Followers

Monday, December 24, 2007

சிவனுக்குச் காமவெறி உச்சத்தை அடைய.. கூடு முன்பே வழிந்த இந்திரியத்தை கையிலே பிடிக்க.. ஐய்யோ அப்பா!! ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்த பிள்ளை.!!

ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்த பிள்ளை அய்யப்பன் கடவுள் என்பது ஆபாசமல்லவா!

மகரஜோதி என்பது மோசடி வேலை என்பதை கேரள முதலமைச்சர் ஈ.கே. நாயனாரே ஒப்புக்கொண்டாரே!

மக்களிடம் ஏறிய பக்திப் போதையை விளக்கி நாடெங்கும் பகுத்தறிவுப் பிரச்சாரம் நடக்கட்டும்! தமிழர் தலைவர் அறிக்கை

அய்யப்பன் ஆபாசத்தையும், மகரஜோதி மோசடியையும் விளக்கி திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

அய்யப்பன் என்ற கேரளத்து சாமியை சுமார் 50 ஆண்டு களுக்குமுன் யாருக்கும் தெரியாது. தமிழ்நாட்டில். அதை இங்கே இறக்குமதி செய்து தமிழ்நாட்டு மக்களை சபரிமலைக்குப் படையெடுக்கச் செய்ததற்கு - இந்த பக்தி வியாபாரம் - மூட நம்பிக்கை பரவியதற்குக் காரணம் சர்.பி.டி. இராசன் என்பது நமது வேதனைக்கும், வெட்கத்திற்கும் உரியது.

விஷக்கிருமிகள் (வைரஸ்) வெகுவேகமாகப் பரவுவதுபோல, இதை ஆண்டுக்கு ஆண்டு பரப்பிட திட்டமிட்டு கன்னிசாமி, குரு சாமி, பெரியசாமி என்று கிரேடு வாரியாக பக்தியை வைத்து, அய்யப்ப வியாபாரத்தை கேரளத்தவர் மிகவும் சாமர்த்தியமாகப் பெருக்கிக் கொண்டார்கள்!

இந்த சபரிமலையில் நடந்த அட்டூழியங்கள் - பெண் விவகாரங்கள் - அந்த தாந்திரிகர்கள் - நம்பூதிரிகளின் சண்டை, ஊர் சிரித்து, உலகம் சிரிக்கக் கூடியதாகி, நீதிமன்றங்கள் வரை சென்றன!

என்றாலும், நமது மூடப் பக்தர்களுக்கு இன்னும் அந்தப் போதை தெளிந்தபாடில்லை. வசூல் அமோக விளைச்சலாகி வருகிறது! வெளிநாட்டுக்காரன் எவனாவது வந்து இந்தக் கடவுளின் கதையைக் கேட்டால், அவமானத்தால் வெட்கித் தலைகுனிய மாட்டானா? வாயால்தான் சிரிப்பானா?

அய்யப்பன்பற்றிய புராணக் கதை என்ன?இந்த அய்யப்பன் பற்றிய புராணக் கதைதான் என்ன?

பத்மாசூரன் என்பவன் சிவபெருமானை நோக்கித் தவமிருந்து ஒரு வரம் வேண்டினான். சிவனும் முன்யோசனையின்றி கேட்ட வரத் தைத் தருவதாக வாக்களித்தான். நான் யார் தலையில் கை வைத்தாலும் அவன் தலை பஸ்பமாகிவிடவேண்டும் என்று வேண்டினான். சிவனும் அவ்வாறே அளித்தான்.

வரத்தைப் பெற்ற பத்மாசூரன் சிவன் தலையிலேயே கையை வைத்துச் சோதனை செய்து பார்க்க முயன்றான். சிவன் தப்பித்து ஓட, பத்மாசூரன் விரட்டிக் கொண்டு போனான்.

இந்த நிலையில், தனது மைத்துனன் சிவனுக்கு மோசம் விளைந்ததே எனக் கருதி, அதிலிருந்து அவனைக் காப்பாற்ற வேண்டி, விஷ்ணு மோகினி உருவெடுத்து எதிரே வந்தான்.

பத்மாசூரன் மதிமயங்கி மோகினியிடம் (மகாவிஷ்ணு) நெருங்கினான். இப்படி வந்தால் இணங்கமாட்டேன். குளித்துச் சுத்தமாக வர வேண்டும் என்று மோகினி கூற, குளிக்கச் சென்று தன் தலையைத் தேய்த்தபோது, பத்மாசூரன் தலை எரிந்து பஸ்மாகிவிடுகிறான்.

பிறகு ஒளிந்திருந்த சிவனை, விஷ்ணு அழைத்து நடந்ததைக் கூறினான். சிவனுக்குச் சபலம் ஏற்பட்டு காமவெறி உச்சத்தை அடைந்தது!

கையப்பன் - அய்யப்பனான்!
மீண்டும் விஷ்ணு மோகினியானான்! அவனோடு கூடு முன்பே, இந்திரியம் வழிந்தது. கையிலே பிடித்தான். கையிலேயே பிள்ளை பிறந்தது. அதை கையப்பன் பிறகு அய்யப்பன் ஆகி மருவியது!
அரி (விஷ்ணு), ஹரன் (சிவன்) இருவருக்கும் பிள்ளை பிறந்ததால் ஹரிஹரன் விஷ்ணுவுக்கும், சிவனுக்கும் பிறந்த பிள்ளை என்ற பொருள் வந்ததாம்!
எவ்வளவு ஆபாசம்! மடமை!!
ஆணுக்கும் ஆணுக்கும் பிள்ளை பிறக்குமா?
இது கடவுள் கதையா?

இதைவிட ஒழுக்கக்கேடு வேறு உண்டா?


மகரஜோதி - ஓர் ஏமாற்று நாடகம்!சபரிமலையில் மகரஜோதி என்ற பெயரில் ஓர் ஏமாற்று நாடகம் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது!

இந்த மகரஜோதி எப்படி வருகிறது? எங்கிருந்து எரிகிறது என்பது தொடக்கத்தில் மர்மமாகவே இருந்தது; பிறகு சில ஆண்டுகளிலேயே உண்மை வெளிச்சத்திற்கு வந்து புரட்டு அம்பலமாகியது!

கேரள மின் வாரியத்தைச் சேர்ந்த சில பயிற்சி பெற்ற ஊழியர்கள் (குறிப்பாக கோபிநாத் என்பவர்) சூடத்தைக் கொளுத்தி காட்டுகின்றனர்.இந்த உண்மையை பம்பாய் பிளிட்ஸ் வார ஏடு (16.1.1982) புகைப்படங்களுடன் அம்பலப்படுத்தியது.

மகரஜோதி என்பது மோசடியே!மறைந்த முதலமைச்சர் ஈகே. நாயனாரின் ஒப்புதல்!மறைந்த கேரள முதலமைச்சர் திரு. ஈ.கே. நாயனார் (சி.பி.எம்.) புதுடில்லியில் அவரைச் சந்தித்த பகுத்தறிவாளர்களிடம் அது மோசடி தான்; எங்களுக்கே தெரியும் என்று ஒப்புக்கொண்டு உரைத்துள்ளார்!இதற்கு மேலும் அதற்கு ஆதாரம் வேண்டுமா?

வெளிநாடுகளிலிருந்து கூட அப்பாவி மூடப் பக்தர்கள் சபரி மலைக்குச் செல்ல இருமுடி கட்டுவது மிகமிகக் கேவலம் அல்லவா!

நமது இயக்கமும், பகுத்தறிவாளர்களும் வரும் பொங்கல் வரை (ஜனவரி 18) இந்த ஆபாச அய்யப்பன் புரட்டினை விளக்கி ஆங்காங்கே துண்டறிக்கைகளை, வீடுகள், கடைகள், பொதுமக்கள் கூடும் இடங்களில் விநியோகம் செய்து பரப்புவதுடன், அடைமழை போல பிரச்சாரத்தைச் செய்து, பகுத்தறிவு ஒளியைப் பாய்ச்சிடத் தவறக்கூடாது!உடனே ஆவன செய்யுங்கள்! -- ( கையொப்பம் ) வீரமணி அவர்கள்.சென்னை 21.12.2007
http://viduthalai.com/20071221/news01.html
------------------------
அழுத்தவும் :- Show all posts

1 comment:

SurveySan said...

interesting. :)
வருஷத்துல ஒரு 40 நாள் ஒழுங்கா இருக்க வைக்குது இந்த ஐயப்ப பக்திதான்.


//நமது இயக்கமும், பகுத்தறிவாளர்களும் வரும் பொங்கல் வரை (ஜனவரி 18) இந்த ஆபாச அய்யப்பன் புரட்டினை விளக்கி ஆங்காங்கே துண்டறிக்கைகளை, வீடுகள், கடைகள், பொதுமக்கள் கூடும் இடங்களில் விநியோகம் செய்து பரப்புவதுடன், அடைமழை போல பிரச்சாரத்தைச் செய்து, பகுத்தறிவு ஒளியைப் பாய்ச்சிடத் தவறக்கூடாது!உடனே ஆவன செய்யுங்கள்//

அது சரி. பகுத்தறிவ விதைப்பது தவறில்லை. துண்டு ப்ரசுரம் எல்லாம் செய்யட்டும். நல்லது.
அப்படியே, கொஞ்ச நல்ல காரியம், மரம் நடரது, படிப்பு சொல்லித் தரது, இதையும் சேத்து பண்ணலாம் ;)

பதிவின் டைட்டிலில் இருக்கும் ஆபாசம், குறைத்திருக்கலாம். :)