Followers

Friday, January 11, 2008

ஆட்டுத் தோல் போர்த்திய ஓநாய் ஆர்.எஸ்.எஸ்-அமெரிக்கப் பெண்ணை பூசாரி மானக்கேடு-தலித் பக்தரை தாக்கிய பார்ப்பன அர்ச்சகர்-சோ மோடி பார்ப்பன ஏடுகள்.

ஆர்.எஸ்.எஸ். சமூக அமைப்பு அல்ல; ஆட்டுத் தோல் போர்த்திய ஓநாய்.
இமாசல பிரதேச மார்க்சிஸ்ட் கட்சி கடும் தாக்குசிம்லா, ஜன. 10- ஆர்.எஸ்.எஸ். என்பது ஒரு சமூக அமைப்பு அல்ல. பாசிச சித்தாந்தம் கொண்ட வலதுசாரி அரசியல் குழு என்று மார்க்சிஸ்ட் கட்சி 7 ஆம் தேதி தெரிவித்துள்ளது.


இமாச்சலப் பிரதேசத்தில் பொது இடங்களில் ஆர்.எஸ். எஸ். தொண்டர் படை பயிற்றி நடத்த அங்குள்ள பா.ஜ.க. அரசு அனுமதி அளித்திருப்பதை மார்க்சிஸ்ட் கட்சி கடுமையாகத் தாக்கியுள்ளது. ஆட்டுத் தோல் போர்த்திய ஓநாய் என்று அக்கட்சியைக் குறிப்பிட்டு உள்ளது.


இமாச்சலப் பிரதேச பா.ஜ.க. அரசு பழையபடி இந்துத்துவா நிகழ்ச்சி நிரலுக்குத் திரும்பி உள்ளது என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலளார் ராகேஷ் சின்கா 7-ஆம் தேதியன்று தெரிவித்துள்ளார்.
பொது இடங்களில் தொண்டர் படைப் பயிற்சி நடத்த ஆர்.எஸ்.எஸ். மீது விதிக்கப் பட்டிருந்த தடையை நீக்க, மாநில அரசு எடுத்துள்ள முடிவு வாய்ப்புக் கேடானது என்று குறிப்பிட்டார்.


இந்துக்கள் அல்லாதவர்களுக்கு எதிராக, குறிப்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். மேற்கொள்ளும் வெறுப்பூட் டும் பரப்புரை, பல மொழி பேசும், பல மதம் கொண்ட இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு உலைவைத்துவிடும் என்று சின்கா கூறினார்.


குஜராத்தில் கோத்ரா ரயில் தீ விபத்து சம்பவத்துக்குப் பின்னர் நடைபெற்ற வகுப்புவாதப் படுகொலை மூலமாகவும், ஒரிசாவின் கிறித்தவ தேவாலயங்கள் மீதும் கிறித்தவர்கள் மீதும் நடத்தும் தாக்குதல் மூலமும் ஆட்டுத் தோல் போர்த்திய ஓநாய்தான் ஆர். எஸ்.எஸ். என்பது வெளிப் படையாகத் தெரிகிறது என்று மேலும் அவர் தெரிவித்தார். http://viduthalai.com/20080110/news20.html
----நாட்டு நடப்பு: சோ - மோடி - பார்ப்பன ஏடுகள்.
தினமலர்பொதுத்தொண்டில் மிக நீண்ட காலம் பணியாற்றி பல்வேறு தியாகத் தழும்புகளைப் பதக்கங்களாக ஏற்றுப் பொலிவுறும் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் முதுபெரும் தலைவர் ஆர். நல்லகண்ணு அவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் அம்பேத்கர் விருது வழங்கியிருப்பதானது அனைத்துத் தரப்பினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.ஆனால், தினமலர் பார்ப்பனப் புத்தி அதனை எப்படி பார்க்கிறது? எப்படி செய்தி வெளியிடுகிறது?
நல்லகண்ணு அவர்களுக்கு அம்பேத்கர் விருது என்று மற்ற ஏடுகள் எல்லாம் தலைப்புக் கொடுத்திருக்க, தினமலர் எப்படி செய்தியை வெளியிடுகிறது?


நல்லகண்ணுக்கு தமிழக அரசு ரூ.ஒரு லட்சம் என்று தலைப்புக் கொடுக்கிறது.விருதையும், அண்ணல் அம்பேத்கரையும் பின்னுக்குத் தள்ளி, பணத்தை முன்னுக்கு வைக்கிறது தினமலர்!


செத்து சுடுகாடு போன பிறகும் ஆண்டுதோறும் திதி என்ற பெயரால் பணம் பறிக்கும் கருமாதிப் புத்தி தினமலரைவிட்டு எப்படிப் போகும்? அது அவர்களின் ரத்தத்தில் ஊறிய விஷயமாயிற்றே!


தினமணிசோ ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சி ஒன்றில், குஜராத் முதலமைச்சர் மோடி பங்கு கொள்கிறாராம். அது சென்னை - காமராசர் அரங்கில் நடைபெறுகிறதாம். மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு காமராசர் அரங்கை எப்படி வாடகைக்கு விடலாம் என்ற பிரச்சினைபற்றி எழுத வந்த தினமணியின் வைத்தியநாத அய்யர்வாள் சந்தடி சாக்கில் கந்தகப்பொடி தூவும் தம் நச்சு வேலையின் கொடுக்கைத் துருத்திக் காட்டியிருக்கிறார்.


பெரியார் திடலில் அனைத்து நிகழ்ச்சிகளையும் நடத்த அனுமதிப்பது பற்றி சொல்லிவிட்டு, திராவிடர் கழகத்தைப்போல காங்கிரஸ் கட்சி வியாபார நோக்கத்துடன் செயல்படக்கூடாது என்று சில காங்கிரஸ்காரர்கள் சொன்னதுபோல செய்தியாக வெளியிடுகிறது தினமணி.


அறிவு நாணயம் தினமணிக்கு இருக்குமானால், அப்படி சொன்னவர்களின் பெயர்களை வெளியிட வேண்டாமா?

துக்ளக் பேக்கரியில் தயாரிக்கப்பட்ட இந்தப் பார்ப்பன ரொட்டியான வைத்தியநாதய்யர் தினமணியின் ஆசிரியராக வந்ததுமுதல் துக்ளக்கின் மறுபதிப்பாகவே தினமணியை மாற்றிக் காட்டிவிட்டார்.தன்னுடைய அந்தரங்க வெறுப்பை காங்கிரஸ் பேரால் ஏற்றிக் கூறுகிறார்.
மெமோரியல் ஹாலில் தந்தை பெரியார் பேசுவதற்கு இடம் தர முடியாது என்று சொன்ன நேரத்தில், யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்துகளைத் தாராளமாகக் கூறக்கூடிய பொதுமன்றம் ஒன்றை அமைக்கவேண்டும் என்று கருதிய தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்டதுதான் நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றம். இது திராவிடர் கழகத்தின் கொள்கை உறுதியையும், எந்தக் கருத்தையும் எதிர்கொள்ளும் துணிவையும் பறைசாற்றும். கடவுளையும், பக்தியையும் வியாபாரப் பொருளாக்கிய கூட்டம் அல்லவா?
அதனால்தான் எதையும் வியாபாரக் கண்கொண்டு பார்க்கிறது.இதுபற்றிப் பல தடவை விளக்கிக் கூறப்பட்ட பின்னரும், வைத்தியநாத அய்யர்கள் தங்கள் பூணூல் தனத்தைக் காட்டிக்கொண்டு இருப்பது அவாளின் பிறவிக் கோணல்புத்தி என்பதைத் தவிர வேறு எதுவாக இருக்க முடியும்?


சோவை அனுமதிப்பவர்கள் மோடியை அனுமதிப்பதில் என்ன தயக்கம்? சோவைப்போல் மோடியைத் தூக்கி வைத்து ஆடுபவர்கள் யாராவது இருக்கிறார்களா?


பார்ப்பனீய - இந்துத்துவா வெறியில் மோடி விஷம் என்றால், திருவாளர் சோ ராமசாமி அந்த விஷத்தின் ஊற்றாயிற்றே!குஜராத்தில் சிறுபான்மை மக்களை வேட்டையாடிய மோடியை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு சோ கொஞ்சியதுபோல, வேறு யாராவது அவ்வளவுப் பச்சையாக வெறித்தனமாக நடந்துகொண்டது உண்டா? ஆற அமரச் சிந்தித்தால் இதன் ஆழமும், அகலமும் நன்கு புரியுமே!
http://viduthalai.com/20080110/news04.html
---------------------------------------------
21 ஆம் நூற்றாண்டிலுமா இக்கொடுமை? தாழ்த்தப்பட்ட இன பக்தரை தாக்கிய பார்ப்பன அர்ச்சகர்.


கான்பூர், ஜன. 10- கான்பூரில் உள்ள மகாதேவ் கோயிலுக்கு வழிபாடு நடத்துவதற்காக வந்த பக்தரையும் அவரின் மூன்று நண்பர்களையும் திட்டி அடித்துக் கோயிலை விட்டு விரட்டி விட்டார் அக்கோயிலின் பார்ப்பனப் பூசாரி.


சைலேந்திர திவாரி எனும் பார்ப்பன அர்ச்சகர் சுதிர் குமார் எனும் தாழ்த்தப்பட்டவரையும் அவரின் மூன்று நண்பர்களையும் ஜாதியைச் சொல்லித் திட்டிக் கேவலப்படுத்தியுள்ளார். அர்ச்சகரின் நண்பரான ராஜன் தீட்சித் என்ற பார்ப்பனரும் சிவ்சிங் யாதவ் என்பவரும் அர்ச்சகருடன் சேர்ந்து சுதிரையும் அவர் நண்பர்களையும் தாக்கியுள்ளனர்; கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுத்துவிட்டனர்.


தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளே வந்துவிட்டதால் கோயில் தீட்டுப்பட்டு விட்டதாகவும், அதைத் தூய்மைப்படுத்துவதற்காக அவர்கள் பணம் தர வேண்டும் என்றும் அர்ச்சகர் கூட்டம் கோரியுள்ளது.இதனால் கோபமுற்ற தாழ்த்தப்பட்டோர் கூட்டம் கூடி, காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முடிவு செய்தனர்.மூத்த காவல்துறை அலுவலர்கள் ஊருக்குச் சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறியுள்ளார்.


இதற்கிடையில், தன் மனைவி மாதுரி திவாரியைப் பற்றி கிண்டலாகப் பேசியதாக தாழ்த்தப்பட்டோர் மீது அர்ச்சகர் காவல்துறையில் புகார் செய்துள்ளார். தாக்கப்பட்ட சுதிர் அர்ச்சகர் மீது புகார் மனு தாக்கல் செய்துள்ளார்.


அத்தொகுதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான அனில் சுக்லவார்சி என்பவர், சுதிர் வசிக்கும் கங்காபூர் கிராமத்திற்குச் சென்று - கட்சி இந்தச் சம்பவத்தைக் கடுமையாகக் கருதுகிறது என்றும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இனிமேல் இம்மாதிரி நிகழ்ச்சிகள் நடக்காதவண்ணம் கண்காணிக்குமாறு கட்சித் தொண்டர்களுக்கு அறிவுரை கூறினார்.


கோயில் பூசாரி தன்னை மானக்கேடு செய்ததாக அமெரிக்கா ஒரிகான் பகுதியைச் சேர்ந்த பெண் முறையீடு.


ஜெய்ப்பூர், ஜன. 10- இராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீர் மாவட் டம் புஷ்கரில் உள்ள கோயிலில் வழிபாடு நடத்தியபோது அங்கிருந்த பூஜாரி தன்னை மானக்கேடு செய்ததாக அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.


அமெரிக்காவின் ஒரிகான் பகுதியைச் சேர்ந்த 28 வயதுப் பெண் இந்தியாவுக்குச் சுற்றுலா வந்திருந்தார். புஷ்கரில் உள்ள பப்-மொச்சானி கோயிலில் கடந்த 8 ஆம் தேதி வழிபாடு நடத்திக் கொண்டிருந்தபோது அங்கிருந்த பூஜாரி தன்னை பகடி செய்ததுடன், மானக்கேடு செய்ததாகவும் அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


இதையடுத்து வழக்குப் பதிவு செய்து அந்தப் பூஜாரியைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை வட்டார அலுவலர் தெரிவித்துள்ளார். மேலும் புகாரில் மற்றொரு சுற்றுலாப் பயணி தாக்கப்பட்டதாகச் செய்திகள் வந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
http://viduthalai.com/20080110/news02.html
-------------------------------------
மற்ற பதிவுகள்

No comments: