Followers

Monday, December 24, 2007

அச்சச் "சோ" . பார்பனப் பானை சோற்றுக்கு 'சோ' ஓரு பதம்! " துக்ளக் " கை தமிழர்களே, புரிந்து கொள்ளவும்.

`சோவின் குடுமி சும்மா ஆடுமா!

கேள்வி: எல்லாமே முன்னதாகவே விதிக்கப் பட்டு விட்டது என்றால் எதற்காக கடவுளை வழிபட வேண்டும் என்று சிலர் கேட்கிறார்களே?
பதில்: நாம் கடவுளை வழிபடுவதும் வழி படாததும்கூட! முன்பே விதிக்கப்பட்டதுதான். (`துக்ளக் 26.12.2007)

ராமனை செருப்பாலடித்ததும், பிள்ளை யாரை வீதியில் போட்டு உடைத்ததும், இராமாயணத்தைக் கொளுத்தியதும்கூட முன்பே விதிக்கப்பட்டது தான் என்று `சோ ஒப்புக் கொள்ளுவாரா என்று தெரியவில்லை.

காந்தியாரை ஆர்.எஸ்.எஸ்., பார்ப்பான் - நாதுராம் கோட்சே படுகொலை செய்ததும், காஞ்சிபுரம் சங்கரராமன் படுகொலையும் முன்பே விதிக்கப்பட்டதுதான் என்று சொல்லி, குற்றவாளிகளான அவாளைச் சுலபமாகத் தப்பிக்க வைக்கலாம் அல்லவா!

`சோவின் குடுமி சும்மா ஆடுமா!
கேள்வி: உலகிலேயே உணவை அதிக அளவில் வீணடிப்பவர்கள் பிரிட்டன் நாட்டு மக்கள் தானாமே? ஆண்டுக்கு ரூபாய் ஒரு லட்சம் கோடி மதிப்புக்கு உணவை குப்பைத் தொட்டியில் கொட்டுகிறார்களாமே...?

பதில்: இங்கே இப்போது நாம் சாப்பிடுகிற பல விஷயங்களைப் பார்த்தால் - கொட்டுகிற இடத்தின் பெயரை மாற்றியிருக்கிறோம் என் பதைத் தவிர, வேறு பெரிய வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை. (அதே துக்ளக்)

உண்மைதானே! திருவண்ணாமலைத் தீபம் என்று சொல்லி 3000 கிலோ நெய்யை நெருப்பில் போட்டுப் பொசுக்கவில்லையா? லண்டனில் குப்பைத் தொட்டியில் கொட்டுகிறார்கள். இங்கே நெருப்பில் கொட்டுகிறார்கள். சோ சொன்னதுபோல இங்கு கொட்டுகிற இடத்தின் பெயர்தான் மாறியிருக்கிறது - சரிதானே!

அண்மையில் கும்பகோணத்தில் கூட காஞ்சி சங்கராச்சாரியார் ஆசியோடு, அவர் திரு முன்னே யாகம் நடத்தப்பட்டதே! ஆடுகள் பலியிடப் பட்டனவே! உணவுப் பொருள்கள் மூட்டை மூட்டையாகக் கொட்டப்பட்டனவே.
ஆமாம், சோ சொன்னதுபோல கொட்டப் படும் இடத்தின் பெயர் இங்கு மாறியிருக்கிறது - அதுதான் யாகம்! என்ன சரிதானே?

கேள்வி: `என்ன ஆனாலும் சரி. பெரியாருக்கு 95 அடி உயர சிலை அமைத்தே தீருவேன் - என்ற கலைஞரின் சூளுரை பற்றி?

பதில்: என்ன ஆகிவிடும்? `என் தலையைச் சீவினாலும் சரி; இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்லியே தீருவேன் என்று நான்கூட சபதம் செய்யலாம். பதில் சொல்வதை யார் தடுக்கப் போகிறார்கள்?
தலையை யார் சீவப் போகிறார்கள்? இதெல்லாம் சபதம் அல்ல. சூளுரை அல்ல. சும்மா தமாஷ். ரயில் வண்டி வராத போது, தண்டவாளத்தில் தலை வைப்பதுபோல!

இது ஒருபுறமிருக்க, `சின்ன சிலைகள் வைத்த போதே, பகுத்தறிவு இந்தளவு பரவியிருக்கிறது. 95 அடி உயர சிலை வைத்தால், இன்னும் எவ்வளவு பரவும்?

என்று கலைஞர் பேசியிருக்கிறார். அதாவது சிலையின் உயரத்திற்கு தகுந்தபடி, பகுத்தறிவுப் பரவலின் விஸ்தீரணம் அதிகரிக்கும். `ஒரு அங்குல சிலை என்றால் - ஒரு சதுர மைல் பகுத்தறிவு பரவல் என்கிற மாதிரி, ஒரு கணக்கு இது! பகுத்தறிவின் லட்சணம் இது. (அதே துக்ளக்)

எங்கும் நிறைந்ததாகக்கூறப்படும் கடவுளுக்கு, கண்ணுக்கும் அய்ம்புலனுக்கும் அகப்படாத கடவுளுக்குக் கோயில் கட்டி உருவம் அமைத் துள்ளது- எதற்காம்? பிரச்சாரத்துக்குத்தானே? கோவணாண்டியாகிப் போன கடவுளுக்குக் கூட தங்கத்தேர் எதற்கு? பிரச்சாரத்துக்குத்தானே?

நெடுஞ்சாலையின் இருமருங்கிலும் எந்தவிதமான அரசு அனுமதிகளும் பெறாமலே 50 அடி 60 அடி அனுமான் சிலைகளை திடீர் திடீர் என்று நிறுவுவது ஏன்? பிரச்சாரத்துக்குத்தானே?


95 அடி உயரத்தில் பிர்மாண்டமாகப் பெரியார் சிலையை நிறுவும்போது, யார் சொன்னாலும், சொல்லாவிட்டாலும் அது பிரச்சாரத்துக்குப் பயன்படத்தான் செய்யும்.

பார்ப்பனர்களின் வயிற்றில் இப்பொழுதே புளியைக் கரைக்க ஆரம்பித்து விட்டது.

கேள்வி: மகளிர் இடஒதுக்கீடு மசோதா தள்ளிப் போக உண்மையான காரணம்தான் என்ன?

பதில்: தப்பித் தவறி, ஏதோ ஒரு நல்லது நடந்து விட்டால் அதை நினைத்து சந்தோஷப்படு வீர்களா.. அதைவிட்டு ஏன் இது நடந்தது? எப்படி நடந்தது? எதனால் நடந்தது...? என்றெல் லாம் மண்டையைப் போட்டு குடைந்து கொள் வானேன்?(அதே துக்ளக்)

மகளிருக்கு இடஒதுக்கீடு தள்ளிப்போவது என்பது `சோ வாள்பார்வையில் நல்ல காரியம்.

அனேகமாக ஒவ்வொரு இதழிலும் பெண்களை மட்டந்தட்டாவிட்டால், இழிவுபடுத்தாவிட்டால் திருவாளர் `சோ ராமசாமிக்கு நல்ல தூக்கம் வராது
காரணம், அவரின் மனுதர்மச் சிந்தனைதான். மனுதர்மத்தை இந்த 2007-லும் வரிந்து கட்டிக் கொண்டு ஆதரித்து எழுதுபவராயிற்றே! இந்து மஹா சமுத்திரத்தின் ஆழ அகலத்தில் மூழ்கி முத்துக்களைக் கொண்டு வந்து குவிப்பவர் ஆயிற்றே!


பாவயோனியிற் பிறந்தவர்கள் பெண்கள் என்று சொல்லும் கீதைதானே அவாளின் புனிதத்துக்குப் பிறந்த புனித நூல்!
`சோ பிறந்ததும் ஒரு பெண்ணின் வயிற்றில்தான் என்பதை மறந்துவிட்டு கொச்சைப்படுத்தும் இந்தக் குலதர்ம வீரர்களை எதைக் கொண்டு சாற்றுவதோ!


சோ யார்? அவருடைய அந்தரங்கம் என்ன? அவருடைய உணர்வு என்ன?
அதனைப் புரிந்து கொள்வதற்குப் பெரிய பரீட்சைகள் தேவையில்லை.
சங்கராச்சாரி விஷயத்தில் எப்படி நடந்து கொள்கிறார்?

பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., விஷயத்தில் அவரின் பேனா முனை எப்படி நர்த்தனம் புரிகிறது? இவற்றைப் பார்த்தாலே மிக மிக சுலபமாகப் புரிந்து கொள்ளலாமே!

31.10.2007 `துக்ளக்கின் எட்டாம் பக்கத்தை ஒரு புரட்டுப் புரட்டுவோம்.
அதில் ஒரு கேள்வி: பாபர் மசூதியை இடிக்கக் காரணமாகயிருந்த பா.ஜ.க., மற்றும் வி.ஹெச்.பி.காரர்களுக்கு சேது சமுத்திர விவகாரம் பற்றி பேச உரிமை உண்டா?

பதில்: என்ன தெரியுமா?
பா.ஜ.க.வோ, வி.ஹெச்.பியோ அமைப்பு ரீதியாகச் செயல்பட்டு பாபர் மசூதியை இடிக்க காரணமாகயிருந்தனர் என்பதே அபத்தம் அல்லவா!
இதுதான் `சோவின் பதில்.

ஆக, பா.ஜ.க.வோ விஹெச்பியோ கூட்டம் போட்டு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றி இருந்தால்தான் அது அந்தக் கட்சிகளின் அதிகாரப் பூர்வமான இடிப்பு - அந்தக் கட்சிகளை அப்பொழுதுதான் கட்டுப்படுத்தும்.
அப்படி தீர்மானம் போடாமல், அந்தக் கட்சிக்காரர்கள் ஒன்றுகூடி ஒரு நாளில் திட்டமிட்ட வகையில் இடித்துத் தள்ளினால், அந்த இடிப்புக்கும் அந்த அமைப்புக்கும் சம்பந்தம் இல்லை. இதுதான் `சோ பேசும் நியாயம்.


பாபர் மசூதி இடிப்பதற்காகப் பயிற்சி அளிக்கப்பட்டது - இடிக்கப்பட்ட இடத்தில் ராமன் கோயிலை எழுப்பிடத் தூண்கள், சிற்பங்கள் முதற்கொண்டு தயாரிப்பது எல்லாமே சத்தியமாக பா.ஜ.க.,வையோ, வி.ஹெச்பி.யையோ கட்டுப்படுத்தவே கட்டுப்படுத்தாது.

ராமன் மேல் சத்தியமாக திருவாளர் `சோ சொல்லுகிறார். அதெல்லாம் எதேச்சையாக நடந்ததுதான்! அதனை அனைவரும் நம்பித் தொலைக்க வேண்டும் - ஆமாம்!

பாபர் மசூதி என்ன.. இன்னும் இது தொடர்பான பட்டியல் எங்கள் கைகளில் இருக்கிறது என்று தொகாடியா கொக்கரித்தாலும்கூட, கண்டிப்பாக வி.ஹெச்.பியைக் கட்டுப்படுத்தவே கட்டுப்படுத்தாது. அது தனிப்பட்ட (தண்ணிப் போட்ட) தொகாடியாவின் கருத்து - இதுதான் `சோ போன்ற அக்ரஹாரத்து அதி புத்திசாலிகளின் தேஜஸ்!

அப்படியானால் காந்தியாரைச் சுட்டுக் கொன்ற போதும், பாபர் மசூதியை இடித்தபோதும் ஆர்.எஸ்.எஸ்., தடை செய்யப்பட்டதே - ஏனாம்?
அதுகூட `சோவின் பார்வையில் தப்பு தப்புதான். ஏன்?

`சோ என்ன பெரிய ஆளா? அவரை பெரிதாக எடுத்துக் கொண்டு விமர்சிக்க வேண்டுமா?

கேள்வி எழுப்புபவர்கள் உண்டு. `சோ பெரிய ஆள் என்பதாலோ., அதிபுத்திசாலி என்பதாலோ அவரை முன்னிலைப்படுத்தவில்லை.

`சோ என்ற ஆசாமிதான் இன்றைய தினப் பார்ப்பனப் புத்தி என்பதற்கும், பார்ப்பனத்தனம் என்பதற்கும், பார்ப்பனர்களின் நடத்தை என்பதற்கும் ஒரு சோறு பதம் என்பதால்தான். மற்றபடி அவர் அதிமேதாவி என்ற எண்ணத்தால் அல்ல- அல்லவே அல்ல!

`துக்ளக்கைக் காசு கொடுத்து வாங்கும் தமிழர்கள், இதனைப் புரிந்து கொள்ள வேண்டும். http://www.viduthalai.com/20071222/snews01.html
------------------------------------------
அழுத்தவும் >> Show all posts

1 comment:

madscribbler said...

hello black shirt wearing blogger...thanks I can come here to read excerpts from viduthalai. Thank you.