Followers

Sunday, December 23, 2007

சூத்ரனோ, பஞ்சமனோ (தமிழர்கள் ) கோயில்களுக்குள் ஒரு அடியெடுத்து வைத்தால்கூட பகவான் வெறுங்கல்லாகி ‘பட்’டென ஓடிப் போய்விடுவார். அதனால்... அவர்களை ....

சூத்ரனோ, பஞ்சமனோ (தமிழ‌ர்கள் ) கோயில்களுக்குள் ஒரு அடியெடுத்து வைத்தால்கூட பகவான் வெறுங்கல்லாகி ‘பட்’டென ஓடிப் போய்விடுவார். அதனால்... அவர்களை கோயிலுக்குள் விடாதே... என்கிறது ஆஹமம்.

ஆகமம் எப்படி என்னதான் ஆணையிட்டது என்று கேட்கிறீர்களா?

“த்ருஷ்ட்வா தேவஹா பலாயதே...”என்று போகிற பாஞ்சாத்ர ஆகம ஸ்லோகம் என்ன உத்தரவிடுகிறது என்றால்...

பல ஆச்சார அனுஷ்டானங்களின் அடிப்படையில் பகவானை விக்ரகங்களில் இருத்தி வைத்திருக்கிறோம். இந்தப் புனிதமான கோயில்களுக்குள் சூத்ரனோ, பஞ்சமனோ (தமிழ‌ர்கள்) ஒரு அடியெடுத்து வைத்தால்கூட அனுஷ்டானங்கள் கறைபட்டு விடும். அதனால்... அந்த விக்ரகங்களில் இருந்து பகவான் ‘பட்’டென ஓடிப் போய்விடுவார்.

அதனால்... சூத்ரனோ, பஞ்சமனோ (தமிழ‌ர்கள் ) கோயிலுக்குள் பாதம் எடுத்து வைத்தால்... விக்ரகம் வெறுங்கல்லாகி விடும். பகவான் அதில் க்ஷணம் கூட தங்கமாட்டார். எனவே, அவர்களை( தமிழர்களை)கோயிலுக்குள் விடாதே... என்கிறது ஆஹமம்.

ஒருவேளை அப்படி நுழைந்து விட்டால்...?அதற்குப் பரிகாரம் தான் சம்ப்ரோக்ஷணம். அதாவது கும்பாபிஷேகம் அதாவது குடமுழுக்கு... என பரிகாரமும் பண்ணி வைத்திருக்கிறது ஆகமம்.

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி - 27 ல்
-------------------------
அழுத்தவும் >> Show all posts

No comments: