Followers

Wednesday, December 19, 2007

கடவுளுக்குச் சளி பிடிக்குமா? என்னய்யா, மடத்தனம்? தினமும் சுக்குக் காப்பி நைவேத்யம் ?

கடவுள்கள் எல்லாமே, கல்லாகவோ, உலோகமாகவோதான் (சிலை வடிவில்) காட்சி அளிக்கின்றன.

இந்தச் சிலைகள் கல்யாணம் கட்டிக் கொள்கின்றன.

பள்ளியறைக்குப் போய் மனைவியுடன் படுத்துக் கொள்கின்றன, வைப்பாட்டி வீட்டுக்கும் (சீரங்கம், சீறிமுஷ்ணம்) போய்த் தங்கியிருந்து மறுநாள் வருகின்றன.

சிலைகளுக்கு `சைதன்ய’ உணர்ச்சி உண்டா என்ற பகுத்தறிவுக் கேள்விக்குப் பக்தர்களிடம் இருந்து பதிலே வரவில்லை.

இப்பொழுது ஒரு கேள்வி. குற்றால ``சீசன்’ என்பதால் அதன் தொடர்புடைய கேள்வி. குற்றால நாதனுக்கும் அதன் சகதர்மிணி செண்பகக் குழல்வாய் மொழி அம்மைக்கும் தினமும் சுக்குக்காப்பி நைவேத்யம் செய்கிறார்கள், ஏன் தெரியுமா?

இவர்கள் இருவரின் தலையிலும் எந்நேரமும் தண்ணீர் கொட்டிக் கொண்டேயிருப்பதால் சளி பிடித்துக் கொள்ளாமல் தடுக்கவே சுக்குக் காப்பியாம்!

கல் சிலைக்கும் சளி பிடிக்குமா? என்னய்யா, மடத்தனம்?
http://viduthalai.com/20070610/news07.htm
--------------------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

No comments: