Followers

Thursday, December 27, 2007

தேவடியாள்களை விட்டு நடனம்.....பூஜையால் விளையும் நாசம்! சாமி நமக்கு ஊசிகூட செய்ய சொல்லிக்க கொடுக்கவில்லை.

கடவுள் என்பது என்ன? அது எதற்காக வேண்டும் என்பதாக ஆராய்ந்து பாருங்கள். குருட்டு நம்பிக்கையால் கடவுளுக்கென்று பணத்தை செலவு செய்து பாழ்படுத்துகின்றோம்!

கிறிஸ்துவர்களும், மகமதியர்களும் சாமி கும்பிடுவதில்லையா? அவர்கள் கடவுளுக்காக என்ன செலவு செய்கிறார்கள்?

நாம் சுவாமிக்காக உற்சவமும், பொங்களும், பூசையும் செய்ய வேண்டும்.மேலும் இவைகளை சாமிக்கு எடுத்துச் செல்லவும் ஊட்டவும் தரகர்களை வேறு ஏற்படுத்துகிறோம். இதனால் நமது பணம் வீணாகிறது. அறிவு மோசமாகிறது.

கடவுள் நமக்கு அவசியந்தான். ஆனால் எந்த விஷயத்தில்? நாம் தப்பிதம் செய்தால் கடவுள் கோபித்துக் கொள்வார் என்ற முறையில் கடவுளை வைத்துக் கொள்வதில் நமக்கு ஆட்சேபணை இல்லை.

ஆனால் கும்பிடுவதற்கும், பூசை செய்வதற்கும், தேரில் வைத்து உற்சவம் செய்வதற்கும், தேவடியாள்களை விட்டு நடனம் செய்வதற்கும், பொங்கல், புளியோதரை சாப்பிடுவதற்கும், கடவுளை உபயோகப்படுத்துவதென்றால் அப்படிப்பட்ட கடவுள் இருக்கக் கூடாது.

ஏனென்றால் ஒரு பாபம் செய்த பிறகு சாமிக்கு அர்ச்சனையும், பூசையும் செய்தால் பாபம் போய்விடும் என்ற எண்ணத்தை மக்களிடையே கடவுள் ஏற்படுத்துவாரேயானால் பாபம் அதிகரித்து சாமிக்கு லஞ்சம் கொடுத்து பாபத்தை போக்கி தாம் தப்பித்துக் கொள்ளலாம் என்ற அபிப்பிராயத்தில் மக்கள் கடவுளைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

அதனால் மக்களின் ஒழுக்கம் கெடுவதற்கு கடவுள் அநுகூலமாயிருக்கின்றது.மக்கள் குற்றம் செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது கடவுளின் கடமை. அப்படி குற்றம் செய்துவிட்ட பிறகு லஞ்சம் வாங்கிக் கொண்டு மன்னிக்கலாம் என்ற கடவுளை ஒழிக்க வேண்டியது தான். கடவுளை வணங்குவதற்கு தேங்காய், பழம், சூடம், பொங்கல் இவைகளெல்லாம் எதற்காக வேண்டும்?நீங்கள் கடவுளிடத்தில் அன்பு பூண்டிருப்பதாக அவருக்கு நன்றாகத் தெரியும். அப்படிப்பட்டவருக்கு இதெல்லாம் எதற்காக?

முன்காலத்தில் கிராமங்களில் பயிர் நன்றாக விளைந்தது. அதை ஊர்கட்கு அனுப்பாமல் அந்த கிராமத்து தொழிலாளர்கட்கு கொடுத்து சும்மா இருக்கவிடாமல் கோயில்களைக் கட்டினார்கள். ஆனால் இப்போது அக்கடவுளுக்கு எதற்காக செலவு செய்ய வேண்டும்?

சாமிக்காக செலவிடப்படும் பொருளை படிப்பு விஷயத்திற்காகவும் ஆஸ்பத்திரிகள் கட்டுவதற்காகவும் உபயோகிங்கள். கோயில் கோயில் ரூ.50.000 ஆயிரம் போட்டு கட்டாவிட்டால் சாமி இந்த உலகத்தில் சாமிஇந்த உலகத்தில் இருக்காதா?

நமது தயவினால் சாமி இருக்க வேண்டியதில்லை.

உலகில் உள்ள மக்களின் மூன்றில் ஒரு பங்கு பவுத்தர்களும் மூன்றில் ஒரு பங்கு கிறிஸ்தவர்களும் இருக்கின்றனர். அவர்கள் தர்ம சொத்துக்களை பள்ளிக் கூடங்கட்கும், பொது விஷயங்களுக்கும் செலவிடுகின்றனர்.

சுவாமிக்கு கற்பூரம் எதற்காக கொளுத்த வேண்டும்? கோயிலை கரியாக்குதற்காகவா?

முன் காலத்தில் தூபம் தான் இருந்தது. கற்பூரம் இருந்ததாக தெரியவில்லை. கற்பூரம் கொளுத்தும் வழக்கம் இடைக்காலத்தில் ஏற்பட்டதென யூகிக்க இடமிருக்கின்றது.

பார்ப்பனர்கள் ஜப்பான் தேசத்துக்காரருடன் ஒப்பந்தம் பேசி நாங்கள் சூடம் கொளுத்த ஏற்பாடு செய்கிறோம். நீ செய்து அனுப்பு என்பதாக தரகு பேசி செய்திருப்பார்கள் என சந்தேகிக்கிறேன்.

நாம் சாமிக்காக எவ்வளவோ கோடிக்கணக்காக செலவிட்டும் அந்தச் சாமி நமக்கு ஊசிகூட செய்ய சொல்லிக் கொடுக்கவில்லை. காகிதம் பென்சில் எல்லாவற்றிற்கும் மற்றவர்களை எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது.(14-03-1929 அன்று லால்குடி அருகிலுள்ள நகர் என்னும் கிராமத்தில் தந்தை பெரியார் செய்த சொற்பொழிவின் ஒரு பகுதி. திராவிடனில் வெளியானது. "பெரியார் களஞ்சியம்" என்ற நூலில் இருந்து…. பக்கம்:138) VIDUTHALAI.COM
--------------------------------------
அழுத்தவும் :- Show all posts

1 comment:

iniyaval said...

thevadiyalggalin vellaiye athuthan. athannal avarggalai kevalappaddutha thevayellai.Annal Pathiniyai valnthukkondu kanavanin nabanidame uravai vaithukkondu avar kudumbathai nasam seiyyum "pathini" endra peyaril vallum Thevadhiyakkalin kathai kevallamanathu!! ivarggal pennggal endru kooruvathaivida "ratchasiggal"" endral migaiyaggathu. Thevam endru irrukkum varai eppadiyavathu intha""pathini" endra porvaiyil vallum pulluiviggalli iraivan kavanithukkolvan.