Followers

Friday, December 21, 2007

ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்களைத் திருத்த முடியாதுடா’’ , படித்தவர்களுக்கு பார்ப்பனர்களுக்குச் சாமி வருவதில்லை .

ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்களைத் திருத்த முடியாதுடா’’ , படித்தவர்களுக்கு பார்ப்பனர்களுக்குச் சாமி வருவதில்லை .

டாடா சுமோ கார் வாங்கினாராம் ஒருவர். அதற்குப் பூஜை போட கோயிலுக்குப் போனாராம். சாமியா காரைக் கண்டுபிடித்தது?

கும்ப கோணத்தில் நகராட்சியில் பணிபுரியும் ராசமாணிக்கம் எப்படிக் கார் வாங்கினார்? கடவுளின் அனுக்கிரகத்தினாலா? பின் எதற்காகப் பூஜை? எல்லாம் முட்டாள்தனத்தின் விளைவு.

பூஜை போடக் குல தெய்வத்திடம் போனாராம். குல தெய்வம் இருக்குமிடம் இலையூர். ஜெயங்கொண்டம் அருகில் உள்ள ஊர். கடவுள் பெயர் பெத்தீசுவரன். ராசமாணிக்கம் சாமி கும்பிடும்போது அவர் மனைவிக்கு நடுக்கம் வந்து உளற ஆரம்பித்து விட்டார்.

அதைத்தான் அருள் வந்து, சாமி வந்து என்றெல்லாம் கூறுவார்கள். மனநோய்க்கு ஆள்பட்டு அந்தப் பெண் உளறியதை எல்லாம் நம்பிச் செயல்பட்டு மோசம்போன விவரம் முழுக்கத் தெரிந்தால் கடவுளைக் காரித் துப்பத் தோன்றும்.

சாமியை மட்டும் கும்பிடறீங்களே, சாமியோட பெண்டாட்டியான என்னை ஏண்டா மறந்துட்டீங்க என ``சாமி’’ ஆடிக்கொண்டே கேட்டதாம். நீ எங்கே அம்மா இருக்கிறே என்று இலையூர் மக்கள் கேட்டார்கள். இங்கதாண்டா, குளத்திலே கிணத்துக்கு அடி யிலே நூறு வருசமாக மூச்சுவிட முடியாமக் கிடக்கிறேன்டா என்று சாமி சொல்லிச்சாம். மூச்சு விடாத ஆத்தா உயிரோடு இருப்பதே ஆச்சரியம்தானே!

என்ன செய்வது என்று கிராமத்தினர் விழித்துக் கொண்டிருந்தபோது, நகரத்தவரான ராசமாணிக்கம் சொன்னாராம். ஆத்தா கோபம் ஆபத்தைக் கொண்டு வந்துவிடும், தோண்டி எடுத்துப் பூஜை போட்டுருவோம். நான் பத்தாயிரம் தர்ரேன். ஊர்ல வீட்டுக்கு நூறு ரூபாய்னு வரி போடுங்க. பாத்துருவோம் எனக் கூறிக் கும்ப கோணம் போய்விட்டாராம்.

குறிப்பிட்ட நாளன்று பணம், அம்மனுக்குப் புடைவை, மாலை, பூஜைப் பொருள்க ளோடு வந்தாராம். கூடவே மனைவியும் வந்தார். ஊர் மக்கள் கூடினர். ஊர்க் குளத்தின் தண்ணீர் மொத்தத்தையும் நான்கு மோட்டார்களை வைத்து இறைத்துக் காலியாக்கினார்கள். நடுவில் இருந்த கிணற்று நீரையும் இறைத்துத் தோண்டினார்கள். கடப்பாரையால் தோண்ட முடியாமல் இருக்கவே, பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டினார்கள். தோண்டினார்கள். பத்தடி ஆழம் வரை தோண்டினார்கள். அம்மன் பொம்மையும் காணோம், புடலங்காயும் காணோம்.

குளத்துத் தண்ணீரும் போச்சு, அதில் வளர்க்க வீட்டிருந்த மீன்களும் போச்சு. பணமும் போச்சு என்று இலையூர் மக்கள் எரிச்சலில் பேச ஆரம்பித்தார்கள்.
வந்திருந்த காவலர்களுக்கு அப்பொழுதுதான் மூளை வேலை செய்ய ஆரம்பித்தது. முதலிலேயே மூளை வேலை செய்திருந்தால்,

முட்டாள்தனத்தைத் தடுத்து இருக்கலாம். காவல்துறையில்தான் பெரிய அதிகாரியிலிருந்து கீழ் மட்டம் வரை, ஒரே வேசம்தானே?

யாரைப் பார்த்தாலும் மதுரை வீரன் கோயில் பூசாரி மாதிரிதானே, சாம்பல், குங்குமம் சகிதம் இருக்கிறார்கள்! இப்பொழுதாவது வேலை செய்ததே என்ற ஆறுதல்!

விளைவு, ராசமாணிக்கத்திடம் காதைக் கடித்தார்கள். உன் மனைவி உளறியதைக் கேட்டு ஊரை முட்டாளாக்கி விட்டாய். இங்கே நிற்காதே, ஊர்க்காரன் அவனவனும் உக்கிரமாக இருக்கிறார்கள். உங்கள் இரண்டு பேர் தோலையும் உரித்து உப்புத் தேய்த்து விடுவார்கள். ஓடிப் போங்கள் என்று உபாயம் சொல்லிக் கொடுத்தனர்.

இரவோடிரவாக அம்மனுக்கு வாங்கி வந்த சீலையுடன் கும்பகோணத் துக்கு ஓடிப் போய்விட்டது ஹிஸ்டீரியா வந்த பெண்மணியும் அதன் கணவன் ராச மாணிக்கமும்!

இவ்வளவு கூத்தும் 6.5.2007 அன்று நடந்துள்ளது. 21 ஆம் நூற்றாண்டில்தான் இருக்கிறோமா?

இல்லாத கடவுளுக்கு இருக்கின்ற சிலையைக் கழுவுவதே பெரும்பாடாக இருக்கும் நிலையில், இல்லாத கடவுளின் இல்லாத சிலைக்காக குளத்தில் இருக்கும் தண்ணீரை இறைத்துத் தம் அறிவற்ற தன்மையைக் காட்டிக் கொண்ட ராசமாணிக்கத்தையும், இலையூர் மக்களையும் என்ன பெயர் சொல்லி அழைப்பது?

படித்தவர்களுக்குச் சாமி வருவதில்லை, பார்ப்பனர்களுக்குச் சாமி வருவதில்லை என்பதைப் பார்த்தாவது ``பெர்னார்டு ஷா’’க்கள் (அதுதான் ராசமாணிக்கத்தின் மனைவியின் பெயர்) திருந்த வேண்டாமா? படித்துப் பதவியில் இருக்கும் ராசமாணிக்கம் போன்ற ஞானசூன்யங்கள் அறிவு பெறுவது எப்போது?

``ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்களைத் திருத்த முடியாதுடா’’ என்று விவேக் சினிமாவில் கூறியதுதான் பதிலா? http://viduthalai.com/20070606/news15.htm
-------------------------------
அழுத்தவும் :- Show all posts

No comments: