Followers

Sunday, December 2, 2007

பெண்களுக்கு மாதாமாதம் மாதவிடாயாக.......

இந்திரன் தன் கொலைக் குற்ற தோஷத்தை வழித்து துடைத்து
மரங்களில் பிசினாக.....
பெண்களுக்கு மாதாமாதம் மாதவிடாயாக.......

மரங்களில் பிசினாக
இந்திரன் தன் கொலைக் குற்றத்தில் ஒரு சிறு பகுதியை பூமாதேவியிடம் இறக்கி வைத்தான்.

அதுதான், தானியங்கள் விவசாய தகுதி இல்லாத தரிசு நிலங்களாகவும், பாலைவனங்களாகவும் மாறிபோய் விட்டன. தோஷத்தை வாங்கிக் கொண்டதற்கு பரிகாரமாக பூமி பிளந்தால் ஒன்று சேரக்கூடிய வரத்தை வழங்கினானாம் இந்திரன்.விருட்சங்ளே... என் ப்ரம்மஹத்தி தோஷத்தை எடுத்துக் கொள்ளுங்களேன் என கெஞ்சினான்.

அப்படியானால், எங்களை வெட்டிப் போட்டாலும் வெட்டிய இடத்திலிருந்து துளிர்க்க வரம்தா என கேட்டன மரங்கள். வரம் கொடுத்த இந்திரன் உடனே தன் ப்ரம்மஹத்தி தோஷத்திலும் பாதியை கொடுத்தான்.

அதுதான் மரங்களில் பிசினாக (கோந்து) வழிந்து கொண்டிருக்கிறது. பெருங்காயமும் ‘ஹிங்கு என்ற மரத்திலிருந்து வந்த ஒரு பிசின்தான். அதனால்தான் பிராமணர்கள் முக்கிய விழா சிரார்த்தம் (தவசம்) போன்ற காரியங்களில் சமையலில் பெருங்காயத்தை உபயோகப்படுத்த மாட்டார்கள். பகுதி - 37 லிருந்து

பெண்களுக்கு மாதாமாதம் மாதவிடாயாக

பூமாதேவியிடம் கொஞ்சம் ப்ரம்மஹத்தி தோஷத்தையும், விருட்சங்களிடம் கொஞ்சம் ப்ரம்மஹத்தி தோஷத்தையும் கொடுத்த இந்திரன்... மீதி வைத்திருந்த அந்த குற்ற தோஷத்தை எங்கே கொண்டுபோய் கொட்டுவது என யோசித்தான்.யோசித்து யோசித்துதான் அந்த ஸ்த்ரீ ஸம்ஸாதத்தில் பிரவேசித்தான். எப்படி பிரவேசித்தான் என்பதை சென்ற அத்தியாயத்தில் படித்திருப்பீர்கள். அழகு குன்றி, கர்வம் இன்றி... வாழ்ந்து கெட்ட செல்வந்தனைப்போல அந்த ஸ்த்ரீகளிடையே தோன்றினான்

இந்திரன். அவர்களிடமும் தனது வழக்கமான வேண்டுகோளை இறக்கி வைத்தான்.
‘எனது ப்ரம்மஹத்திதோஷத்தில் ஒரு பங்கு இன்னும் என்னிடம் பாக்கியுள்ளது. நீங்கள் அதை தயைகூர்ந்து ஏற்றுக்கொண்டால் பழையபடி இந்திரனாகிவிடுவேன்’ என காலில் விழாத குறையாக கெஞ்சினான்

இந்திரன்.
“எங்களுக்கென்ன தருவாய்?” “கேட்டதை தருகிறேன்...”“அப்படியானால்... நாங்கள் குழந்தைகள் பிரசவிக்கும்வரை எங்கள் புருஷன் எங்களோடு தேகஸம்பந்தம் வைத்துக் கொள்ள வசதி செய்து வரம் கொடு...’- என வேண்டுகோள் வைத்தார்களாம் பெண்கள்.

மனிதனை தவிர மற்ற விலங்குகளில்... கர்ப்பம் தரித்த நிமிடத்திலிருந்து ஆண் விலங்கு பெண் விலங்கை முகர்ந்துகூட பார்க்காது. மனிதர்களில்தான் பிரசவத்துக்கு முன்புவரை நெருங்கும் பழக்கம் இருக்கிறது.

இந்திரனும், பிரசவத்துக்கு குறிப்பிட்ட காலம் முன்புவரை பெண்கள் தங்கள் புருஷனோடு தேகஸம்பந்தம் கொள்ள வரம் கொடுத்தான்.கூடவே ப்ரம்மஹத்தி தோஷத்தையும் வழித்து துடைத்து அவர்களிடம் கொடுத்து விட்டான். இப்படியாக முடிகிறது அந்த வேதக்கதை.

இந்த இடத்தில்தான் நாம் முக்கியமாக ஒன்றை கவனிக்கவேண்டும். தனது ப்ரம்மஹத்தி தோஷத்தை இந்திரன் பெண்களிடம் முற்றாக ஒப்படைத்தான் அல்லவா? அந்த தோஷம்தான் பெண்களுக்கு மாதாமாதம் மாதவிடாயாக வெளிவருகிறது என்கிறது வேதக் கதை.

பெண்களின் இயற்கையான உடலியல் நிகழ்வை வேதம், எத்தனை கற்பனை முடிச்சுகளால் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது என்பதை உணர்ந்தீர்களா?

"தாத்தாச்சாரி"யின் "இந்துமதம் எங்கே போகிறது" பகுதி - 38 லிருந்து
---------------------------------
இந்து மதம் எங்கே போகிறது ?
பகுதிகளை படிக்க அழுத்தவும் : -
தாத்தாச்சாரியார்
---------------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

No comments: