Followers

Wednesday, December 19, 2007

முயல் கறி சாப்பிடுமா யானைமுகக் கடவுள்? பிள்ளையார் ``சைவம்’’ ஆயிற்றே! தெய்வக்குற்றம் ஏற்படாதோ? தீட்டாகிவிடாதோ?

பிள்ளையாருக்கு முன்னால் தொங்கவிடப்பட்ட
முயல்கள் வேட்டையில் கொல்லப்பட்டன

சேலம், மே 21- சேலம் மாவட்டம் செங்கவல்லி கிராமத்தில் மாரியம்மன் கோயிலில் விழாவாம். அதனையொட்டி பக்தர்கள் துப்பாக்கியுடன் காட்டுக்குச் சென்று முயல் வேட்டையாடி ஏராளமான முயல்களைக் கொன்றுள்ளனர்.

கொல்லப்பட்ட முயல்களிலிருந்து ரத்தம் முழுவதும் வடிவதற்காகக் கயிறு அல்லது கழியில் கட்டித் தொங்கவிடுவார்கள். பிள்ளையார் பொம்மைக்குப் பக்கத்தில் முயல்களைக் கட்டித் தொங்க விட்டிருக்கிறார்கள். பிள்ளையார் ``சைவம்’’ ஆயிற்றே!

மிலிட்டரி உணவை அதன்முன் காட்டலாமோ?

தெய்வக்குற்றம் ஏற்படாதோ? தீட்டாகிவிடாதோ?

விநாயகன் எதுவும் சொல்லாது. செய்யாது என்பதுதான் பக்தர்களுக்கு நன்றாகத் தெரியுமே, அதனால் மாட்டியிருக்கிறார்களோ?
http://viduthalai.com/20070521/news19.htm
-------------------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

No comments: