Followers

Wednesday, January 9, 2008

அமெரிக்காவில் கடனைத் திருப்பிக் கட்டாத இந்துக் கடவுள் ஏலம்.!! அன்ன ஆகாரம், அர்ச்சனை இல்லாமல் தவிக்கும் சரசுவதியின் கோயிலே ஜப்தி!

வாஷிங்டன், ஜன. 8- இந்துமதச் சுரண்டலை, பிழைக்கப் போகும் இடங்களில் கூட நடத்தி வருபவர்கள் அமெரிக்காவில் எப்பிங் நகரில் ஒரு கோயிலைக் கட்டிச் சுரண்டி வருகின்றனர்.


இந்தக் கோயில் சரசுவதி எனும் இந்துமதப் பெண் கடவுளுக்காகக் கட்டப் பட்டிருக்கிறது. 100 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்ட இக்கோயிலை விரிவுபடுத்தப் போகிறோம் எனக் கூறி கடன் வாங்கியுள்ளனர்.
கோயிலை நிருவகிக்கும் குழுவினர் ஜி.ஜி. எல்.எல்.சி., என்கிற நிதி நிறுவனத்திடம் ஒரு பெருந்தொகையைக் கடனாகப் பெற்றிருக்கின்றனர். கோயிலை விரிவுபடுத்தாமல் கடன் வாங்கிய பணத்தை விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டனர்.


வாங்கிய கடனுக்குச் செலுத்தவேண்டிய தவணைத் தொகையைக் கட்டவில்லை. கடன் கொடுத்த நிறுவனம் வசூல் செய்வதற்காக வழக்கு போட்டது. 2006 இல் வழக்கு வர்ஜினியா வழக்கு மன்றத்தில் தொடரப்பட்டு நடந்து வந்தாலும் கோயில் நிருவாகம் தொகையைக் கட்ட எந்த முயற்சியும் எடுக்கவில்லை.கோயில் ஜப்திகடன் வாங்குவதற்காக ஈடு காட்டிய கோயிலையும் கடவுளையும் ஜப்தி செய்து கடன் தொகையை வசூலித்துக் கொள்ளும்படி நிதி நிறுவனத்திற்குச் சாதகமாக நீதி மன்றம் தீர்ப்பு அளித்து விட்டது.


அதன்படி 2006 நவம்பர் மாதத்தில் சரசுவதியும், அதன் கோயிலும் ஏலம் விடப்பட்டன. நிதி நிறுவனமே கோயிலை ஏலத்தில் விலைக்கு வாங்கிக் கொண்டது.


கடவுள் ஏலம்

இதைத் தொடர்ந்து கோயிலின் அர்ச்சகர் வேலையில் இருந்த பார்ப்பனர் ராமாதீன் ரம்சுமூஜ் என்பவரும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர்களும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டனர்.


இப்போது சரசுவதி அன்ன ஆகாரம் இல்லாமல், அர்ச்சனை செய்ய ஆள் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறது.


கடந்த 3 ஆம் தேதி கோயிலையும் கடவுளையும் தன் பொறுப்பில் ஜி.ஜி.எல். எல்.வி. நிதி நிறுவனம் எடுத்துக் கொண்டுவிட்டது. கோயில் பெருச்சாளிகளாக இருந்த 12 பேர்கள் கோயிலைவிட்டு வெளியேற்றப்பட்டு விட்டனர்.


இந்து கலாச்சாரப்படி, வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாத இந்துக்கள் அவர்கள் மானத்தைக் காற்றில் பறக்கவிட்டதோடு கல்விக் கடவுளையும் அசிங்கப்படுத்தி விட்டனர்.


கடன் வாங்கிய ஏழுமலையான் தன் திருமணத்திற்காக வெங்கடாசலபதி எனும் இந்துக்கடவுள் குபேரனிடம் கடன் வாங்கியதாம். கடன் வாங்கிக் கல்யாணம் செய்து கொள்ளும் கெட்ட பழக்கம் இந்துக் கடவுளுக்கே உண்டு.
இந்தக் கடனைத் திருப்பித் தருவற்காகத்தான் பக்தர்கள் திருப்பதிக் கோயிலில் பணம் போடுவதாகப் பக்தர்கள் பீற்றிக் கொள்வார்கள்.



ஆனால் திருப்பித்தராமல் சரசுவதி ஜப்திக்கு ஆளாகி விட்டது. பக்தர்கள் ஆளாக்கி விட்டனர். பனியனில் படம் போட்டால் கோபித்துக் கொள்கிற இந்து மதக்காரர்கள் இதுபற்றி வாயைத் திறக்கவேயில்லை. வெட்கம் வாயை அடைத்துவிட்டதோ?
http://viduthalai.com/20080108/news21.html
-----------------------------
யானை, கரடி உரு எடுத்து புணர்ந்த சிவனும் பார்வதியு...
------------------------------------------------------------------------------
அழுத்தவும் :- Show all posts

No comments: