Followers

Wednesday, December 19, 2007

ஆற்றங்கரை கருமாதித் துறையிலிருந்து அய்.நா. மன்றம் வரை பார்ப்பன சதி!! பிராமணனே கடவுள்!! அவனைத் தொழ வேண்டும்.!!!

எந்த ஒரு பைத்தியக்காரன் குடித்துக் கும்மாளம் போடும் கொலை வெறியைத் தூண்டும் சமாச்சாரங்கள் நிரம்பி வழியும் ஒரு நூலை அய்.நா. மன்றத்தின் ஆவணத்தில் ஏற்றுவான்?

அமெரிக்காவில் உள்ள மேலவையான செனட் சபை தொடங்கப்படும் பொழுது இந்து மதத்தின் பிரார்த்தனையாக ரிக் வேதம், உபநிஷத், பகவத் கீதை இவைகளிலிருந்து சில பகுதிகள் பாடப்படும் என்றும்,

அதற்கென (அமெரிக்காவின் நிவாடா மாநிலம் ரெனோ என்ற பகுதியில் வசிப்பவர்) ராஜன் சேட் என்ற சமஸ்கிருதப் பண்டிதர் வரவழைக்கப்படுவார்; என்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் (27.6.2007) ஏட்டில் வெளிவந்த செய்தியைத் தொடர்ந்து தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அவசர அவசரமாக `விடுதலை’ ஏட்டில் (27.6.2007) ஓர் அறிக்கையினை வெளியிட்டார்.

``அமெரிக்கா வாழ் தமிழர், தமிழ் அமைப்புகளுக்கு நமது அவசர அன்பு வேண்டுகோள்’’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அவ்வறிக்கையில் முக்கியமாகக் குறிப்பிடப்பட்டதாவது:

அமெரிக்கா வாழ் இந்தியர்களில் வெறும் இந்துக்கள் மட்டும் இல்லை; தமிழர், முஸ்லிம், கிறித்தவர், சீக்கியர் என்று பல்வேறு மதத்தவரும் குடி மக்களாக உள்ள நிலையில், பார்ப்பனீய மதமான `இதன் வேதம், உபநிஷத், கீதை இவைகளை செனட் தொடங்கும்போது பாடுவது ஏற்புடையதல்ல. அமெரிக்க வாழ் தமிழர்கள், தமிழர் அமைப்புகள் ஏனைய மதத்தவர்கள் முயற்சிகளைத் தடுத்து பார்ப்பன ஆர்.எஸ்.எஸ்., பண்பாட்டு ஊடுருவல் முயற்சிகளை முறியடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

எம் மதமும் சாராத ஒழுக்கத்தினை வலியுறுத்தும் அறநூலான திருக்குறள் பாக்களைப் பாட வற்புறுத்த வேண்டும் என்றும் எழுதியிருந்தார்.

ஆனால் திட்டமிட்டப்படி அந்தப் பண்டிதர் வந்தார். ஓதுவதற்கு முன்பாக மேடையைச் சுற்றி `கங்கா ஜலத்தை’த் (விமானத்தில் கொண்டு போயிருப்பார்களோ!) தெளித்தார். வேத மந்திரங்களை ஓதினார் கீதை சுலோகங்களைக் கூறினார். காவி உடை உடுத்திருத்திராட்ச மாலை, சந்தனப் பொட்டு, `ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா’ என்று அச்சிடப்பட்டிருந்த மேல் துண்டு ஆகிய கோலத்தில் காணப்பட்டாராம். சமஸ்கிருதத்தில் ஓதுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாம். அவாள் பாஷையில் மிலேச்ச மொழியான ஆங்கிலத்தில்தான் ஓதினாராம்.

1789இல் அமெரிக்காவில் செனட் சபை உருவாக்கப்பட்டதிலிருந்து இந்து மத முறைப்படி சடங்குகள் நடைபெற்றது இதுதான் முதல் தடவையாம்!
எதிர்ப்பு இல்லாமல் இல்லை.

கிறித்தவர்கள் எதிர்ப்புக் குரல் கொடுத்தனர். ஏசுவைத் தவிர உலகில் எந்தக் கடவுளும் இல்லை இது பொய்ப் பிரார்த்தனை என்று கூச்சல் போட்டனராம்.
பண்டிதரை உள்ளே நுழைய விடாமல் தடுத்த கிறித்தவர்களைப் பாதுகாப்புப் படையினர் தடுத்தனர் செனட் வளாகத்தில் நுழைந்த மூவர் கைதும் செய்யப்பட்டனராம்.

இந்தப் பண்டிதர் யார் எனில் இந்திய அமெரிக்கராம் (ஆங்கிலோ இந்தியர் போல!)

ஆயிரம்தான் இவர்கள் ஆனந்தக் கூத்தாடினாலும், இவரை இந்து மத வாதியாக இந்து `மதம்’ ஏற்றுக் கொள்கிறதா என்பதுதான் கேள்விக்குறி.
இதுபற்றி அகோபிலமடத்து ஜீயரான அழகிய சிங்கர் கல்கி (11.4.1982) இதழில் அளித்த பேட்டி இங்குக் குறிப்பிடத்தக்கதாகும்.

கேள்வி: `ஹரே கிருஷ்ணா’ என்ற ஓர் இயக்கம் அமெரிக்காவில் தோன்றி உலகெங்கும் பரவி வருகிறதே.. இந்தியாவில் கூட இவ்வியக்கத்தினர் சுற்றுகிறார்களே!

ஜீயரின் பதில்: நாமம் இட்டுக் கொண்டு, குடுமி வைத்துக் கொண்டு, காவி உடுத்து இங்கேயும் ஒருத்தன் வந்தான். வாயெல்லாம் மந்திரங்கள் பெருமாள் பெயரையே சொல்லிக் கொண்டி ருக்கான். பூணூல் போட்டிருக்கான். உட்காரச் சொல்லிச் சாப்பாடு போட்டேன். உபசரித்து அனுப்பினேன். அவ்வளவுதான். பூணூல் போட்ட தனால் மட்டும் ஒருவன் பிராமணனாகிவிட மாட்டான். அவனவன் பிறப்பால் எதுவோ அதுவே சாஸ்வதம்.- இதுதான் ஜீயரின் பதில்.

அமெரிக்காவின் செனட் சபையில் ராஜன்சேட் குடுமி வைத்திருந்தாலும், குங்குமப் பொட்டு வைத்திருந்தாலும், அரே கிருஷ்ணா, அரே ராமா கோஷம் போட்டாலும், அந்த எழுத்துக்களைப் பொறித்த துண்டை அணிந்திருந்தாலும் இந்து மதப்படி, அவர் பிறப்பு வேறு அவர் ஓதியதும் செல்லுபடியாகாதுதானே!

இந்துமதத்துக்காகவே உயிரை வைத்துக் கொண்டு இருப்பதாக உயிரைச் சொடுக்கிக் கூச்சல் போடும் கூட்டம் இந்தியாவில் இருக்கிறதே அதன் கருத்து என்ன? அமெரிக்காவின் செனட்டில் அமெரிக்க இந்திய ஒருவர் வேதப் பண்டிதர் என்று கூறிக் கொண்டு மந்திரங்களை ஓதியதற்குச் சமமதமா அல்லது சண்டித்தனமா? வாயைத் திறக்காதது ஏன்?

இந்த நேரத்தில் இன்னொரு செய்தி. அய்க்கிய நாடுகள் சபையின் `பாரம்பரியப் பாதுகாப்புப் பிரிவு முப்பது ரிக் வேத ஓலைச் சுவடிகளை தனது புதிய பட்டியலில் சேர்த்திருக்கிறது என்பது ஒரு செய்தி.

இதுகுறித்து திருவாளர் `சோ’ ராமசாமி தனது `துக்ளக்’ (4.7.2007 பக்கம் 31) இதழில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

``நல்ல வேளையாக அங்குப் பகுத்தறிவுப் பாசறையைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை. இருந்திருந்தால் ரிக் வேதம் என்பது திராவிடர்களை ஒழிப்பதற்காக எழுதப்பட்ட ஆரிய நூல்’’ என்று தடுத்திருப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு அடுத்த வார `துக்ளக்’கில் (11.7.2007 - பக்கம் 8,9) ஒரு கேள்வி பதில்.
கேள்வி: `யுனெஸ்கோ’ ஆவண கலாச்சாரப் பட்டிய-லில் `ரிக் வேதம்’ சேர்க்கப்பட்டுள்ளது குறித்து?

பதில்: இதனால் ரிக் வேதம் எந்தப் புதிய பெருமையையும் பெற்றுவிடவில்லை. ஆனால் ஒரு விஷயம். யுனெஸ்கோ அமைப்பில் யாராவது ஹிந்து பிராமணர்கள் இருந்திருந்தால், கலைஞர் `பார்ப்பன சதி! உயர்ஜாதி சூழ்ச்சி’’ என்றெல்லாம் விமர்சனம் செய்திருப்பார். யுனெஸ்கோ என்பதால் கலைஞருக்கு வாய்ப்பு இல்லாமற் போய் விட்டது என்று திருவாளர் `சோ’ எழுதியுள்ளார்.

குற்றமுள்ள மனசு `குறு-குறு’ என்று இருக்கும் என்பார்கள். அந்த நிலைக்கு ஆளானதால் தான் சாரைக் கொழுத்தால் வளையில் தங்காத நிலையில் பூணூலை முறுக்கிக் கொண்டு வெளியே வந்திருக்கிறார் இந்தப் பார்ப்பனர்.
நல்ல வேளையாக அங்கு பகுத்தறிவுப் பாசறையைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை இருந்திருந்தால் ரிக் வேதம் என்பது திராவிடர்களை ஒழிப்பதற்காக எழுதப்பட்ட ஆரிய நூல் என்று கூறித் தடுத்திருப்பார்கள் என்று திரு-வாளர் `சோ’ ராமசாமி குறிப்பிடுகிறாரே இதன் மூலம் எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை என்று கூறி முந்திரிக் கொட்டையாக துருத்திக் கொண்டு வந்து வகையாக மாட்டிக் கொண்டு விட்டார்.

பகுத்தறிவுப் பாதையைச் சேர்ந்தவர்கள் என்று திராவிடர் இயக்கத்தைச் சேர்ந்தவர்களைக் `கிண்டலாக’ சாடுகிறார்.

பிரபல வரலாற்று ஆசிரியர்களான டாக்டர் ரோமேஷ் சந்திர மஜீம்தார், டாக்டர் ராதாகுமுத முக்கர்ஜி பி.டி. சீனிவாச அய்யங்கார் போன்றவர்கள் திராவிடர் இயக்கத்தைச் சேர்ந்த பகுத்தறிவாளர்கள் என்று `சோ’ கூற மாட்டார் என்று நிச்சயமாக நம்பலாம்.

சோ கூறும் ரிக் வேதம் என்பதில் திராவிடர்களை வசைபாடும் திராவிடர்களை ஒழிப்பதற்கு இந்திரனைத் துதிபாடும் சுலோகங்களுக்குப் பஞ்சம் இல்லையே! அவர் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் சங்கதி அதுதானே? தானே முந்திக் கொண்டு சொல்லி விட்டால் உண்மையை மறைத்துவிட முடியுமா?

``ஆடு மாடுகளை ஓட்டிக் கொண்டு நாடோடிகளாய் இந்த இந்திய உபகண்டத்திற்குப் பிழைப்பை நாடி வந்த ஆரியக் கூட்டத்தினர் தங்களைவிட நாகரிகத்தால், பண்பாட்டினால் மேம்பட்டு வீடுகள், கோட்டைகள், கொத்தளங்கள் கட்டிக் கொண்டு வாழ்ந்த இந்த நாட்டுப் பழங்குடி மக்களாகிய திராவிடர்களுடன் போரிட வேண்டியவர்கள் ஆனார்கள்.

இந்த நாட்டில் குடியேறிய அன்னியர்களான ஆரியர்களின் பழக்க வழக்கங்களையும், செய்கைகளையும் திராவிடர்கள் வெறுத்தனர். இதன் காரணமாக ஆரியர்கள் இந்த நாட்டில் குடி-யேறி நிலைக்க வேண்டுமானால் திராவிடர்களுடன் போரிட வேண்டியதான நிர்ப்பந்தம் இருந்தது. அவ்வாறே போரிட்டனர். அப்படிப்பட்ட போரில் தோல்வியுற்ற திராவிடர்களை அடிமைகளாக்கிக் கொண்டனர். அடிமைகளாய் அடங்கி வாழ முடியாதவர்கள் தெற்கு நோக்கி வந்து குடியேறினார்கள்.

ஆரியர்கள் தங்களால் தோற்கடிக்கப்பட்ட திராவிடர்களைப் பற்றியும், தங்களோடு போர் தொடுத்த திராவிடர்கள் பற்றியும் தங்களுடைய வேதங்களில் இழித்தும், பழித்தும், வசை மொழிகளைப் பொழிந்து இருக்கின்றார்கள். இச்செய்திகளைப் பல வரலாற்று வல்லுநர்கள் தங்கள் நூல்களில் எடுத்துக்காட்டியுள்ளனர்.

``திராவிடர்கள் தங்கள்மீது படையெடுத்து வந்த ஆரியர்களோடு கடும் போர் புரிய வேண்டியிருந்தது. இத்தகைய விஷயம் ரிக் வேதத்திலேயே அநேக சுலோகங்களாக இருக்கின்றன’’- டாக்டர் ரோமேஷ் சந்திர மஜும்தார் எம்.ஏ.,
(பூர்வீக இந்திய சரித்திர-மும் நாகரிகமும், 22-ம் பக்கம்)

இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் `சோ’ ராமசாமி? மஜும்தார் ஈரோட்டுப் பாசறையைச் சேர்ந்தவர் என்று கூறி தப்பித்து ஓடி விடுவாரா?
இவர் தூக்கி நிறுத்தும் அந்த ரிக் வேதம் என்ன சொல்லுகிறது?

ஏ, இந்திரனே! சோமனே! ராட்சதர்களை எரி! எரி!! நசுக்கு! நசுக்கு!! இருண்ட வனாந்தரங்களில் ஒன்று, பத்து, நூறாய்ப் பெருகி வரும் அந்த அரக்கர் கூட்டங்களை அடக்கு! அடக்கு! சின்னா-பின்னப்படுத்து, மடையர்களை அக்னி ஜீவாலையில் சுட்டுப் பொசுக்கி! சித்திரவதை செய்! நார் நாராய்க் கிழித்தெறி! துண்டு துண்டாய் வெட்டு!

(ரிக்வேதம் 8 ஆவது மண்டலம் 104ஆவது மந்திரம் சுலோகம் ஒன்று)
இதற்கு என்ன பதில் `சோ’ கூட்டத்திடமிருந்து?

அரக்கர்கள் என்பவர்கள் திராவிடர்களைக் குறிப்பிடாது என்று குறுக்குச் சால் ஒட்டப் போகிறாரா? அப்படி வந்தால் அங்கும் பி.டி. சீனிவாச அய்யங்காரே வந்து சோவின் கழுத்தைப் பிடித்து விடுவாரே!

திராவிடர்களையே குறிக்காது என்று விவாதத்துக்காக ஏற்பதாகயிருந்தாலும், ருக் வேதம் கூறும் மேற்கண்ட எடுத்துக்காட்டு எதை உணர்த்துகிறது?

தனக்கு எதிரானவர்களை எப்படியெல்லாம் கொடுமைப்படுத்த வேண்டும் என்று கடவுளைத் துதிப்பது தான் உயர்ந்த பண்பாடோ சீலமோ ஒழுக்கத்தின் உயர்ந்த கோட்பாடோ! `யுனெஸ்கோ’ ஆவணக் கலாச்சாரப் பட்டியலில் ரிக் வேதம் சேர்க்கப்பட்டுள்ளதால், அது எந்தப் புதிய பெருமையையும் பெற்று விடவில்லையாம்! அந்த அளவுக்கு ஆராதிக்கும் அந்த ரிக் வேதத்தின் யோக்கிதை இது தானே!

இப்படி எதிரிகளை அழிக்கும் வெறுக் கூச்சல்தான் அவாளின் பெருமைக்குரியது அந்தப் பெருமைக்கு மேல் இனி புதுப்பெருமை வந்து விடப் போவதில்லை என்று தன் பூணூல் முதுகைத் தானே தட்டிச் கொள்கிறார்கள் இந்த 2007ஆம் ஆண்டிலும் என்றால் இவர்களும் திருத்துவார்கள் என்றா நினைக்கிறீர்கள்?

அய்.நா.வின் ஆவணப் பட்டியலில் சேர்க்கப்பட்டதாலும், அமெரிக்காவின் செனட் சபை தொடக்க விழாவிலும் இவாளின் ரிக் வேதம் ஓதப்பட்டு விட்ட-தாலும் இவர்களின் பூணூல் மேலும் முறுக்கேறி முறைக்கலாம்.
அந்த ரிக் வேதத்தின் யோக்கியதை என்ன? ரிக் வேதத்தில் உள்ள மொத்தம் 16522 சுலோகங்-களில் இடம் பெற்றுள்ள விவகாரங்களில் மூன்றாவது இடத்தைப் பெற்று இருப்பது இந்திரன் குடித்துக் கும்மாளம் போடும் சோம பானத்தைப் பற்றியதாகும்.

சோமம் அதாவது கஞ்சாவை இந்திரன் அரைத்துக் கலக்கிக் குடித்த போது அவருக்கு உண்டான போதையைப் பற்றி கூறப்பட்டு இருப்பதாவது:
``இந்திரன் விஸ்வருபனைக் கொன்றான்; அதனால் விஸ்வ ரூபணி மகனான த்வஷ்டா சோமத்தைத் திருடினான். இதையறிந்த இந்திரன் ஓடிச் சென்று த்வஷ்டாவின் கையிலிருந்து சோமத்தை தட்டிப் பறித்துக் குடித்தான்.

இதன் போதை இந்திரனின் உடல் முழுதும் பரவியது. இந்திர வீரியம் ஒவ்வொரு அங்கங்களின் வழியக வெளியேறியது. கண்களில் ஒளி குன்றியது. மூக்கு வழியாக வீரியம் சோர்ந்து போனது. முகத்தின் சக்தி மறைந்தது. காதுகள் கேட்கும் திறனை இழந்தன. சுக்லம் நஷ்டப் பட்டது. சிறுநீர் வழியாக விந்து வெளியேறியது. அவ்வாறு இந்திரன் தன்னுடைய பகைவனான நமுசி யோடு சேர்ந்து சஞ்சரித்தான்’’.

(ஆதாரம்: சனல் இடமருகு எழுதியுள்ள வேதங்கள் ஓர் ஆய்வு என்ற நூலில் எடுத்துக்காட்டப் பட்டுள்ள ஆதாரம்: `இந்தியாவில் வர்ணாஸ்ரமம்’ என்ற நூலில் திருவங்காடு சி. கிருஷ்ண குறுப்பு பக்கம் 66)

மூச்சு முட்ட குடிப்பான் என்று கூறுவதில்லையா அதைதான் வேறு வார்த்தைகளில் விளையாடப்பட்டுள்ளது. போதை மொழியில் சொல்லுவதென்றால் `ரிக் ஒரு கிக்’ என்று கூறலாம்!

இந்தக் குடி ஆரியர்களைப் பொறுத்து தேவதையாகவும் புனிதமாகவும் தெரிந்தது என்று தத்துவ ஞானி என்று அவர்கள் போற்றும் டாக்டர் ராதா கிருஷ்ணனே கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.

``இயற்கையின் அற்புதகரமான சக்திகளையும் பிரதிபலிப்புகளையும் பூஜை செய்ய வேண்டுமென்று எண்ணம் கொண்டிருந்த சரளமான இயல்புடைய ஆரியர்கள், ஆத்மாவை உற்சாகப்படுத்தி உயர்த்துவதற்கும், சாதாரண நிலையில் செய்ய முடியாத செயல்களைச் செய்வதற்குமுரிய ஊக்கமும் திறமையும் மனிதர்களுக்கு உருவாக, தற்காலிகமாக ஒரு வகை வெறி ஏற்படுத்த ஒரு திரவத்திற்கு முடியுமெனக் கண்டதோடு, அதை திவ்யமான ஏதோ ஒன்று என கருதத் தொடங்கினர்.

உள்ளே செல்கின்ற மனிதர்களுக்கெல்லாம் தெய்வீக சக்தி அளிக்கின்ற ஒரு தேவதையாக அவர்களது நோக்கில் அந்த பானம் தெரிந்தது. அந்த பானத்தை எடுக்க பயன்படும் செடி அவர்களைப் பொறுத்தவரை மூலிகைகளின் அரசனாகவும், அதிலிருந்து மதுவை தயாரிக்கும் செயல் புனிதமான ஒரு யாகமாகவும், அதற்காகப் பயன் படுத்துகின்ற உபகரணங்கள் பூஜைக்குரிய பொருள்களாகவும் கருதப்பட்டன.

இந்த ஆராதனை முறைகள் மிகவும் பழமையானவையென்று பேர்ஷியன் குறிப்புகளில் அதனைப் பற்றி காண்கின்ற சொற்களால் தெளிவாகின்றன. எனினும், இந்திய பூமியில் வந்து சேர்ந்த பின்னர் அதற்கு ஒரு புதிய உயிர் வந்ததாக காணப்படுகின்றது.’’(பாரதீய தர்சனத்தின் முதல் பகுதி பக்கம் 62-63)

இந்திரனே! உனக்காகப் பிழிந்துள்ள சோம பானத்தைக் குடிக்க, வா! தாடியில் ஒட்டியுள்ள சோம சிதறலலைத் தட்டிவிடு இத்தியாதி இத்தியாதி குடித்துப் புரளும் சாக்கடைச் சமாச் சாரங்களால் நிரம்பி வழியும் ருக் வேதத்தைத்தான் `சோ’ புகழ்கிறார். இதற்குமேல் ருக் வேதத்திற்கு என்ன பெருமை வேண்டும்?

யுனெஸ்கோவின் ஆவணத்தில் இடம் பெறுவதால் ருக் வேதத்திற்குப் புதுப்பெருமை வரப் போவதில்லை என்று சிலிர்த்துச் சிலகாகிக்கிறார்.
ருக் வேதத்தின் திருக்கல்யாணக் குணங்கள், சாமுத்ரிகா லட்சணங்கள் இதோடு இருந்து விட்டால் போதுமா?

சும்மா ஆடுமா சோக்களின் குடுமி? ஒரு முக்கிய இடம் சூட்சமச் சமாச்சாரம் குந்திக் கோலோச்சும் இடம் ஒன்று உண்டு. அதுதான் அவர்களுக்கு மிகவும் முக்கியமானது. அதற்காகத்தான் இவ்வளவுக் களேபரம் முண்டாசுக் கட்டு எல்லாம்!

தெய்வாதீனம் ஜகத் சர்வம்
மந்த்ராதீனம் துதெய்வதம்
தன்மந்த்ரம் பிரம்மணாதீனம்
தஸ்மத் பிரம்மணம் பிரபு ஜெயத்.
இந்த உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது. கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்; மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவை எனவே பிராமணனே கடவுள்! அவனைத் தொழ வேண்டும்.

இப்படி ஒரு வேதம் (ருக் - 62 ஆவது பிரிவு 10ஆவது சுலோகம்) இவாளை தூக்கிக் கம்கட்டில் வைத்துக் கொஞ்சும் போது அதனைச் சீராட்டாமல் இருப்பார்களா?

இதனைச் சுட்டிக் காட்டினால் சீறுகிறார்கள் ஆத்திரம் பொத்துக் கொண்டு கிளம்புகிறது இந்தப் புரோகிதக் கூட்டத்துக்கு!

கலைஞர்மீது காய்ந்து விடுகிறார்கள். `யுனெஸ்கோ’ அமைப்பில் யாராவது ஹிந்து பிராமணர்கள் இருந்திருந்தால் `பார்ப்பன சதி! உயர் ஜாதி சூழ்ச்சி!’ என்றெல்லாம் விமர்சனம் செய்திருப்பார் கலைஞர் என்கிறார் சோ.

அதிலென்ன சந்தேகம்? ஆற்றங்கரை கருமாதித்துறையிலிருந்து அய்.நா. மன்றம் வரை ஏதோ ஒரு அம்பி இந்த வேலையைச் செய்து கொண்டுதானே இருக்கும்? கண்டிப்பாக ஏதாவது ஒரு `கனபாடி’யின் வேலையாகத் தானிருக்கும். அதில் ஒன்றும் சந்தேகம் இல்லை.

இல்லாவிட்டால் எந்த ஒரு பைத்தியக்காரன் குடித்துக் கும்மாளம் போடும் கொலை வெறியைத் தூண்டும் சமாச்சாரங்கள் நிரம்பி வழியும் ஒரு நூலை அய்.நா. மன்றத்தின் ஆவணத்தில் ஏற்றுவான்?

http://viduthalai.com/20070721/snews01.htm
-----------------------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

No comments: