Followers

Sunday, December 9, 2007

கஞ்சா சாப்பிட்டவன் அழியாதவனாம். ரிக் வேதம் கூறுகிறது.

ஆரியர்கள் கஞ்சாவுக்கு அடிமைகள் - ARTICLE BY :-சார்வாகள்
http://viduthalai.com/20071208/snews05.html

வேத காலத்தில் ஆரியர்களின் முக்கிய போதைப் பொருள்கள் சோம ரசமும் சுராபானமும் ஆகும்.

வேத காலத்தில் ஆரியர்கள் பயன்படுத்திய மிகவும் சக்தி வாய்ந்த போதைப் பொருள் சோம பானமே!

அதற்கான விளக்கத்தை வேதம் தருகிறபோது, எண்ணிப் பார்த்தால் கஞ்சாவைத்தான் சோமம் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

சுரா என்பது மது பானம். சாதாரண நிலையில் செய்ய முடியாதவற்றைச் செய்வதற்கான ஊக்கமும் உறுதியும் திறமையும் மனித மனத்தில் ஏற்படச் செய்திட ஒரு வெறியை ஏற்படுத்த ஒரு திரவத்திற்கு முடியும் என்பதைக் கண்ட அனுபூதிகள் ஆரியர்கள்.

அனுபூதி என்றால் (ஆண்டவனை) அனுபவத்தால் அறிந்தவர்கள் என்பார்கள். அந்த வகையில் மது வகைகளின் சிறப்பை அனுபவத்தால் அறிந்தவர்கள். இத்தகைய போதையைத் தரும் செடி, மூலிகைகளின் மன்னன் என்றனர்.

போதைப் பானத்தை வடித்தெடுத்துத் தயாரித்திடும் செயல் யாகம் எனவும் இதற்கு உதவும் பொருள்கள் பூசனைக்குரியன என்றும் கருதினர்.

ரிக் வேதத்தில் சுமார் 120-க்கும் மேற்பட்ட சூக்தங்களை இதற்கெனவே ஒதுக்கியிருக்கின்றனர்.

ரிக் வேதத்தில் பேசப்படும் சிறந்த பெண் கடவுளான உஷஸ் என்பதற்கு 22 சூக்தங்கள் உள்ளன. ஸவித்ரு எனும் சூரியக் கடவுள் பற்றி 11 சூக்தங்கள் உள்ளன. அஸ்வினி தேவர்களுக்கு 54 சூக்தங்கள், இதிலிருந்தே கடவுள் களைவிட ஆரியர்களுக்குப் போதை முக்கியம், போதை தரும் சோம சுரா பானங்கள் முக்கியம் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

சோம பானம் சாப்பிட்டவன் அழியாதவனாம். ரிக் வேதம் கூறுகிறது.

``நான் நிரந்தரமானவன்; அழிவதில்லை என்று கண்ணதாசன் எனும் அனுபூதிக் கவிஞர் இதனால்தான் பாடினாரோ?

ஒளியை நோக்கி இட்டுச் செல்லுமாம்.
கடவுளை அறிவதற்கு உதவுமாம்.
தேவர்கள் ஆகிவிடலாமாம், சோமபானம் உண்டால்!
சோமரசத்திற்குக் கடவுள் தன்மை உண்டாம்!
மருத்துவ சக்தி உண்டாம்!
முடவர்களை நடக்க வைக்குமாம்!
குருடர்களைப் பார்க்க வைக்குமாம்!
அற்புதச் சுகமளிக்கும் நற்செய்திச் சுவிசேஷக் கூட்டங்கள் வேண்டாமோ?


சோமச் செடியிலிருந்து சாற்றைப் பிழிந்தெடுத்துச் `சரக்கு தயாரிக்கும்போது பாடுவதற்குரியவை வேத சூக்தங்கள். தெய்வீகம் அளிக்கப்பட்டு ஆராதிக்கப் பட்டு வந்த சோமச் செடியிலிருந்து பானம் செய்வதே மகத்தான செயலாகக் கருதப்பட்டுள்ளது.

சோமம் பற்றிய விவரம் யஜுர் வேதத்தில் உள்ளது. நம்மூர் கஞ்சாவேதான்.

இதைப் பிழிந்தெடுத்து குடிக்கத்தக்க பக்குவத்தில் எப்படித் தயார் செய்வது என்பது வேதத்தில் கூறப்பட்டுள்ளது. தற்போது பீர், பிராந்தி தயாரிக்கும் முறையைக் கூறும் `டிஸ்டில்லரி மேன்யுவல் தான் வேதம்.

மலைப் பகுதிகளிலுள்ள பாறைகள் நிறைந்த இடத்தில் சோமம் பயிராகும் என யஜுர் வேதம் கூறுகிறது. ``ஸஷ்ப என்கிறார்கள்.

இதன் பொருள் இளம் தளிர் என்பதாகும். இதைப்பறித்து சுத்தமான தண்ணீரில் மூன்று நாள்களுக்கு மூன்று தடவையும் ஊற வைத்து, மூன்ற நாள்களுக்குப் பசும்பாலில் ஊற வைத்துச் சுத்தம் செய்து அரைத்து கலக்கிக் குடிக்க வேண்டுமாம்.
இதனால் வீரியம் பெருகுமாம்.

போதை அதிகமாக உண்டாகுமாம்.இவர்களின் யாகத்திற்கே சோமம் தேவைப்பட்டுள்ளது. சவுத்ராமணி யாகம் செய்திட சோமம் எப்படித் தயாரிப்பது என்பதை கதபத பிராமணம் தெளிவாகக் கூறுகிறது.

முதல் நாள் இரவு நீரில் ஊற வைத்த சோமச் செடியை காலையில் எடுத்து நீரைக் களைந்து நன்றாகக் கழுவி எடுக்க வேண்டுமாம். இதற்கு ஆஸ்வினம் என்று பெயராம்.
இரண்டாம் நாளும் இதே மாதிரிச் செயய வேண்டுமாம். இரண்டாம் நாள் சுத்திக்கு சாரஸ்வதம் எனப் பெயர்.
மூன்றாம் நாளும் சுத்தி செய்ய வேண்டும். இதற்கு அய்ந்த்ரம் என்று பெயராம்.

இந்த வகை சோமங்களை யார் யார் பருக வேண்டுமெனவும் வேதம் கூறுகிறது.

ஆஸ்வினத்தை அத்வர்யுக்கள் பருக வேண்டும். சாரஸ்வதத்தை ஹோதா, பிரம்மா, மைத்ரா, வருணன் போன்றோர் பருக வேண்டும். யாகம் செய்கிறவன் அய்ந்த்ரத்தைப் பருக வேண்டுமாம்.

சோமத்தைச் சுத்தப்படுத்தும் போது முதல் இரவில் ஒரு பசுவின் பாலில் சுத்தி செய்ய வேண்டுமாம். இரண்டாம் இரவில் இரண்டு பசுக்களின் பாலைக் கொண்டும் மூன்றாம் இரவில் மூன்று பசுக்களின் பாலிலும் சுத்தி செய்ய வேண்டுமாம்.

போர்க் காலங்களில் சோமத்தைச் சாப்பிட்டு `எக்ஸ்ட்ரா பலம் பெற்றுச் சண்டை போட்டார்களாம்.

மனிதர்களைப் போலவே கடவுள்களும் சோம பானத்தை விரும்பினதுகளாம். இந்திரன் குடித்தது பற்றியும் அவனுக்குக் குடிக்கக் கொடுத்து மகிழ்ச்சியுறச் செய்த விதம் பற்றியும் ரிக் வேதத்தில் பல சூக்தங்கள் உள்ளன.

சோமபானம்தான் இந்திரன் என்றேகூட சூக்தங்கள் கூறுகின்றன. சோம பானம் தயாரிப்பவனைக் காத்து ரட்சிக்கிற பணியை இந்திரன் செய்கிறதாம்.

சுருக்கமாகச் சொன்னால் வேதகால ஆரியர்கள் (சோமத்திற்கு) கஞ்சாவுக்கு அடிமைகளாக இருந்தனர்.

வேதங்களில் சுராபான மும் பேசப்படுகிறது இதனை அருந்துபவர்கள் சுரர்கள் தேவர்கள், பார்ப்பனர்கள். சுராபானத்தை அருந்தாதவர்கள் அசுரர்கள்.

சுராபானத்தைத்தவிர வேறு மது வகைகளைப் பார்ப்பனர்கள் குடிக்கக் கூடாது என்றே போதாயன தர்ம சூக்தம் கூறுகிறது.

இந்தச் சுரா பானம் சில குறிப்பட்ட வகை தானியங்களைப் பொடி செய்து நீரில் கலக்கிப் புளிக்க வைத்துத் தயாரிக்கும் மது வகையாகும்.

சுரா தயாரித்துத் தெளிய வைத்து வடித்து எடுத்த பிறகு, சக்கையை ஒதுக்கிவிட வேண்டுமென ஸாயண பாஷ்யம் கூறுகிறது.

இக்காலத்தில் அரிசியிலிருந்து விஸ்கி தயாரிக்கப்படுகிறது. மால்ட், பார்லி போன்ற தானியங்களிலிருந்தும் விஸ்கி தயாரிக்கப்படுகிறது. மால்ட் விஸ்கி தயாரிக்கப்பட்டபின், சக்கை சாயண பாஷ்யம் கூறு வதைப் போலத் தற்காலத்தில் தூக்கி எறியப்படுவது இல்லை. இந்தச் சக்கையை ஊற வைத்து புளிக்க வைத்துத் தண்ணீர் கலந்து தயாரிக்கப்படுவதுதான் பியர். பீர் தயாரித்தது போக மீதியுள்ள சக்கை மாட்டுத் தீவனம் செய்யப்படுவதற்குப் பயன்படுகிறது. இந்த வகை தீவனம் மேல் நாட்டு மாடுகள் விரும்பிச் சாப்பிடுகின்றன.

இந்தச் சுராபானத்தின் சிறப்பு வேதங்களில் சிலாகித்துப் பேசப்படுகிறது. சுரா பரிசுத்தமாக்குகிறதாம். இதனைப் புரிந்து கொண்டதால் தான் சவித்ராமணி யாகம் செய்தனராம்.
அழியாத தன்மையையும் கைவரச் செய்யும் திவ்ய மூலிகையாக சோமம் விளங்கியதாம்.


இந்தப்படிக்கு, சோமபானமும், சுராபானமும் செய்முறைகளும், பருகினால் ஏற்படும் பலன்களும் பலபட விவரித்துக் கூறுபவைதான் வேதங்கள். வேறு ஒரு புடலங்காயும் வேதங்களில் இல்லை! http://viduthalai.com/20071208/snews05.html
--------------------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

No comments: