Followers

Friday, January 18, 2008

உழுதுண்ணும் பிராமணன் பற்றி கேட்டதுண்டா? சமஸ்கிருதம் பற்றிய சில உண்மைகள்..பார்ப்பனர்கள் சமஸ்கிருத மொழியைப் பேசுவதில்லை.

எத்தனையோ பொய்மைகள் நம்மீது திணிக்கப்பட்டுள்ளன.
பன்மொழி அறிஞர் ---சாத்தூர் சேகரனார்

1. மொழிக்கென ஒரு களம்-ஒரு மொழி என்பதற்கான கூறுகள்
ஒரு மொழியை மொழி என்று கூறுவதற்கு சில அடிப்படைக் கூறுகள் வேண்டும்.
1. மொழிக்கென ஒரு களம், 2. பேச்சு மொழி என்பதற்கான சில தடயங்கள், 3. இலக்கணத்திலே ஒருமைப்பாடு, 4. மக்கள் இலக்கியம், 5. பல சாதியினருக்கென ஒரு மொழி அன்றி ஒரு சிறு சாதியினருக்கென்று ஒரு மொழி இருக்க இயலாது,
6. மொழி எளிமையாகவும், இலக்கணம் இலகுவாகவும் இருத்தல் கட்டாயமாகும், 7. இலக்கியங்கள் பாமரர் வாழ்வை அடிப்படையாகக் கொண்டிருத்தல் கட்டாய-மல்ல, ஆனால் பாமரரும் புரியக்கூடிய தன்மையில் இருத்தல் வேண்டும்.
சமற்கிருதத்தின் நிலைமை
சமற்கிருதத்தைப் பிறாமண (பிற அமணர்)ப் பண்டிதர்கள் பலவாறாக ஏற்றிப் போற்றினர்.

1. சமசுகிருதம் தேவமொழி என்றனர். 2. சமற்கிருதம் உலகமொழிகளின் தாய் என்றனர். 3. சமஸ்கிருதம் இந்திய மொழிகளின் தாய் என்றனர். 4. சமஸ்கிருதம் பிற மொழிகளில் இருந்து சொற்களைக் கடன் வாங்காது என்றனர்.
இவ்வாறாக இமயமலை அளவு உண்மைக்குப் புறம்பாகப் பேசினர்; எழுதினர். உண்மை மொழி ஆராய்ச்சியை இவ்வாறாக ஒழித்துக் கட்டினர். சமயப் பிற்போக்குக் கருத்தை வைத்து மக்களை எப்படி முட்டாள் ஆக்கினார்களோ அப்படியே மொழித் துறை-யில் உலக மக்களை அடிமுட்டாள் ஆக்கினர். அரசர்கள், நிலப்பண்ணையார் பின்புறம் நின்று கொண்டு போலி கருத்துக்களைப் பரப்பினர்
.

ஆங்கில ஆட்சியின்போது அதிகாரிகளாக வந்து இன்னும் வன்மையாகவும், திமிருடனும் புரட்டுத்தனத்தை விதைத்தனர். மேனித் தோலிலும், போலி வாதத்திலும், மயங்கிய ஆங்கிலேயர் சமற்கிருதத்திற்கு முன்னுரிமை கொடுத்தனர்.

இதனால் மொழியியலுக்குப் புறம்பான பல்வேறு கருத்துகள் உலக முழுவதும் பரவியது. நல்ல கருத்துகள் பரவ நாளாகும். நச்சுக் கருத்து கண நேரத்தில் பரவி விடும் என்ற பழமொழி, சமற்கிருதப் பண்டிதர்கள் விடையத்தில் 100-க்கு 100 உண்மை ஆயிற்று.

சமற்கிருதக் களம்--சமற்கிருதம் பேசிய இடம் என்றோ, பேசிவருகிற இடம் என்றோ உலகில் ஒரு நாட்டைச் சுட்டிக்காட்ட முடி-யாது. ஒரு மாநிலத்தைச் சுட்டிக் காட்ட முடியாது; ஒரு மாவட்டத்தைச் சுட்டிக் காட்ட முடியாது. ஏன், ஒரு (தாலுகா) வட்டத்தையோ, ஓர் ஊரையோ சுட்டிக்காட்ட முடியாது. அவ்வளவு ஏன் ஒரே ஒரு வீட்டைக்கூட யாராலும் சுட்டிக்காட்டிட இயலாது.
எனவே பேசக் கூடிய இடமாக சமற்கிருதத்திற்கு எந்த இட மும் இருந்ததில்லை. எனவே பேசக் கூடிய மக்களாக எவருமே இருந்தில்லை. அன்றும் இல்லை; இன்றும் இல்லை. பேசக் கூடிய மக்கள் இன்றி ஒரு மொழி எங்ஙனம் வாழ்ந்திட இயலும்?


சின்னஞ்சிறு மொழிக்குக்கூட...சின்னஞ்சிறு மொழிகளுக்குக்கூட ஒரு சில மாவட்டங்களோ, வட்டங்களோ இருப்பதுண்டு. ஆனால் பெரிய மொழி, உலக மொழிகளின் தாய் என்று பசனை பாடப்படும் ஒரு மொழிக்கு, ஒரு வீடு கூட கிடையாது என்னும் பொழுது எத்தனையோ பொய்மைகள் நம்மீது திணிக்கப்பட்டுள்ளன என்பது தெரிய வருகிறது.

அரசவையின் ஒரு நிமிட அரங்கு--உள்ளங்கை அளவே உள்ள நாட்டு அரசனை, சமற்கிருத பண்டிதர் ``மன்னா, மூவிலகின் கண்ணா, உலகிற்கே நீ ஒரு சூரியன்’’ என்றால் போதும். மதி கெட்ட குறுநில மன்னன் அவனுக்கு ஏராளமான நிலமோ பொன்னோ வழங்குவான். இதற்கு மேல் சமற்கிருதம் எங்குமே வழங்கப்படவில்லை.

கோவிலைத் துடைத்து தூய்மை செய்ய வந்தவர்களே பிராமணர். வேறு எந்தத் வேலையும் செய்யத் தெரியாதவர்களாக இருந்ததால் (சம்மட்டி அடித்த பிராமணன் உண்டா? உழுதுண்ணும் பிராமணன் பற்றி கேட்டதுண்டா?

அரசர்களும், பண்ணையார்களும் இவர்களை கோவிலின் தூய்மைப் பணிக்கு அமர்த்தினர். பிழைக்க வழி கேட்டவர்கள், இன்று கோவிலையே கையகப்படுத்திக் கொண்டனர். தேவாரம் திருவாசகமோ, நாலாயிர திவ்வியபிரபந்தப் பாடல்களை கோவிலுள் பாட இவர்கள் மனம் இடங்கொடுக்கவில்லை. போலி மொழியான சமற்கிருதத்தை வைத்து தம் கூட்டத்தார் மட்டும் இனிது வாழ்ந்திட வழிவகுத்துக் கொண்டனர்.
ஒரு சுலோகத்திற்காயினும் (சொல் சொலவ: இரஷ்யன், சொலக ஸ்லோக : சமற்கிருதம்) உண்மைப் பொருளைக் கூறகின்ற புலமை இப்போலிப் பூசாரிகளுக்கு உண்டா?

தானே ஒரு சுலோகத்தைப் படைத்திடும் ஆற்றல் தான் உண்டா? சமஸ்கிருதம் ஒரு மொழியல்ல என்று சான்று காட்ட நமக்கு ஏராளமான சான்றுகளை சமற்கிருதமே தருகிறது. சமற்கிருதப் பண்டிதர்கள் நம்மை அறியாமல் அவற்றை வாரி வழங்குகின்றனர்.

எழுதாக்கிளவி--எழுதாக்கிளவி - எழுத்தே இல்லாத மொழி என்று பொருள்படும். எழுதப்படாத மொழி. சுருதி சுமிருதி என்றும் கூறினர். சுருதி என்றால் செவி உறுதி காதால் கேட்கப்படும் சொல் என்று பொருள்படும். சுமிருதி என்றால் வாயால் உச்சரிக்கப்படும் சொல் என்று பொருள்படும். ஆக சமற்கிருதம் ஒரு எழுதப்பட்ட மொழியல்ல என்னும்போது அதற்கு எதற்கு இலக்கணம்? அது எப்படி இலக்கியம் படைக்க முடியும்? இன்னோரென்ன கேள்விகள் பாமரன் உள்ளத் தில்கூட தோன்றும்? ஆனால் இக்கால ஆய்வாளர் மனதிலே தோன்றாதது ஏனோ?

சமஸ்கிருதம் - என்ன பொருள்?--சமற்கிருதம் என்பது ஒரு சொல் அல்ல. சமற்+கிருதம் என்று பகுத்தால் இரு சொல் கூட்டு. செம்மையாகச் செய்யப்பட்ட மொழி என்று பொருள் தரும். ஏற்கெனவே இருந்த ஒரு மொழியைத் தழுவிச் செய்யப்பட்ட மொழி என்று பொருள் விளக்கம் கிடைக்கும். ஏற்கெனவே இந்தியா முழுமையும் வழங்கி வந்த தமிழ் மொழியைத்தான் குறிக்கிறது.

வட இந்தியத் தமிழரான வங்காளியர், அசாமியர், ஒரியர், இந்தி மக்கள், சிந்தி மக்கள், மராத்தி + குசராத்தி மக்கள், காசுமீரிகள் ஆகியோர் தமிழைத் தமிழ் என்று கூறுவதை விரும்பவில்லை ஏன்?

உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியான தமிழை, முதல் மொழி என்றே முழக்கமிட்டனர்; முழக்கமிட்டு வருகின்றனர். பிராகிருதம் என்றால் முதல் மொழி என்றுதான் பெயர். தமிழின் மாற்றுப் பெயர் பிராகிருதம் என்பதே வடதமிழரின் கண்ணோட்டம், தமிழின் கிளைமொழி என்று மறைமுகமாகக் குறிப்பிட்டு வந்தனர்.

தகிடுதத்த வேலை--19ஆம் நூற்றாண்டில் எல்லாத் துறைகளிலும் புகுந்துவிட்ட பிராமணர் அரசியல், சமயம், சாதி, கல்வி இன்னோரன்ன ஏதுகளைக் கொண்டு, இந்திய மொழிகளின் தாயான தமிழை தமிழ் என்றோ பிராகிருதம் என்றோ சொல்வதை விட்டுவிட்டனர். மாற்றாக சமற்கிருதத்தைச் சொல்லத் தொடங்கினர்

. சாம பேத தான தண்டங்களாலும் இன்னபிற முயற்சிகளாலும் ஆங்கிலேயரை வளைத்துப் போட்டிருந்த பிராமணப் பண்டிதர்கள் சமற்கிருதம்தான் இந்திய மொழிகளின் தாய் என்று உளறத் தொடங்கினர்.

படித்தவன் பின்னும் பத்துப்பேர்; பைத்தியத்தின் பின்னும் பத்துப் பேர்! தமிழுக்கு வர வேண்டிய புகழ் பெருமையாவும் சமற்கிருதத்திற்குப் போயிற்று, ஏறத்தாழ நூறாண்டுப் பொய்மை இது. இன்னும் முழமையாக வெடித்துச் சிதறவில்லை.

மறைமலை அடிகள், தேவநேயப் பாவாணர் போன்றோர் சமற்கிருதத்தின் உண்மை நிலையை உணர்ந்து மக்கள் முன்னே இதனை விண்டு வந்தனர். என்றாலும் அவர்கள் செய்தி மக்கள் மன்றத்தை முழுமையாக எட்டவில்லை. காரணம் பாமர மக்களும் சமற்கிருதப் போதையில் ஆழ்ந்திருந்தனர். படித்தவர்களும் சமற்கிருத மயக்கத்தில் ஆழ்ந்து மீளாதிருந்தனர்.
http://viduthalai.com/20070630/snews11.htm

இந்துமதம் ஆதாரமும், அடிப்படையும் இல்லாமல் எதை எதையோ சேர்த்து... பார்ப்பனர்கள் சமஸ்கிருத மொழியைப் பேசுவதில்லை.

பழங்கால சமஸ்கிருதம் என்பதாக ஒரு மொழி இருந்திருக்கவில்லை. சமஸ்கிருதம் பழங்காலத்தில், பலர் பலவிதமாகப் பேசி வந்த பல மொழிகளிலிருந்த சொற்களைச் சேர்த்து உருவாக்கப்பட்ட ஒரு புது மொழியாகும்.

சமஸ்த்தம் + கிருதம் = சமஸ்கிருதம்.சமஸ்த்தம் + யாவும் கிருதம் - சேர்த்துச் செய்தது என்பது பொருள்.…. பார்ப்பனர்கள் சமஸ்கிருத மொழியைப் பேசுவதில்லை.….. அவர்களது லவுகீக வாழ்க்கையில் உலக வழக்கில் எந்த காரியத்திற்கும் அவர்கள் சமஸ்கிருதத்தைக் காரியத்தில் பயன்படுத்துவதும் இல்லை.….. சமஸ்கிருதம் பார்ப்பனர்களுக்கும் மற்றும் எவர்க்கும் எந்தக் காலத்திலும் தாய்மொழியாக இருந்ததும் இல்லை.…. இப்பார்ப்பனர்களின் மூதாதையர் என்பவர்கள் ஒரு குறிப்பிட்ட நாட்டில் வசித்தவர்கள் அல்ல. அவர்கள் ஒரு குறிப்பிட்ட ஏதாவது ஒரு மொழியையே பேசி வந்தவர்களும் அல்ல.…. அவர்கள் வாழ்ந்த நாடு பல நாடுகள்.….. அவர்கள் பேசிவந்த மொழிகள் பல மொழிகள்.….. இந்த உண்மைகளை ஒரு அளவுக்கு விளக்கவே சமஸ்கிருதம் பற்றிய கட்டுரையில் குறிப்பாகச் சிலவற்றை விளக்குவோம்.…

.. இதுபொலவே தான் அவர்கள் (பார்ப்பனர்) மதமான இந்துமதமும், ஆதாரமும், அடிப்படையும் இல்லாமல் எதை எதையோ சேர்த்து கதம்பமாகக் கற்பித்துக் கொண்ட மதமாகும்.….. மற்றும் இது போலவே தான் அவர் (பார்ப்பனர்) களுடைய பல கடவுள்களும் பல நாட்டு மக்கள் காட்டுமிராண்டித்தன்மையில் அவரவர்கள் சவுகரியத்திற்கு ஏற்பச் சமயோசிதம் போல் கற்பித்துக் கொள்ளப்பட்டவைகளை தாங்களும் அதே தன்மையில் தங்களுக்கும் ஏற்படுத்திக் கொண்டவை ஆகும். இற்றைப் பற்றிப் பின்னால் விளக்குவோம்.

….. பார்ப்பனர்களுக்கு அடிப்படை ஆதாரம் என்பது யாவற்றிற்கும் வேதமாகும். அந்த வேதம் ஒன்றல்ல பல.….. அவை ஒருவரால் அல்ல. பல பேர்களால் சொல்லப்பட்டவை. …… அந்தப்படிச் சொல்லப்பட்டதும் ஒரு காலத்தில் அல்ல பல காலங்களில்.…… அவைகளும் ஏதாவது ஒரு குறிப்பில் குறித்து வைக்கப்பட்டிருந்தவை அல்ல. வாய்ச் சொல்லில் வாக்கு ரூபமாக இருந்து அடிக்கடிக் கூட்டியும் குறைத்தும், திருத்தியும் கூறிவந்தவைகளாகும்.……

அவைகளும் காலத்துக்கு ஏற்பப் பலரால் சமய சந்தர்ப்பங்களுக்கு ஏற்பப் பொருள் கூறப்பட்டு வந்தும், பிறகு அப்பொருளுக்கு ஏற்ப மூலம் மாற்றப்பட்டு வந்தும், இன்றைக்கும் விவாதத்திற்கு நிற்காத முறையில் உருவாக்கப்பட்டதாகும்.……. வேதத்தின் துவக்கமானது செல்வம் பொருள் சுகபோகம் பற்றிய பேராசை இலட்சிமேயாகும்.….. பிறகு இந்நாட்டுப் பழங்குடி மக்கள் வாழ்க்கையைப் பார்த்து பொறாமையும் ஆத்திரமும் கொண்டு அவர்களை எதிரிகளாகக் கருதி வசவு கூறிச் சாபம் இடுவதேயாகும்.…..

இவைகளுக்கு ஏற்பக் கற்பித்துக் கொண்டவை தான் வேதத்தில் காணப்படும் தேவர்கள் என்பவர்களுமாகும்.……. அவைகளும் காலத்துக்கு ஏற்பக் கற்பனையும், முக்கியத்துவமும் கொண்டவை தான். இவைகளைப்பற்றியும் பின்னால் விளக்குவோம். ( புரட்டு - இமாலயப் புரட்டு! என்ற நூலில் இருந்து…. ஆரியர்களின் மத – வேத – சாஸ்திர – புராணங்களின் புரட்டுகளை ஆதாரங்களுடன் தந்தை பெரியார் விளக்குகிறார்) viduthalai.com
------------------------
படித்துவிட்டீர்க‌ளா?
இராமன் மது, மாமிசம் இவைகளை உட்கொண்டவனே!
பெண்கள் சுதந்திரம்!
தமிழ்த்தாய்.
-----------------------------
மற்ற பதிவுகள்

1 comment:

Lakshminarasimhan said...

we have so many issues to resolve.How many days you people are teasing brahmins and survive?..Brahmins are changed.you dont want them to change for your survival.getting bored...