Followers

Saturday, December 22, 2007

பார்ப்பனர்களின் மற்றொரு மோசடி- மகாவீரர் சிலை - பெண் உறுப்புகளைச் சேர்த்து அம்மன் சிலையாக உருமாற்றம்.!!!

ஜைனம் எனப்படும் சமண மதத்தின் கடைசி தீர்த்தங்கரர் என்ற பெயர் பெற்ற மகா-வீரரின் சிலையை `ஆதளி அம்மன்’ சிலையாகக் காலப் போக்கில் மாற்றி விட்ட வரலாற்றை அறிஞர் ஒருவர் வெளிப்படுத்தினார்.

கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சிக்கு அருகில் இருப்பது ஆழியாறு அணை. அதன் ஓரத்தில் புளியங்கண்டி கிராமத்தை அடுத்து உள்ள அம்மன் கோயில் இவ்வாறு ஏற்பட்டதாகும்.

சிலையின் கூறுகள் மகாவீரர் சிலையின் பீடத்-தில் சிங்கத்தின் புடைப்பு வடிவம் இருக்கும். தலைக்கு-மேல் முக்குடை செதுக்கப்-பட்டிருக்கும். இரு பக்கங்களிலும் சவுரி வீசுவோர் இருப்பர். பத்மஆசன முறை-யில் மகாவீரர் அமர்ந்திருப்பார். இந்த அமைப்புகளைக்-கொண்ட மகாவீரர் சிலை கி.பி. 7+ஆம் நூற்றாண்டில் செதுக்கப்பட்டு புளியங்கண்டி கிராமத்துக்கு அருகில் நிறுவப்பட்டது.

சிலையின் உயரம் 4.5 அடியாகவும், அகலம் 2.5 அடியாகவும், கறுங்கல்லால் செய்யப்பட்டதாகவும், காடம்பாறை ஆற்றின் கரையில், பாறை இருப்பிடங்களுக்கு இடையில் அமைந்ததாகவும் அச்சிலை இருக்கிறது.
கலைவரலாற்றில் வல்லுனரான கே.டி. காந்திராஜன், 2007 மே மாதத்தில் மகாவீரர் சிலை, ஆதனி அம்மன் சிலையாக வடிவமாற்றம் பெற்றிருந்ததைக் கண்டிறிந்தார்
.
உருமாற்றம் 20 ஆண்டுகளுக்கு முன்பு அருகில் இருந்த கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர், பழுதுபட்டிருந்த சிலை, இன்னாரைக் குறிக்கும் என அறியா நிலையில், பழநியிலிருந்து ஒரு சிற்பியை வரவழைத்து, அதை அம்மன் சிலையாக வடிக்கச் செய்தனர்.

சிமண்ட்டைப் பயன்படுத்தி பெண் உறுப்புகளைச் சேர்த்து, வண்ணம் அடித்து இந்து அம்மனாக மகாவீரர் உருமாற்றம் பெற்றார். நகைகள் அணியப் பெற்று, சேலையும் கட்டப் பெற்று, ஆதனி அல்லது ஆகானி எனப் பெயர் பெற்று பூசையும் நடைபெறுகிறது.

சமண - பவுத்தச் செல்வாக்கு- - கி.மு. 200 முதல் கி.பி. 9+ஆம் நூற்றாண்டு வரையில் தமிழகத்தில் சமண (ஜைன) மதம் செல்வாக்குப் பெற்றிருந்-தது. தமிழ்நாட்டின் வடகிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் அவர்கள் பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்தனர். சமண நினைவுக் கூடங்கள், அதிக எண்ணிக்கையில் இருந்தன.

சமணத் தீர்த்தங்கார், மற்றும் புத்தருடைய சிலைகள் பல, இந்துக் கடவுள் சிலைகளாக மாற்றப்பட்டதாகக் காந்திராஜன் கூறுகிறார்.

மதுரையில் இருந்து 35 கி.மீ., தொலைவில், உசிலம்பட்டிக்கு அருகில் புத்தூர் மலையில், சமணத் தீர்த்தங்கர்களான மகாவீரர், ஆதிநாதரர், பார்ஸவநாதர் ஆகியோரின் படைப்புச் சிலைகள் இருந்தன.

இப்பொழுது அவை பிரும்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் சிலைகளாகக் காட்டப்படுகின்றன.

இப்பொழுது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சட்டசபை உறுப்பினராக இருப்பவருமான ரவிக்குமார், புதச்சேரிக்கு அருகில் அரியாங் குப்பம் என்ற ஊரில், புத்தரின் சிலை ஒன்று பிரம்மரிஷியின் சிலையாக மாறியுள்ளதைப் பற்றித் தெரிவிக்கிறார்.

புத்தர் பத்ம ஆசன முறையில் அமர்ந்துள்ளார்; மடிப்புகள் உள்ள மேலாடையைப் போர்த்தியுள்ளார். அவருடைய தலைக்கு மேல் சுடர் ஒன்று இருக்கிறது. இப்பொழுது அச்சிலைக்கு வேட்டிக் காட்டப்பட்டு, பிரம்ம ரிஷி ஆக்கப்பட்டு, பூசை நடைபெறுகிறது. சிலைக்கு அருகில் விநாயகர், முருகன் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. http://viduthalai.com/20070707/snews05.htm
-------------------------------------------
அழுத்தவும் :- Show all posts

1 comment:

திரு/Thiru said...

இப்படிப்பட்ட மோசடிகளை வெளியிடுவது அவசியம். பதிவிற்கு நன்றி