Followers

Monday, December 31, 2007

உண்மையான நிலை இந்துக் கோயில் என்ற ஒன்று கிடையாது .பார்ப்பனீய திருட்டுத் தந்திரத்தை தூக்கிப் பிடிக்கும் பக்தர்கள்...!!! நிர்வாண நாட்டில் கோவணம் கட்டி.

இந்துக் கோயில் என்ற ஒன்று கிடையாது என்பதுதான் உண்மையான நிலை..
கோயிலுக்குள் சங்கராச்சாரி சிலையா?சென்னை - சாலிகிராமத்தில் பால விநாயகர் கோயிலில் மறைந்த சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக `தினமணி’ செய்தி ஒன்று கூறுகிறது (12.3.2007).

அந்தச் சிலைக்கு காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி தீபாராதனை செய்தாராம்.சைவ, வைணவக் கோயில்கள் என்று இரு பிரிவுகள்தான் உண்டு.

இந்துக் கோயில் என்ற ஒன்று கிடையாது என்பதுதான் உண்மையான நிலை.ஒரு கோயிலுக்குள் சங்கராச்சாரி சிலையை எப்படி வைத்தார்கள்? இதற்கு அனுமதி கொடுத்தவர்கள் யார்?

எந்த சாத்திர விதிப்படி ஒரு சங்கராச்சாரியாரின் சிலையை இன்னொரு சங்கராச்சாரி பிரதிஷ்டை செய்தார்?1982 இல் திருச்சியையடுத்த திருவானைக்காவல் கோயிலுக்குள் ஆதிசங்கரர் சிலையை இதே ஜெயேந்திர சரஸ்வதி கொண்டுபோய் வைக்க முயன்றபோது, கி.ஆ.பெ. விசுவநாதன் அவர்களின் தலைமையில் சைவ அன்பர்கள் ஒன்று கூடி எதிர்த்து அதனை முறியடித்தனர்.

1927 ஆம் ஆண்டு முதற்கொண்டே இந்த முயற்சியில் சங்கர மடம் ஈடுபட்டதுண்டு. சைவ அன்பர்களின் ஒற்றுமை உணர்வால் அது முறியடிக்கப்பட்டது.கா.சு. பிள்ளை என்ற சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் ஸ்மார்த்தர்களுக்கும் (சங்கராச்சாரியார் இந்தப் பிரிவைச் சார்ந்தவர்) சைவத்துக்கும் எவ்விதச் சம்பந்தமும் கிடையாது என்று அறுதியிட்டுக் கூறியுள்ளார்.

1964 இல் நெல்லையப்பர் கோயிலுக்குள் ஒரு சங்கராச்சாரியார் நுழைந்தார் என்பதற்காக,
கோயில் தீட்டுப்பட்டு விட்டது என்று கோயிலே இழுத்து மூடப்பட்டது. தீட்டுக் கழிக்கப்பட்ட பின்னரே மீண்டும் கோயில் திறக்கப்பட்டது.

வேதங்களுக்கும், கோயில்களுக்கும் சம்பந்தம் இல்லை. கோயில்கள் ஆகமங்கள் அடிப்படையில் உள்ளனவே தவிர, வேதங்களின் அடிப்படையில் அல்ல.

திருப்பதி கோயில் கருவறைக்குள் காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திர சரஸ்வதி ஒரு முகூர்த்த நேரம் (ஒன்றரை மணி) அர்ச்சனை செய்தார். அது பெரும் புயலைக் கிளப்பிவிட்டது.

இந்தச் சூழ்நிலையில் சென்னை - சாலிகிராமத்தில் ஸ்மார்த்தரான ஒரு சங்கராச்சாரியாரின் சிலை வைக்கப்பட்டது எப்படி?

மற்றவைகளுக்கெல்லாம் சாத்திர சம்பிரதாயங்கள் பேசுகிற கூட்டம் இந்தப் பிரச்சினையில் மாத்திரம் கமுக்கமாக இருப்பது - ஏன்?

காஞ்சி சங்கராச்சாரியார் நெற்றியில் திருநீறு பூசிக் கொண்டு இருப்பது என்பது கூட ஊரை ஏமாற்றத்தான்!

தன்னைக் காண வரும் பக்தர்களுக்கு அவர் திருநீறு கொடுப்பதில்லை.
காரணம் அவர் சைவர் அல்லர். அவர் என்னதான் கொடுப்பார்? மஞ்சளில் தோய்த்த அரிசியைத் தான் கொடுப்பார்.


மற்றொரு முக்கியச் செய்தி உண்டு. சங்கராச்சாரியார் சாஸ்திரப்படி கோயிலுக்குச் சென்று எந்தக் கடவுளையும் கும்பிடக் கூடாது.தங்களை ``ஏகான்மாவாதி’’ என்றுதான் சொல்லிக் கொள்வார்கள். ``நானே கடவுள்’’ என்று சொல்லிக் கொள்பவர்கள் அவர்கள்.

கோயில்களுக்குச் சென்று கடவுளைக் கும்பிடாமல், இரு கைகளையும் நெஞ்சுக்கு நேரே வைத்து நீட்டியும், மடக்கியும் நானேதான் கடவுள் என்று அபிநயம் பிடிப்பார்கள்.

இந்த நிலையில், கோயில்களைக் கட்ட ஊக்குவிப்பதும், கோயில்களுக்குக் குடமுழுக்குச் செய்வதும், கும்பிடுவதும் எல்லாம் எதற்காக? மக்களிடத்தில் எப்படியோ பக்தி உணர்ச்சியை உண்டாக்கி, கடவுள் நம்பிக்கையைப் பெருக்கி, அது அழிந்துவிடாமல் காப்பாற்றப்படவேண்டும் என்ற உள்நோக்கத்தோடுதான்.

சைவம், வைணவம் என்பனவற்றையெல்லாம் புறந்தள்ளி, `இந்து’ என்கிற கண் கூசும் வெளிச்சத்தினால்,
பார்ப்பனீயத்தைத் திருட்டுத்தனமாகத் தூக்கிப் பிடிக்கும் தந்திரத்தை பக்தர்கள் என்றைக்கு உணரப் போகிறார்களோ!
http://viduthalai.com/20070315/news05.htm
====================
பெரியார் அறிவுரை- பகுத்தறிவுவாதி

``நிர்வாண நாட்டில் கோவணம் கட்டிக் கொண்டு நடப்பவன் பைத்தியம் பிடித்தவன் என்று சொல்லப்படுவதுபோல், காட்டுமிராண்டி நாட்டில் பகுத்தறிவுவாதி பைத்தியக்காரன்போல் காணப்படுவது எப்படித் தவறாகும்?’’(``விடுதலை’’, 5.11.1967) http://viduthalai.com/20070315/news05.htm
அழுத்தவும் :- Show all posts

No comments: