Followers

Thursday, January 17, 2008

இந்து மதம் விலங்குகளை மட்டுமல்ல, நரபலி இடுவதையும் நியாயப் படுத்துகிறது. கற்பனையில் காட்டு விலங்காண்டி ஆரியர்களால் உருவாக்கப்பட்ட கடவுள்கள்.

பசுவைக் கொன்றனர் பார்ப்பனர்.-சார்வாகன்

வேதங்கள், சம்ஹிதைகள், பிராமணங்கள் எல்லாவற்றிலும் யஜூர் வேதத்தில்தான் யாகங்கள் பற்றி நிறையப் பேசப்படுகின்றன.
கற்பனையில் காட்டு விலங்காண்டி ஆரியர்களால் உருவாக்கப்பட்ட கடவுள்களைத் திருப்திப்படுத்த யாகங்கள் செய்யப்பட்டனவாம்.

விலங்குகளை வெட்டிக் கொன்று தின்னும் சடங்கு, சம்பிரதாயங்கள் தான் யாகம் எனப்படுகின்றன. இவை பலவகைப் பட்டன.

நெருப்பை வளர்த்து அதில் நெய்யை ஊற்றும் யாகம் முதல், நெருப்பில் மனிதனையே தூக்கிப் போடும் புருஷ வேதம் வரை யாக வகைகள் உள்ளன.
காட்டுவிலங்காண்டிக் கால ஆரியப் பழக்க வழக்கங்களையும், மக்களிடையே பரப்பப்பட்ட மூடநம்பிக்கைகளையும், ஆச்சார அனுஷ்டானங்களையும், அவற்றின் மூலம் ஆரியப் பார்ப்பனப் புரோகிதர்களின் ஆதிக்கததையும் யாகங்கள் தெரியப்படுத்துகின்றன. யாகங்கள் எதுவாயினும் அவற்றின் தலைவன் ஆரியப் பார்ப்பனன்தான் என்று பிராமணம் கூறுகிறது.


அசுவமேதம்அரசரின் ஆட்சி எல்லையை விரிவு படுத்துவதற் காகப், பக்கத்துப் பகுதிகளை யும் தன் அரசுடன் சேர்த்துக் கொள்வதற்காக நடத்தப் படும் யாகம் அசுவமேதம் . இது தனி நபருக்கான நன்மை தரும் யாகம் எனப் பொருள் படுமே தவிர, இந்த யாகத்தினால் மனிதர்க்கு யாதொரு பலனும் கிடையாது. எப்படி இதைச் செய்வது என்பதை யசூர் வேத கதபத பிரா மணமும், வாசஜனேயி கம் ஹிதை எனப்படும் சுக்ல யஜூர் வேதப் பகுதியிலும் விவரித்துக் கூறப்பட்டுள்ளது.

கருப்பு நிறக் குதிரையை அவிழ்த்துத் திரிய விடுவார்கள்.படை வீரர்களும் குதிரைகளும் நூற்றுக்கணக்கில் இதன் பின் செல்வார்கள். இந்தக் கருப்புக் குதிரையை யாராவது பிடித்துக் கட்டி விட்டால் போச்சு! அரசுகளின் அதிகாரத்திற்கு விடப்பட்ட அறை கூவலாக அது கருதப்பட்டு, குதிரையைக் கட்டியவருடன் சண்டை நடத்துவர். ஓராண்டுக் காலம் சம்பந்தப்பட்ட அரசனும் அரசியும் யாக கர்மங்களைக் கடைப்பிடித்து வரவேண்டுமாம். ஆண்டு நிறைவில் கருப்புக் குதிரை புறப்பட்ட இடத்திற்கே கொண்டு வரப்படுமாம். பின்னர் யாகம் தொடங்கும்.

ஒரு வயதுக் குதிரைக் குட்டிதான் அசுவமேதக் குதிரை. அதன் நிறம், குணம், மணம், காரம் பற்றியெல்லாம் விளக்கிக் கூறுகிறது யஜூர் வேதத்தின் சதபத பிராமணம். அதுவே யாகத்தையும் விளக்குகிறது. யாகப் புரோகிதப் பார்ப்பனர்களான அத்வர்யு, பிரம்மா, உத்காதா, ஹோத்ரு ஆகியோருடன் வாவாதா, பரிவ்ருக்தா ஆகிய பெத்னியர்களும் அரசனும், 400 இளம் பெண்களுடன் அரசியும் யாக சாலைக்கு வருவர்.

யாகக் குதிரையை அரசன் வெட்டிக் கொன்று தன் மனைவியை அதன்மேல் படுக்க வைத்து காம உணர்வூட்டும் சொற்களைக் கூறச் செய்ய வேண்டும். செத்தக் குதிரையுடன் தன் மனைவியான அரசி படுத்திருக்கும்போது அரசன் காம உணர்வூட்டும் ஆபாசச் சொற்களைச் சொல்லிக் கொண்டிருப்பான் (இந்தச் சொற்களை எழுதினால் ஏடு அசிங்கமாகிவிடும்).
-----------------------------------
இங்கு அழுத்தி >> குதிரையின்ஆண்குறி........................படித்துவிட்டு தொடரவும்

-----------------------
பிறகு அரசியுடன் வந்த பெண்கள் குதிரையிலிருந்து அவளைப் பிரித்தெடுத்துத் தூக்குவர்.அதன் பிறகு யாகக் குதிரையை நெருப்பில் சுட்டுப் பொசுக்குவதுடன் அசுவ மேதம் முடிகிறது.

மற்றொரு ஆய்வாளர் யாகக் குதிரையைக் கொல்லும் சடங்கைப் பின்வருமாறு விவரிக்கிறார்: பொன், வெண்கலம், வெள்ளி ஆகியவற்றால் செய்யப்பட்ட கத்திகளைக் கொண்டு அரசிகள் குதிரையைத் துண்டு துண்டாக வெட்டுவார்களாம். குதிரையின் கொழுப்பை வெளியே எடுப்பார்களாம். ரத்தத்தைப் பக்குவம் செய்வார்களாம். இவற்றைக் கடவுளுக்கு அர்ப்பணிப்பார்களாம். இதைத்தான் இராமாயண ராமன் செய்தான்.

கோமேதம்--பசுவைக் கொன்று, அதன் நெய்யை இறந்துபோன முன்னோர்களுக்கு சமர்ப்பிக்கச் செய்யப்படும் யாகம் கோமேதம்.
கொல்லப்பட்ட பசுவின் இறைச்சியை யாகத்தில் பங்குபெற்றவர்கள் பங்கிட்டுத் தின்றனர்.


யஜூர் வேத பாஷ்யமான தைத்ரிய பிராமணத்தில் காளைகளையும், பசுக்களையும் கொன்று நடத்தப்படும் யாக முறைகளை விவரித்துள்ளார்கள்.
காளையை விஷ்ணுக் கடவுளுக்கும் யாகத்தில் சொல்லப்படும் திருட்டுக் கீழ் நோக்குக் கொம்புடையதை இந்திரனுக்கும், நாசம் செய்யும் முரட்டுக்காளையை விருதன் என்ற கடவுளுக்கும் தரவேண்டுமாம்.
கருப்பு நிறப் பசுவை பூஷண என்ற கடவுளுக்கும், சிவப்பு நிறப் பசுவை ருத்ரனுக்கும் தர வேண்டுமாம். பசுவும் காளையும் புனித விலங்குகள் ஆனதால் அதைக் கண்டிப்பாக உண்ண வேண்டும் என்று ஆபஸ்தம்ப தர்ம சூத்திரத்தில் கட்டளையிடப் பட்டுள்ளது.

ஆரியப் பார்ப்பனர்கள் தங்கள் விருந்தினர்களுக்கு விருந்து வைப்பதை மதுபர்க்கம் எனக் கூறுகிறார்கள். இந்த விருந்தில் மாமிசம் இல்லாமல்இருக்கக் கூடாது என்று மாதவ க்ருஹ்ய சூக்தம் கூறுகிறது. இதற்குப் பசுவின் இறைச்சிதான் விசேஷமானதாம். பசு மேய்ச்சலில் இருந்தால் மட்டுமே ஆட்டிறைச்சியை உபயோகிக்கலாம்.
இதுவும் இல்லையென்றால் தான் பாயாசம் தரலாமாம். இந்தப் பசு இறைச்சி சாப்பிடும் விருந்தினர்களுக்கு ``கோக் நஹ என்ற பெயரே இதனால் உண்டாகிவிட்டது.


புருஷமேதம்--மனிதர்களைக் கொன்று நடத்தப்பட்டதே புருஷ மேதம். இதில் பல வகைகள் உண்டு என சதபத பிராமணம் தெரிவிக்கிறது. இந்த யாகம் பற்றிய விவரங்கள் வாஜ சனேய சம்ஹிதை எனப்படும் சுக்ல யஜூர் வேதீய சம்ஹிதை, க்குஷ்ண யஜூர் வேத தைத்திரீய பிராமணம், ரிக் வேத அய்த்ரேய பிராமணம் போன்றவற்றில் விவரிக்கப்பட்டுள்ளன.
அசுவமேதம் போன்று சாகடிக்கப்படவிருக்கிற சர்வ லட்சணங்களும் பொருந்திய மனிதனைத் தேர்ந்தெடுப்பர். அவனுடைய எல்லா ஆசைகளையும் நிறைவேற்றி வைப்பர்.


அசுவமேதத்தில் குதிரையின் குறியை ராணி தன் குறியில் வைத்ததைப் போலவே, யாக புருஷனிடம் ராணி நடந்து கொள்வாள். (ராஜயோகம் என்பதுபோல ராணி போகம் போலும்!) அதன்பின் அவன் கழுத்தை அறுத்துக் கொண்டு பலியிடுவர்.

சைத்ர மாதத்தின் (சித் திரை) சுக்ல தசமியில் தொடங்கி 40 நாள்கள் இந்த யாகத்தை நடத்த வேண்டு மாம். இதற்கு அதிகாரிகளாகப் பார்ப்பனரும் சத்திரியர்களும் மட்டுமே இருக்க வேண்டுமாம். யாகம் முடிந்த பின் யாகத்தை நடத்தியவன் வானப் பிரஸ்தாஸ்ரமத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் (அதாவது சன்னியாசத்து முந்தைய நிலை)
சர்வ மேதம்விஸ்வகர்மா பொருள்களையெல்லாம் பலி கொடுத்து தன்னையே பலி யாக்கி நடத்திய யாகமாம்.

சொர்க்கப் பதவியை விரும்பி செய்யப்பட்ட யாகமாம். விசுவகர்மா ஆத்மவதை செய்து சர்வமேதம் நடத்தினான் என்று யாஸ்கனின் பாஷ்யத்தில் கூறப்பட்டுள்ளது.

கடவுளை சந்தோஷப் படுத்துவது என்கிற பெயரில் பசு, குதிரை, ஆடு, காளை முதலியவற்றைப் பலியிட்டு அக்னிக்கு அளித்த பின்னர் புரோகிதர்கள் உணவுக்காக இறைச்சியைப் பயன்படுத்தி யுள்ளனர்.
பார்ப்பனப் புரோகிதர்களுக்கு எளிதாகவும், இலவசமாகவும் (நான் வெஜ்) அயிட்டங்கள் தின்னக் கிடைப்பதற்குக் கண்டுபிடிக்கப்பட்ட உபாயமே யாகம்.
விலங்குகளை ஏன் கொல்ல வேண்டும்? எனக் கேட்டதற்குப் பார்ப்பனர்கள் தந்த பதில், அந்த விலங்குகள் நேராகச் சொர்க்கத்திற்குப் போகின்றன என்பதுதான்.


முதல் பெரும் நாத்தி கனான சார்வாகன் கேட்டான் - அப்படியானால் யாகம் செய்பவன் தன் தந்தையை யாகத்தில் பலியிட்டு நேராகச் சொர்க்கம் செல்ல வழி ஏற்படுத்தலாமே எனக் கேட்டான். எவனும் பதில் சொல்லவில்லை - இதுவரை! http://www.viduthalai.com/20071222/snews05.html
------------------------------
உயிர்க் கொலை செய்வதை நியாயப்படுத்தும் இந்து மதத்தின் கொல்லாமை.

ஈழத்தில் நான் வாழ்ந்த சின்னஞ்சிறு வயதில் கிழமைக்கு ஒரு தடவைதான் அசைவம் உண்பதற்கு வழி கிடைக்கும். எனது குடும்பமும் பக்தியில் ஊறிய வைதீகக் குடும்பம் என்பதால் விரதங்களுக்கும் குறைவில்லை. நவராத்திரி, அல்லது எங்கள் ஊர்க் கோவில்களில் திருவிழாக்கள் தொடங்கிவிட்டால் தொடர்ந்து 10 அல்லது 15 நாட்கள் அசைவ உணவு முற்றிலுமாக தவிர்க்கப்படும். அந்தச் சிறிய வயதில் நானும் பக்தியில் திளைத்திருந்ததால் அவற்றை முழு மனத்துடன் ஏற்றுக்கொண்டிருந்தேன்.

அதே நேரம் இந்த சைவக் கட்டுப்பாடு பிற சமயங்களைப் பின்பற்றுபவர்களிடம் இல்லை என்பதையும் உணர்ந்திருந்தேன். இதற்கான காரணத்தை எனது வீட்டுப் பெரியவர்களிடம் கேட்டபோது, இந்து மதம் கொல்லாமையை வலியுறுத்தும் அளவிற்கு மற்ற மதங்கள் வலியுறுத்துவதில்லை, இந்து மதம் மட்டுமே மச்சம் மாமிசம் உண்பதைக் கண்டிக்கிறது என்று அவர்களிடமிருந்து பதில் வந்தது.

இதை எண்ணிப் பார்க்கும் போது எனது மனம் இனித்தது. என்ன இந்து மதத்தின் தன்மை என எண்ணினேன். அதுவும் என் மனதில் கோபுரமாக உயர்ந்தது. ஆனால் இன்றோ இந்து மதத்திற்கும் கொல்லாமைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டேன்.

இந்து மதத்தின் எந்த நூல்களுமே கொல்லாமையை வலியுறுத்தவில்லை. மாறாக உயிர்க் கொலை செய்வதை அவை நியாயப்படுத்துகின்றன. உயிர்களைக் கொன்று யாகத் தீயில் பலியிடும் வழக்கம் பண்டைய ஆரியர்களின் மரபில் மிகச் சாதாரணமாகக் காணப்படுகின்றது. இவ்வளவு ஏன் இந்து மதத்தின் புனிதச் சின்னமான பசுவைக் கொலை செய்வதையே இந்து மதத்தின் புனித நூல்கள் நியாயப் படுத்துகின்றன.

இந்து மதத்தின் மிக முக்கிய நூலான மனுதர்மம் புலால் உண்பதை அனுமதிக்கிறது. பசுக்களை யாகத்தில் வெட்டிப் பலியிடவேண்டும் என்றும் யாகத்தில் படைக்கப் பட்ட பசு இறைச்சியை உண்பது தெய்வீகச் செயல் என்றும் உரைக்கிறது. அத்துடன் வேள்வி சிரார்த்தம் போன்றவற்றில் தரப் படும் இறைச்சியை உண்ண மறுக்கும் பிராமணன் இருபத்தியொரு முறை விலங்ககாப் பிறப்பான் என்றும் கூறுகிறது. (மனுதர்ம சாஸ்திரம் அத்தியாயம் 5 சூத்திரம் 27 30 35 39).

இந்து மதத்தின் முக்கிய முனிவர்களான தேவகுரு பிரகஸ்பதி, யாக்ஞவல்கியர், பிரஜாபதி போன்றவர்கள் பசு இறைச்சி உண்பது பாவமல்ல என்று கூறியிருக்கின்றார்கள். கந்த புராணம், தேவி புராணம், விஷ்ணு புராணம், கருட புராணம் போன்ற புராணங்களும் பசு இறைச்சி உண்பதை நியாயப் படுத்துகின்றன.

இந்து மதத்தில் கடவுள்களகக் கருதப்படும் சிவன், விஷ்னு, போன்றவர்கள் மது மாமிசம் போன்றவைகளை விரும்பி உண்டதாக புராணங்கள் கூறுகின்றன. மற்றும் இந்திரன், அக்னி, யட்சன், சோமா, அஸ்வினிகுமாரர்கள் போன்றவர்கள் மாட்டிறச்சியை விரும்பி உண்டாதாக பார்ப்பனரின் புனித சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதிகாசக் கதாபாத்திரங்களான இராமன், சீதை, பாண்டவர்கள், திரௌபதி போன்றவர்கள் பசு இறைச்சியை விருந்தாகப் படைத்துத் தாங்களும் உண்டாதாக இதிகாசங்கள் குறிப்பிடுகின்றன.

மகாபாரதத்தில் பாண்டவர்கள் நஞ்சு தடவப் படாத அம்புகளால் மான்களை வேட்டையாடி அவற்றை பிராமணர்களுக்குக் கொடுத்த பின் தாங்களும் உண்டதாகவும் ஜெயத்திரதனுக்கும் அவனது படைவீரர்களுக்கும் பாஞ்சாலி ஐம்பது மான்களைக் கொன்று விருந்து படைத்ததாகச் சொல்லப் பட்டிருக்கிறது..

மகாபாரதத்தின் பதினெட்டு பர்வங்களில் ஒன்றான அனுசான பர்வத்தில் நாரதர் பிராமணர்களுக்கு இறைச்சி, அரிசி, நெய், பால் போன்றவற்றை வழங்கவேண்டும் என்று குறிப்பிடுகிறார்.

வால்மீகியின் இராமாயணத்தில் இளம் கன்றின் இறைச்சியை அரச குரு வசிஷ்டர் சுவைத்து உண்டதாக குறிப்பிடப் பட்டிருக்கிறது. அதே இராமாயணத்தில் தசரதன் தனக்கு வாரிசு வேண்டி 'புத்திர காமேஷ்டி' யாகம் செய்த போது பல நூற்றுக் கணக்கான விலங்குகளை வெட்டி யாகத்தில் பலியிட்டதாகச் சொல்லப் பட்டிருக்கிறது.

இந்து மதத்தின் அணிவேராக விளங்கும் பகவத்கீதை உயிர்களைக் கொன்று உண்பது பாவம் என்று எந்த இடத்திலும் கூறவில்லை. இந்து மதம் விலங்குகளை மட்டுமல்ல, நரபலி இடுவதையும் நியாயப் படுத்துகிறது. மகாபாரதத்தில் குருட்சேத்திரப் போர் தொடங்குவதற்கு முன் பாண்டவர்களை வெற்றி பெறச் செய்வதற்காக அருச்சுனனின் புதல்வர்களில் ஒருவனான அரவானை கண்ணன் நரபலியிட்டதாக குறிப்பிடப் பட்டிருக்கிறது.

மனைவியானவள் தனது கணவனுக்கு செய்யும் பணிவிடைகளிலிருந்து தவறினால் அவளை வேட்டை நாய்களால் கடிக்கவிட்டு கொல்ல வேண்டும் என்று மனுதர்மம் கூறுகிறது. (மனுதர்ம சாஸ்திரம் அத்தியாயம் 8 சூத்திரம் 371 - 372 ).

வேதங்களில் மிகப் பழமையான ரிக் வேதம் கணவன் இறந்தால் மனைவி தீக்குள் குதித்து தனது உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறது (ரிக். 10, 18.7)

வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் போன்றவற்றை ஆராய்ச்சி செய்த புகழ் பெற்ற இந்திய ஆய்வாளர்களான ராகுல் சங்கிருத்தியாயன், ராஜேந்திர லால் மித்ரா, லட்சுமண சாஸ்திரி, மற்றும் தொல்லியல் ஆராய்ச்சியாளரான ஹெச்.டி.சங்காலியா போன்றவர்கள் உயிர்களை யாகத்தில் பலியிடுவதும் அவற்றை இறைச்சியாக உண்பதும் வேதகால இந்தோஆரியர்கள் மத்தியில் நிலவி வந்திருக்கிறது என்பதையும் பிராமணர்களின் தர்ம சாஸ்திர நூல்கள் அவற்றை நியாயப் படுத்துகின்றன என்பதையும் மறுக்க முடியாத சான்றுகளுடன் விளக்கியிருக்கிறார்கள்.

இவற்றை எல்லாம் பார்க்கும் போது கொல்லாமைக்கும் இந்து மதத்திற்கும் எந்த வித தெடர்பும் இல்லை என்பது தெளிவாகிறது.

உண்மையில் உயிர்க் கொலைகளைக் மிகக் கடுமையாக கண்டித்தவர்கள் பௌத்தத்தைத் தோற்றுவித்த புத்தரும் சமணத்தைத் தோற்றுவித்த மகாவிரரும்தான்.

வேள்வித் தீயில் உயிர்களைப் பலியிடுவதை தீவிரமாக எதிர்த்தார்கள். மனிதர்களால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு மிகக் கடுமையான அறக் கோட்பாடுகளை வலியுறுத்தினார்கள். எடுத்துக்காட்டாக, நடக்கும் பொழுது பூச்சி, புழு, எறும்பு போன்ற உயரினங்கள் காலில் மிதிபடக் கூடது என்பதற்காக நிலத்தைப் பெருக்கிக் கொண்டோ அல்லது பாதங்களில் மெதுவான பஞ்சு போன்றவைகளை கட்டிக்கொண்டுதான் நடக்க வேண்டும் என்றார்கள்.

அதிலும் மகாவீரர் பல படிகள் மேலே போய் பச்சைத் தாவரங்களைத் தவிர்த்து காய்ந்து போன சருகுகளை உண்ணுமாறு வேண்டினார். பௌத்தமும் சமணமும் வலியுறுத்திய கொல்லாமை என்ற அறக் கோட்பாட்டிற்கும் இந்து மதத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. Posted by: இளங்கோ Apr 9 2007, 07:38 AM
www.yarl.com/forum3/index.php?showtopic=19416 - 242k -
--------------------------
படித்துவிட்டீர்க‌ளா?
பெரியாரின் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்திய சம்பவம்
"வந்தே மாதரமா' ?? "வந்தே ஏமாத்துறோமா' ???
இராமன் பாலத்தை அனுமான் காக்கிறதா?
புராணங்களைப் புரிந்து கொள்ளுங்கள்
-------------------------
மற்ற பதிவுகள்

1 comment:

மகா நடிகன் said...

இது என்ன பச்ச குதிரையா நல்லா எஞ்சாய் பன்னியிருக்காங்க ஆன செத்துப்போன குதிரை எப்படி கொஞ்ஞம் இடிக்குதே ஏதோ கடவுள் எது செய்தாலும் தப்பு சொல்ல கூடாது ஏதோ எழுதிட்டீங்க கன்னத்துல போட்டுக்கோங்க. பிராமனாள் கண்ணுள் பட்டுற போது அவங்க மானமுல்லவங்க இந்த உண்மை தெறிஞ்சா தற்க்கொலை பண்ணிக்குவாங்க பார்த்துகோங்க