Followers

Friday, December 14, 2007

நீ மனிதனே அல்ல ஜடம்தான். !!!!...கடவுள் பெயரைச் சொல்லி தண்ணீருக்கு மதச் சாயம் பூசிவிட்டால்...? ரத்தம் வழிய நீ உன்னை வருத்திக் கொள்வாயானால் ?.

சாதாரண காலை வேளைகளில் நாம் ஸ்நானம் செய்வது உடம்புக்கும், மனசுக்கும் புத்துணர்ச்சி கொடுப்பதற்காகவும், ஆரோக்கியத்துக்காகவும் தான்.

ஆனால்... இந்த குளிக்கும் விஷயத்தை கூட்டமாக சேர்ந்து போய் ஆற்றில் குளிக்க வைத்து அதற்கு புனித நீராடல் என்றும் தீர்த்தவாரி என்றும் பெயர் கொடுத்து தண்ணீருக்கே மதச் சாயம் பூசி விட்டார்கள்.

சாயம் பூசினால் தண்ணீரில் போய் கழுவலாம். தண்ணீருக்கு சாயம் பூசிவிட்டால்...?

ஆடி அமாவாசை, தை அமாவாசை, மஹாலய அமாவாசை, மகாமகம் என்ற சில நாள்களை காரணம் காட்டி... கூட்டம் கூட்டமாக போய் ஆற்றுக்குள் இறங்கி, குளத்துக்குள் இறங்கி தீர்த்தமாடுகிறார்கள்.

தங்களது அழுக்கை கழுவுகிறோம் என்று சொல்லிக் கொண்டு, நதிகளையும், குளங்களையும் அழுக்காக்கி விடுகிறார்கள்.

இதுபோன்று அன்றாட ஆரோக்கியப் பணிகளை குளியல் செய்வதில் மதத்தை சம்பந்தப்படுத்துவதால் மனிதன் ஜடமாகிப் போனான்.

மனிதன் ஜடமாய் போய் விட்டதற்கான அடுத்த `தகுதி’ இது.அதென்ன?

இன்றும் சாதாரணமாக சாலைகளிலேயே நாம் பார்க்கிறோம். பலசாலியான ஒருவன்... குடும்பம் குட்டியோடு பக்திமானாக ஒவ்வொரு வீடாக, ஒவ்வொரு கடையாகப் போய் சாட்டையால் தன்னைத்தானே அடித்து துன்புறுத்திக் கொள்கிறான். முதுகு, மார்பெல்லாம் ரத்தக் கோடுகள் வழிகின்றன.

கேட்டால் கோயிலுக்கு, எல்லாம் வல்ல கடவுளுக்கு வேண்டுதல் என்பான். நாக்கில் அலகு குத்திக் கொண்டு, ரத்தம் வழிய ஊர்வலம் வருகிறான். இதுபோல கடவுள் பெயரைச் சொல்லி... உடல் ரீதியாக தன்னைத்தானே நீ உன்னை வருத்திக் கொள்வாயானால்........
இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி - 73 ல்
----------------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

No comments: