Followers

Thursday, December 27, 2007

மாட்டு மூத்திரத்தைக் குடிக்கச் சொல்லுவது.....பார்ப்பான் நம்மை சுரண்ட அளக்கும் தர்மா மீட்டர். பசுக் காலடியில் மிதிபடும் கோமாதா விழா!.தன் மலத்தையே.....

நகர்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில் சில பொருள்களைக் கூவி விற்பதுண்டு - நாகரிகம் வளர்ந்து வரும் காலத்தில் இதுபோன்ற கூவும் குரல்களைக் கேட்பது அரிதாகி விட்டது.

உத்தரப்பிரதேசத்தை இரு மாநிலங்களாகப் பிரித்து உத்தரகண்ட் என்று தனி மாநிலம் உருவாக்கப்பட்டது. இங்கு பார்ப்பனர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருக்கின்றனர்.

பா.ஜ.க., ஆட்சி நடந்துகொண்டு இருக்கிறது. கந்தூரி முதலமைச்சராக இருக்கிறார் (இவர் ஆட்சியும் இப்பொழுது ஆட்டம் கண்டுவிட்டது. பா.ஜ.க., தலைவர் ராஜ்நாத் சிங் விரைந்துள்ளார் என்பது வேறு செய்தி!).

இந்தப் பா.ஜ.க., ஆட்சியில் பசு மாட்டு மூத்திரத்துக்கு ரொம்பவும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஒரு லிட்டர் மூத்திரம் ஆறு ரூபாய்க்கு விலை போகிறதாம்.
யோகா குரு ராம்தேவ் தயாரிக்கும் ஆயுர்வேத மருந்துக்கு இந்த மாட்டு மூத்திரம் தேவைப்படுகிறதாம்.


அந்த மாநிலத்தில் இருக்கும் கால்நடை வளர்ப்புத் துறையும், நாட்டு மக்கள் மத்தியிலே மாட்டு மூத்திரத்தைப்பற்றி விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை நடத்தப் போகிறதாம்.

ரத்த வங்கி போல மாட்டு மூத்திர வங்கிகளை கூட்டுறவு சங்கங்களை அமைத்து மக்களுக்கு வழங்கப் போகிறார்களாம்!சபாஷ்! பி.ஜே.பி., என்கிற இந்துத்துவா ஆட்சி வந்தால் தண்ணீருக்குப் பதிலாக மாட்டு மூத்திரத்தைக் குடிக்க உத்தரவு போட்டு விடுவார்கள்.

இதன்மூலம் தண்ணீர்ப் பஞ்சத்துக்கும் தீர்வு கிடைக்கக் கூடும் அல்லவா?

மாட்டு மூத்திரம் என்றால் அதுவும் பசு மாட்டு மூத்திரம் மட்டும்தான் - எருமை மாட்டு மூத்திரமோ, காளை மாட்டு மூத்திரமோ அல்ல!

பசுதானே அவர்களின் கோமாதா! ஏற்கெனவே பசுவை உணவுக்காக வெட்டக் கூடாது என்று ஒரு சட்டத்தையும், அந்த மாநிலத்தில் பிறப்பித்து நடைமுறைப்படுத்தி விட்டனர்.

மீறி வெட்டினால் சிறை ஒரு லட்சம் ரூபாய் அபராதம் வேறு கட்டவேண்டும். மாட்டு மூத்திரத்தை எடுத்து இரசாயன பரிசோதனை செய்து பார்த்தார்களா என்று தெரியவில்லை.

அது ஒரு கழிவுப் பொருள்தான். கழிவுப் பொருளைச் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்று இதுவரை எந்த மருத்துவத் துறை விஞ்ஞானமும் தெரிவிக்கவில்லை.

பஞ்சகவ்யம் என்று சொல்லி மாட்டு மூத்திரம், சாணி, பால், தயிர், வெண்ணெய் அய்ந்தையும் ஒன்றாகக் கலக்கி, `சூத்திரன் வீட்டில் நடக்கும் திதி முதலிய காரியங்களில், வீட்டுப் பெரியவர்களைக் குடிக்கச் செய்வார்கள்.

அதற்குத் தட்சணையும் கொடுத்து பயபக்தியோடு குடிப்பார்கள் சூத்திரர்கள்.
இதனை திருமண நிகழ்ச்சிகளிலும், புதுமனை புகுவிழா நிகழ்ச்சிகளிலும், நீத்தார் நினைவு போற்றும் நிகழ்ச்சிகளிலும் தந்தை பெரியார் எடுத்துக்காட்டி மானங்கெடப் பேசுவார்கள்.

பஞ்சகவ்யத்தை முகம் சுளிக்காமல் குடிக்கிறானா என்று பார்ப்பான் பார்ப்பானாம். அப்படி முகம் சுளிக்காமல் குடித்தால் பார்ப்பான் கணக்குப் போடுவானாம்!

`பரவாயில்லை இன்னும் நூறு வருஷங்களுக்கு இவாளைச் சுரண்டலாம்! என்று கணக்குப் போடுவானாம் - தந்தை பெரியார் கூறுவார்.

இன்னும் ஓர் அளவுகோலையும் தந்தை பெரியார் கூறுவதுண்டு.
பஞ்சகவ்யம் குடிப்பது என்பது நமது முட்டாள்தனத்தைப் பார்ப்பான் அளக்கும் தர்மா மீட்டர் என்றும் சொல்லுவார்.


தமிழ்நாட்டில் தந்தை பெரியார் தோன்றினார்; பிரச்சாரம் செய்தார். திராவிடர் கழகம் இருக்கிறது; தொடர் பிரச்சாரம் நடந்துகொண்டு இருக்கிறது. இத்தகு காரணங்களால் இந்தப் பஞ்சகவ்யம் எல்லாம் அனேகமாகக் குறைந்து போய்விட்டது.

அதேநேரத்தில், பா.ஜ.க., - சங் பரிவார்க் கும்பல் பசுமாட்டு மூத்திரத்துக்கு ஒரு மகத்துவத்தை உண்டாக்கும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறது என்பதை நம் மக்கள் தெரிந்துகொள்ளுவது நல்லது.

தன் மலத்தையே தின்ன பரமஹம்சர்கள் எல்லாம் கூட இந்த நாட்டில் உண்டு.

கேட்டால் அவர்கள் `மும்மலத்தையும் அறுத்த மலந்தின்னிகள் என்று பட்டம் கொடுத்தாலும் கொடுப்பார்கள்.வெட்கக்கேடு. இந்த 2007-லும் இப்படி ஒரு கூட்டம்!

இந்துத்துவா என்றால், ஓகோ என்று பேசுகிறார்களே - ஒரு வெங்காயமும் இல்லை - மாட்டு மூத்திரத்தைக் குடிக்கச் சொல்லுவதுதான் - ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போதாதா?- மயிலாடன்
http://viduthalai.com/20070817/news03.html

பசுக் காலடியில் மிதிபடும் கோமாதா விழா!

நமது நாடு நம்பமுடியாத பல மூடநம்பிக்கை களையும், ஆச்சரியங்களையும் தன்னகத்தே கொண்டது. பல்வேறு மூடநம்பிக்கைகளையும் உள்ளடக்கியதாகவும் அமைந்துள்ளது.

எப்போது நம்பிக்கை கண்மூடித் தனமாக மாறுகிறதோ அப்போது இந்த பராம்பரிய பழக்க வழக்கங்கள் மூடநம்பிக்கைகளாக கருதப்படுகின்றன.

கிராம மக்கள் கவுரி பண்டிகை அன்று தங்கள் குடும்பங்களை காப்பாற்றும் பசுவை தாயாக அல்லது தெய்வமாக மதித்து பூஜைகள் செய்கின்றனர்.

இந்த பண்டிகை தீபாவளிக்கு மறுநாள் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் கிராமத்தினர் தங்களது பசுக்களை நன்கு குளிப்பாட்டி அவற்றை மஞ்சள் குங்குமம் இட்டு அலங்கரிக்கின்றனர். பின்னர் அங்குள்ள கோவர்தன் கோயிலுக்கு அழைத்து வந்து பூஜைகள் செய்கின்றனர்.

பூஜைகள் செய்தபின்னர் தங்களது பசுக்கள், அதன் கன்றுகளுடன் கோயிலை 5 முறை வலம் வருகின்றனர். இதில் மிக முக்கிய விஷயம் என்னவென்றால் பசுக்களும், கன்றும் கோயிலை சுற்றி வரும் பாதையில் மக்கள் விழுந்து பசுக்களை வணங்கியபடி படுத்துக் கொள்கின்றனர்.

பசுக்களும் கன்றுகளும் அவர்களின் உடலை மிதித்துக் கொண்டே செல்கின்றன. அப்போது பசுக்களை நோக்கி கோமாதா என்று அவர்கள் கோஷமெழுப்புகின்றனர்.
http://viduthalai.com/20071215/snews04.html

ரிஷபம்-காளை சிவனின் வாகனமாயிற்றே?

பிரிட்டனில் ஸ்கந்தவேல் கோயிலுக்குச் சொந்தமானது `சம்போ என்னும் காளை. இந்தக் கோயில் காளைக்குக் காசநோய் ஏற்பட்ட சூழலில், அதனைக் கருணைக் கொலை செய்ய அரசு முடிவு செய்தது.

ரிஷபம் - காளை சிவனின் வாகனமாயிற்றே? பொறுக்குமா பக்தர்களுக்கு?

சிவனின் வாகனமான ரிஷபத்துக்கு ஏன் காச நோய் வந்தது என்பதைப்பற்றி அவர்கள் சிந்திக்கவில்லை. பக்தி என்னும் காசநோய்தான் அவர்களைப் பிடித்து ஆட்டு கிறதே. அவர்கள் எப்படி புத்தி யைப் பயன்படுத்துவார்கள்?

நீதிமன்றம் சென்றனர் - நீதிமன்றமும் கடைசியாக காச நோய்ப் பிடித்த அந்தக் கோயில் காளையைக் கொன்றுவிட உத்தரவு பிறப்பித்துவிட்டது. இந்துப் பக்தர்களின் மனம் ரொம்பவும் புண்பட்டுப் போய் விட்டதாகப் புலம்புகின்றனர்.

இந்து மதத்தில் எதுதான் கடவுள் வாகனம் இல்லை - அவதாரம் என்று எடுத்துக் கொண்டாலும், மலந்தின்னும் பன்றி (வராகம்) வரை எடுத்தாயிற்றே?

இந்தக் கழிசடைத் தனத்தில் இந்து மதத்தைக் குளிப்பாட்டி அசிங்கப்படுத்திய பிறகு, `அய்யயோ எங்கள் சிவனின் வாகனமான ரிஷபத்தை - காளையை வெட்டலாமா? என்று குரல் கொடுப்பதில் எள் ளளவுக்கும் அர்த்தம் உண்டா?
தம் வாகனமான ரிஷபத்தை வெட்டும் `மிலேச்சர்களை சிவ பெருமான் ஒரு கை பார்த்துவிட வேண்டியதுதானே?


திரிபுரத்தையும் சிரித்து அழித்த திரிசடையோன் ஆயிற்றே! எங்கே போனான் அவன்?

அது ஒருபுறம் இருக்கட்டும். உலகம் முழுவதும் இறைச்சிக் காக எத்தனை இலட்சம் காளைகள் வெட்டப்படுகின்றன! உலகில் அதிக மக்கள் உண்ணும் உணவு மாட்டிறைச்சிதானே?

அதைப்பற்றியெல்லாம் பக்தர்கள் கவலைப்பட்டுப் பதறாதது ஏன்?
தயவு செய்து பதறாது பகுத்தறிவைப் பயன்படுத்தி, யதார்த்தத்தை உணர்ந்து, ``ஒட்ட ஒழுகல் என்னும் வள்ளுவனாரின் வாக்கை அசை போட்டுப் பார்ப்பார்களாக!- மயிலாடன் http://viduthalai.com/20070728/news03.htm
----------------------------------
அழுத்தவும் :- Show all posts

1 comment:

T.V.Radhakrishnan said...

than oon perukka than piridhoon unban -- idhuvum valluvan vakku. idhai mattum een neengal purindhukkollavillai