Followers

Monday, January 14, 2008

இந்து மதத்தில் கடவுள்களைத் தவிர விலங்குகள், பூச்சிகள், செடிகள், மரங்கள் என கண்டதையும் வணங்கும் கொடுமை!!! ஆர்.எஸ்.எஸ். நாளேடு மோசடி?

பக்தியை வளர்க்க - புத்தியைப் போக்க - என்னென்ன மோசடி செய்கிறார்கள் பார்த்தீர்களா?

இந்து மதத்தில் கண்டதும் கடவுள்கள் என்பது உலகம் அறிந்த விசயம். விலங்குகள், பூச்சிகள், செடிகள், மரங்கள் என காட்டு விலங்காண்டிக் காலக் கும்பிடுகள் இந்து மதத்தில் மட்டும் இன்னமும் நீடிக்கின்றன என்பதுதான் கொடுமை.

இது ஒரு புறம் இருக்க, கடவுள்களைத் தவிரக் கண்டதையும் வணங்கும் பழக்கம் இந்து மதத்தில் உண்டு.

கிறித்துவ மதத் தலைமையகமான வாடிகன் நகரில் போப் வழிபடும் செயின்ட் பீட்டர் ஆலயம் இருக்கிறது என்றால், வணங்க வேண்டிய இடத்திற்குச் சென்று வணங்கும் பழக்கம்தான் அவர்களிடம் இருக்கிறதே ஒழிய, அந்த இடத்திற்குப் போகும் வழியில் இருக்கும் எல்லாப் பொருளையும் கும்பிடும் பழக்கம் கிடை யாது.

ஆனால் இங்கே, கோயில் சுவர், வாயிற்படி, படிக்கட்டு, பக்கத்துச் சாக்கடையில் இருக்கும் கல் முதலிய எல்லாவற்றையும் கும்பிடுகிறார்கள்.

திருப்பதி போய்ப் பார்த்தால், அங்கே கூடும் பக்தர்கள் மேற்சொன்ன எல்லாவற்றையும் கும்பிடும் கேவலத்தைக் கண்ணாலேயே காணலாம். அதைவிடக் கொடுமை கூட உண்டு.
தஞ்சை மாவட்டத்தில் ஒரு கோவிலைப் பகலில் திறக்கமாட்டார்களாம். இரவு பத்தரை மணிக்குத் திறந்து இரவு முழுவதும் பூஜை நடக்குமாம். அதுவும் கூட வாரத்தில் ஒரு நாள் மட்டும் தானாம். திங்கள் கிழமை இரவில் மட்டுமே திறப்பார்களாம்.மற்ற நாள்களில் கும்பிடாமலிருக்க முடியாதே பக்தர்களால்!

ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் என்பதை வணங்காமல் என்று எடுத்துக் கொண்ட மக்கள்தானே! எனவே செவ்வாய் முதல் ஞாயிறு வரை ஆறு நாள்களும் பூட்டிக் கிடக்கும் கோயில் கதவுக்கே பூஜை செய்து உருகுவார்களாம். பட்டுக் கோட்டைக்குப் பக்கத்தில் பரக்கலக் கோட்டையில் இப்படிப்பட்ட கோயில் இருக்கிறது!

பொங்கல் நாளன்று மட்டும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்தக் கோயில் திறந்திருக்குமாம். அரச இலையில் சாம்பல் தருவார்களாம். இதுதான் இந்தக் கோயிலின் பிரசாதமாம். இந்த இலையை வீட்டில் வைத்தால் செல்வம் கொழிக்குமாம், நிலத்தில் இட்டால் வேளாண்மை கொழிக்குமாம்.

பரக்கலக் கோட்டைப் பக் தர்கள் எல்லாரும் கோடீசுவரர்கள்தான்! பரக்கலக் கோட்டை விவசாயக் கிடங்கில் உரம் விற்பனை ஆவதே கிடையாதாம்!

பக்தியை வளர்க்க - புத்தியைப் போக்க - என்னென்ன மோசடி செய்கிறார்கள் பார்த்தீர்களா?
எட்டும் மட்டையும்: எட்டாம் தேதி பிறந்த நாளாம் குரங்குக் கடவுளுக்கு! ஊரூருக்குப் புறம்போக்கில் நின்று கொண்டிருக்கும் அனுமார் கடவுளுக்குப் பிறந்த நாள் ஜனவரி 8 இல் வந்து போயிற்று!

சினிமா நடிகைகளைப் போலவே, பிறந்த தேதியை மட்டுமே சொல்கிறார்களே தவிர வருடத்தைச் சொல்வதில்லை. வருடத்தைச் சொன்னால்தானே வயதைத் தெரிந்து கொள்ள முடியும்?


தாம்பரத்தில் நெடுஞ் சாலையைச் சில ஆண்டுகளுக்கு முன்பு அகலப்படுத்திய போது ராமாஞ்சனேயக் கோயிலை இடித்துத் தள்ளினார்கள். ஆஞ்சனேயன் சக்தி அம்பலமானது. பிறகு ஒரு ஓரமாகக் கட்டிக் கொண்டார்கள். அப்பேர்ப்பட்ட சக்தி கொண்ட இக்கோயிலில் மட்டைத் தேங்காய் கட்டினால் நினைப்பதெல்லாம் நடக்குமாம். இந்தப் பித்தலாட்டப் பிரச்சாரத்தை ஆர்.எஸ்.எஸ். நாளேடு செய்து வருகிறது. இது மோசடியல்லவா? இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டாமோ?

1958 இல் பிறந்த சுருட்டு சாமியார் பழினிச்சாமி செய்தது மோசடி எனும்போது 1948 இல் கட்டப் பட்ட தம் மாத்துண்டு சின்னக் கோயில் செய்வதும் மோசடிதானே! அங்கும் அதே கதைதான்!
- மஞ்சரி-சார்வாகன் http://viduthalai.com/20080112/snews07.html
---------------------------------------
படித்துவிட்டீர்க‌ளா?
வடக்கே உள்ள மணல் திட்டுக்களை யார் கட்டியது?
தேசப் பிதாவுக்கே தீட்டைக் கழித்தவர்
கடவுள் ``காலனி’’க்குப் போகிறது!
--------------------------------------
மற்ற பதிவுகள்

No comments: