Followers

Wednesday, January 2, 2008

ரஜினிகாந்த் - சோ... விருந்து வைக்கப்பட்டிருக்கும் மேஜையில், விசக்கிருமிகள் பரவியிருந்தால் எதை எடுத்தாலும் ஆபத்துதானே!

பதிலடி
பெரியாரின் பல கருத்துகளில் பிடிக்காததை விட்டு விட்டு பிடித்ததை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ரஜினிகாந்த்பேசியிருக்கிறாரே?

என்ற கேள்விக்கு விருந்து வைக்கப்பட்டிருக்கும் மேஜையில், விசக்கிருமிகள் பரவியிருந்தால் எதை எடுத்தாலும் ஆபத்துதானே! அந்த மாதிரி பிடித்த விசயம், வேறு பல விருந்துகளில் கிடைப்பவையே. அங்கே அவற்றை எடுத்துக் கொள்வது, ஆபத்தைத் தவிர்க்கிற வழி என்று வழக்கமான தனது விசமத்தனமான பதிலை 7.11.2007 துக்ளக் இதழில் வழங்கியிருக்கிறார் திருவாளர் சோ.

ஆண்டாண்டு காலமாக எம் மக்களையும், நாட்டையும் பொய்களாலும், புரட்டுகளாலும் பக்தி போதை ஏற்றி, அறிவைக் கெடுத்து, சுரண்டிக் கொழுத்த கூட்டம் அப்படி எழுதுவதில் ஆச்சரியம் இல்லை.

பார்ப்பன பனியாக்களால் விளைந்த கேடுகளை, அவலங்களை அனுபவித்து உணர்ந்தவர்கள் கூட, ஆற்றாமையால் வாய் மூடிக் கிடந்த கால கட்டத்தில், அத்தனை அக்கிரமங்களையும் துணிந்து நின்று தோலுரித்துக் காட்டிய ஈரோடு எரிமலையின், ஒப்பற்ற போராளியின் விருந்தில் விசக்கிருமிகள் பரவியிருந்ததாக, இந்த விசக்கிருமி சொல்வது ஒன்றும் புதிதல்ல. புரிந்துகொள்ளக்கூடியதே!

நச்சரவங்களின் நடமாட்டம் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டே மேற்கண்ட கேள்வி பதில்.

பெரியார் வைக்கும் விருந்தில் விசக்கிருமிகள் என்கிற சோ, அவருடைய துக்ளக்கில் வைக்கும் விருந்தையும் பார்ப்போம்.

அதே (7.11.2007) இதழில் இரு வேறு பக்கங்களில் மக்களைக் குழப்புவதிலும், மூடக் குட்டையில் மூழ்கடிப்பதிலும் எவ்வளவு முனைப்புடன் செயல்படுகிறார் என்பதையும் கவனிக்க வேண்டும்.

இந்து மகா சமுத்திரம் எனும் தொடரில், ஆதிசங்கரர் பிறப்பு பற்றி சொல்கிறபோது, சிவகுரு-ஆர்யாம்பாள் இணையருக்கு பரமசிவன் ஆதிசங்கரராகப் பிறந்தார். எட்டு வயதில், தாய் குளித்துக் கொண்டிருந்த ஆற்றில் தானும் குளித்துக் கொண்டிருந்தார். தாய் குளித்து முடித்து கரை ஏறியதும் சங்கரரின் காலை முதலை ஒன்று கவ்வியது.

கரையிலிருந்த தாய் பதறுகிறாள். அப்போது சங்கரர் பேசுகிறார்:இந்த ஆபத்திலிருந்து மீள்வதற்கு ஒரு வழி இருப்பதை நான் உணர்கிறேன். அதை நீ ஏற்றால் எனக்குத் துர்மரணம் ஏற்படாது. இப்போதே நான் சந்நியாசம் பெற்றுக் கொண்டால், நான் வேறு பிறப்பை எய்தியவனாவேன். சந்நியாசம் என்பது தனிப் பிறப்பு என்பதால் இந்தக் கண்டம் நீங்கி, முதலையிடமிருந்து நான் தப்பிக்க வழி ஏற்படும்...

ஒருவன் சந்நியாசம் பெற்றால் அவனுடைய மூதாதையர் களில் இருபத்தியோரு தலைமுறையினருக்கு நற்கதி கிட்டும் என்று சாத்திரங்கள் சொல்கின்றன. உனக்கும் உன்னத கதி கிட்டும் என்கிறார்.
அடுத்து என்ன நடந்திருக்கும் என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்றில்லை.

வழக்கமான அண்டப்புளுகுகளும், மாயா ஜாலங்களும் தான். கோபம், ஆத்திரம் ஸ்பெசலிஸ்ட் துர்வாசரின் சாபத்தால் முதலை ஆனவன். பரமசிவனின் காலடியைப் பற்றுகிறபோது சாப விமோசனம். இதுதான் கதை.

அடுத்து, அதே இதழின் 34ஆம் பக்கத்தில் பார்ப்பன சோதிடர் ஒருவர் தமது விளம்பரத்தில் மகாபாரதக் காட்சி ஒன்றை எடுத்து வைக்கிறார். அதையும் பார்ப்போம்.

மகாபாரதத்தில் ஒரு சம்பவம். அகத்திய முனிவர் பிராயம் வந்தும் திருமணம் செய்து, கொள்ளாமல் கல்வி, ஆன்மீகப் பயிற்சி ஆகியவற்றில் ஈடுபட்டிருந்தார். ஒரு நாள் காட்டில் செல்லும் போது, ஒரு மரக்கிளையில் மூன்று முதியோர்கள் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்தனர். அவர்களை வணங்கி, விவரத்தைக் கேட்க, அவர்கள் சொன்ன பதில் அகத்தியரை வியப்பில் ஆழ்த்தியது.

அகத்தியரின் தந்தை, தாத்தா, முத்தாத்தா ஆகியோர்தான் அம்மூவர்கள் என்றும் அகத்தியர் திருமணம் செய்து கொள்ளாதவரை முத்தாத்தா பிரம்மலோகத்திற்குப் போக முடியாதென்றும் அவர்கள் விவரமாகக் கூறினர்.

தன் மூன்று தலைமுறை முன்னோர்களை நற்கதி அடைவிக்கும் பொருட்டு, அகத்திய முனிவர் லோபா முத்ரா எனும் மங்கையை மணந்து குழந்தைகளைப் பெற்றார் என்று விவரிக்கிறது மகாபாரதம்!

ஒரே (நாளிட்ட) இதழ். ஒரு பக்கத்தில் (22) முன்னோர்கள் நற்கதி அடைய சந்நியாசமே சிறந்த வழி என்று சாஸ்திரம் கூறுகிறதாம். இன்னொரு பக்கத்தில் (34) திருமணம் செய்து குடும்பம் நடத்துவதே சரியான வழி என்று மகாபாரதம் கூறுகிறதாம்!

இமயம் போல் தெரிகிற எவ்வளவு பெரிய முரண்பாடு! தலை சுற்றுகிறதா இல்லையா?

முன்னோர்கள் மோட்சம் அடைய எதுதான் வழி என்று நாம் கேட்க மாட்டோமா?

விருந்தில் விசக்கிருமிகளை உலவ விடுவது யார் என்று இப்போது தெரிந்திருக்கும்.

தில்லானா மோகனாம்பாள் படத்தில் ஒரு காட்சியில் டி.எஸ்.பாலையா சொல்வார் ஆட்டம் ஜாஸ்தியா இருக்கே என்று.
அப்படியே நாமும் சொல்ல வேண்டியிருக்கிறது. எச்சரிக்கை!http://www.unmaionline.com/20071102/pa-15.html
------------------------------------------
அழுத்தவும் :- Show all posts

3 comments:

சிந்திக்க உண்மைகள். said...

Sathiyanarayanan has left a new comment on your post "ரஜினிகாந்த் - சோ... விருந்து வைக்கப்பட்டிருக்கும் ...":

சிந்திக்க வைக்கும் பதிவு

நன்றி

Sathiyanarayanan

THANK YOU MR.SATHITYANARAYANAN
FOR YOUR SUPPORT

கோவி.கண்ணன் said...

//ஒரே (நாளிட்ட) இதழ். ஒரு பக்கத்தில் (22) முன்னோர்கள் நற்கதி அடைய சந்நியாசமே சிறந்த வழி என்று சாஸ்திரம் கூறுகிறதாம். இன்னொரு பக்கத்தில் (34) திருமணம் செய்து குடும்பம் நடத்துவதே சரியான வழி என்று மகாபாரதம் கூறுகிறதாம்! //

அப்படி போடு அருவாளை !
சூப்பர்
:)

ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை...ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்.

சிந்திக்க உண்மைகள். said...

திரு. கோவி.கண்ணன் அவர்களே,

தாங்களின் வருகைக்கு நன்றி