Followers

Saturday, December 29, 2007

சமுத்திரத்தைத் தாண்டி (கடல் தாண்டி அந்நிய நாட்டுக்கு)இந்துவாக இருக்கக்கூடிய ஒருவன் போகக்கூடாது

பக்தித் தொழிலின் இரகசியம் !

சமுத்திரத்தைத் தாண்டி (கடல் தாண்டி அந்நிய நாட்டுக்கு ) ஒரு இந்து போகக்கூடாது

பிறப்புமுதல் இறப்புவரை மட்டுமன்றி, இறந்த பின்பும் கூட ஒவ்வொரு ஆண்டும் திதி என்றும் கூறி புரோகிதச் சுரண்டலுக்கான ஏற்பாடு `அர்த்தமுள்ள’ இந்து மதத்தில் மிக ஏராளமாகவே உண்டு.

விதைக்காது விளையும் கழனி, முதலில்லா வியாபாரம் என்று அறிஞர் அண்ணா அவர்கள் பார்ப்பனர்கள் ஏற்படுத்தியிருக்கும் இந்த அமைப்பு முறையைப்பற்றி மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டினார்.

சமுத்திரத்தைத் தாண்டி இந்துவாக இருக்கக்கூடிய ஒருவன் போகக்கூடாது என்று கூறும் பார்ப்பனர்களே, அதனை மீறுவதிலும் முதல் ஆளாக இருந்து வருகின்றனர்.

கணினி படித்து அமெரிக்காவிலும், லண்டனிலும், பாரீசிலும் பெரும் சம்பளத்தில் வாழ்க்கையை உல்லாசமாக நடத்திக்கொண்டு இருக்கும் மெத்த படித்த பார்ப்பனர்கள்கூட, முதலில் அவர்கள் செய்யும் கடமை ஒரு கோயி லைக் கட்டி, தமிழ்நாட்டிலிருந்து புரோகிதப் பார்ப்பனர்களை வரவழைத்துக் கும்பாபிசேகம் செய்வதுதான்; அதன்பின் சில பார்ப்பன அர்ச்சகர்களையும் அக்கோயிலில் அமர்த்திக்கொண்டு விடுவார்கள்.

பக்தி ஒரு வியாபாரமாகி விட்டது என்று ஒருமுறை மாஜி சங்கராச்சாரியார் திருவாளர் ஜெயேந்திர சர°வதி வாழ்நாளில் ஒரே ஒரு உண்மையைத் `திருவாய்’ மலர்ந்து கூறினார். அதன் திரட்சியை இப்பொழுது நம் கண்முன் காண முடிகிறது.

சென்னையில் கலைஞர் கருணாநிதி நகரில் ஒரு நிறுவனத்தை பார்ப்பனர்கள் தொழில் ரீதியாகவே ஏற்பாடு செய்துள்ளனர் என்று ஒரு செய்தி வெளிவந்துள்ளது.

பிறப்புமுதல் இறப்புவரை ஒருவரின் வாழ்வில் ஏராளமான சடங்குகளைச் செய்யவேண்டியுள்ளது. திவசம், பரிகார ஹோமம், கல்யாணம், கருமாதி, கிரஹப்பிரவேசம், சஷ்டியப்த பூர்த்தி, ருது மங்கள °நானம், சீமந்தம், கர்ண பூஷணம் (காது குத்துதல்) என்று இத்தியாதி இத்தியாதி சடங்குகளைச் செய்து வருகின்றனர் அல்லவா!

இந்தச் சடங்குகளை எப்படி செய்வது? எப்படியெல்லாம் மெனக்கெடுவது, ஏற்பாடுகளைச் செய்வது என்று மலைக்கவேண்டியது இல்லை. இந்த நிறுவனத்தினரிடம் ஒப்படைத்துவிட்டால் சகலவிதமான பொருள்களைச் சேகரிப்பதிலிருந்து, மண்டபங்களைப் பிடிப்பது, சமையல் ஏற்பாடு, புரோகிதர்களைக் கொண்டு வருவது உள்பட அத்தனையையும் அப்பியாசமாகச் செய்து முடித்துவிடு வார்களாம். ஆனால், அதற்கும் ஒரு தொகை நிர்ணயம் செய்து வைத்துள்ளனர். இதற்கும் இடைத்தரகர்கள் இருப்பதுபற்றி ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

இந்து மதத்தில் பிறக்கிறவன், அரசுக்குச் செலுத்தும் வரியைவிட மதக் காரணங்களுக்காகப் புரோகிதத்திற்கும், அர்ச்சகர்களுக்கும் கொட்டிக் கொடுக்கும் வரி என்பதுதான் அதிகமாகும்.

ஆண்டு முழுவதும் பண்டிகைகள், விசேஷங்கள், விரதங்கள், கோயில் நிகழ்ச்சிகள் என்று மனிதன் உழைப்பையும், பொருளையும், பொழுதையும் நாசப் படுத்துவது என்பது இந்து மதத்தில் உள்ளதுபோல வேறு எந்த மதத்திலும் இருப்பது கிடையாது.

ஒவ்வொன்றிலும் பார்ப்பனச் சுரண்டல் சூது சூட்சமமாகவேயிருக்கும். வெளியூர் கோயில்களுக்கு நேர்த்திக் கடன் கழிக்கச் சென்றவர்கள், வீட்டுக்குத் திரும்புவதற்கு முன் கடைசியில் கையில் இருக்கும் பத்து பைசா காசைக்கூட வீட்டுக்கு எடுத்துவரக் கூடாதாம்.

தெருமுனையில் இருக்கும் கோயில் உண்டியலிலாவது அதனைப் போட்டுவிட்டு வரவேண்டும் என்று வைத்திருக்கிறார்கள். இதன் பொருள் என்ன?

இந்து அமைப்பில் கடைசி பத்து பைசாகூட அவாளின் உண்டியலில் போய்ச் சேர்ந்திடவேண்டும் என்பதில் கறாராக எவ்வளவு நுணுக்கமாக ஏற்பாடு செய்து வைத் துள்ளனர் என்பதைக் கவனிக்கவேண்டும்.

பணத்துக்கு ஏற்ப சாமி தரிசனம் என்ற முறை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இருக்கிறதே, அதன் பொருள் என்ன? ``காசேதான் கடவுளடா’’ என்பதல்லாமல் வேறு என்ன?

கன்னக்கோல் வைப்பவன் கண்ணடக்கம் செய்து வைக்கலாம். கொள்ளையடிப்பவன் கூசாமல் ஒரு தொகையைக் கோயில் உண்டியலில் போடலாம்.

``பீரோ புல்லிங்’’ திருடன்கூட சாமியைக் கும்பிட்டு அதனிடம் அனுமதி பெற்றுத்தான் கொள்ளையடிக்கச் சென்றதாகக் கூறவில்லையா?

இந்த சடங்கு ஆச்சாரமான மத அமைப்புமுறை இருக்கும் வரை ஒழுக்கம் வளராதது மட்டுமல்ல; புரோகிதத் தொழிலுக்கும் கொள்ளை லாபம்தான்!
http://viduthalai.com/20070711/news07.htm
-------------------------------------------
Show all posts

No comments: