Followers

Saturday, December 8, 2007

இந்துக்களின் தெய்வங்களை மட்டும் கொச்சைப்படுத்துகிறோமா?’ ஏன்??

இந்துக்களின் தெய்வங்களை மட்டும் கொச்சைப்படுத்துகிறோமா?’ ஏன்??

- ARTICLE BY திருவை அரசு. IN VIDUTHALAI.COM.

``கடவுள் இல்லை என்பவர்கள் இந்துக்களின் தெய்வங்களை மட்டும் கொச்சைப் படுத்துவதா?’’ (`தினத்தந்தி’ )

இப்படியொரு கேள்வியை பா.ஜ.க., தலைவர் ராதாகிருஷ்ணன் கேட்டுள்ளார்! இப்படி எத்தனையோ கிருஷ்ணர்கள் கேள்விகள் என்ற பெயரிலே மூடர்கள் சிலர்முன் முழங்கி விட்டுப் போகிறார்கள்!

தந்தை பெரியார் காலந் தொடங்கி இன்று தமிழர் தலைவர் அவர்களின் அறிவார்ந்த சுனாமி அலைவீச்சின்முன் இன்று வரை ``இதோ நான் காட்டுகிறேன்’ -நான் மறுக்கிறேன்’’ என்று எந்த மார்தட்டும் வீரரும் வந்ததில்லை!

இந்துக் கடவுள்கள் எல்லாம் வல்லவர்கள் ஆயிற்றே! அவர்களிடம் ``அவர்கள் தலையில் இடியைப் போடு இந்திரனே!’’என்று வேதங்களில் எழுதி வைத்திருக்கிறீர்களே! அப்படியே விட்டுவிட வேண்டியது தானே?

கிருஷ்ணர்கள் கூட்டத்திற்குத் தெரியும் `கடவுள்’ என்று ஒருவரும் இல்லை என்று!

நாம் இந்துக் கடவுள்களை மட்டுமே தாக்குவதில், இந்து மதத்தை எதிர்ப்பதில் அதிகம் ஆர்வம் காட்டுகிறோம் என்பது உண்மைதான்!

கொச்சைப்படுத்துகிறோம் என்பது தவறு! மேன்மையான ஒன்றைக் கீழ்மைப்படுத்துவதற்கே கொச்சை என்பது பொருந்தும்!

ஆரியப் பார்ப்பனர் தங்களின் இச்சை போல கொச்சைகளையே பச்சைத்தனமாக மெச்சிப் புகழுமாறு எழுதி வைத்து எமது இனத்தையே கொச்சைப் படுத்துவது இந்து மதமும் அதன் கடவுள்களுந்தாம்!

எம்மினம் எத்தனையோ நூற்றாண்டுகளாக ஆரியப் பார்ப்பனர் சூழ்ச்சி வஞ்சக வலையில் சிக்கிக் கொண்டு தவிப்பது தள்ளாடுவது தலை சாய்ந்து கிடப்பது அனைத்தையும் உலகில் நல்லோர் எல்லோரும் அறிவர்!

தந்தை பெரியார் தொண்டர்கள் அந்தச் சூழ்ச்சி வலையில் இருந்து மீட்சி பெற்றாலும் எமது இனத்தை முற்றும் அதனில் இருந்து மீட்கும் வரை எங்கள் போர் முற்றும்!ஏன் இந்து தெய்வங்களை மட்டும் அதிகம் தாக்குகிறோம்?

இந்து மதமும் அதன் தெய்வங்களும் மட்டுமே எங்களுடையதாக எமது இனத்தின் வீழ்ச்சிக்கு இழிவிற்கு உலகோர் பழிப்பிற்குக் காரணமாக இருப்பதால்!

எப்படி என்பதை ஒரு நூற்றாண்டாக உலகின் முன் எடுத்து விளக்குகிறோம்!வேண்டுமானால் - இதோ! சில

.எங்கள் மக்களை (அசுரர்கள்) இராட்சசர்கள் என்ற பெயரில் அதாவது தமிழர்களை சூத்திரர்கள் என்பது போல) சிவன் முதல் காளிகள் வரைக் காலில் போட்டு மிதித்துக் கொண்டிருப்பதும் சூலத்தால் கிழிப்பதும் இந்துக்களின் தெய்வமா? இஸ்லாம், கிறிஸ்தவத் தெய்வங்களா?

தொட்டால் தீட்டு பார்த்தால் பாவம் என்பதையே வேதம், சாத்திரம், நடத்தை என ஆக்கி நாயினுங் கீழாய் வாழ வைத்ததும், பிராமணருக்குத் தொண்டு செய்யவே சூத்திரரைப் படைத்தேன் என்பதும்,

பிராமணனுக்குச் சமமாகச் சூத்திரன் உட்கார்ந்தால் அவன் சூத்தை (புட்டம்) வெட்டு என வெட்டியதும்,

கண்ணைக் கொடுத்தாலும் சூத்திரனுக்குக் கல்வியைக் கொடுக்காதே என மூடர் ஆக்கியதும்

இந்து தெய்வங்களா? கிறித்து, இசுலாம் தெய்வங்களா?


தாயைப் புணர்ந்து தந்தையைக் கொன்றவன்
மகளை மனைவியாக்கிக் கொண்டவன்
ரிஷி பத்தினிகளைக் கற்பழித்தவன்
அடுத்தவனின் மனைவியை அவளின் கணவன் வேடத்தில் சென்று கலந்து விடுபவன்;
ஆடு, மாடு, கழுதை, குதிரை, நாய், தவளை இவற்றைப் புணர்ந்து பிள்ளையும் பெறுபவன்

இந்து மதத்திலா? - வேறு எந்த மதத்தில்?


இவர்களுக்குச் சாதி வாரியாகக் கோயில்கள் கட்டிக் கொண்டாடும் எங்கள் மக்களை அய்ந்து பேருக்கு மனைவியாக இருந்த ஓர் ஆரியப் பரத்தையைப் பத்தினி எனக் கொண்டு அக்கினிக் குழியிறங்கும் எமது மக்களை மீட்பதா?

அப்படியே அடிமைகளாக விட்டுவிடுவதா?

இந்த இழி பிறவிகளைக் கடவுள்கள் என்று கோயில்கள் எடுத்து கருவறைக்குள் போனால் தீட்டாகிவிடும் என்று சூத்திரனாக வெளியே நிற்கிறானே இந்த மதத்திலா?

வேறு எந்த மதத்தில்?

சூத்திரர்களையும், பஞ்சமர்களையும் உங்கள் வேதத்தில் மதத்தில் தெய்வங்களின் விருப்பத்தில் உள்ளபடி தெருவில் கோயிலில் உள்ளே விடாமல் விரட்டப்படும் மக்களைப் பள்ளிவாசல்களில், சர்ச்களில் ஒன்றாக சமமாக அமர்ந்து தொழுகை நடத்த அனுமதிக்கும் அன்பு காட்டும் கிறித்து, இசுலாம் மதங்களைக் கண்டிக்க என்ன இருக்கிறது?

வைப்பாட்டி வீட்டிற்கு அதாவது சின்ன வீட்டிற்குப் பெண்டாட்டிச் சாமிகளுக்குத் தெரியாமல் இரவிலே போகும் தெய்வங்கள் இசுலாம், கிறித்து மதங்களில் இருந்தால் ராதாகிருஷ்ணர்கள் எழுதலாமே!

சிவனும் விஷ்ணுவும் சேர்ந்து பிள்ளை பெறுவதும் நாரதனும் கிருஷ்ணனும் சேர்ந்து பிள்ளை பெறுவதும் இந்த நாயினும் கேடானவர்களுக்குக் கோயில் கட்டிக் கொண்டாடுவதும் போன்ற தெய்வங்கள் இசுலாத்தில், கிறித்துவில் இருந்தால் பார்ப்பனர்கள் எழுதலாமே!

நந்தன் உள்ளே வரக் கூடாது என்பதற்காக நந்தியை விலகச் சொன்ன திருப்பங்கூர் சிவனும், நெருப்பில் குளித்து வேதியனாகிய பின் தான் உள்ளே வரலாம் என்ற தில்லைக் கூத்தனும் எந்த மதத்தில்?``விநாயகர் சிலை எவருக்கும் எதிரானதில்லை!’’ சொல்கிறார் ராதாகிருஷ்ணர்!

வல்லபையின் பெண் குறியில் தும்பிக்கையை வைத்து அடைத்துக் கொண்டாரே யாருக்கு ஆதரவாக? ( படம் மேலே காண்க‌ )

ஆட்சி உங்கள் கையில் என்றால் எல்லாம் பாபர் மசூதியாகி விடுமே!

``மற்றவர்கள் மனதைப் புண்படுத்துவது ஒரு முற்போக்கான எண்ணமாகச் சிலர் கருதுவது வருத்தம் அளிக்கிறது!’’ சொல்கிறார் ராதாகிருஷ்ணர்!

மேலே கண்ட கொடுமைகள் சில துளிகள்தாம்! இன்னும் கடலளவு இருக்கிறது!

சுக்ரீவனைக் கொண்டு வாலியையும், வீடணனை வைத்து இராவணனையும் அவர்களின் உறவையும் அழித்த போது?

எட்டாயிரம் சமணர்களைக் கழுவேற்றியபோது?


``புத்தனார் தலை தத்தெனத் தத்துமே!’’ எனத் தலைகளைச் சிதைத்தபோது?

நந்தனைக் கொளுத்தியதுபோல் வள்ளலாரைத் தீயில் குளிப்பாட்டியபோது?


பாபர் மசூதியை இடித்தபோது?

குஜராத்தைக் கொலை வெறியில் தள்ளியபோது?

திருக்குறள் உலகப் பொதுமறை என ஒரு போப் பிரகடனம் செய்கிறார்! அந்த வான் புகழ் கொண்ட வள்ளுவனைப் புலைச்சி மகன் என்று இகழ்ச்சி பேசுவது?


சம்புகனைக் கொன்றபோது?

ஏகலைவன் கட்டை விரலை வெட்டியபோது?

அவனைச் சூத்திரன் என்று துரோணன் விரட்டியபோது?


திப்பு சுல்தானை ஆங்கிலேயருக்குக் காட்டிக் கொடுத்தபோது?

மதுரைத் திருமலை நாயக்கனை வஞ்சகமாகப் பழி தீர்த்தபோது?

வருந்தாத இனம் வருந்தாத மனம் இப்பொழுது வருந்துகிறதாம்! என்ன செய்வது இது தந்தை பெரியார் யுகம்! வாழ்வது, வெல்வது உறுதி!
THE PICTURE AND CONTENTS OF THIS ARTICLE ARE FROM VIDUTHALAI.com
---------------------------------------------------

அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

1 comment:

ஜெயம் said...

பானையில் ஓட்டைகள் இருந்தால் முதலில் அடைப்பது சிறிய ஓட்டையையா அல்லது பெறிய ஓட்டையையா? இந்த கேல்வியை கேளுங்கள் விடைதெறியும்