Followers

Monday, December 17, 2007

ஆண்குறி மட்டும் வானத்தின் வழியாக விர்ர்...றென்று பறந்து ஆனந்தமாக உடலுறவு கொண்டு விட்டு திரும்பி விடுகிறது. !!!!

பெண்ணை ஆண் எப்படி வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் தன் போகத்துக்காக இஷ்டப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற போதனையையும் தெய்வங்களிடமிருந்தே ஆரம்பித்து விட்டனர்.

அந்த போதனையை சொல்லும் ஒரு காட்சியை உங்களுக்கு சொல்கிறேன்.
இப்போது நாம் ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் சென்றால் என்னென்ன தரிசிப்போம்?

படுத்துக் கொண்டிருக்கும் ரங்கநாதனை சேவிப்போம். பின் ரங்கநாயகியை வழிபடுவோம். ஸ்ரீராமானுஜரை சேவிப்போம். இப்படி ஒவ்வொரு சன்னதியாய் போய் சேவித்து வருவோம்.

ஆனால்... ஒரு பக்தர் இரவு நேரத்தில் பகவானை சேவிப்பதற்காக வந்திருக்கிறார். அர்த்த ஜாமம் எல்லாம் ஆகி சன்னதியை பூட்டி... சாவிக்கொத்தை மாட்டிக் கொண்டு அர்ச்சகர்கள் சென்றாகி விட்டது.

அமைதியே உருவான ரம்யமான ராத்திரி அது.அப்போது...
ரங்கநாதன் சன்னதியிலிருந்து திடீரென ஒரு விசேஷ வெளிச்சம்.

பகவான்தான் காட்சி தரப்போகிறாரோ என்னவோ என அந்த பக்தர் இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டே இருக்கிறார்.

சிறிது நேரம் கழித்து... ரங்கநாதன் சன்னதிக்குள்ளிருந்து ஒரு பொருள் மட்டும் விர்ர்...ரென வெளியே வருகிறது. அப்படியே வானத்தின் வழியாக பறந்து போய் ரங்கநாயகியின் சன்னதிக்குள் நுழைகிறது. அந்த பக்தர் இதையும் பார்க்கிறார்.

கொஞ்சநேரம் ஆனது... மறுபடியும் ஒரு விசேஷ வெளிச்சம். இப்போது... ரங்கநாயகி சன்னதிக்குள்ளிருந்து அந்த பொருள் கிளம்பி... வந்த வழியே திரும்பி பழையபடி ரங்கநாதன் சன்னதிக்குள் வந்தடைகிறது. முன்னால் இருந்த இடத்திலேயே சென்று சேர்ந்து விடுகிறது.

சரி... அது என்ன பொருள் என்கிறீர்களா?
அந்த பக்தரை கேட்டால் சொல்வார் அல்லவா?


சொல்வது என்ன எழுதியே வைத்திருக்கிறார். அந்த பக்தர் வேறு யாருமல்ல... ராமானுஜரின் வலது கையான கூரத்தாழ்வானின் மகன் பராசரபட்டர்தான்.

பராசரபட்டர் தான் அருளியிருக்கும் குணரத்ன கோசத்தில் இந்த காட்சியை சாதித்திருக்கிறார்.சரி... பறந்து போனது என்ன?

‘அது... ரங்கநாதனின் ஆனந்த நாடி...( ஆண்குறி ) அதாவது தேக சம்பந்தம் வைத்துக்கொள்வதற்கு உபயோகப்படுகிற அங்கம்.

நள்ளிரவிலும் பிராட்டியை சேரவேண்டும் என்ற ஆசை ரங்கநாதனுக்கு வந்தது.

உடனே தன் அங்கத்தை (ஆண்குறியை ) அனுப்பி ரங்கநாயகி சன்னதிக்குள் சென்று இச்சையை தீர்த்துக்கொண்டு விடுகிறார்’ என்பதை குணரத்ன கோசத்திலேயே குறிப்பிட்டிருக்கிறார் பராசரபட்டர்.


இந்தக் கதை எதற்கு?
விட்டலாச்சார்யா கதைபோல இருந்தாலும்... ‘ஆணின் போகத்துக்குத்தான் பெண். அவளை எந்நேரமும் எப்படியும் உபயோகப்படுத்த ஆணுக்கு உரிமை உள்ளது’ என்பதைத்தான் இப்படி ரங்கனின் அந்தரங்கத்தையே பார்த்ததாக விளக்கியிருக்கிறார் பட்டர்.

இதை பெருக்காரணை சக்ரவர்த்தி ஆச்சார்யர் எழுதிய ‘மும்மத்தஸாரம்’ என்னும் புஸ்தகத்தில் நீங்கள் தமிழிலேயே தரிசிக்கலாம்.

“ஸ்ரீரங்கநாதன் தனது ஆனந்த நாடிகளைக் கொண்டு ஸ்ரீரங்கநாயகியுடன் ஆனந்தமாக கலவியை அனுபவிக்கிறான் என்று ஸ்ரீபராசரபட்டர் ஸ்ரீ குணரத்ன கோசத்தில் எப்படி சாதித்தார்?...” என்று கேட்கிறார் சக்ரவர்த்தி ஆச்சார்யர்.
இதைப் பார்த்துவிட்டு வைதீகர்கள் பலர் வேதனைப்பட்டார்கள். இப்படி எழுதியதை தமிழிலும் மொழி பெயர்த்து விட்டாரே என்று.

இதையே சக்ரவர்த்தி அய்யங்கார் என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தபோது...

இக்காட்சி இடம் பெற்றால், பெண்ணடிமைத்தனம் ஆபாசமாக சித்தரிக்கப்படுகிறது என்ற பேர் வருமே என்பதற்காக...

அந்த ஆனந்த நாடி ( ஆண்குறி ) பகுதியை மட்டும் வெட்டி எடுத்துவிட்டார்கள்.
இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி - 51 ல்
-----------------------------------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

2 comments:

Thiru said...

இங்கே சொல்லப்பட்டிருக்கும் கதை இந்து சமயத்தை கேவலப்படுத்த பயன் படுகிறது என்பதால் அது கொஞ்சம் கூட சாத்தியம் இல்லை என்று தெரிந்தும் இவ்வாறு எழுதுகிறீர்கள். இதே வேளை இப்படி ஒரு கதை இதே போன்று சாத்தியபாடுகள் இல்லாமல் சமயத்தை நல்ல விதமாக கூறுவதாக இருந்தால் இது எப்படி சாத்தியம் முட்டாள் தனமாக இல்லையா என்ற கேள்வியை கண்டிப்பாக எழுப்பி இருப்பீர்கள். பகுத்தறிவாளர்கள் உங்களுக்கு ஏன் இந்த பாரபட்சம். ஒரு விடயம் தெளிவு எந்த ஒரு விடயத்தையும் நல்ல மாதிரியாகவும் கேட்டமாதிரியாகவும் பார்க்கவும் முடியும், எழுதவும் முடியும்.

சிந்திக்க உண்மைகள். said...

இங்கே சொல்லப்பட்டிருக்கும் நிகழ்வு (கதை) சொல்வது என்ன எழுதியே வைத்திருக்கிறார்.

அந்த பக்தர் வேறு யாருமல்ல... ராமானுஜரின் வலது கையான கூரத்தாழ்வானின் மகன் பராசரபட்டர் தான்.


பராசரபட்டர் தான் அருளியிருக்கும் குணரத்ன கோசத்தில் இந்த காட்சியை சாதித்திருக்கிறார். சரி.

========
படிக்கவும் இந்து மதம் எங்கே போகிறது? " பக்கம் 182 183 184 18.

சுட்டியை சொடுக்கி இணைய‌த்தில் படிக்க

===>
தன்னுடைய "அதை" மட்டும்அனுப்பி இல்லறசுகம்!!!. முடியுமா உங்களால்?
<====

========

“இந்து மதம் எங்கே போகிறது? " பக்கம் 352. விலை ரூபாய் 150/.

ஆசிரியர்:
“புராண மீமாம்ஸாத்வாய ஸுத்ர விஷாரத்” , “வேதார்த்த ரத்னாகர வேதவாஸஸ்பதி”, “மஹோ பாத்யாய”, “மகா மஹோ பாத்யாய”
Dr. அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.

வெளியீடு: நக்கீரன் பப்ளிகேசன்ஸ், ஜானி ஜான்கான் தெரு, இராயப்பேட்டை, சென்னை-14.

இங்கும் கிடைக்கும்:‍ பெரியார் புத்தக நிலையம், சென்னை-7, தொலைபேசி: 044-26618161, 62, 63

சுட்டியை சொடுக்கி இணைய‌த்தில் ப‌டிக்க‌

===> “இந்து மதம் எங்கே போகிறது? " <====