Followers

Saturday, January 19, 2008

சாணியை சாப்பிட்டும், மூத்திரத்தை குடித்தும், பட்டினிக் கிடந்தும்... காட்டுமிராண்டித்தனமான காரியங்களைச் செய்தும் மதத்தைக் காப்பாற்றினோம்.

கோயிலில்லா ஊரில் குடியிருப்பது பாவம், என்று காடு மேடுகளில் எல்லாம், ஊர் கிராமங்களிலெல்லாம் கோயில்கள் கட்டினோம்.

சில கோயில்கள் கோட்டைகள் போல் கொத்தளங்கள் போல் கட்டி பல சுற்றுப் பிரகாரங்கள் விட்டு, மதில்களும், வானளாவக் கோபுரங்களும் கட்டி,

தங்கத்திலும், வெள்ளியிலும், தாமிரத்திலும் சாமிகள் செய்து ரத்தினங்களால் நகை போட்டு,

ஊரில் யார் பட்டினிக் கிடந்தாலும், எந்தக் குழந்தைக்குப் பால் இல்லாவிட்டாலும், யார் யாருக்கு வேட்டி துணி இல்லாமல் நிருவாணமாய் இருந்தாலும், யாருக்கு பேண்டு இல்லாமல் இருந்தாலும்

சிறிதும் லட்சியமில்லாமல் பால், பழம், பஞ்சாமிர்த அபிஷேகமும், ஆராதனையும், பட்டு பீதாம்பர உடையும்,

வருஷாவருஷம் கல்யாணம், திருவிழாக்காளும், வைப்பாட்டி திருவிழாக்களும் செய்த வண்ணமாய் இருந்ததுடன்

மக்களில் கோடிக்கணக்கான பேருக்கும் நாள் ஒன்றுக்கு ஒரு வேலை சாப்பாட்டிற்கும் விதி இல்லாவிட்டாலும் எண்ணிலடங்கா கடவுள்களுக்கு தினம் தினம் 4 வேளை, 5 வேளை, 6 வேளை மூட்டை மூட்டையாய் பொங்கிப் போட்டு ஆராதனை அம்சை செய்து வந்தோம்.

இவ்வளவுதானா? ஒவ்வொரு கோவிலுக்கும், ஒவ்வொரு சாமிக்கும் வருஷம் 10 லட்சம், 20 லட்சம் வரும்படி வரும்படியான பெருமைகளையும், சொத்துக்களையும் தேடி வைத்தோம்.

மத விஷயத்திலும் எத்தனையோ லட்சக்கணக்கான பெயர்கள் அடிக்கடி உயிரைக் கொடுத்து மதத்திற்காக என்று தலையைச் சிரைத்தும், கத்தரித்தும், முகத்தைச் சிரைத்தும் வளர்த்தும், காதை ஓட்டை செய்தும், மூக்கை ஓட்டை செய்தும், மண்ணைப் பூசியும், சாம்பலைப் பூசியும் சேற்றைப் பூசியும்,

சாணியை சாப்பிட்டும், மூத்திரத்தை குடித்தும், பட்டினிக் கிடந்தும் மற்றும் என்ன என்னவோ காட்டுமிராண்டித்தனமான காரியங்களைச் செய்தும் மதத்தைக் காப்பாற்றினோம்.
http://unmaionline.com/20070602/06.htm
------------------------------
படித்துவிட்டீர்க‌ளா?
பிராமணர்கள் .......பகுதிகள் தவிர வேறெங்கும் வசிக்கக் கூடாது.
தமிழ் பேசினால் எனக்கு தீட்டு ?
சூத்திரத்தன்மை - இழிவை நிலைநிறுத்தவே கோயில்கள்!
-----------------------------
மற்ற பதிவுகள்

No comments: