Followers

Tuesday, December 25, 2007

செருப்புகள் காணிக்கையாக தருகிறார்களாம் ஒரு கடவுளுக்கு ! பாராட்டா? இழிவைச் சுட்டிக் காட்டலா?

சூத்திர சாமிக் கோயில்களின் காணிக்கைகள் செலுத்துவதுண்டு. சில கோயில்களில் மணிகள். சிலவற்றில் வேல் கம்புகள் என்று பலவாறு காணிக்கைகள். அவற்றில் செருப்புக் காணிக்கை ஒரு கோயிலுக்கு, ஒரு கடவுளுக்கு!

பெயரைப் பார்த்தால் சூத்திரச் சாமி மாதிரி இருக்கிறது - சொரிமுத்து அய்யனார்!

ஆனால் இதுதான் சாஸ்தாவுக்கு - அய்யப்பனுக்கு - முன்னோடி என்கிறார்கள். அந்த வகையில் உயர் ஜாதிச் சாமியோ?

எப்படி இருந்தாலும் இவருக்குச் செருப்புகள்தான் காணிக்கையாம்!
நெல்லை மாவட்டம் பாபநாசம் பகுதியில் திருநெல்வேலியிலிருந்து 40 கி.மீ., தூரத்தில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோயில் உள்ளது. இந்தப் பகுதியில் வாழ்ந்த பார்ப்பனர் இரண்டு தாழ்த்தப்பட்ட பெண்களைக் காதலித்துச் சூழ்நிலை காரணமாகக் கல்யாணமும் செய்து கொள்ள நேரிட்டதாம்.

தம் மாமனாரின் உத்தரவுப்படி இவர் செருப்பு தைக்கக் கற்றுக் கொண்டாராம். இதனால் இவருக்குச் செருப்புகளைக் காணிக்கையாகத் தருகிறார்களாம்.
பாராட்டா? இழிவைச் சுட்டிக் காட்டலா?

இந்தச் செருப்புகளை யாரும் சீந்துவதில்லை. இருந்தாலும் மகத்துவம் மறையக் கூடாது என்பதற்காக காணிக்கை தரப்பட்ட செருப்புகள் தேய்கின்றன என்று ஒரு கதை கட்டி விட்டார்கள்!

பழைய சுயமரியாதைக்காரரும் பொது உடைமை இயக்கத் தலைவருமான தோழர் ப. ஜீவானந்தம் அவர்களுக்குப் பெற்றோர் இட்ட பெயர் சொரிமுத்து
http://viduthalai.com/20070819/news16.html

--------------------------------

அழுத்தவும் :- Show all posts

No comments: