Followers

Monday, January 21, 2008

இந்துக்களின் தெய்வங்களை மட்டும் கொச்சைப்படுத்துகிறோமா? ஏன்?? ஆணை ஆண் புணரும் மிருகப் புணர்ச்சி செய்யும் வழக்கத்தைக் காட்டுபவைகளல்லவா?

``கடவுள் இல்லை என்பவர்கள் இந்துக்களின் தெய்வங்களை மட்டும் கொச்சைப்படுத்துவதா?’’ (`தினத்தந்தி’ )

இப்படியொரு கேள்வியை பா.ஜ.க., தலைவர் ராதாகிருஷ்ணன் கேட்டுள்ளார்! இப்படி எத்தனையோ கிருஷ்ணர்கள் கேள்விகள் என்ற பெயரிலே மூடர்கள் சிலர்முன் முழங்கி விட்டுப் போகிறார்கள்!

தந்தை பெரியார் காலந் தொடங்கி இன்று தமிழர் தலைவர் அவர்களின் அறிவார்ந்த சுனாமி அலைவீச்சின்முன் இன்று வரை ``இதோ நான் காட்டுகிறேன்’ -நான் மறுக்கிறேன்’’ என்று எந்த மார்தட்டும் வீரரும் வந்ததில்லை!

இந்துக் கடவுள்கள் எல்லாம் வல்லவர்கள் ஆயிற்றே! அவர்களிடம் ``அவர்கள் தலையில் இடியைப் போடு இந்திரனே!’’என்று வேதங்களில் எழுதி வைத்திருக்கிறீர்களே! அப்படியே விட்டுவிட வேண்டியது தானே?

கிருஷ்ணர்கள் கூட்டத்திற்குத் தெரியும் `கடவுள்’ என்று ஒருவரும் இல்லை என்று!

நாம் இந்துக் கடவுள்களை மட்டுமே தாக்குவதில், இந்து மதத்தை எதிர்ப்பதில் அதிகம் ஆர்வம் காட்டுகிறோம் என்பது உண்மைதான்!

கொச்சைப்படுத்துகிறோம் என்பது தவறு! மேன்மையான ஒன்றைக் கீழ்மைப்படுத்துவதற்கே கொச்சை என்பது பொருந்தும்!ஆரியப் பார்ப்பனர் தங்களின் இச்சைபோலகொச்சைகளையே பச்சைத்தனமாக மெச்சிப் புகழுமாறு எழுதி வைத்து எமது இனத்தையே கொச்சைப்படுத்துவது இந்து மதமும் அதன் கடவுள்களுந்தாம்!

எம்மினம் எத்தனையோ நூற்றாண்டுகளாக ஆரியப் பார்ப்பனர் சூழ்ச்சி வஞ்சக வலையில் சிக்கிக் கொண்டு தவிப்பது தள்ளாடுவது தலை சாய்ந்து கிடப்பது அனைத்தையும் உலகில் நல்லோர் எல்லோரும் அறிவர்! தந்தை பெரியார் தொண்டர்கள் அந்தச் சூழ்ச்சி வலையில் இருந்து மீட்சி பெற்றாலும் எமது இனத்தை முற்றும் அதனில் இருந்து மீட்கும் வரை எங்கள் போர் முற்றும்!

ஏன் இந்து தெய்வங்களை மட்டும் அதிகம் தாக்குகிறோம்?
இந்து மதமும் அதன் தெய்வங்களும் மட்டுமே எங்களுடையதாக எமது இனத்தின் வீழ்ச்சிக்கு இழிவிற்கு உலகோர் பழிப்பிற்குக் காரணமாக இருப்பதால்!

எப்படி என்பதை ஒரு நூற்றாண்டாக உலகின் முன் எடுத்து விளக்குகிறோம்!வேண்டுமானால் - இதோ! சில..எங்கள் மக்களை (அசுரர்கள்) இராட்சசர்கள் என்ற பெயரில் அதாவது தமிழர்களை சூத்திரர்கள் என்பது போல) சிவன் முதல் காளிகள் வரைக் காலில் போட்டு மிதித்துக் கொண்டிருப்பதும் சூலத்தால் கிழிப்பதும் இந்துக்களின் தெய்வமா? இஸ்லாம், கிறிஸ்தவத் தெய்வங்களா?

தொட்டால் தீட்டு பார்த்தால் பாவம் என்பதையே வேதம், சாத்திரம், நடத்தை என ஆக்கி நாயினுங் கீழாய் வாழ வைத்ததும், பிராமணருக்குத் தொண்டு செய்யவே சூத்திரரைப் படைத்தேன் என்பதும், பிராமணனுக்குச் சமமாகச் சூத்திரன் உட்கார்ந்தால் அவன் சூத்தை (புட்டம்) வெட்டு என வெட்டியதும், கண்ணைக் கொடுத்தாலும் சூத்திரனுக்குக் கல்வியைக் கொடுக்காதே என மூடர் ஆக்கியதும் இந்து தெய்வங்களா? கிறித்து, இசுலாம் தெய்வங்களா?

தாயைப் புணர்ந்து தந்தையைக் கொன்றவன் மகளை மனைவியாக்கிக் கொண்டவன் ரிஷி பத்தினிகளைக் கற்பழித்தவன் அடுத்தவனின் மனைவியை அவளின் கணவன் வேடத்தில் சென்று கலந்து விடுபவன்; ஆடு, மாடு, கழுதை, குதிரை, நாய், தவளை இவற்றைப் புணர்ந்து பிள்ளையும் பெறுபவன் இந்து மதத்திலா? - வேறு எந்த மதத்தில்?

இவர்களுக்குச் சாதி வாரியாகக் கோயில்கள் கட்டிக் கொண்டாடும் எங்கள் மக்களை அய்ந்து பேருக்கு மனைவியாக இருந்த ஓர் ஆரியப் பரத்தையைப் பத்தினி எனக் கொண்டு அக்கினிக் குழியிறங்கும் எமது மக்களை மீட்பதா? அப்படியே அடிமைகளாக விட்டுவிடுவதா?

இந்த இழி பிறவிகளைக் கடவுள்கள் என்று கோயில்கள் எடுத்து கருவறைக்குகள் போனால் தீட்டாகிவிடும் என்று சூத்திரனாக வெளியே நிற்கிறானே இந்த மதத்திலா? வேறு எந்த மதத்தில்?

சூத்திரர்களையும், பஞ்சமர்களையும் உங்கள் வேதத்தில் மதத்தில் தெய்வங்களின் விருப்பத்தில் உள்ளபடி தெருவில் கோயிலில் உள்ளே விடாமல் விரட்டப்படும் மக்களைப் பள்ளிவாசல்களில், சர்ச்களில் ஒன்றாக சமமாக அமர்ந்து தொழுகை நடத்த அனுமதிக்கும் அன்பு காட்டும் கிறித்து, இசுலாம் மதங்களைக் கண்டிக்க என்ன இருக்கிறது?

வைப்பாட்டி வீட்டிற்கு அதாவது சின்ன வீட்டிற்குப் பெண்டாட்டிச் சாமிகளுக்குத் தெரியாமல் இரவிலே போகும் தெய்வங்கள் இசுலாம், குறித்து மதங்களில் இருந்தால் ராதாகிருஷ்ணர்கள் எழுதலாமே!

சிவனும் விஷ்ணுவும் சேர்ந்து பிள்ளை பெறுவதும் நாரதனும் கிருஷ்ணனும் சேர்ந்து பிள்ளை பெறுவதும் இந்த நாயினும் கேடானவர்களுக்குக் கோயில் கட்டிக் கொண்டாடுவதும் போன்ற தெய்வங்கள் இசுலாத்தில், கிறித்துவில் இருந்தால் பார்ப்பனர்கள் எழுதலாமே!

நந்தன் உள்ளே வரக் கூடாது என்பதற்காக நந்தியை விலகச் சொன்ன திருப்பங்கூர் சிவனும், நெருப்பில் குளித்து வேதியனாகிய பின் தான் உள்ளே வரலாம் என்ற தில்லைக் கூத்தனும் எந்த மதத்தில்?`` விநாயகர் சிலை எவருக்கும் எதிரானதில்லை!’’ சொல்கிறார் ராதாகிருஷ்ணர்!

விநாயகர் வல்லபையின் பெண் குறியில் தும்பிக்கையை வைத்து அடைத்துக் கொண்டாரே யாருக்கு ஆதரவாக?

ஆட்சி உங்கள் கையில் என்றால் எல்லாம் பாபர் மசூதியாகி விடுமே!``மற்றவர்கள் மனதைப் புண்படுத்துவது ஒரு முற்போக்கான எண்ணமாகச் சிலர் கருதுவது வருத்தம் அளிக்கிறது!’’ சொல்கிறார் ராதாகிருஷ்ணர்! மேலே கண்ட கொடுமைகள் சில துளிகள்தாம்! இன்னும் கடலளவு இருக்கிறது!

சுக்ரீவனைக் கொண்டு வாலியையும், வீடணனை வைத்து இராவணனையும் அவர்களின் உறவையும் அழைத்த போது? எட்டாயிரம் சமணர்களைக் கழுவேற்றியபோது?

``புத்தனார் தலை தத்தெனத் தத்துமே!’’ எனத் தலைகளைச் சிதைத்தபோது? நந்தனைக் கொளுத்தியதுபோல் வள்ளலாரைத் தீயில் குளிப்பாட்டியபோது?பாபர் மசூதியை இடித்தபோது? குஜராத்தைக் கொலை வெறியில் தள்ளியபோது?

திருக்குறள் உலகப் பொதுமறை என ஒரு போப் பிரகடனம் செய்கிறார்! அந்த வான் புகழ் கொண்ட வள்ளுவனைப் புலைச்சி மகன் என்று இகழ்ச்சி பேசுவது?சம்புகனைக் கொன்றபோது?

ஏகலைவன் கட்டை விரலை வெட்டியபோது? அவனைச் சூத்திரன் என்று துரோணன் விரட்டியபோது?திப்பு சுல்தானை ஆங்கிலேயருக்குக் காட்டிக் கொடுத்தபோது?மதுரைத் திருமலை நாயக்கனை வஞ்சகமாகப் பழி தீர்த்தபோது?

வருந்தாத இனம் வருந்தாத மனம் இப்பொழுது வருந்துகிறதாம்! என்ன செய்வது இது தந்தை பெரியார் யுகம்! வாழ்வது, வெல்வது உறுதி!

ஆபாசக் கடவுள்கள். ஆணை ஆண் புணரும் மிருகப் புணர்ச்சி செய்யும் வழக்கத்தைக் காட்டுபவைகளல்லவா?

ஒவ்வோர் ஆண் கடவுளுக்கும் மனைவிகள், கூத்திகள் என்றும் பெண் கடவுளுக்குக் கணவர்கள்-சோர நாயகர்கள் என்றும் இருக்கும்.

ஆரியர்களுடைய மதம் நமக்குக் கற்பித்துள்ள கடவுள்களின் தன்மை அம்மம்மா! எழுத்தால் விளக்கொணாதது. சான்றுக்கு ஒரு சில.

ஆபாசக் கடவுள்கள்

பார்ப்பனர்களின் கடவுள் பட்டியலைப் பார்த்தால், ஆண் கடவுளாக இருந்தாலும் சரி, பெண் கடவுளாக இருந்தாலும் சரி, விபசாரம் செய்யாத ஒன்றையும் காட்ட முடியாது.

ஒவ்வோர் ஆண் கடவுளுக்கும் மனைவிகள், கூத்திகள் என்றும் பெண் கடவுளுக்குக் கணவர்கள்-சோர நாயகர்கள் என்றும் இருக்கும்.

ஒரு பெண்ணை நிர்வாணமாக நிறுத்தி வைத்து அவள் பெண் குறிக்குப் பூசையிடும் வழக்கமும் ஆரிய ஆசாரத்தில் உண்டு.

ஆரியர்களுடைய மதம் நமக்குக் கற்பித்துள்ள கடவுள்களின் தன்மை அம்மம்மா! எழுத்தால் விளக்கொணாதது. சான்றுக்கு ஒரு சில.

1. சூரியனுடைய ரத சாரதியின் பெயர் அருணன். இவன் இரு கால்களுமற்ற முடவன். தாயால் அவயங் காக்கப்பட்ட முட்டையிலிருந்து இவன் பிறந்தவன். இவன் இந்திர சபை வினோதங் காண்பதற்கென்று பெண்வேடம் பூண்டு அங்குச் சென்றான்.

இதைக் கண்ட இந்திரன் பெண் வேடத்திலிருந்த அருணனை மோகித்துப் புணர்ந்தான். இதனால் வாலி என்பவன் பிறந்தான். இந் நிகழ்ச்சியால் அருணன் வேலைக்குத் தாமதித்து வர, சூரியன் காரணம் கேட்டு, நடந்ததையறிந்து, மீண்டும் அருணனைப் பெண் வேடத்தில் வரவேண்டி, அவன் அப்படியே வர, அவனைச் சூரியன் புணர்ந்தான். இதனால் சுக்ரீவன் பிறந்தான்.

2. நாரதர் என்னும் மகரிஷி ஒரு நாள் பெண் வேடம் தாங்கியிருக்க அதைக் கண்ட கிருஷ்ண பரமாத்மா நாரதனைக் கண்டு மோகித்துப் புணர, அதன் பயனாய் 60 பிள்ளைகள் நாரதருக்குப் பிறந்தன.

3. தவ வலிமை மிக்க பஸ்மாசுரன் சிவன் தலையில் கையை வைத்து அழித்துவிட நாடியபோது மகாவிஷ்ணு மோகினி வேடம் பூண்டு பஸ்மாசுரணை மயக்கி, அவன் கையை அவன் தலையிலேயே வைத்து எரிந்து போகுமாறு செய்தபின், அந்த மோகினி வேடத்திலிருந்த விஷ்ணுவை, உயிருக்குப் பயந்து அய்வேலங்காயில் ஒளிந்திருந்த சிவன் மோகித்துப் புணர, அதன் பலனாக அரிஹரபுத்திரன் பிறந்தான்.

இவை ஆணை ஆண் புணரும் வழக்கத்தைக் காட்டுபவைகளல்லவா?

4. பரமசிவன் பார்வதியுடன் வனத்தில் உலாவச் சென்றிருந்தபோது, அங்கிருந்த சித்திரக் கூடத்தில் ஆண்-பெண் யானைகள் கலவி செய்வதைப் போன்ற ஓவியத்தைப் பார்த்துக் காமவெறி கொண்டு, பக்கத்திலிருந்த பார்வதியைப் பெண் யானையாக்கிப் புணர்ந்து, கணபதியைப் பெற்றான்.

5. சூரியன் பெட்டைக் குதிரையாயிருந்த சஞ்சிகையைக் கூடியதன் பயனாக, அஸ்வினி தேவர்கள் பிறந்தனர்.

6. பிரமன் திலோத்தமையைப் படைத்து, அவளழகைக் கண்டு மோகித்து, அவள் பிரமன் செயல் கண்டு பயந்து பெண்மானுருக் கொண்டோட பிரமன் அவளைத் துரத்திக் கொண்டு போய்ப் புணர்ந்தான்.

7. பிரமன், ஒரு நாள் காமவெறி உச்சமடைந்தவனாய் வனத்தில் சுற்றித் திரிந்துகொண்டிருந்தபோது, ஒரு புதரில் பெண் கரடி ஒன்றிருக்கக் கண்டு அதனுடன் புணர, அதன் பலனாக ஜாம்பவந்தன் பிறந்தான்.

8. பாரிஷதன் என்பவனின் மனைவி வபுஷ்டமை என்பவள் மீது இந்திரன் காமங்கொள்ள, அவள் அவனுக்கு இணங்காமற்போக, இந்திரன் எப்படியாவது அவளைச் சேர்ந்தேயாகவேண்டு மென்று எண்ணிச் சமயம் பார்த்துக் கொண்டிருந்தான். அச்சமயம் பாரிஷதன் அஸ்வமேதம் நடத்தினான்.

யாக குதிரையுடன் யாக கர்த்தாவின் மனைவியைப் புணர வைப்பது அஸ்வமேதத்தின் முக்கியச் சடங்காகையால், தான் யாக குதிரையாக இருந்தால் பாரிஷதன் மனைவியாகிய வபுஷ்டமையிடத்து யாகப் புரோகிதர்களே சேர்த்து வைப்பார்களாகையால் தான் யாக குதிரையாக வேண்டுமென்று இந்திரன் உறுதிசெய்துகொண்டான்.

அதன்படி அஸ்வமேத யாகம் நடந்தபோது இந்திரன் யாக குதிரையைக் கொன்று அதனுடலில் தான் புகுந்து கொண்டான். யாகமுறைப்படி யாககர்த்தாவாகிய பாரிஷதனின் மனைவியாகிய வபுஷ்டமையின் பெண் குறியில் யாக ஆண் குதிரையின் குறியை யாகப் புரோகிதர்கள் சேர்த்துவைத்த சமயத்தில் இந்திரன் தன் காம எண்ணத்தை நிறைவேற்றிக் கொண்டான்.

9. அஸ்வமேதம், அஜமேதம் போன்ற யாகங்களில் யாககர்த்தாவின் பத்தினியை, யாக மிருகத்துடன் புணரவைக்கும் வேலையை யாக கர்த்தாவும் யாகப்புரோகிதர்களுக்கும் சேர்ந்து செய்வர்.

10. பூமியைப் பாய்ப்போலச் சுருட்டிக்கொண்டு கடலில் போய் ஒளிந்த இரண்யாக்ஷனைப் பன்றி வேடத்தில் சென்று விஷ்ணு கொல்ல, இப்பன்றியைக் கண்டு பூதேவி மோகித்துக் கலவி செய்ய, இதன் பலனாக நரகாசுரன் பிறந்தான்.

இவை மிருகப் புணர்ச்சி செய்யும் வழக்கத்தைக் காட்டுபவைகளல்லவா? -- >>திருவை அரசு. >>http://www.viduthalai.com/
---------------------
படித்துவிட்டீர்க‌ளா?
தந்தை பெரியார் அறிவுரை:- மதம்- வேதங்கள்
பிராமண பெண்ணும் ஒரு சூத்திரச்சிதான்
தமிழர்கள் இன்னும் சுமந்து கொண்டு திரிய வேண்டுமா?
------------------------
மற்ற பதிவுகள்

1 comment:

வாக்காளன் said...

ச்சீத்தூதூ தூ.. ஆரிய கடவுள்கள்.. இதுதானா ஆரிய கடவுள்கள் லட்சணம்?
இது ராதாகிருஷ்ணன், இல கனேச வகையறாக்களுக்கு தெரியவில்லையா?