Followers

Monday, December 10, 2007

தேவடியாள்களாக இருந்தால் மோட்சம் . !!! மலம் அள்ளுவோர் யோக நிலையை அடைவார்கள்.!!!

குல தர்மத்துக்குத் தீ மூட்டுவோம் - வாரீர்! வாரீர்!!

உச்சநீதிமன்றம் வேறு யாருக்கும் கொடுக்காத ஓர் அடைமொழியை ஒருவருக்குக் கொடுத்துக் `கவுரவித்ததுஅந்தக் `கவுரவத்தை பெற்றவர் வேறு யாரும் அல்லர் - குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திரமோடி என்பவர்தான் அவர்.

என்ன பட்டம் தெரியுமா? நீரோ மன்னன்! நாடுபற்றி எரியும்போது இசை (பிடில்) வாசித்துக் கொண்டிருந்தானாம் அவன்.ஒரு வகையில் பார்க்க போனால் நீரோ மன்னனையும் தாண்டிய கொம்பன் இந்த மோடி.மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான்.

இந்த மோடியோ ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களைக் கொன்று குவித்து, அந்த ரத்தத்தில் குளியலாடிக் கொண்டிருந்த குரூரன்!
நிஜப் புலியைவிட - புலி வேடம் போட்டவன் அதிகம் குதிப்பான்.


பார்ப்பனர்களைவிட அவர்கள் தொங்கு சதைகள் அதிகம் புஷ்டியைக் காட்டும்.அந்த வகையைச் சார்ந்தவர்கள்தான் தொகாடியாக்களும் - நரேந்திர மோடிகளும்.

இந்துத்துவாவில் கரைந்துவிட்ட இவர்களின் புத்தி இந்தக் கதியில் இருக்கிறது!

குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி ஓர் புத்தகம் எழுதி இருக்கின்றார் புத்தகத்தின் பெயர் "கர்மயோக்".

அந்த நூலை தனிப்பட்ட முறையில் அவர் வெளியிடவில்லை. மாநில அரசின் செய்தித் துறையே அதனை வெளியிட்டுள்ளது.அந்நூலில் அவர் என்ன சொல்லியுள்ளார்? என்பதுதான் முக்கியமாகும்.

``மலம் அள்ளுவது, சாக்கடைகளையும், குப்பைகளையும் அகற்றும் பணியில் ஈடுபடுவோர் யோக நிலையை அடைவார்கள்.
அந்தப் பணியை செய்வோர்கள் ஒன்றை எண்ணிப் பார்க்க வேண்டும். அந்தப் பணியை அவர்கள் கடமையாகச் செய்வதன் மூலம் ஒட்டு மொத்தமான சமூகத்திற்கும், கடவுள்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கின்றனர்! என்று ஒடுக்கப்பட்ட மக்களின் நாக்கில் தேன் தடவி எழுதியிருக்கிறார்.


ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் - அதன் அரசியல் வடிவமான பா.ஜ.க., இவை அனைத்தும் இந்து மதத்தின் வருணாசிரம தர்மத்தை குலதர்மத்தைத் தம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுபவை தான்!

அந்தப் புத்தி அவர்களைவிட்டு விலகி ஓடுமா? உடம்பு முழுமையும் மூளை உள்ளவர் என்று போற்றப்பட்ட ஆச்சாரியார் (ராஜாஜி) ஆட்சிக்கு வந்தபோதுகூட குலக் கல்வித் திட்டத்தைத் தானே அமலுக்குக் கொண்டு வந்தார்!

குஜராத் மாநிலமாக இருப்பதால் நரேந்திரமோடி இப்படியெல்லாம் பேச முடிகிறது. தமிழ்நாட்டில் பேசிப் பார்க்கட்டுமே - அப்பொழுது தெரியும். அதன் விளைவு!

மலத்தை அள்ளினால் மோட்சம் கிடைக்குமென்றால் அந்தத் தொழிலைச் செய்ய மனுவாதிக் கூட்டம் முண்டியடித்துக் கொண்டு முன் வரவேண்டியதுதானே?

குப்பையை அள்ளினால் கூரையைப் பிய்த்துக் கொண்டு மோட்சம் வந்து குதிக்கும் என்றால் குல்லூகப் பட்டர் கூட்டமும், அதற்குத் துணைபோகும் `மோடி மஸ்தான்களும் குப்பை மேடுகளைத் தேடிப் போக வேண்டியதுதானே!
சாக்கடையைத் தூர் எடுப்பதால் சாலோக சாம் ராஜ்ஜியத்தில் நுழைய இலவச சீட்டுக் கிடைக்கும் என்றால் சங்கராச்சாரியார் பரம்பரை அதனைச் செய்யட்டுமே!

அவர்களின் வாலைப் பிடித்துக் கொண்டு மோடிகளும் மோட்ச லோகத்திற்குப் போகட்டுமே - யார் தடுத்தார்கள்?

நீதிக் கட்சி ஆட்சியில் (1930) தேவதாசி ஒழிப்பு மசோதாவை டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கொண்டு வந்தபோது,

திருவாளர் சத்தியமூர்த்தி அய்யர்வாள் பஞ்சக்கச்சத்தை இறுக்கிக் கட்டிக் கொண்டு, பூணூலை முறுக்கிக் கொண்டு இப்படித்தான் சட்டமன்றத்திலே முழங்கினார்.

கோயில்களிலே தேவதாசிகளாக இருப்பது, தேவர்களுக்கு அடியார்களாக இருப்பது என்பது சாதாரண காரியமல்ல; அது தெய்வத் தொண்டு -
இந்தப் பிறவியில் தேவதாசிகளாக இருந்தால், அடுத்த ஜென்மத்தில் மோட்சம் கிடைக்கும் -


தெய்வ காரியத்தில் அரசு தலையிடக் கூடாது என்று கூச்சல் போட்டார்.
தந்தை பெரியாரிடம் அறிவுரை கேட்டார் டாக்டர் முத்துலட்சுமி - மறுநாள் அதன்படி சட்டமன்றத்தில் பேசினார்.

`மோட்ச லோகம் செல்வதுபற்றி திருவாளர் சத்தியமூர்த்தி அய்யர் நேற்று அவையிலே பேசினார். இதுவரை எங்கள் குலப் பெண்கள் - தேவர்களுக்கு அடியார்களாக இருந்து, எங்கள் பெண்களே தொடர்ந்து மோட்சத்துக்குப் போய்க் கொண்டு இருக்கிறார்கள்.

இனிமேல் திருவாளர் சத்தியமூர்த்தி அய்யரின் பரம்பரையினர் கோயிலுக்குப் பொட்டுக் கட்டி விடப்பட்டு, தேவடியாள்களாக இருந்து, அந்தமோட்ச லோகத்துக்குப் போகட்டுமே - அதில் எங்களுக்கு எந்தவித அட்டியும் இல்லை என்று சொன்னாரே பார்க்கலாம் -

வாயாடி சத்தியமூர்த்தி வாயில் ஆயிரம் ஊசிகள் போட்டுத் தைத்ததுபோல அமுங்கினிபோல உட்கார்ந்தார்.

மோடி கூட்டத்துக்கும் அதே பதில்தான். இன்னும் மோடிகளும், ஜோஷிகளும், சுதர்சன்களும் தாராளமாக மலத்தை அள்ளும் தொழிலுக்குச் செல்லட்டும் -
அவர்களின் வாரிசுகளை சாக்கடை சுத்தம் செய்யும் புண்ணியமான பணிக்கு அனுப்பட்டும்.


அதே நேரத்தில் ஆண்டாண்டு காலமாக ஜாதியின் பெயரால் எங்களை நாலாம் ஜாதியாக்கி, அய்ந்தாம் ஜாதியாக்கியது போதாது என்று
இந்த 21-ஆம் நூற்றாண்டிலும் எங்களை ஜாதித் தொழிலை செய்யச் சொல்லும் போக்கிரிகளை நாங்கள் அனுமதிக்கவே மாட்டோம்.


எங்களை ஏமாற்றிய காலம் மலையேறி விட்டது. எங்கள்மீது குதிரை சவாரி செய்த அத்தியாயம் எல்லாம் முடிந்து போய் விட்டது.

தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் அறிவையும் ஆவேசத்தையும் ஊட்டி வளர்த்திருக்கின்றனர். பாசிசக் கூட்டத்தின் பருப்பு இனி வேகாது!

இதோ கிளப்பி விட்டன கருஞ்சிறுத்தைகளும் விடுதலைச் சிறுத்தைகளும்.தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி, எழுச்சித் தமிழர் மானமிகு தொல். திருமாவளவன் ஆகியோர் தலைமையில் ஒடுக்கப்பட்ட மக்கள் எரிமலையாய்க் கிளர்ந்து எழுந்து விட்டனர்.

நாளை மறுநாள் (11.12.2007) செவ்வாய்க் காலை 11 மணிக்கு சென்னை மெமோரியல் மன்றத்தின் எதிரில் - குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடி எழுதிய `கர்மயோக் என்னும் குலதர்மத்தை முன்மொழியும் நூலைக் கொளுத்தும் போராட்டம்! போராட்டம்! அறவழிப் போராட்டம் தான்!

மான உணர்வு மிக்க மறவர் கூட்டம் நாம் என்பதை எடுத்துக்காட்ட தன்மானத் தமிழர்களே திரள்வீர்! திரள்வீர்!

தந்தை பெரியார் பிறந்த சுயமரியாதை மண் இது என்பதை இந்துத்துவா கூட்டத்திற்கு வலுவாகத் தெரிவிக்க தீப்பந்தமாக எழுவோம்! குலதர்மத்துக்குத் தீ மூட்டுவோம்! சமதர்மத்துக்கு உரமூட்டுவோம், வாரீர்! வாரீர்!
http://viduthalai.com/20071209/news12.html
--------------------------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

No comments: