Followers

Wednesday, January 30, 2008

சீதையை ஸ்ரீராமன் தொடவே இல்லையா?ஆஸ்திரேலிய அணிலின் முதுகில் 11 கோடுகள் உள்ளன. ராமன் தடவிக் கொடுத்தானா? ! பதில் காணோமே!

கோ என்றால் பெண்மாடு. பாலன் என்றால் காப்பவன். அந்த முறையில் மாட்டைக் காப்பதற்காக பசுத்தாய் (கோமாதா) என்றொரு ஏடு, மாட்டுக்காரரை ஆசிரியராகக் கொண்டு நடத்தப்படுகிறது.

மாட்டுக்காரர் (இராம கோபாலன்) ராமனைக் காப்பாற்றப் புறப்பட்டு இருக்கிறார்! அதனை இந்த ஏடு இராவண சக்தி அழியட்டும், ராமராஜ்யம் மலரட்டும் என்று எழுதி உசுப்பியிருக்கிறது.அவரது இடுப்பில் ஏகப்பட்ட அரிவாள்களைச் செருகியிருக்கிறது. அதில் நமக்கு மறுப்பு ஏதும் கிடையாது. சோளக் கொல்லைப் பொம்மைக்கும் சொக்காய் தேவைப்படுவதைப் போல, இந்தத் துறவி(?)க்கும் புகழ்ச் சொற்கள் மேல் ஆசை. அது நிறைவேறட்டும்!

ஆனால், இவர் நாத்திகப் பிரச்சாரத்திற்கு ஆப்பு வைக்கிறாராம். ஆப்பு வைத்தார் என்றால் ராமராஜ்யம் பிரார்த்தனை யாத்திரையே தேவை இல்லையே!ஏன் புறப்பட்டார்? ஆப்பு வைத்தார் என்றால், - இராவண சக்தி அழியட்டும் என்று ஏன் ராமனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்?

சர்வ சக்தியும் இந்துக் கடவுளிடம் இருக்கிறது என்று கூறிக் கொண்டே, கோயிலைப் பூட்டுவதைப்
போல இதையும் செய்கிறார்களே, வெட்கங்கெட்டவர்கள்!யாருக்கு யார் ஆப்பு வைத்தார்கள்?

நம் நாட்டு அணிலின் முதுகில் மூன்று கோடுகள் இருப்பதற்குக் காரணம் அணிலின் முதுகில் ராமன் தடவிக் கொடுத்தான் என்று கூறும் ராமபக்தர்களுக்கு

ஆஸ்திரேலியாவில் இருக்கும் அணிலை அறிமுகப்படுத்தினோம். அந்த அணிலின் முதுகில் 11 கோடுகள் உள்ளன. ராமன் தடவிக் கொடுத்தானா? பதில் காணோமே!

பிட்டுக்கு மண் சுமந்தான் தூங்கிவிட்டான் மன்னன் பிரம்படி கொடுத்தான்
பெம்மானின் முதுகில் பட்ட அடியால்தான் நாம் எல்லாரின் முதுகிலும் பள்ளம் இருக்கிறது
எனச் சைவ ஆத்திகனின் கதைக்குப் போட்டியாக வைணவ ஆத்திகன் அணில் கதையைக் காட்டுகிறான் என்பதல்லாமல் வேறென்ன?

அப்படியே ராமன் தடவினால் கோடு விழும் என்றால் - சீதையை ராமன் தடவிக் கொடுத்ததால் முதுகு முழுவதும் கோடாக இருக்குமே என்ற பகுத்தறிவுக் கேள்வியைப் பாடலாகப் பாவலர் வைரமுத்து எழுதிவிட்டாராம்!

தாண்டிக் குதிக்கிறது ஏடு! திராவிடர் கழகத்தவரைப் பற்றிக் கொச்சையாக எழுதிக் குதூகலிக்கிறது ஏடு!“தார்மீக ஹிந்து” எழுதியதையெல்லாம் எதிர்கொண்டு ஏறு நடைபோட்டுக் கொண்டிருக்கும் இயக்கம் இது! எனவே, கற்றுக்குட்டித்தனமாக எழுத முயல்வது புண்ணாக்கிக் கொள்ளும் செயல் என்பதைப் புரிந்து கொள்வது அவர்களுக்குத்தான் நல்லது. http://viduthalai.com/20070313/news07.htm
--------------------
சீதையை ஸ்ரீராமன் தொடவே இல்லையா?

லட்சுமண பகவான் ஒருநாள்....
அய்யர்: ஆகாயம் படைச்சார் பூமியும் படைச்சார்வாயு அக்கினி ஜலமும் படைச்சுட்டு...கடைசியாகத்தானே மனுஷாளப் படைச்சார் கடவுள் உலகத்தப் படைச்சார்

ராமசாமி(பெரியார்): இருக்கட்டும். கடவுள யாரு ஓய் படைச்சார்?
லட்சுமணன்: கடவுள யாரு படைக்கமுடியும் ஓய். அவா சுயம்பு தானா உண்டானவா - தான்தோன்றி
ராமசாமி: கண்காணா உன் கடவுள்தான் தோன்றி ஆகிறப்போ -கண் கண்ட பேரண்டம் தான் தோன்றி ஆகாதோ?

லட்சுமணன்: அசுரகுணம் உள்ளவாதான் - இப்படி அபஸ்வரமாக் கேள்வி கேப்பா...தேவகுணம் இருந்தா இப்படிக் குதர்க்கமாப் பேசமாட்டா ஒம்ம அசுர குணம் அழிகநீர் தேவகுணம் பெறுக...

ராமசாமி: இந்திரன் யாரு ஓய்...
லட்சுமணன்: தேவர்குலத் தலைவன்
ராமசாமி: இராவணன் யாரு ஓய்
லட்சுமணன்: அசுரர் குல அரசன்

ராமசாமி: காட்டில் இருந்த முனிவன் மனைவியின் கற்பைக் கெடுத்தவன் இந்திரன்.கவர்ந்து சென்ற மாற்றான் மனைவியைக் கற்போடு விட்டவன் இராவணன் இப்பச் சொல்லும் குணத்தில் உயர்ந்தவன் யார்?தேவனா?அசுரனா?

லட்சுமணன்: அசுரகுலத்திலயும் அப்பப்போ நல்லவா இருந்திருக்காளே!நந்தனுக்கு மோட்சம் கொடுக்கலியோ நடராஜப் பெருமான்?

ராமசாமி: நந்தனுக்கு மோட்சம் கொடுத்தீரோ தீயிட்டு எரிமூட்டி மோசம் புரிந்தீரா? மோட்சம் தந்தது மோட்சம் தந்தது முற்றிலும் உண்மையென்றால் - அவன்சந்ததியெல்லாம் சந்நிதி இழந்து சந்தியிலே ஏன் நின்றான்?

லட்சுமணன்: மனுஷாளா இருந்தாமடியா இருக்கணுமோ இல்லியோ? தீட்டுன்னு பெரியவா தெரியாமலா சொன்னா?

ராமசாமி: தீட்டு என்னய்யா தீட்டு... குடிக்கிற தண்ணியத் தொடப்படாது குளத்துலயும் கால் படப்படாது எப்படிய்யா வரும் சுத்தம்? ஒங்க மேலதான் குத்தம் குளிக்காத பசுவக் கும்புடுறீங்க - அதக் குளிப்பாட்டும் மனுசன ஏனய்யா கொல்றீங்க?

ராமசாமி: புராணம் இதிகாசம் - வெறும் பொய் மோசம் பொய் பேசிப் பேசியே பொய்யாப் போச்சே தேசம்!!

லட்சுமணன்: புராணம் இதிகாசம் பொய்யில்லேங்காணும்

ராமசாமி: அப்படியாங்காணும் ஆதாரம் கூறும்!
லட்சுமணன்: அணில் முதுகில் ஸ்ரீராமர் போட்டகோடு மூணும் அப்படியே இருக்குது ஓய் அழியலையே பாரும்
ராமசாமி: ஓகோ! முதுகத் தொட்டதும் மூணுகோடு விழுந்திருச்சோ? ஏங்காணும்! சீதையின் முதுகில் கோடுகள் இல்லையா - இல்ல சீதையை ஸ்ரீராமன் தொடவே இல்லையா? http://unmaionline.com/20070101/20.htm
--------------------------------
படித்துவிட்டீர்க‌ளா?
விபச்சாரமே ஜாதிக்குக் காரணம்! கேவலமான ஜாதி ‘சனியன்’ களின் உயர்வும் தாழ்வும் எப்படி ?.

சுப்ரபாத ஒலி தமிழன் காதில் விழலாமா? சோ இராமசாமியின் திமிர்!! பார்ப்பனர் சூழ்ச்சி தெரியவில்லையா? சூடுசுரணை வரவில்லையா?

ஆண்குறி மட்டும் வானத்தின் வழியாக விர்ர்...றென்று பறந்து ஆனந்தமாக உடலுறவு கொண்டு விட்டு திரும்பி விடுகிறது. !!!!
----------------
மற்ற பதிவுகள்

No comments: