Followers

Friday, December 7, 2007

பார்ப்பனர்களுக்கு எதிலும் இரட்டை நாக்குதான். இன்னும் எத்தனை டிசம்பர் ஆறுகள்?

இந்த நாளை இந்தியா மட்டுமல்ல - உலகம்கூட மறக்க முடியாது. உலக வரலாற்றில் கருப்பு நாள்.

அந்த நாளில் தான் 464 ஆண்டுகால வரலாறு படைத்த முஸ்லிம் மக்களின் வழிபாட்டுத் தலமான பாபர் மசூதியை பட்டப் பகலில் பகிரங்கமாக 2 லட்சம் மதவெறியர்கள் கூடி நிர்மூலப்படுத்தினர்.

உலகத்தின் முன் இந்தியா அன்று குனிந்த தலையை
இன்றுவரை நிமிர்த்தவில்லை. இந்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் நாடு அறிந்த மகாமகா தலைவர்கள்.இந்த மாபாதகத்தைச் செய்த குற்றவாளிகள் பின்னாள்களில் இந்தியாவின் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து காலாட்டிக் கொண்டு இருந்தனர் என்பது அதைவிட இமாலய வெட்கக்கேடாகும்.

அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளை (டிசம்பர் 6, 1956) தேர்ந்தெடுத்து இந்தக் கொடுமையை அரங்கேற்றி யுள்ளனர் என்பதையும் கவனிக்கவேண்டும்.

15 ஆண்டுகள் ஓடிவிட்டன. இன்றுவரை அந்தக் கேவலத் தைச் செய்தவர்கள் சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு, அதற்குரிய தண்டனையை அனுபவிக்கவில்லை.

அவர்கள்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளும் சாதாரணமானவையல்ல.இந்தியத் தண்டனைச் சட்டம் 147 (கலவரம் விளைவித்தல்)
153-ஏ (மக்களிடையே மத மோதலை உருவாக்குதல்),
149 (சட்ட விரோதமாகக் கூடுதல்),
153-பி (தேசிய ஒருமைப் பாட்டுக்குக் குந்தகமாகப் பேசுதல்),
505 (ஒரு சமுதாயத்துக்கு விரோதமாகக் குற்றம் செய்யத் தூண்டுதல், மக்களிடையே பீதியை ஏற்படுத்துதல்).

சாதாரணமாக ரவுடிகள் செய்யும் கிரிமினல் நடவடிக்கைகளில் எல்.கே. அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, வினய் கட்டியார், கிரிராஜ் கிஷோர், விஷ்ணு ஹரி டால்மியா, உமாபாரதி உள்ளிட்ட 49 பேர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பாபர் மசூதி இடிப்பின் விளைவாக மும்பையில் பெரும் மதக் கலவரம் மூண்டது. காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் மட்டும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக 900.
இந்தப் பின் விளைவு மீது (மும்பைக் கலவரம்) விசாரணை நடைபெற்று, குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு விட்டனர்.

ஆனால், மூலக்குற்றமான பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் மீது மட்டும் ஒரு தூசுகூடப் படவில்லை. இடித்த புளியாக இறுமாந்து திரிகிறார்கள்.

பாபர் மசூதி இடிப்பினை விசாரிக்க நீதிபதி லிபரான் தலைமையில் விசாரணை ஆணையம் 1992 டிசம்பர் 16 அன்றும் (மசூதி இடிக்கப்பட்ட இரு வாரம் கழித்து) மத்திய அரசால் நியமிக்கப்பட்டது.

மூன்று மாதத்திற்குள் ஆணையம் விசாரணை அறிக்கையை அளிக்கவேண்டும் என்பது நிபந்தனையாகும். ஆனால், உண்மை நிலை என்ன?

15 ஆண்டுகள் கழிந்த நிலையிலும் அறிக்கை வெளிவரவில்லை. வெள்ளை யானையாக ஆணையத்திற்குக் கொட்டி அழப்பட்ட மக்களின் வரிப் பணம் ரூபாய் ஏழு கோடியே எட்டு லட்சமாகும்.
இதில் நீதிபதி லிபரானுக்கு மட்டும் அளிக்கப்பட்ட தொகை மட்டும் 71 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய்.இந்த ஆணையத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 22 ஆகும்.

விளக்கெண்ணெய்க்குக் கேடே தவிர பிள்ளை பிழைத்த பாடில்லை.

தாமதிக்கப்பட்ட தீர்ப்பு, மறுக்கப்பட்ட தீர்ப்பு என்று எல்லாம் வாய் மணக்கக் கூறுவதில் மட்டும் குறைச்சல் இல்லை.

15 ஆண்டுகள் மாபெரும் குற்றவாளிகள் தண்டிக்கப்படாத ஒரு நாட்டில் வன்முறைகள் தலையெடுக்குமா - எடுக்காதா?

ஒவ்வொரு டிசம்பர் மாதமும் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ற பெயரால் எத்தனை எத்தனைக் கோடி ரூபாய்கள் கொட்டியழப்படுகின்றன. மக்களிடமும் எந்த அளவு பதற்றம், இதைப்பற்றி எல்லாம் யாரும் அக்கறையுடன் கவலைப்படுவதாகத் தெரியவில்லையே!

ஈழத் தமிழர்கள் உயிரையும், மான வாழ்வையும் பாதுகாத்துக் கொள்ள பேரினவாத அரசை எதிர்த்து ஆயுதங் களைத் தூக்கினால் அது வன்முறை என்று வாய் கூசாமல் பேசும் ஒரு கூட்டம் இந்தியாவில் இருக்கிறது;

தமிழ்நாட்டிலும் சோ ராமசாமியின் உருவத்தில் இருக்கத்தான் செய்கின்றது.

ஆனால், இந்தக் கூட்டம் பாபர் மசூதியை இடித்த பெரிய மனிதர்களை இடுப்பில் தூக்கி வைத்துக் கொஞ்சிக் கொண்டிருக்கின்றது என்பதைக் கவனிக்கத் தவறக்கூடாது.

பார்ப்பனர்களுக்கு எதிலும் இரட்டை நாக்குதான். இன்னும் எத்தனை டிசம்பர் ஆறுகளை நாடு சந்திக்கவேண்டுமோ எத்தனை ஆண்டுகள் கழித்து குற்றவாளிகள் தண்டிக்கப் படுவாரோ யார் அறிவார்?
http://viduthalai.com/20071206/news02.html
----------------------------------------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

2 comments:

சுல்தான் said...

ஒரு சிலருக்கு மட்டுமே இவ்வாறு சிறப்பாக சிந்தித்து எழுத முடிகிறது. சிறப்பான எழுத்து.
எடுத்திட்டமைக்கு நன்றி.

சிந்திக்க உண்மைகள். said...

கண்ணியத்திற்குரிய அன்பர் சுல்தான் அவர்களுக்கு நன்றி