Followers

Sunday, December 16, 2007

ஆணுடைய உயிர்த்துளிகள் ( இந்திரியம் ) பெண்ணுடைய பாகத்தில் சேராமல் வழிதவறி விழுந்தால்... ?? கவலை வேண்டாம் சுகமே !!!

சிவனின் மன்மத புயல்‍ - சக்தி விலகிக் கொள்ள... சிவனின் உயிர்த்துளிகள் சேரவேண்டிய இடத்துக்குப் போய்ச் சேரவில்லை..........முடிவு?? !! + முருகன்

சைவத்தில் இது மட்டுமல்ல மொழி பேதமும் உண்டு. முருகன் அழகான தமிழ்ப்பெயர். இச்சொல்லின் பொருளே அழகு என்றுதான் அர்த்தம்.

சுத்த தமிழ்க்கடவுளான முருகனை, பிராமணர்கள் கந்தனாக்கி விட்டார்கள். சுப்ரமண்யனாக்கி விட்டார்கள். ஏன்... பரமசிவன் - பார்வதியின் மகனாக்கி விட்டார்கள் சமஸ்கிருதக்காரர்கள்.அப்படியென்றால் முருகன் பரமசிவனின் மகன் இல்லையா?இல்லை என்பது தமிழ் பதில். ஆமாம் என்பது சமஸ்கிருத பதில்.

எப்படி என்று கேட்டால் பெயர்க்காரணங்களை வைத்தே எளிதில் கூறிவிடலாம். முருகன் என்றால் அழகன். அதாவது தொன்மையான பழந்தமிழ் சங்க இலக்கியத்தில் பரிபாடல் நூலில் முருகன் என்ற தமிழ்க் கடவுள் பெயர்தான் வழங்கப்பட்டிருக்கிறது.

சரவணபவ, கந்தன்... இவையெல்லாம்...? அர்த்தம் சொல்கிறேன். பரமசிவனுக்கும், பார்வதிக்கும் பிறந்தவர் இல்லை முருகன். இது தமிழ் பதில் என்று சொன்னேன்.அப்படியென்றால் சமஸ்கிருத பதில் என்ன?

கந்தன், சரவணபவ என்றெல்லாம் சொல்கிறோமே? என்றெல்லாம் கேட்கிறீர்கள்.

வடமொழிக் கதையை தான் இங்கே வாசித்துக்காட்ட வேண்டியிருக்கிறது.

பரமசிவனும், பார்வதியும் தங்களது லோகத்தில் லயித்திருக்கிறார்கள். இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது... பார்வதியின் மீது மோகனம் பொங்குகிறார் பரமசிவன். பார்வதியை நெருங்குகிறார்.

பார்வதிக்கு அப்போது என்ன வேலையோ? இல்லை ஸ்வாமி... இப்போது வேண்டாம். நான் தயாரில்லை... என்கிறார்.

பரமசிவனுக்குள்ளோ மன்மதப்புயல், பார்வதியை பார்க்கப் பார்க்க சுற்றிச் சுழன்று அவரை தாக்குகிறது. பார்வதி மீது மன்மத தாண்டவம் ஆடிட மிகத்தயாராக இருக்கிறார்.

ஆனால்... சக்திக்கு சம்மதமில்லை.பார்வதியை துரத்துகிறார் பரமசிவன். நாதனின் வேட்டையிலிருந்து தப்பிக்க நழுவி ஓடுகிறார் பார்வதி. பரமசிவனாயிற்றே... விட்டு விடுவாரா? பார்வதியை வளைத்து தன் கைகளின் எல்லைக்குள் இழுத்து விட்டார்.


`தேவி... உன்னை சுகிக்க சித்தமாயுள்ளேன்... தேக சம்பந்தம் கொள்ள தாகமாயிருக்கிறேன். ஏன் நீ விலகிச் செல்கிறாய்? என்னாயிற்று உனக்கு?’ - பார்வதியை ஒரு கொடிபோல சுற்றிக்கொண்டு பரமசிவன் விரகதாபத்தோடு வினா கேட்கிறார்.

`இல்லை நாதா... இப்போது வேண்டாமே...’ - மறுபடியும் அவளது பதில் இதுதான். பகவானாக இருந்தாலும் தன் பாகங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. முழுதாக பார்வதியை இறுக்கி கட்டியணைத்தவர்... அவளது ஆடைகளையும் அகற்ற ஆரம்பிக்கிறார்.

`ஸ்வாமி... நாதா...’ கெஞ்சுகிறார் பார்வதி.ஆனால்... இதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் சுகத்துக்கான போருக்கு தான் மட்டுமே தயாராகி விட்டார் சிவன்.

பார்வதியின் ஒவ்வொரு பாகங்களையும் தன் கட்டுக்குள் பரமசிவன் வைத்திருக்க... இப்போதும் சக்தி சம்மதிக்கவில்லை. சிவனுக்கோ தாங்க முடியவில்லை. மன்மதக் கோபம் அவருக்குள் கொந்தளித்தது. பார்வதி மீது பாய்ந்து படர்ந்தார்.

ஆனால்... பார்வதியோ... சரியாக அந்த க்ஷணத்தில் தன் உடலை சற்று விலக்கிக் கொள்ள... பரமசிவனின் உயிர்த்துளிகள் போய்ச் சேரவேண்டிய இடத்துக்குப் போய்ச் சேரவில்லை.

பார்வதி விலகிவிட்டதால் பரமசிவனின் ரேதஸ் (இந்த்ரிய துளிகள்) அப்படியே ஆகாயத்திலிருந்து கீழே விழுந்தன. அந்த உயிர்த்துளிகள் அப்படியே கங்கையில் வந்து விழுந்தன.

சிவபெருமானின் சொத்தாயிற்றே.... கங்கை நீரோட்டத்தோடு வேக வேகமாக பயணித்தன. கங்கா மேலே சவாரி செய்த அந்தத் துளிகள்... கங்கைக்
கரையோரம் படர்ந்திருந்த ஒரு நாணல் காட்டுக்குள் சென்று தேங்க...அப்படியே அது குழந்தையாக அவதரித்தது.

நாணலுக்கு சமஸ்கிருதத்தில் பெயர் சரம். காட்டுக்கு வனம். சரவனம்... - நாணல் காட்டில் பின் உருவானவன் - என்பதால் சரவணன் - இப்போது சரவணன் என்று அழைக்கப்படுகிறான் முருகன். சமஸ்கிருதத்தின்படி, சரவணன் இப்படித்தான் அவதரித்தான். பெயர் தரித்தான்.

கந்தன் என்றால்...? அதை கந்தன் என்று சொல்லக்கூடாது. உண்மையான சரியான சமஸ்கிருதப் பெயர் ஸ்கந்தன்.

சரி... ஸ்கந்தன் என்றால்? இப்போது ஒரு வடமொழி கதை வாசித்தீர்களே... அதற்குள் வரும் மூலப் பெயர்தான் இது.

அதாவது... ஆணுடைய உயிர்த்துளிகள் பெண்ணுடைய பாகத்தில் சேராமல் வழிதவறி விழுந்தால்... அதன் பெயர்தான் ஸ்கந்தன்.

இப்போது புரிகிறதா? முதலில் ஸ்கந்தன். அதன் பிறகுதான் சரவணன்... இப்படித்தான் சிவனுக்கு சரவணன் `பிறந்தான்’ என்கின்றன சமஸ்கிருத காவ்யங்கள்.

ஆனால்... அழகானவன் என்ற அர்த்தத்தில் அவனை ஒரு மலைக்கடவுளாக வணங்குகிறது தமிழ்க்குடி.முருகனை ஸ்கந்தன், சரவணன் என கருத தமிழ் இடம் கொடுக்காது. தவிரவும் ஆபாசமான காரணங்களை வரையறுத்திருக்கிறது சமஸ்கிருதம்.

இப்படிப்பட்ட ஸ்கந்தன், சரவணனுக்கு சுப்ரமணியர் எனவும் ஒரு பெயர். இதன் அர்த்தம் உயர்ந்த பிராமணன். இப்போது புரிகிறதா?
இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி - 55 - ல்
------------------------------------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

No comments: