Followers

Wednesday, December 19, 2007

சுவர்க்கம் திறக்கப்பட்டுவிட்டது!!! கடல் நீர் ஏன் நீலமாகியது? மலையை தாங்கி சுமந்த ஆமை!!.உலகைக் காப்பாற்ற சிவன் சாகாமல் தொண்டையைப் பிடித்த பார்வதி.!!

சுவர்க்கம் திறக்கப்பட்டுவிட்டது. சுவர்க்கம் செல்லும் பக்தர்கள் வீடு திரும்ப முடியுமா?

ஸ்ரீரங்கத்தில் நாளை சொர்க்கவாசல் திறப்பு. புதன்கிழமை, டிசம்பர் 19, 2007 .

திருச்சி: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாதர் கோவிலில் நாளை சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.

http://thatstamil.oneindia.in/news/2007/12/19/tn-sorka-vasal-opening-ceremony-at-srirangam-tomor.html
----------------------------------------------------------

மாதங்களில் சிறந்தது மார்கழியாம். அதிலும் சிறந்தது வைகுண்ட ஏகாதசியாம். சைவனும் வைணவனும் `தனித்தனியே மகிழ்ந்து கொண்டாடும் நாளாம்.

அன்றைய தினத்தில் வைகுண்டத்தில் நுழைய ஆவிகள் வாசற்படியருகே அலைந்து கொண்டிருக்குமாம். அன்று செத்தால்கூட வைகுண்டம் போகலாமாம்.

இதை நம்பி நகைக்கடைக்காரத் தம்பதியர் திரும்பெரும்பூதூரில் தற்கொலை செய்து கொண்டனர்,சென்ற ஆண்டில்!



கடலைக் கடைந்து அமுதத்தை எடுக்க முடிவு செய்து மத்தாக மந்தரமலையை வைத்து வாசுகிப் பாம்பைக் கயிறாகச் சுற்றிக் கடையத் தொடங்கிய போது மலை கடலில் அமிழ்ந்ததாம்.

மிதப்பதற்குக் கனமற்ற பொருளா, மலை? அதை அமிழ்ந்து போகாமல் கடைவதற்கு வசதியாக நிலை நிறுத்த வழி என்ன என யோசித்தபோது, பெருமாள் ஆமை அவதாரம் எடுத்ததாம். மலைக்குக் கீழே போய்த் தாங்கிக் கொண்டதாம். மலை கடையக் கடையச் சுழன்றதாம். அந்தச் சம்பவம் நடந்த நாள் இந்நாளாம்.

மடத்தனம் அத்துடன் முடியவில்லை. கடைந்தபோது ஆலகால நஞ்சு வந்ததாம். அதன் வெப்பத்தால் உலகமே அழியும் நிலை ஏற்பட்டதாம்.
கடல் நீரே நீலமாகி விட்டதாம். அதில் படுத்துத் தூங்கிய நாராயணன் (நீர்த் தூங்கி என்பது தமிழில்) நீலநிற மேனியானதாம். அதுவும் இந்த நாளில்தான் நடந்ததாம்.

உலகைக் காப்பாற்றுவதற்காகச் சிவன் ஆலகால நஞ்சை உண்டதாம். உள்ளே போனால் சிவன் செத்துப் போகும் என்பதால் அதன் மனைவி பார்வதி தொண்டையைப் பிடித்துக் கொண்டதாம்.

நெஞ்சிலேயே நஞ்சு நின்று விட்டதாம். நெஞ்சு நீல நிறமாகி விட்டதாம். அதனால் தான் சிவன் நீலகண்டன் என அழைக்ககப்படுகிறதாம். இது நடந்த நாளும் இந்த நாள் தானாம்.

அதனால் சைவரும் வைணவரும் வைகுண்ட ஏகாதசியன்று, உபவாசம் இருக்க வேண்டுமாம். உபவாசம் என்றால் ஒன்றுமே சாப்பிடாமல் இருப்பது. ஆனால் இவர்கள் மூக்குப் பிடிக்கத் தின்பண்டங்களைப் பழங்களைத் தின்பார்கள். சோறு மட்டும் விலக்கிக் கொள்ளப்படும். இதற்குப் பெயர் உபவாசமாம்! வைகுண்ட ஏகாதசியாம்!
http://viduthalai.com/20071218/news08.html
---------------------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

No comments: