Followers

Sunday, January 13, 2008

எலுமிச்சையில் அம்மன் தோன்றி கண்ணீர் வடிக்க, கெட்டிக்கார ஆர்.எஸ்.எஸ் க்கு போட்டியாக ஆரோக்கியமாதா சிலை திரும்ப !!! எம்.ஜி.ஆர் காளை மாட்டுக் கண்ணில்!!!

செய்தியும் சிந்தனையும்!-கெட்டிக்காரன் புளுகு? - மயிலாடன் -

சென்னை - பிராட்வேயில் ஆசீர்வாதபுரத்தில் உள்ள ஆரோக்கியமாதா கோயிலின் மாதா சிலையிருந்தது திடீரென்று அந்த மாதா சிலை திரும்பியதாகப் புரளி - மக்கள் கூட்டம்.

மேல்மருவத்தூர் அம்மாவுக்காக வைக்கப்பட்ட படையல் பொருளான எலுமிச்சைப் பழத்தில் அம்மா தோன்றினாள் என்பது இன்னொரு செய்தி.இவை இரண்டும் இரு நாள்களிலும் அவிழ்த்துவிடப்பட்ட கரடிகள்.

ஆன்மீக உலகத்தில் அவ்வப்பொழுது இதுபோன்ற அற்புத செய்திகளைக் கிளப்பிவிடத்தான் செய்வார்கள்.

சில ஆண்டுகளுக்குமுன் சிலுவைக் குழந்தை என்று கிளப்பிவிடவில்லையா? அதன்பின் என்னாயிற்று? அது ஒரு மோசடி என்பது மக்கள் மன்றத்தில் வெட்ட வெளிச்சம் ஆகிவிடவில்லையா?
பிள்ளையார் பால் குடித்தார் என்ற புரளியைக் கிளப்பிவிடவில்லையா?
ஆயுதப் பேரச் சாமியார் சந்திராசாமியாரின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸின் எத்து வேலை என்று பிறகு விளங்கிடவில்லையா?

திடீரென்று ஒரு துண்டு அறிக்கை வரும் - திருப்பதி கோயில் கருவறையில் ஒரு பாம்பு வந்தது. அந்தப் பாம்பு உடனே பிராமண உருவம் எடுத்தது. அர்ச்சகரைப் பார்த்து, பயப்படாதே! நான் பூமியில் அவதாரம் எடுத்து அதர்மங்களை அழிப்பேன்! நான் இவ்வாறு வந்ததை யார் யார் எல்லாம் துண்டு அறிக்கைகள் போட்டு மக்களிடம் பரப்புகிறார்களோ, அவர்கள் நினைத்ததெல்லாம் நடக்கும்.

புதூரில் 2570 நோட்டீஸ் அடித்துக் கொடுத்தவர்களுக்கு 24 லட்சம் ரூபாய் லாட்டரியில் கிடைத்தது. ஒரு மாதமாகியும் நோட்டீஸ் அச்சடித்துக் கொடுக்காதவர் மரணம் அடைந்துவிட்டார். இத்தியாதி இத்தியாதி துண்டு அறிக்கைகளைப் பேராசையாலும், பயத்தாலும் அச்சிட்டுக் கொடுத்தவர்கள் உண்டு.திருப்பதியை மையமாக வைத்து அச்சிடப்பட்டதைப் பார்த்த மேல்மருவத்தூர் பங்காரு பக்தர்கள் இதே பாணியை கையாண்டு துண்டு அறிக்கைகளைப் பரப்பினார்கள்.

வேளாங்கன்னி பக்தர்கள் சும்மா இருப்பார்களா? அவர்களின் பங்குக்கு அவர்களும் இந்தக் கைங்கரியத்தைச் செய்தார்கள். மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில்வரை இந்தக் கைச் சரக்கு அவிழ்த்துக் கொட்டப்பட்டது.

இதன் தன்மையைப் புரிந்துகொள்வதில் ஒன்றும் கஷ்டம் இல்லை. மக்கள் மத்தியில் செய்யப்படும் பிரச்சார யுக்திதான் இது. அற்புதங்களைச் சொல்லித்தான் மக்களை மயக்க முடியும் என்கிற அழுத்தமான நம்பிக்கையில் செய்யப்படும் மோசடி வேலையே இது.

சேலம் அயோத்தியாபட்டினத்தை அடுத்த வலசையூரில் - ஒரு பூசணிச் கொடி பாம்பு படம் எடுத்ததுபோல் காணப்பட்டது, அவ்வளவுதான்! அங்கே நாகப் பொம்மை வைத்து, பிறகு ஒரு கோயிலையே உருவாக்கி விட்டார்கள். மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் ஒரு வேப்பமரத்தின் அடியில் ஒரு பிள்ளையார் பொம்மையை வைத்து வேம்படிவிநாயகர் என்று நாமகரணம் சூட்டிவிட்டார்கள். (அது பிறகு நொறுக்கப்பட்டது என்பது வேறு விஷயம்!)

கடவுளைப் பரப்புகிறவனை அயோக்கியன் என்று தந்தை பெரியார் ஏன் சொன்னார் என்பது இப்பொழுது விளங்கியிருக்குமே!

சென்னையில் சில வருடங்களுக்குமுன் ஒரு செய்தியை அவிழ்த்துவிட்டார்கள். தலையில்லா முண்டம் டீ கடைக்கு வந்து டீ குடித்தது என்பதுதான் அது. அப்பொழுது சென்னை மாநகரக் காவல்துறை ஆணையராகயிருந்த ஸ்ரீபால் அவர்களிடம் செய்தியாளர்கள் இது குறித்துக் கேட்டபோது, பளிச்சென்று சொன்னார், இப்படி எந்த முண்டமாவது சொல்லியிருக்கும் என்றாரே!

தண்டையார்பேட்டையில் அம்மன் கண் திறந்தாள் என்று ஒரு நாள் கிளப்பி விடுவார்கள். இன்னொரு நாள் அம்மன் கண்ணீர் வடித்தாள் என்று சொல்லுவார்கள்.

காளை மாட்டுக் கண்ணில் எம்.ஜி.ஆர். தெரிகிறார் என்றார்கள்.சரி... இவையெல்லாம் தெய்வ சக்தி என்றால், ஏன் இரண்டொரு நாளில் இருந்த இடம் தெரியாமல் அமுங்கிப் போய்விடுகிறது. ஏன் தொடர்ந்து அம்மன் கண் திறப்பதில்லை? திறந்த கண் எப்பொழுது மூடியது?

கெட்டிக்காரன் புளுகு எட்டே நாள்தானே!சென்னை - தியாகராயர் நகரில் பூமியிலிருந்து பிள்ளையார் வெடித்துக் கிளம்பினார் என்று ஓர் நாள் காலையில் கிளப்பி விட்டார்கள். உடனே பக்கத்தில் ஒரு உண்டியலையும் வைத்தார்கள். (இந்த அற்புதங்கள் கிளப்பிவிடப்படும் இடங்களில் எல்லாம் உண்டியல் வந்துவிடும். அதுதான் முக்கியம் - கவனிக்கத் தவறாதீர்கள்!)

காஞ்சிபுரம் சங்கராச்சாரியாரே அதற்கு வக்காலத்து வாங்கினார். ஆமாம்! அது சுயம்பு - தானாகக் கிளம்பும் என்று வக்காலத்துப் போட்டாரே!

அந்த இடத்தில் கூட்டம் போட்டு பேசுவேன் என்று தந்தை பெரியார் சொன்னதுதான் தாமதம் - முதலமைச்சர் கலைஞர் உண்டியலைப் பறிமுதல் செய்ய ஆணையிட்டார். விசாரிக்க உத்தரவிட்டார்.

கே.எம். சுப்பிரமணியம் என்கிற பார்ப்பனர், போலீஸ் கான்ஸ்டபிள் செல்வராஜைப் பயன்படுத்தி இந்த வேலையைச் செய்தார் என்று முகமூடிக் கிழித்தெறியப்பட்டதே!

ஒரு குழியைத் தோண்டி அடியில் பருத்திக் கொட்டையைப் போட்டு, அதற்குமேல் பிள்ளையார் பொம்மையை வைத்து, ஒரு ஓட்டை வழியாகத் தண்ணீர் ஊற்றியவுடன் பருத்திக் கொட்டை உப்பி மேலே வந்தபோது, பிள்ளையார் பொம்மை பூமிக்குமேலே தலையை நீட்டியது - எவ்வளவு பெரிய பித்தலாட்டம் - இதற்குச் சங்கராச்சாரியாரும் சாட்சியம் - வெட்கக்கேடு!

பக்தர்கள் புத்தியைப் பயன்படுத்தாதவரை எல்லா மோசடிகளும் நடக்கத்தான் செய்யும் - எச்சரிக்கை!
http://viduthalai.com/20080112/news07.html
---------------------------------------
படித்துவிட்டீர்க‌ளா?
உடம்பெல்லாம் பெண் குறியாக இந்திரன் என்ன செய்தான்? அவன் எப்படிப்பட்ட அயோக்கியன் என்பதைப் புராணம் கூறுவதைப் படியுங்கள்.

விநாயகன் திருமணம் ஆனதா? அல்லது பிரம்மசாரியா? குழப்புகிறார்கள் புராணத்தில்

பிணத்தைத் தின்கிறார், பூசாரி!
------------------------------
மற்ற பதிவுகள்

No comments: