டை வாள் போன்ற பொம்மைகளை வாங்கி கைகளிலும், தலையிலும் கட்டிக் கொண்டு கலர் சாயப் பொருள்களை உடம்பில் பூசிக் கொண்டு மேளதாளங்களை வாடகைக்கு வைத்துக் கொண்டு பொறுக்கித்தனமான மோசமான ஆபாச நடன அசைவுகளுடன் நடனம் ஆடுகிறார்கள். இதில் படித்தவர்களும் அடங்குவர். இதைப் பார்த்து மனம் மிகவும் வேதனைப்படுகிறது. இதையெல்லாம் செய்தால்தான் அய்யப்பன் இவர்களை மோட்சத்திற்கு அனுப்புவாரா?

மேலும் தொடர்ந்து செல்வோம். சுத்தம் மருந்துக்கும் கிடையாது பம்பை அடிவாரத்தில் இந்த சாமிகள் அனைவரும் சாப்பிட்ட எச்சில் இலைகளை ஒன்று சேர்த்து ஏலம் விடுகிறார்கள். அவ்வாறு அதிக தொகைக்கு ஏலம் எடுத்த ஒருவர், அதாவது சாமி, குப்பைத் தொட்டிக்கு போக வேண்டிய கழிவுகளைத் தன் தலையின் மேல் சுமந்து கொண்டு, உடல் முழுக்க சாப்பிட்ட கழிவுகள் வழிந்த நிலையில், சாமி . . . சாமி என்ற கோஷத்துடன் பம்பை நதியில் போடுகிறார்கள்!

ஏன் இப்படி? என்று கேட்டால், ஏதாவது ஒரு எச்சில் இலையில் அய்யப்பன் சாப்பிட்டு இருப்பாராம்?

சுத்தம் என்பது மருந்துக்குக் கூட இல்லையா! பகுத்தறிவுடன் சிந்திக்க மாட்டீர்களா?

இப்போது, நாங்கள் பம்பை வந்து சேர்ந்தோம். சென்னையில் உள்ள கூவத்தை விட மிக மோசமான ஒரு ஆற்றை அங்கு காணலாம்.

பகுத்தறிவு சிறிதும் இன்றி சிந்தனையில்லாமல் அதில் மூழ்கி எழுந்திருக்கும் மனிதர்களே! இந்த அசிங்கங்களை நேரில் கண்டு களித்து! இல்லையில்லை . . . வேதனையுடன் எழுதுகிறோம். படியுங்கள்.

கங்கை போல் புண்ணிய நதியாம் பம்பையில் நீராடி என்ற புனிதமான பாடல்களைக் கேட்டு பம்பையில் நீராடச் சென்றார் அய்யோ பாவம்! அய்ந்தறிவு கொண்ட எருமை மாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து, குட்டையில் குளிக்கும் காட்சியை கிராமத்தில்தான் பார்த்திருப்போம். அதைவிடக் கேவலமாக இங்கே புனிதமாகச் சென்ற சாமிகள் குளிக்கும் காட்சியைக் காணவேண்டுமே!

சாமி என்று அழைக்கும் இந்த ஆசாமிகள் பம்பையில், ஒரு சாமி சிறுநீர் கழிப்பதும், இன்னொரு சாமி அதே இடத்தில் மலம் கழிப்பதும் இன்னொரு சாமி தலையை நனைப்பதும் மற்றொரு சாமி பல் விளக்குவதும் கண்கொள்ளாக் காட்சிகள்.

இந்தக் கண்கொள்ளாக் காட்சி பம்பை என்ற கூவத்தில் நேரில் காணலாம். இந்தக் காட்சியைக் கண்டு விட்டு நடையைத் தொடர்ந்தோம்.
சபரிமலைக்கு வழியில், மனம் இவ்வாறு சிந்தித்தது!. . .அடப்பாவிகளே! இதற்காகவா இங்கிருந்து 800 கி.மீ. தூரம் சென்று இந்த அசிங்கங்களை வாரிப் பூசிக் கொள்கிறீர்கள்? சற்று மனம் திறந்து யோசியுங்கள்.

மலையாளிகளுக்குத் தெரிந்த ரகசியம்.உடல் தூய்மையை எந்த இறைவன் உங்களைக் கேட்டான்? உள்ளம் தூய்மையாக இருந்தாலே அங்கே இறைவன் இருப்பானே?

முதலில் உன் உள்ளத்தில் இருக்கும் அழுக்கினை நீக்கி இல்லாதவர்க்கு உதவும் மனதினை இறைவனிடம் கேள்! மனிதா! உன்னையே நீ நினை!

மலையாளிகள் யாரும் இந்த விரதத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆம்! நேரில் வந்தால் தெரியும். இங்கு பம்பையிலேயே இருமுடி கட்டிக் கொள்ளலாம். ஆங்காங்கே உள்ள கடைகளில் சிறு கையளவு தேங்காய் வைத்திருக்கிறார்கள். அதிலேயே எல்லாம் போட்டு அரிசி உள்பட அனைத்து சாமான்களையும் வைத்து வெள்ளைத் துணியில் கட்டிக் கொடுக்கிறார்கள். இது மலையாளிகளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

வெள்ளைத் துணியில் இருமுடி பார்த்தவுடன் உடனே தனிவழியில் அய்யப்பன் தரிசனம். வந்து பாருங்கள் தெரியும் இந்த நிதர்சனமான உண்மை.
பம்பை அடிவாரத்தில் கன்னி மூல கணபதி கோயில் உள்ளது. அங்கு இருந்து சிறிது தூரம் செல்லும் போதே என்ன அருமையான காட்சி! செம்மறி ஆட்டு மந்தைகளை நாம் பார்த்து இருப்போம்! அவை ஒவ்வொன்றும் ஒன்றினை ஒன்று தொடர்ந்து மற்றொன்று நூல் பிடித்துச் செல்லும் காட்சிகளை! என்ன அருமையான காட்சி!

ஆனால் மேற்கண்ட செம்மறி ஆடுகளின் கூட்டத்திற்கு இருக்கும் ஒற்றுமை கூடக் கிடையாது மேற்கண்ட ஆசாமிகளிடம். மன்னிக்கவும். சாமிகளிடம்!

வாய்க்கரிசி போடுகிறார்கள்ஒரு மனிதன் இறந்துவிட்டால் மயானத்தில் வாய்க்கரிசி போடுவார்கள். இந்த சாமிகள் எல்லாம் இருமுடி கட்டும்போது வாய்க்கரிசி போடுகின்றனர். இந்த சாமிகளுக்கு ஏன் இந்தப் பழக்கம் என்று யோசித்ததில் ஆஹா இதற்கு விடை கிடைத்தது. சபரி மலையில், இந்த ஆசாமிகள் எல்லாம் ஒருவருக்கொருவர் முட்டி மோதி கீழே தள்ளிவிட விழுந்தவன் மனிதன் என்கிற உணர்வேயில்லாமல், சிறிதும் மனிதாபிமானம் இன்றி நசுக்கியே கொன்று விடுகின்றனர்.

சென்னை 23-12-2007-ஆம் தேதியன்று ஒரு இளைஞனை கண்ணெதிரிலே மிதித்தே கொலை செய்த காட்சி இன்னும் நெஞ்சை விட்டு நீங்கவில்லை. இதற்காகத்தான் வாய்க்கரிசி போட்டு அனுப்புகின்றனர் போலும்! ஆம்! நேராக மோட்சம்தான்! அடடா இதுவல்லவோ அய்யப்பனின் மகிமை!

ஒரு வசதியும் கிடையாது. சீசனுக்கு வரும் வேடந்தாங்கல் பறவைகள் போல் ஆயிரக்கணக்கில் திரண்டு வரும் அய்யப்ப பக்தர்களுக்காக, என்ன வசதி செய்து கொடுத்து விட்டது கோயில் நிர்வாகம்?

மலை ஏறும் சாலைகள் மற்றும் இறங்கும் சாலைகளில் கரடு முரடான கற்களை அப்புறப்படுத்தலாமே?

ஏன் செய்யவில்லை என்றால் கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்று முட்டாள்தனமான வேதத்தை ஓதும் சாமிகளும், நம்பூதிரிகளும், கேரள அரசாங்கமும், கோயில் நிர்வாகமும் எந்த விதமான வசதிகளும் செய்து கொடுக்க வில்லை.

மாறாக, இனப்பற்றைத்தான் வளர்க்கின்றன. மலையாள பக்தர்கள் என்றால் வேட்டி கட்டிக் கொண்டு வருவதும், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடக மாநிலத்வர் கருப்பு, நீல, காவி சீருடை அணிந்து வரும் காட்சியும் காண்கின்றோம். ஏன் இந்தக் கொடுமைகள்? மனிதன் திருந்தவே மாட்டானா?

தேவஸ்தான போர்டு செய்து வரும் பாதுகாப்பு என்பது பெயரளவில்தான்! அதிகளவு நெரிசல் ஏற்படுவது சரங்குத்தி என்ற இடத்தில் ஆரம்பிக்கிறது. ஒரு சிறு 20 அடி அகல வழியில் தடுப்பினை ஏற்படுத்தி ஆயிரக்கணக்கான ஆசாமிகளை. . மன்னிக்கவும். .. சாமிகளை ஒரே நேரத்தில் அனுப்பினால் சாமிகள் என்ன செய்யும்?

ஒன்றின் மேல் ஒன்றாக விழ வேண்டியது. நெரிசல் காரணமாக துர்மரணம்தான்! கேள்வியே கிடையாதா! கேட்டால் மலையாளி காவலர்களின் ஓடுடாபட்டி என்ற சரண கோஷத்தை மன்னிக்கவும் வசனத்தைக் கேட்கலாம் (அல்லது) அவர்களின் தடியடியாவது வாங்கலாம்! இங்கிருந்து உடன் செல்லும் குருசாமியும் சேர்ந்துதான் வாங்கவேண்டும்!

மலையாளிகளுக்கு மட்டும் தனி வழி!அவர்களுக்கு மட்டும் அய்யப்பன் தனி வழி கொடுத்திருக்கிறார்கள். யாரும் ஒரு கேள்வியும் கேட்க முடியாது!
மலையாள சாமிகள் இருமுடிகளை எஜமான் ரஜினி ஸ்டைலில் தோளில் போட்டு வரும் காட்சியைப் பார்த்தால்தானே தெரியும்!

மேலும், மிக விரைவில் இன்னும் ஒரு அதிர்ச்சியான விஷயம் நடைபெறலாம்! அப்படி ஒரு சம்பவம் நடக்கக்கூடாது என்றுதான் இதனை ஒரு எச்சரிக்கையாக எழுதுகிறோம்.

பீகாரிலிருந்து ஆந்திரா வழியாக வரும் திருவனந்தபுரம் செல்லும் ரயிலில் ஆந்திராவிலிருந்து ஏறும் ஆசாமிகள் சீட்டு இருக்கையில் விடியற்காலை நேரத்தில் கற்பூரம் காட்டி அய்யப்பனை வழிபடுகின்றனர். மீண்டும் ஒரு கோத்ரா போன்ற சம்பவம் நேரிடக்கூடாதே என்று வேதனைப்படுகிறோம். சபரிமலைக்குச் செல்லும் அனைத்து ரயில்களிலும் இது தவறாமல் நடைபெறுகிறது.

அய்யப்பனைத் தன் உள்ளத்தில் குடி கொண்டுள்ளதாக எண்ணும் அய்யப்ப பக்தர்களை தேவஸ்தான போர்டு ஊழியர்களும் காவல்துறையும் மதிப்பு கொடுப்பதே இல்லை. வாடா! போடா! என்று ஒருமையில் அழைப்பதுதான் வழக்கம்.

கழிவறை இல்லை .தேவஸம் போர்டு என்று டிரஸ்ட்மூலம் கோயிலை நிர்வகிக்கும் கும்பலே வரும் பக்தர்களுக்கு தெவசம் செய்ய வேண்டாம்! மலையேறும் பக்தர்களுக்குக் கழிவறை வசதி இல்லை. மக்கள் கூடும் பொது இடங்களில் வழியிலேயே சிறுநீர் கழித்துவிடும் கேவலமும் இங்குதான் நடைபெறுகிறது.மரணங்களை நியாயப்படுத்தும் கொடுமை உலகில் வேறு எங்கும் இல்லாத நிலையில், சபரி மலையில் மட்டும் மரணமடைந்துவிட்டால் மோட்சமாம்.

23-12-2007 மனம் வேதனைப்பட்டு கடுமையான மன உளைச்சலுடன் கோட்டயம் வழியாக சென்னை திரும்பினோம்.
- எஸ். சந்தானம், இ. சுகுமார்குன்றத்தூர், சென்னை -69
http://viduthalai.com/20080127/news04.html
படித்துவிட்டீர்க‌ளா?
பார்ப்பனர்கள் டாக்டருக்கு படிக்கலாமா?

சிவாஜியை கடத்த முயலும் இந்துத்துவா வரலாற்று புரட்டர்கள்!!!

காரி உமிழுங்கள்!
------------------------------------
மற்ற பதிவுகள்

2 comments:

SurveySan said...

///பொறுக்கித்தனமான மோசமான ஆபாச நடன அசைவுகளுடன் நடனம் ஆடுகிறார்கள். இதில் படித்தவர்களும் அடங்குவர். இதைப் பார்த்து மனம் மிகவும் வேதனைப்படுகிறது. இதையெல்லாம் செய்தால்தான் அய்யப்பன் இவர்களை மோட்சத்திற்கு அனுப்புவாரா? ////

நான் போனப்ப ஆபாச நடனம் எல்லாம் தெரியலியே? சீசனல் ஷோவா அது?
தெருக்கூத்து மாதிரி, ரொம்ப ஜாலியா ஆடிட்டுப் போறத பாத்திருக்கேன்.

கூலிங்கிலாஸ் போட்டுப் பாத்தா எல்லாம் தப்பாதான் தெரியும் ;)

இஷ்டம் இல்லாதவங்க, மெனக்கெட்டு அவ்ளோ தூரம் போயி ஏன் கஷ்டப்படணுங்கறேன்?

வருஷத்துக்கு ஒரு தடவ போற எடத்த பத்தி இவ்ளோ கொற சொல்றவரு, வருஷம் பூரா வாழர ஊரு நல்லா இருக்காமா? :)

சுவாமி சரணம்!

குலவுசனப்பிரியன் said...

//நான் போனப்ப ஆபாச நடனம் எல்லாம் தெரியலியே? //

நேத்து ராத்திரி ஐயப்பா...
ராசா.. ராசா.. பந்தள ராசா ..

போன்ற பஜனைப் பாடல்களுக்கு வேறு எந்த ஆட்டம் ஆட முடியும்?